‘தாமதிக்கப்படும் வழக்கு’ பகுப்புக்கான தொகுப்பு
மார்ச் 17, 2012
தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?
லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்
| Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.
Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)
3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned
RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th
Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video) |
கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?
- ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
- அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
- அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
- முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
- கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
- ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
- இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?
திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –
- நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
- முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
- தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
- உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
- அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.
இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!
வேதபிரகாஷ்
16-03-2012
[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.
குறிச்சொற்கள்:அதிகாரி, அத்தாட்சி, ஆதாரங்கள், ஆதாரம், உருவாக்குதல், ஒளிந்து வாழ்வது, ஓடி வாழ்வது, கருப்பன், கைது, சட்டம், சரண்டர், சாட்சி, சாட்சிகள், சென்னை, சோதனை, தப்பி ஓடல், தயாரித்தல், தர்மானந்தா, தலைமை நீதிபதி, நித்யானந்தா, நிபந்தனை ஜாமீன், நீதிபதி, பால் கமிஷன், போலி, போலீஸ், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, மாஜிஸ்திரேட்டு வில்லியம்ஸ், ரஞ்சிதா, லிபரான் கமிஷன், லெனின், லெனின் கருப்பன், விசாரணை, வில் ஹியூம்
உச்சநீதிமன்றம், எதிரான வழக்கு, கடத்தல், கருணாநிதி, கருணாநிதி மீதுள்ள வழக்கு, கருணாநிதியின் அவதூறு பேச்சு, கருணை மனு, கருணை மனுக்கள், கிருஷ்ண அய்யர், கிருஷ்ண ஐயர், கிருஷ்ணய்யர், குற்றப்பத்திரிக்கை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் படவில்லை, குற்றவியல் இயக்குனர், கே. வீரமணி, சட்டத்தின் தாமதம், சட்டத்தின் மேன்மை, சட்டத்தை மீறும் நீதிகள், சட்டத்தை மீறும் நீதிகள், சாட்சிகள், சாட்சியம், சாட்சியம் அளித்தல், சிறை அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட், சென்னை உயர் நீதிமன்றம், தலைமை நீதிபதி, தவறான சட்ட முன் பாதிரிகள் உருவாக்கும் முறை, தவறான சட்ட முன் மாதிரிகள், தவறு செய்யும் நீதிபதி, தாக்கத்தை ஏற்படுத்தவது, தாமதிக்கப்படும் வழக்கு, தீர்ப்பை எதிர்த்து அப்பீல், துஷ்பிரயோகம், நித்யானந்தா, நிபந்தனை ஜாமீன், நிலுவையிலுள்ள வழக்குகள், நீதி புதைக்கப்பட்டு விட்டது, நீதித் துறையில் அரசியல் நியமனங்கள், நீதித்துறை அதிகாரி, நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு, நீதிமன்றத்தின் மரியாதை, போலீஸ், போலீஸ் துறையில் அரசியல் நியமனங்கள், மனுதாரர், மிகவும் தவறான சட்ட முன் மாதிரிகள், வழக்கு, வழக்குப் பதிவு, வழக்கை முடிக்க லஞ்சம், வழக்கை வாபஸ் வாங்க செய்தல், வழக்கை வாபஸ் வாங்குதல், வாக்குறுதி, வாக்குறுதி நிறைவேற்றல், வாதி, வில் ஹியூம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
பெப்ரவரி 7, 2012
ராபர்டோ ரௌல் கந்தியை அடுத்து, ராபர்ட் வதேரா: இந்தியாவை ஆளப்போவது யார்?
உபியில் ராபர்ட் வதேராவின் வாகன பேரணியை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி, கோவாவிற்கு பணியிடமாற்றம்: உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் வாகன பேரணியை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி, கோவா மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேதி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராபர்ட் வதேரா பிரச்சாரம் செய்தார். அப்போது அனுமதிக்கப்பட்ட 10 வண்டிகள் அளவைவிட அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்கள் பேரணியில் கலந்துகொண்டதால் தேர்தல் பார்வையாளர் பவன் சென், ராபர்ட் வதேரா ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினார்[1]. இதையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரியான பவன் சென், கோவா மாநிலத்திற்கு தேர்தல் அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரியங்காவின் கணவரை தடுத்து நிறுத்தியதால்தான் ஐஏஎஸ் அதிகாரி பவன்சென் மாற்றப்பட்டுள்ளால் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அந்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மறுத்துள்ளார். பவன் சென்னை பணியிடமாற்றம் செய்ய காலையில் முடிவெடுத்துவிட்டதாகவும் அவர், மாலையில்தான் ராபர்ட் வதேராவை தடுத்து நிறுத்தியதாகவும் குரேஷி விளக்கமளித்துள்ளார்[2]. அதாவது, இதற்கும்-அதற்கும் சம்பந்தல் இல்லை என்கிறார்! இருப்பினும், உபி எதிர்கட்சிகள் இதை தட்டிக் கேட்டுள்ளன. ஏனெனில், வதேரா சட்டத்தை மீறியது, மீறியது தான், இருப்பினும் அவர் விஷயத்தில் சட்டம் ஒன்றும் செய்யமுடியாது.

பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை – ராகுல் காந்தி: பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்[3]. உத்தர பிரதேசத்தில் வரும் 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது, எனக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப பாபா ராம்தேவ் குண்டர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். உத்தர பிரதேச அரசு மக்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர். பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை. கடந்த 22 ஆண்டு காலமாக அவதிப்படும் இந்த மாநில மக்களுக்கு ஒரு விடிவுகாலம் ஏற்படவே நான் பாடுபடுகிறேன். வெளிப்படையாக கூறுவது என்றால் தேர்தல் முடிவுகள் பற்றி எனக்கு கவலை இல்லை. கடந்த 22 ஆண்டுகளாக உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வருவது பெரும் குற்றமாகும். மோசமான ஆட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது நமது கடமையாகும். மாநில மக்கள் மீது ஆட்சியாளர் விளையாட்டு நடத்தி உள்ளனர். மாநிலத்தின் மக்களின் கவுரவத்தை மீட்பதே முக்கிய நோக்கமாகும். இந்த மாநிலத்தில் மக்களின் சக்தியை நான் உணர்ந்து கொண்டுள்ளேன். உத்திரபிரதேசத்தை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். 2012, 14 தேர்தல்களில் இதற்காக முயல்வேன். உத்திரபிரதேசம் மீண்டும் தனது சொந்த காலில் நிற்கும் வரை ஓயமாட்டேன். இதற்கிடையே, ராகுலுக்கு எதிராக தான் யாரையும் ஏவிவிடவில்லை என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். ராகுல் ஏன் கருப்புப் பணத்தை பற்றி பேசவேயில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகன்-மகள்-மறுமகன் கைகளில் இந்தியா: நான் பிரதமராக வர ஆசையில்லை எனும் நேரத்தில், நான் அரசியலுக்கு வருவேன் என்று ராபர்ட் வதேரா கூறியிருப்பது, அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிச்சயமாக, மாமியார் – சோனியா மறுமகனுக்கு ஒரு இடம் உண்டு, என்று ஏற்பாடு செய்துள்ளது போல தெரிகிறது. ரஜினிகாந்த் பாணியில் வதேரா கூறியிருப்பது மற்ற காங்கிரச்காரர்களை கலகத்தில் தள்ளியுள்ளது. நரசிம்ம ராவ் போல ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் என்றமேங்கிக் கொண்டிருந்தவர்களின் கனவுகளும் சிதரியதைப் போன்றாகியது.

எனது கணவர் ஒரு பிசினஸ்மேன், எனவே அரசியலுக்கு வர மாட்டார்[4]: அமேதி: எனது கணவர் ஒரு பிசினஸ்மேன். அதில் அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். எனவே அரசியலுக்கு வர மாட்டார் என்று ராபர்ட் வதேராவின் மனைவியான பிரியங்கா கூறியுள்ளார். ஏற்கனவே சோனியா காந்திக்கு அடுத்து ராகுல் காந்தி என்ற ஒரு ஆர்டரை ஏற்படுத்தி காங்கிரஸார் செயல்பட்டு வருகின்றனர். சிலர் பிரியங்காவை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நானும் அரசியலுக்கு வருவேன் என்று கூறி டென்ஷனை கூட்டியுள்ளார் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா[5]. மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வியாபாரத்தை விடுத்து வருவேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் மூலம் அவர் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இதுகுறித்து பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ராபர்ட்டின் ட்விட்டர் செய்தியை மீடியாக்கள் தவறாக அர்த்தம் எடுத்துக் கொண்டுள்ளன. அவர் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருந்து வருகிறார். அதில் அவர் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். தனது தொழிலை மாற்றும் எண்ணம் அவருக்கு இல்லை. அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றார் பிரியங்கா. இருப்பினும் தற்போது உ.பியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்திக்கு உதவியாக களம் இறங்கியுள்ளார். மேலும் மனைவி பிரியங்காவுக்குத் துணையாகவும் போய்க் கொண்டிருக்கிறார். இருவருக்கும் உதவுவதற்காக தனது மகள் மிரியாவுடன் உ.பியில் முகாமிட்டுள்ளார் ராபர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபர்ட் வதேராவின் தொழில், செல்வம், அதிகாரம்[6]: தொழிலதிபராக தம்மை வதேரா காட்டிக் கொண்டாலும் சோனியா குடும்பத்து சொத்து விவகாரங்களை வெளிநாடுகளில் கவனித்துக் கொள்பவராக வலம் வருகிறவர். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான “எக்னாமிக் டைம்ஸ்” நாளிதழில் ராபர்ட் வதேராவின் சொத்துக் கணக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ராபர்ட் வதேரா திடீரென உச்சததுக்குச் சென்று விட்டார். ரியல் எஸ்டேட் துறையில் அவர் கொடி கட்டி பறக்கிறார். டி.எல்.எப். நிறுவனத்தில் அவர் பங்குதாரராக உள்ளார். அரியானா முதல் ராஜஸ்தான் வரை அவரது தொழில் சாம்ராஜ்யம் விரிந்து பரந்துள்ளது என அதில் விவரிக்கப்பட்டுள்ளது. அரசியலில் நேரடியாக பங்கேற்காமலேயே அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்வதில் வல்லவர் ராபர்ட் வதேராவை அரசியல் உலகம் ஆச்சரியத்துடன் பார்க்கும் சூழலில் அரசியலுக்கு வருகிறாராம் ராபர்ட்! ராகுல் என்ன நினைக்கிறாரோ? அரசியல் என்பது அரிசிக் கடைக்குப் போவது போலாகி விட்டது. யார் நினைத்தாலும் வரலாம், புகலாம், குதிக்கலாம், குதூகலிக்கலாம் என்றாகி விட்டது. ஆனால், வதேரா அப்படியில்லை. சமயம் பார்த்து அறுவடை என்ன, லாபத்தில் பங்கைப் பெற வல்லவர்.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு[7]: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாகக் கூறி வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, “சுவிஸ் நாட்டில் ஒரு வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கு சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு சொந்தமானது என்ற சந்தேகம் உள்ளது. இந்த கணக்கு மீது இவர்கள் இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்ற போதிலும், இந்த சொத்துக்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், இந்த விபரத்தை இருவரும் மறைத்துவிட்டனர். எனவே, சுவிஸ் வங்கியில் உள்ள சம்பந்தப்பட்ட கணக்கு விபரங்களை பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தங்களது நிலையை விளக்கவும், அந்த கணக்கில் உள்ள பணத்தை இந்திய வங்கிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்”, என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்திராவும், சோனியாவும்: சோனியா இந்திரா போலவே நடிக்கிறார், மக்களைக் கவர வேஷம் போடுகிறார், பாவனை செய்கிறார் என்றெல்லாம் ஊடகங்கள் கூறுகின்றன, எடுத்துக் காட்டுகின்றன. அது போல, எதிரிகளை கரம் வைத்து வஞ்சம் தீர்ப்பதில் வல்லவராக இருக்கிறார். வழக்குகள் என்பதும், ஒன்றும் பயந்துவிடவில்லை. சோனியா இதற்கெல்லாம் சளைத்தவர் அல்லர். எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன, ஆனால், எந்த நீதிபதிக்கும் அவற்றை எடுத்து விசாரிக்க தைரியம் இல்லை. நகர்வாலாவிற்கு என்ன நடந்தது என்று அனைவருகும் நினைவஇல் இருக்கும். ஆகையால், தனக்குப் பிறகு யார், இந்தியாவிஒன் அடுத்த பிரதமர் யார் என்பதனை சோனியா தான் தீர்மானிப்பார் என்பதில் எந்த சதேகமுனம் இல்லை. சாகும் வரை தான் காங்கிரஸின் தலைவராக இருந்து கொண்டு, மகன், மகள் மற்றும் மறுமகள் இவர்களுக்கு உரிய பதவிகளைக் கொடுத்து, இந்தியாவை மறைமுகமாக ஆண்டுதான் வருவார்.
வேதபிரகாஷ்
07-02-2012
குறிச்சொற்கள்:., இத்தாலி, உபி, ஐந்திரா, கந்தி, காங்கிரஸ், காந்தி, சோனியா, தேர்தல், பிரியங்கா, மெய்னோ, ராகுல், ராபர்ட், ராஹுல், ரௌல், வதேரா, வத்ரா
அமர் சிங், அவதூறு வழக்கு, உச்சநீதிமன்றம், உபி, கந்தி, காந்தி, சட்டத்தை மீறும் நீதிகள், சாட்சிகள், சாட்சியம், சாதகமான தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட், சோனியா, தாமதிக்கப்படும் வழக்கு, நிலுவையிலுள்ள வழக்கு, நிலுவையிலுள்ள வழக்குகள், நீதிபதி, பிரதமர், பிரியங்கா, மகன், மகள், மறுமகன், மெய்னோ, ராகுல், வதேரா, வத்ரா, வழக்கு, வழக்குப் பதிவு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்டம்பர் 2, 2010
மௌதனியை கைது செய்த பெங்களூரு போலீஸ் அதிகாரிக்கு கேரள மாஜிஸ்ட்ரேட் சம்மன்!
அப்துல் நாசர் மௌதனியை கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது, என்று போடப்பட்டு புகார் மனு: அப்துல் நாசர் மௌதனியை கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது, ஏனெனில் கைது செய்யப்பட்டவுடன் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் அழைத்துவராமல், வழியில்-கைது செய்யும்படியான வாரண்டை வைத்துக் கொண்டு பெங்களூரு போலீஸார், மௌதனியை கைது செய்து கொண்டு போய்விட்டனர், என்ற புகார் வழக்கை விசாரித்த நீதிபதி / மாஜிஸ்ட்ரேட் சௌந்தரேஷ், ஓம்காரைய்யா என்ற பெங்களூரு துணை போலீஸ் கமிஷனரை செப்டம்பர் 13ம் தேதி ஆஜராகும்படி பணித்துள்ளார்[1].
ஓம்காரைய்யா வராவிட்டால் என்னாகும்? அப்துல் சலாம் என்ற அப்துல் நாசர் மௌதனியின் சகோதரர் அப்படியான புகார் ஆகஸ்ட் 30ம் தேதி மனு கொடுக்க, நீதி மன்றம் முன்பு கொல்லம் சூப்பிரென்டென்ட் ஆஃப் போலீஸை 01-09-2010 அன்று ஆஜராகும்படி பணித்தது[2]. அவர் தரப்பில் கேரள அரசு வக்கீல் வந்தாராம். ஆனால், ஓம்காரைய்யா தரப்பில் யாரும் வராதலால், இப்படி சம்மன் அனுப்பியுள்ளாராம்[3].
இமாம் மற்றும் மௌலானா விஷயங்களில் கேரள நீதிமன்றங்களின் இரட்டை வேடங்கள்: பெங்களுரு 2008 குண்டு வெடிப்பு வழக்கில் விசாரித்துவரும், கர்நாடக போலீஸ் அதிகாரியை ஆஜராகும்படி கேரள மாஜிஸ்ட்ரேட் சம்மன் அனுப்பியுள்ளது வேடிக்கையாக உள்ளது. முன்பு டில்லி இமாமை கைது செய்யும்படி மூன்றுக்கும் மேலான நீதிமன்றங்களில் வாரண்டுகள் பிறப்பித்தும், எந்த போலீஸாரும் கைது செய்யவில்லை. அதில் கேரள நீதிமன்றமும் ஒன்று[4]. மாறாக, இப்பொழுது கேரள நீதிமன்றம் உஷாராக வேலை செய்கிறது போலும். அதாவது ஒரு முஸ்லீம் அடிப்படைவாதி, நீதிபதிகளின் கால்களை உடைப்பேன்……………… என்ற ரீதியில் இன்னும் ……………………….பேசினாலும், நீதிபதிகள் மறந்து விடுவர். ஆனால், இன்னொரு முஸ்லீம் விஷயத்திலும் இப்படி நேர்மாறாக சம்மன் அனுப்புவார்களாம்! இப்படி சட்டத்தை உபயோகப் படுத்தினால், சட்டம் எப்படி வேலை செய்ய்ம்? அப்படி வேலை செய்யாவிட்டால், எப்படி மக்கள் சட்டத்ட்கை நம்புவார்கள்?
கேரள போலீஸார் நடித்தது அன்றே தெரிந்தது[5]: கேரள போலீஸார் மௌதனியை கைது செய்யாமல் நாடகம் ஆடி காலம் கழித்ததை[6] அப்பொழுது ஊடககங்களில் எல்லோரும் பார்த்துதான் ரசித்துக் கொண்டிருந்தனர். நாளிதழ்கள் கேரள போலீஸார் வ்வாறு வேண்டுமென்றே காலம் கடத்துவதை எடுத்துக் காட்டினர்[7].
[1] http://www.thehindu.com/news/states/kerala/article607181.ece
[2] http://news.oneindia.in/2010/09/01/madani-case-kerala-court-summons-bangalore-acp.html
[3] http://www.dnaindia.com/india/report_bangalore-acp-summoned-by-kerala-court-for-role-in-abdul-nasser-madani-s-arrest_1431946
[4] கோர்ட் அவமதிப்பு வழக்கில், நீபதிகள் மற்றும் நீதிபதிகளைப் பற்றி கேவலமாக, அவதூறக பேசிய டில்லி இமாமை கைது செய்யும்படிமூன்றுக்கும் மேலான நீதிமன்றங்களில் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த இமாம் கைது செய்யப்படவில்லை. அதாவது நீதி செயல்படவில்லை!
[5] A police team from Karnataka camping in south Kerala town Kollam could not on Wednesday arrest People’s Democratic Party chairman Abdul Naser Madani, an accused in the 2008 Bangalore serial blasts case, with the Kerala Police reportedly going back on its word to provide local support to them.
Indian Express, Kerala ‘delay tactics’ stall Madani arrest, August 12, 2010
http://www.indianexpress.com/news/Kerala–delay-tactics–stall-Madani-arrest/659087
http://timesofindia.indiatimes.com/city/bangalore/Cops-to-wait-for-some-time-to-arrest-Madani/articleshow/6295472.cms
[6] Economic Times, Madani’s arrest delayed, 12 Aug, 2010, 06.19AM IST,ET Bureau
http://economictimes.indiatimes.com/news/politics/nation/Madanis-arrest-delayed/articleshow/6296702.cms
[7] http://timesofindia.indiatimes.com/city/bangalore/Cops-to-wait-for-some-time-to-arrest-Madani/articleshow/6295472.cms
குறிச்சொற்கள்:அப்துல் சலாம், அப்துல் நாசர் மதானி, இமாம், ஓம்காரைய்யா, கேரள அரசு, கேரள நீதிமன்றம், கொலை வழக்கு, சட்டம், சாட்சி, சாட்சிகள், சௌந்தரேஷ், தலைமை நீதிபதி, துணை போலீஸ் கமிஷனர், நிபந்தனை ஜாமீன், நீதிபதி, போலி போலீஸ், போலீஸ், மதனி, மாஜிஸ்ட்ரேட், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, மௌதனி, மௌலானா, விசாரணை
அப்துல் நாசர் மதானி, இஸ்லாம் குண்டு, எதிரான வழக்கு, கருத்து சுதந்திரம், சட்டத்தின் தாமதம், சட்டத்தை மீறும் நீதிகள், சாட்சிகள், சாட்சியம், சாட்சியம் அளித்தல், சுப்ரீம் கோர்ட், சொந்த கருத்துகள், தப்பான சட்ட முன்மாதிரி, தலைமை நீதிபதி, தவறான சட்ட முன் பாதிரிகள் உருவாக்கும் முறை, தவறான சட்ட முன் மாதிரிகள், தவறு செய்யும் நீதிபதி, தாக்கத்தை ஏற்படுத்தவது, தாமதிக்கப்படும் வழக்கு, துஷ்பிரயோகம், நிபந்தனை ஜாமீன், நீதித் துறையில் அரசியல் நியமனங்கள், நீதித்துறை அதிகாரி, நீதிபதி, போலீஸ், மாவோயிஸ்ட்-அரசியல் கூட்டு, மிகவும் தப்பான சட்ட முன்மாதிரி, வழக்கு, வழக்குப் பதிவு, வீரப்ப மொய்லி இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
ஜூலை 15, 2010
குஷ்பு, சுகாசினி வழக்கை காட்டி ஐகோர்ட்டில் நித்யானந்தா மனு!
கடந்த ஆண்டுகளில் தெரிந்தோ, தெரியாமலோ நீதிபதிகள் பிச்சினைகள் பலவாக இருந்தாலும், தனிநபர் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக, ஒன்று சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது இல்லை, அந்த தனிநபரின் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது என்றநிலயில் செய்பட்டுவருகிறார்கள். இது எல்லாநிலைகளிலும் சரிவருமா என்று தெரியவில்லை. இந்நிலையில், நித்யானந்தாவே அத்தகைய நிலையை சாதகமாக குறிப்பிட்டு, தனக்கு சட்டத்தீர்வு தீரவேண்டும் என்று கோரியிருப்பது, ப்றுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகிறது.
சென்னை : நடிகைகள் குஷ்பு, சுகாசினி தொடர்பான வழக்குகளை சுட்டிக்காட்டி, சென் னை ஐகோர்ட்டில் சுவாமி நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விவரம்: “கடந்த மார்ச் 2ம் தேதி தனியார், “டிவி’ ஒன்றில் என்னையும் என் பக்தையையும் (நடிகை ரஞ்சிதா) இணைத்து, வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதைத் தொ டர்ந்து மலிவான விளம்பர நோக்கில் பல்வேறு தரப்பினரும், என் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர். “ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தக் கூடாது’ என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகை குஷ்பு மீது ஒரே பிரச்னைக்காக பல்வேறு வழக்குகள் தொடர்ந்த போது, இது சுட்டிக்காட்டப்பட்டது. நடிகை சுகாசினி மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது, சுப்ரீம் கோர்ட் உத்தரவைக் காட்டி, சென்னை ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்தது. அதேபோல், என் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது: கடந்த மார்ச் மாதம் கார்த்திகேயன் என்பவர், என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் மீது சி.பி.ஐ., உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மனு, நடைமுறைக்கு சரியானது அல்ல. குஷ்பு, சுகாசினி வழக்கில் கூறியது போல், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. எந்த முடிவை எடுத்தாலும், என்னையும் சேர்த்துக் கொண்டு, என் கருத்தை கேட்க வேண்டும்”, இவ்வாறு நித்யானந்தா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
“இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்‘: இம்மனு மீதான விசாரணை, ஐகோர்ட் நீதிபதி வாசுகி முன்னிலையில் வந்தது. நித்யானந்தாவின் மனுவை அவர் ஏற்றுக் கொண்டு, “இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்‘ என, உத்தரவிட்டார். நித்யானந்தா தொடர்பான அனைத்து வழக்குகளும் கர்நாடக அரசுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு தவிர, புதுச்சேரி உருளையன்பேட்டையில் ஒரு வழக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிச்சொற்கள்:கமிஷன் அறிக்கைகள், கர்நாடக அரசு, குஷ்பு, சட்டம், சாட்சிகள், சுகாசினி, சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதி, நித்யானந்தா, நிபந்தனை ஜாமீன், நீதிபதி, பொருளாதார குற்றப்பிரிவு, போலீஸ், மனு தாக்கல், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, ரஞ்சிதா, விசாரணை
அப்பீல் மனுக்கள், அவதூறு வழக்கு, ஆயுள் தண்டனை கைதிகள், இடம் மாற்ற உத்தரவு, இந்தியக் குற்றவியல் சட்டம், இறுதி விசாரணை, உச்சநீதிமன்றம், எதிரான வழக்கு, கருணாநிதி மீதுள்ள வழக்கு, கருணாநிதியின் அவதூறு பேச்சு, கருணை மனு, கர்நாடக நீதிபதி, குற்றப்பத்திரிக்கை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் படவில்லை, குற்றவியல் இயக்குனர், கைதிகள் விடுவிக்கப்பட்டது, கொலை வழக்கு, சட்டத்தினுடைய அசிங்கத்தின் எல்லை, சட்டத்தின் தாமதம், சட்டத்தை மீறும் நீதிகள், சட்டத்தை மீறும் நீதிகள், சாட்சிகள், சாட்சியம், சாட்சியம் அளித்தல், சாதகமான தீர்ப்பு, தவறான சட்ட முன் பாதிரிகள் உருவாக்கும் முறை, தவறான சட்ட முன் மாதிரிகள், தவறு செய்யும் நீதிபதி, தாமதிக்கப்படும் வழக்கு, தீர்ப்பை எதிர்த்து அப்பீல், நித்யானந்தா, நீதித் துறையில் அரசியல் நியமனங்கள், நீதிபதி, மா நித்யானந்தா கோபிகா, வழக்கு, வழக்குப் பதிவு, வழக்கை முடிக்க லஞ்சம், வாதி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை 14, 2010
கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!
| சங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.
அதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.
குற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.
அங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.
மகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.
அதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.
|
ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.
அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:
- அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
- தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
- அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
- அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
- மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
- நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
- அரசுதரப்பில் தாமதம் செய்வது,
- சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
- ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது / இருப்பது.
- ஃபைல்கட்டுகள் கொடுக்காமல் இருப்பது, தாமதிப்பது, காணாமல் போவது………………
- சில அவணங்கள் தாக்குதல் செய்யப்படாமல் இருப்பது…………………………..
- கருணாநிதியே, தமது அந்தஸ்த்தை உபயோகித்து கோர்ட்டில் ஆஜராகமல் தவிர்ப்பது…………….
இப்படி, எத்தனையோ விஷயங்களைப் பட்டியிலிட்டுக் காட்டலாம். ஆனால், இவர்கள்தாம் நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா, நீதிபதிகளா, சட்டங்களா………………………..என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால், வழக்கு என்றதும் ஓடிமறைவார்கள்.
The number os cases pending against Muthuvelar Karunanindhi as per his affidavit filed before the Election Commission:
http://archive.eci.gov.in/AFF_AENov2006/Tamil%20Nadu/11/M.Karunanidhi/MKarunanidhi%20.htm
| No. Of Cases pending |
Case No |
Name of the Court |
Date of the court for ordering enquiry |
The details of offence, Sections violated |
To defame, intention to defame etc |
| 1 |
CC.No. 29/2003 |
Additional magistrate III |
16-06-2003 |
S.500 and 501 of Indian Penal Act |
To defame, intention to defame etc |
| 2 |
CC.No. 91/2003 |
Additional magistrate III |
01-12-2003 |
S.500 and 501 of Indian Penal Act |
To defame, intention to defame etc |
| 3 |
CC.No. 5/2004 |
Additional magistrate VII |
27-01-2004 |
S.500 and 501 of Indian Penal Act |
To defame, intention to defame etc |
| 4 |
CC.No.12/2005 |
Additional magistrate V |
10-06-2005 |
S.500 and 501 of Indian Penal Act |
To defame, intention to defame etc |
| 5 |
CC.No. 1/2006 |
Additional magistrate VII |
06-01-2006 |
S.500 and 501 of Indian Penal Act |
To defame, intention to defame etc |
| 6 |
CC.No. 3156/2006 |
Additional magistrate XIV |
03-03-2006 |
S.295A and 298 of Indian Penal Act |
To hurt the religious feelings |
| 7 |
CC.No. 15522/2005 |
Additional magistrate, Egmore |
16-11-2005 |
S.5 of TESMA |
Speaking supporting strike |
| 8 |
CC.No. 15523/2005 |
Additional magistrate, Egmore |
16-11-2005 |
S.5 of TESMA |
Speaking supporting strike |
| 9 |
CC.No. 4495/2005 |
XVII Criminl Court, Saidapet |
16-06-2005 |
S.295A and 298 of Indian Penal Act |
To hurt the religious feelings |
|
|
|
|
|
|
|
|
குறிச்சொற்கள்:அவதூறு பேச்சு வழக்கு, அவதூறு வழக்கு, கருணாநிதி, கருணாநிதி மீதுள்ள வழக்கு, கருணாநிதியின் அவதூறு, தாமதிக்கப்படும் வழக்கு, துஷ்பிரயோகம், தூழண வழக்கு, தூஷணம், தூஷித்தல், நிலுவையிலுள்ள வழக்கு, நிலுவையிலுள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், பிரதிவாதி, மனுதாரர், வழக்கு, வழக்குகள், வழக்குப் பதிவு, வழக்கை வாபஸ் வாங்க செய்தல், வழக்கை வாபஸ் வாங்குதல், வாதி
அப்பீல் மனுக்கள், அவதூறு வழக்கு, இந்தியக் குற்றவியல் சட்டம், கருணாநிதி, கருணாநிதி மீதுள்ள வழக்கு, கருணாநிதியின் அவதூறு பேச்சு, சட்டத்தினுடைய அசிங்கத்தின் எல்லை, சட்டத்தின் தாமதம், சட்டத்தை மீறும் நீதிகள், சாட்சிகள், சாட்சியம், சாட்சியம் அளித்தல், சாதகமான தீர்ப்பு, தவறான சட்ட முன் மாதிரிகள், தவறு செய்யும் நீதிபதி, தாமதிக்கப்படும் வழக்கு, தீர்ப்பை எதிர்த்து அப்பீல், துஷ்பிரயோகம், நிலுவையிலுள்ள வழக்கு, நிலுவையிலுள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், நீதி புதைக்கப்பட்டு விட்டது, நீதித் துறையில் அரசியல் நியமனங்கள், நீதிபதி, பிரதிவாதி, மனுதாரர், மிகவும் தப்பான சட்ட முன்மாதிரி, மிகவும் தவறான சட்ட முன் மாதிரிகள், வழக்கு, வழக்குப் பதிவு, வழக்கை வாபஸ் வாங்க செய்தல், வழக்கை வாபஸ் வாங்குதல், வாதி இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »