கொழுத்த திராவிட அரசியல் முதலாளிகள் தங்களது பணத்தை ஏன் மக்களுக்காக செலவிடக்கூடாது?
பத்மநாபசாமி கோயில்-புட்டபர்த்தி ஆசிரம சொத்துகள்: மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்-வீரமணி[1]: இந்து விரோதியான திக-வீரமணி இவ்வாறு சொல்லியுள்ளது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவில் உள்ள கோயில் சொத்துகள், புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்களின் சொத்துகளை மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும், மக்கள் அளித்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாட்டில் இந்தியாவில் உள்ள முதலாளித்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.
- 1. ஒன்று, கோயில்களில் உள்ள கடவுள் அவதாரங்களின் அள்ளக் குறையாத, முதல் போடா மூலதனப் பெருக்கம் கோடி கோடியாக கொட்டிக் கொண்டு இருப்பதும், அங்கே அதைக் “கோயில் பெருச்சாளிகள் கொள்ளையடிப்பதும் ஒரு வகையான விசித்திர முதலாளிகள், கடவுள்கள்.
- 2. இரண்டு, பிறவியினால் எவ்வித உழைப்பும் இன்றி, உயர்ஜாதி, ஆண்டவனின் முகத்தில் பிறந்த ஜாதி என்று முத்திரைக் குத்திக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தர்ப்பையும், பஞ்சாங்கத்தையுமே மூலப் பொருளாகக் கொண்டு, பெரும்பாலான அடிமைப்படுத்தப்பட்ட மக்களையே சுரண்டிக் கொழுக்கும் பிறவி முதலாளிகள்.
- 3. மூன்று, மூலதனம் போட்டு தனது மூளை உழைப்பு, சுரண்டல் புத்தியைக் கூர்மையாக்கி தொழிலாளர்களின் உழைப்பை மூலதனமாகக் கருதாமல், அதற்கு ஏதோ ஒருவகைக் கூலி மட்டும் கொடுத்து, அதை விலை உயர்வு மூலம் ஒரு கையில் கொடுத்ததை, மறுகையில் பிடுங்கிக் கொள்ளையடிக்கும் முதலாளிகள் மனித முதலாளிகள்
இவர்களை ஒழிப்பது, மற்ற மேலே சுட்டப்பட்ட இருவகை முதலாளிகைளயும் ஒழிப்பதை விட எளிது ஆகும்! ஒரு அவசரச் சட்டம் போட்டுக்கூட, பணக்கார முதலாளிகளிடம் இருக்கும் பணம், சொத்துகளை அரசுகளால் எடுத்துக்கொள்ள முடியுமே அவை உண்மையான சமதர்ம அரசுகளாக இருந்தால். ஆனால், கோயில், மதம், உயர் ஜாதி இவைகளிடம் நெருங்குவதற்கு எக்கட்சி அரசானாலும் துணிவதில்லை”.
கருணாநிதியின் சிதம்பரக் கொள்ளை: வீரமணி சொல்கிறார், “சிதம்பரம் கோயிலில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் தீட்சதர் கூட்டத்தால் சுரண்டப்பட்ட மக்கள் தந்த, தருகின்ற வருமானம், மன்னர்கள் விட்டுச் சென்ற சொத்துகளைக் காப்பாற்ற பல அரசுகள் முயன்றும் கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. அரசால்தான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் ஆதிக்கத்தின்கீழ் அதன் வருமானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதத் திருமேனிகள் கூட்டம் வழக்குப் போட்டது; அது தள்ளுபடி செய்யப்பட்டு, அதன் மீது மேல்முறையீட்டினை (அப்பீல்) உச்சநீதிமன்றத்தில் செய்துள்ளனர்! வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. (புதிய அரசு அதில் விட்டுக் கொடுத்தால் அது மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது உறுதி!)
“ஆந்திராவில் புட்டபர்த்தி சாய்பாபாவின் மடத்தின் சொத்துகளை நிர்வகிப்பது முதல், பல பிரச்சனைகளில் சண்டைகள் பல மாதங்களாக சில ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளன. சாய்பாபாவின் மரணத்திற்குப்பின் அங்கே இருந்த தங்கம், வைரம், ரூபாய் நோட்டுகள் என்று பல லட்சம், பல கோடிக்கணக்கில் அவை கடத்தப்பட்டு, ஆந்திர அரசே அதுபற்றி புலன் விசாரணைகளை நடத்தும் நிலை உள்ளது! மடத்திலிருந்து லாரியில் கடத்திச் சென்றுள்ள பணம், தங்கம், வைர நகைகள் பிடிபட்டதாக செய்திகள் வந்தவைகளை மீடியாக்கள் பெரிதும் உயர் ஜாதி ஊடகங்கள் அமுக்கி வாசித்தன.
“ஒரு வார இடைவெளிக்குப் பின்னர், அது சம்பந்தப்பட்ட தமிழ்நாட்டு உயர் ஜாதி தொழிலதிபர் ஒருவர், அந்த ரொக்கம் ஏதோ, பாபா சமாதி கட்ட, ஒப்பந்தக்காரருக்கு, யாரோ கொடுத்ததாக ஒரு பேட்டி கொடுத்தார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டார்கள்; ஏன் உடனே செய்யவில்லை? பிடிபட்ட நேரத்தில், பிடிபட்டவர்தானே அப்படி வாக்குமூலம் கொடுத்திருக்க வேண்டும்? பிறகு அதிலிருந்து மீள்வதற்கே இப்படி ஒரு “அற்புத யோசனை” அறிவுரை நிபுணர்களால் ‘அவாளுக்கு’ சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும்! தோண்டத் தோண்ட வெளிவரும் புதையல்போல, பாபா அறையிலிருந்து தங்கக் குவியல்கள் வந்தவண்ணம் உள்ளதாம்! செய்தி ஏடுகளால் மறைக்க முடியாது சிலவற்றை வெளியிடுகின்றன. பிரசாந்தி நிலையத்தில் இருந்து ஏராளமான ரொக்கப் பணமும், நகைகளும் கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற சில வாகனப் பரிசோதனைகளின்போது ரூபாய் 10 கோடி மற்றும் 35 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது கடத்திச் செல்லப்பட்டவை என்று ஆந்திர போலீசார் கருதுகிறார்கள். கடந்த முறை யஜுர் வேத மந்திர் அறையில் கண்டெடுக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் மதிப்பிடப்பட்டு, அவை வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டதாம்!
“மீண்டும் அதே யஜுர்வேத மந்திரில் அனந்தப்பூர் மாவட்ட இணை ஆட்சியர் அனிதா ராமச்சந்திரன் தலைமையிலான அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள், ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உள்ளது. சாய்பாபா அறை, அவரது உதவியாளர் சத்யஜித்தின் அறை, சிறப்பு அலுவலக அறை, உணவு அருந்தும் அறை ஆகியவைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன! சாய்பாபா அறக்கட்டளையின் உண்மை சொத்துகளின் மதிப்பு பற்றி அதன் நிர்வாகிகள் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள சாய்பாபா பக்தர்களே கேட்கும் அளவுக்கு நிலைமை அங்கு மோசமாகியுள்ளது எனத் தெரிய வருகிறது!
“பத்மநாபசாமி கோயிலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்துகள்…திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயில் அறைகள் திறக்கப்பட்டு நகைகள் எண்ணப்பட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் போட்ட வழக்கில், இரண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அய்வர் ஆக எழுவர் கொண்ட குழுவினரின் முன்னிலையில் அது திறக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என்று இடைக்கால ஆணை வழங்கப்பட்டதையொட்டி, கடந்த சில நாள்களாக அங்கே ஆறு பாதாள அறைகள் திறக்கப்பட்டதில், இது வரை கண்டு எடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது!
திருப்பதிகோயிலையும் மிஞ்சும் சொத்து இதற்கு இருக்கும் போல் உள்ளது! “கேரள மாநில பட்ஜெட்டையும் தாண்டும் சொத்து இந்த ஒரு கோயிலிலேயே முடக்கப்பட்ட மூலதனமாக கிடக்கிறது! இவைகளில் ‘கோயில் பெருச்சாளிகள்‘ கொண்டு சென்றவை எவ்வளவோ? யாருக்குத் தெரியும்? குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வருமானம், சபரிமலை அய்யப்பன் கோயில் வருமானம் இப்படி பலவகை வருமானங்கள் மூலம் கிடைக்கும் தொகை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், எவ்வளவு அரசு கல்லூரிகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை எழுப்பலாம்! நமது மத்திய அரசு, லாபம் தரும் பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பதை நிறுத்திவிட்டு இந்த மூலதனங்களை எடுத்துப் பயன்படுத்தலாமே! கோயில் பூஜை, புனளிகாரம் என்பவைகளால் வழக்கம்போல் நடைபெறுவதற்குப் பதிலாக இம்மாதிரி அரசு எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவழிப்பது எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாதே! அரசியல் சட்டத்தின் 25,26 என்ற பிரிவுகளைக் காட்டி சிலர் சட்டப் பூச்சாண்டி காட்டலாம். அதுபற்றிக் கவலைப்படாமல் துணிந்து முடிவு எடுத்தால் அப்பிரிவுகளிலேயே அதற்கு தாராளமாக இடம் உள்ளது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! மக்கள் கொடுத்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறு ஏதும் இல்லையே! மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துமாக!”, இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மார்க்சீயவாதி சரித்திர ஆசிரியர் கூறியுள்ள கருத்து: கண்டுபிடிக்கப் பட்டுள்ள விலையுயர்ந்த பொர்ருட்கள் எல்லாம் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று ராஜன் குருக்கள் என்ற மார்க்சீயவாதி சரித்திர ஆசிரியர் கூறியுள்ளார்[2]. அரசு சார்பில் மஹாத்மா காந்தி பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருக்கும் இவர், ஒரு அடிப்படை கம்யூனிசவாதி. அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் அரிய சிலைகள் முதலியவற்றிற்கு, இந்தியாவில் போதிய அளவில் பாதுகாப்பு இல்லை. மேலும் கருத்து சொன்ன சரித்திர ஆசிரியரைப் போன்றவர்களே பல சட்ட விரோதமான வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர். மிகவும் பழமையான விலைமதிக்கமுடியாத சிலைகள், நாணயங்கள் முதலியவை 100 ஆண்டுகளுக்கும் குறைவானக் காலத்தையுடையது என்று சான்றிதழ் கொடுத்து, கடத்தல் பேர்வழிகளுக்கு உதவியுள்ளார்கள். ஃபிளின் என்ற ஆஸ்திரேலியர் விஷயத்தில் பலர் சம்பந்தப்பட்டுள்ளதை முன்னரே என்னால் எடுத்துக் காட்டப்பட்டது[3]. ஆகவே அரசையும், இம்மாதிரியான நாத்திகவாதிகள், கம்யூனிஸ்டுகள், குறிப்பாக இந்து-விரோதவாதிகளை நம்ப முடியாது. இங்கு இப்பொழுதைய ராணி, அவை கோவிலுக்குள்ளேயே வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது[4]. ஆர். நாகசாமி ஏன் அவற்றை அருங்காட்சியகத்தில் வைக்கக் கூடாது என்று விளக்கியுள்ளார்[5]. தான் லண்டனில் பத்தூர் நடராஜர் விக்கிரம் சார்பாக, நீதிபதி முன்பு, கோவில் விக்கிரகம் கோவிலில் முறைப்படி வைக்கப்பட்டு, அதற்கான பூஜைகள் முதலியவை செய்யப்படவேண்டியுள்ளதால், அது அருங்காட்சியகத்தில் வைக்கக் கூடாது என்று எடுத்துக் காட்டியதை குறிப்பிட்டுள்ளார். அதாவது, அதுபோலவே, இந்ந்கைகள் முதலியவை, விஷ்ணுவிற்கு சாத்தப் பட்டு. அதற்கான பூஜைகள், கிரியைகள் முதலியவைச் செய்யப்படவேண்டும். இத்தனை ஆண்டுகள் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் அவை மறைத்து வைக்கப் பட்டிருந்தன.
நாகங்களினால் பாதுகாத்து வரப்படும் அறையா? “B” என்று அடையாளமிடப்பட்டுள்ள அறையைத் திறந்தால், அரேபியக் கடல் நீரே உள்ளேவரக்கூடும் என்று ஒரு கோவில் அதிகாரி எச்சரித்தார். 20ம் நூற்றாண்டில் ஒருமுறை, ராஜவம்சத்தனர் அவ்வாறு திறக்க முயற்சித்தபோது, கடல் அலைகளின் ஆரவார சத்தம் கேட்டது என்று அவர் கூறுகிறார். அதுமட்டுமல்லாது, வாசலில் இருக்கும் ஒரு நாகப்பாம்பின் கல்வெட்டைக் காண்பித்து, அது எச்சரிக்கைச் சின்னம் என்பதையும் எடுத்துக் காட்டி, அதனை திறப்பதால் ஏற்படும் அபாயத்தை எச்சரித்தார்[6]. நாகங்களினால் ஏற்படும் சப்தத்தைக் கருத்திற்க் கொண்டு பயந்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன[7]. எது எப்படியாகிலும், உச்சநீதி மன்றம் அதனைத் திறக்க வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. அகில-உலக ஊடகங்களுக்கும் இதன் கண்டுபிடிப்பில் தலை-கால் தெரியவில்லை, விமர்சித்துத் தள்ளுகின்றன[8].
சாய்பாபாவிடம் கருணாநிதி காலில் விழுந்து கெஞ்சியதை வீரமணி எப்படி மறந்தார்? கருணாநிதி போன்ற மக்கள் கொள்ளைக்காரர்களிடமிருந்து பணத்தை எடுத்து மக்களுக்கு பயன்படச் செய்யவேண்டும் என்று ஏன் வீரமணி போன்றோர் சொல்லவில்லை என்று தெரியவில்லை. கடந்த 10-20-30 ஆண்டுகளில் சாதாரணமாக இருந்த திமுகவினர், இன்று ஆயிரக் கணக்கான கோடிகளுக்கு அதிபர்களாக இருக்கிறார்கள் – வீடுகள், பங்களாக்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், தோட்டங்கள், பண்னை வீடுகள், தொழிற்சாலைகள் என்று பட்டியல்கள் நீளுகின்றன. இதை அவர்கள் மக்களுக்காக செலவிடுவார்களா? அத்தகைய சாய்பாபா கால்களில் விழுந்துதான், அதே கருணாநிதி, சென்னைக் குடிநீருக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டதை வீரமணி மறந்து விட்டார் போலும்! அப்பொழுது மட்டும், பணம் அங்கிருந்து வர வேண்டுமா? ஏன் கருணாநிதியே தன்து பணத்திலிருந்து கொடுத்து, அந்த நல்ல காரியத்தைச் செய்திருக்கலாமே? இலவசம் என்று வரும்போது, அரசு அதாவது மக்கள் வரிப்பணம் என்றாதால் தாராளமாக வாரி இரைக்கின்றனர். ஆனால், சொந்த பணம் என்று வரும்போது, அத்தகைய தாராளம், தானம், தர்மம் முதலியவை மனத்திற்கு வருவதில்லை!
[1] http://thatstamil.oneindia.in/news/2011/07/05/temple-money-spent-national-development-veeramani-aid0090.html
[2] http://economictimes.indiatimes.com/opinion/et-debate/the-trillion-rupee-question-what-is-to-be-done-with-the-temple-treasure/articleshow/9166259.cms
[3] Mr. V.J.A. Flynn and Mr. Shyam … vs Union Of India (Uoi) And Ors. on 26 November, 2002
Equivalent citations: 2003 (66) DRJ 381, 2003 (86) ECC 129; http://www.indiankanoon.org/doc/924272/
2004-ITS-46-SC-(ELT-163/A59)-V.J.A. Flynn v. U.O.I., dated 14-4-2003
Dr. V.J.A. Flynn vs S.S. Chauhan And Another on 4 March, 1996; Equivalent citations: 1996 CriLJ 3080, 1996 (37) DRJ 195, ILR 1998 Delhi 426; http://208.79.211.6/doc/246782/
குறிச்சொற்கள்: அரசியல் முதலாளிகள், கோயில் சொத்து, கோயில் பூஜை, சரித்திர ஆசிரியர், சாய்பாபா, சிதம்பரக் கொள்ளை, சிலைகள், திராவிட அரசியல் முதலாளிகள், திராவிட முதலாளிகள், நாணயங்கள், புட்டபர்த்தி, புட்டபர்த்தி சாய்பாபா, புனளிகாரம், மார்க்சீயவாதி, மூலதனப் பெருக்கம், ராஜன் குருக்கள்
6:02 மு.பகல் இல் ஜனவரி 22, 2012 |
[...] [3] http://lawisanass.wordpress.com/2011/07/10/why-dravidian-capitalists-should-not-spend-their-money-fo… [...]