‘நகை’ பகுப்புக்கான தொகுப்பு

ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் வழக்கும், பத்மநாப சுவாமி கோவில் வழக்கும்!

ஜூலை 10, 2011

ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் வழக்கும், பத்மநாப சுவாமி கோவில் வழக்கும்:

 

ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் வழக்கு: மேற்கு வங்கத்தில் இருக்கும் ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்து-விரோத சக்திகளின் கைகளில் இருந்து வருகிறது[1]. அந்நிலையில் 1986ல் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் விஷயத்தில் தப்பித்துக் கொள்ள, தன்னை ஒரு “இந்து அல்லாத சிறுபான்மையின நம்பிக்கையாளர்களின் நிறுவனம்/குழுமம்” (non-Hindu minority institution) என்று பிரகடனப்படுத்திக் கொண்டு அவ்வாறே, அப்பொழுதைய கல்கத்தா உயர்நீதி மன்றமும் தீர்ப்பளித்தது. பிறகு, அதன் பின்னணியில் இருந்த அத்தகைய விஷமத்தனமான, அதே நேரத்தில் இந்நாட்டிற்கு பலவிரதங்களில் பாதிக்கக் கூடிய விஷயனம் உள்ளது என்ற உண்மையறிந்து, மேல் முறையீடு செய்யப்பட்ட போது, உச்சநீதி மன்றம், அத்தகைய தீர்ப்பை தள்ளுபடி செய்து, எப்படி சுவாமி விவேகானந்தரால், தமது குருவின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் வேதங்கள், உபநிஷதங்கள் முதலியவற்றின் ஆதாராமாகக் கொண்டு அமைக்கப் பட்டது என்ற விளக்கத்தோடு தீர்ப்பை வழங்கியது[2].

 

பத்மநாப சுவாமி கோவில் வழக்கு: இதேபோலத்தான் இந்த பத்மநாப சுவாமி கோவில் வழக்கிலும், இப்பொழுது உச்சநீதி மன்றம் டி. பி. சுந்தரராஜன் மற்றும் டி. பி. அனந்தபத்மநாபன் இருவரையும் கோவில் வளாகத்திலிருந்து வெளியேறுமாறு ஆணையிட்டுள்ளது[3]. இவர்கள் மற்றும் இன்னும் நான்கு பேர் 2007லிருந்து, மிகக்குறைந்த வாடகையான ரூ 10/- கூட செல்லுத்தாமல் இருந்தனர். இதனால், வாடகையை உயர்த்தி வசூல் செய்ய கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்தபோது, வழக்குத் தொடரப் பட்டது. உடனே, கேரளா உயர்நீதி மன்றம், கோவிலை அரசே எடுத்து நடத்த டிசம்பர் 2009ல் தீர்ப்பளித்தது. ஆனால், பிறகு உச்சநிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அத்தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, ஆறு அறைகளையும் மூடி சீல் வைக்க ஆணையிட்டது. பிறகு தான், அவ்வறைகளைத் திறக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

உச்சநீதி மன்றத்தின் ஆணைகளின் வேகம்: வழக்கம் போல அல்லது ராமஜன்மபூமி விவகாரம் போல, உச்சநீதி மன்றம் இவ்வளவு வேகமாக செயல்படுவது ஆச்சரியமாக இருக்கிறது:

ஜூலை 3: கோவிலில் கிடைத்த விலை மதிப்பிடற்கரிய பொருட்கள் கோவிலிலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என, தொல்லியல் நிபுணர்கள் கோரிக்கை.

ஜூலை 4: கடைசி அறையைத் திறப்பது குறித்து 8ம்தேதி முடிவு செய்வதாக ஏழு பேர் கொண்ட குழு அறிவிப்பு; “கோவில் சொத்து கோவிலுக்குத் தான்’ என்றார் முதல்வர் உம்மன் சாண்டி; கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடத் தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மன்னர் குடும்பம் மனு தாக்கல்.

ஜூலை 5: மன்னர் மனு விசாரணையில், “கணக்கெடுப்பை வீடியோ எடுக்க வேண்டும்; தகவல்களை வெளியிடக் கூடாது’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

ஜூலை 7: கோவிலைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், 500 மீ., சுற்றளவுக்கு சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தல் ஆகியவை குறித்து போலீசார் ஆலோசனை.

ஜூலை 8: மீதமுள்ள இரு அறைகளைத் திறக்க வேண்டாம் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு. வழக்கு 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பு.

 

அனந்த பத்மநாப சுவாமிக்கு சொந்தனாவைப் பற்றி மற்றவர்கள் கருத்து கூறுவது: உச்சநீதிமன்ற பல தீர்ர்ப்புகளின் படி, உள்ள சட்டத்தின் படி, கோவில் விக்கிரம் என்பது சட்டப்படி, ஒரு நபர் ஆவர். அதன்படி, அந்த விக்கிரத்திற்கு எல்லா உரிமைகளும் உள்ளன. முன்பு பத்தூர் நடராஜர் சிலை இங்கிலாந்திற்குக் கடத்திச் சென்றபோது, லண்டன் நீதிமன்றத்தில் அத்தகைய உரிமையை எடுத்துக் காட்டியதால் தான், அந்த விக்கிரம் கோவிலுக்கு சொந்தமானது அன்று திர்ப்பளிக்கப் பட்டு, லண்டனிலிருந்து, கொவிலுக்கே அனுப்பி வைக்கப்பட்டது. அதுபோல, நகைகள், ஆபரணங்கள், விக்கிரம், பூஜைப் பாத்திரங்கள் எல்லாமே அனந்த பத்மநாப சுவாமிக்கு சொந்தம் என்பது சட்டப்படியுள்ள விஷயம். இதற்கு எதிராக, ஏதேதோ கருத்துகளை சொல்லிவருவது, அதிகபிரங்கித் தனமானது.


[1] Ram Swarup, Ramakrishna Mission in search of New Identity, V oice of India, New Delhi,

[2] Bramchari Sidheswar Shai and Others vs. State of West Bengal 1995 4 SCC 646: AIR 1995 SC 2089, 1995 SCC (4) 646; http://www.indiankanoon.org/doc/967081/


Follow

Get every new post delivered to your Inbox.