‘நிலுவையிலுள்ள வழக்குகள்’ பகுப்புக்கான தொகுப்பு

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

மே 3, 2012

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

நல்லவர்களாக, தூயவர்களாக, புனிதர்களாக இருந்தால் எம்.பி.க்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஊடகக்காரர்கள் ஒரு மொழியிலிருந்து, மற்ற மொழிக்கு மாற்றம் செய்யும் போது, அம்மொழிக்கே உரித்தான சில சொல்லாற்றங்கள், வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றிலிருந்து பெறப்படும் அர்த்தங்கள், அம்மொழியின் தன்மையில் எடுத்துக் கொள்ளவில்லையென்றால், அல்லது சாதாரணமாக மொழிபெயர்த்தால், சரியான பொருள் கிடைக்காது. இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்க்கும்போது அவ்வாறுதான் ஏற்படுகிறது. वे इनसान की शक्ल में शैतान हैं। “மனித உருவில் உள்ள சாத்தான்களின் வடிவங்கள்” அல்லது சைத்தான் மனித உருவில் உள்ளன என்று மொழிபெயத்தால், உண்மையிலேயே எம்.பிக்கள் “சைத்தான்” என்று சொல்லப்படவில்லை. அம்மொழிப்பிரயோகத்தில் அவர்கள் அத்தகைய கெட்டவர்கள் என்றுதான் பொருள்வரும். இந்தியிலேயே, இரு நாளிதழ்கள் அச்செய்தியை இருவிதமாக வெளியிட்டிருப்பதை கீழே காணலாம்:

क्या बोले थे बाबा[1]छत्तीसगढ़ के दुर्ग से मंगलवार को अपनी यात्रा शुरू करते हुए रामदेव ने कहा था कि सांसदों में अच्छे लोग भी हैं और वह उनका सम्मान करते हैं। लेकिन वहां डकैत, हत्यारे और जाहिल भी हैं। वे वह लोग हैं, जिन्हें किसानों, मजदूरों और देश की लोगों की कोई चिंता नहीं है। वे सिर्फ पैसे के गुलाम हैं। वे इनसान की शक्ल में शैतान हैं। जिन्हें उस पद के लिए चुना गया है, जिसके कि वे काबिल ही नहीं हैं। हमें संसद को बचाना है। हमें भ्रष्ट लोगों को हटाना है। संसद में लुटेरे, हत्यारे व जाहिल बैठे हैं[2]। सत्ता की कुर्सी पर इंसान की शक्ल में हैवान हैं। हमने उन्हें कुर्सी पर बैठाया है। लेकिन वो सत्ता चलाने की पात्रता नहीं रखते। वे लोग किसानों और मजदूरों से हमदर्दी नहीं रखते। वे देश इसलिए चला रहे, क्योंकि हमने ऐसा ही सिस्टम बनाया है। हमने मान लिया है कि 543 रोगी हिंदुस्तान चलाएंगे[3]। हालांकि उनमें कुछ अच्छे भी हैं। हमें संसद को बचाना होगा।

பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று எம்.பி.க்களை பாபா ராம்தேவ் சரமாரி தாக்கி உள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்[4].எம்.பி.க்களை திருடர்கள், கொலைகாரர்கள் என்று யோக குரு ராம்தேவ் விமர்சித்துள்ளதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் புதன்கிழமை (02-05-2012) கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேவையற்று வெளிப்படும் ரோஷம்: ராம்தேவின் பேச்சுக்கு மக்களவைத் தலைவர் மீராகுமார், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அரசியல் சாசன சட்டமே மேலானது. அது நாடாளுமன்றத்துக்கு என்று தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. அதை நாம் முதலில் கட்டிக்காக்க வேண்டும்’ என்று மீரா குமார் தெரிவித்தார்.  ”நாடாளுமன்றத்தையும், சட்டம் இயற்றுபவர்களையும் விமர்சிப்பது சாதாரணமாகிவிட்டது. யார் அதிகமாக அவமதிக்கிறார்களோ அவர் பெரிய ஹீரோ ஆகிறார். இது முற்றிலும் தவறு. ஜனநாயக நிறுவனங்களை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரிதான்’ என்றார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இது போன்ற கருத்துகளை ராம்தேவிடமிருந்து தாம் எதிர்பார்க்கவில்லை. 144 சட்டம் அமூலில் இருக்கும் போது மின்சாரம் இல்லை என்று போரடினால் நானும் சட்டப்படி “கிரிமினல்” ஆகிவிடுவேன்[5], என்று பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.

உரிமை மீறல் நோட்டீஸ்: “”எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். “பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவோரால் நாடாளுமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அவர்கள் (ராம்தேவ் பெயரைக் குறிப்பிடவில்லை) மீது நாடாளுமன்ற உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நோட்டீûஸக் கொடுத்துள்ளேன்” என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர் சைலேந்திர குமார் தெரிவித்தார்[6]. இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “ராம்தேவின் பேச்சால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமுதாயத்தில் கெடுகிறது. அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ, உறுப்பினர்களின் உரிமை மீறல் நோட்டீஸ் அனைத்தும் மக்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. அவர் முடிவு எடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

எம்.பி.க்கள் மீது ராம்தேவ் தாக்கு: முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராம்தேவ், “எம்.பி.க்கள் எதிலும் அக்கறையில்லாதவர்கள். விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நாட்டு மக்களையும் நேசிக்காதவர்கள்‘ என்று கடுமையாக குற்றம்சாட்டினார்[7].

அவர்கள் பணத்துக்கு அடிமைகளாகவும், நண்பர்களாகவும் உள்ளனர். நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மனித உருவில் வாழும் பிசாசுகள். அவர்களுக்கு தகுதி கிடையாது.  நாடாளுமன்றத்தில் நல்லவர்களும் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களில் கல்வியறிவற்றவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் உள்ளனர். எனவே நாம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல்வாதிகளை நீக்க வேண்டும்’ என்று கடுமையாக பேசினார் ராம்தேவ். Addressing the media while launching his month-long yatra in Chhattisgarh’s Durg on Tuesday, Baba Ramdev said there were good people among the parliamentarians and he respected them[8]. “But there are dacoits, murderers, illiterates among them[9]. We have to save Parliament. We have to remove corrupt people.” He accused the MPs of not caring for farmers and labourers. “They are friends and slaves of money. They are illiterate, dacoits and murderers. They are devils in the form of humans, who we have elected to those posts. They are not worth it,” he said.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும், அவரது குழுவினரும் எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில் ராம்தேவும் எம்.பி.க்களை கடுமையாக குறைகூறி பேசியுள்ளார்.

ராம்தேவ் ஒரு மென்டல் கேஸ்: லாலு தாக்கு[10]: யோகாகுரு பாபா ராம்தேவ் பைத்தியக்காரர் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்[11]. சத்திஸ்கரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யோகாகுரு பாபா ராம்தேவ், எம்.பி.,க்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் கேட்டபோது, ராம்தேவின் பேச்சு பயனற்றது. இது போன்று பேசுபவர்களும் பயனற்றவர்கள். ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.

ராம்தேவ் கூறியது சரிதான்: அன்னா ஹசாரே[12]எம்.பி.க்கள் குறித்து ராம்தேவ் பேசியதில் தவறில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.நேற்று முன்தினம், சத்தீஸ்கரில் ராம்தேவ் கூறுகையில், “தற்போதுள்ள எம்.பி.,க் களில் சில நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். அதே நேரத்தில், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், படிப்பறிவற்றவர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, பார்லிமென்டை காக்க வேண்டும் என்றார். இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: ராம்தேவ் கூறியதில் எந்தவிதத்திலும் தவறில்லை. அவர் கூறிவது தவறு என்றால், இன்று ஏராளமான எம்.பி.க்களுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.  இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் கொடுக்கும் போது , மக்கள் ஏன்? நெருக்கடி கொடுக்கக்கூடாது. கட்சிகளுக்கு தேவை ஓட்டு. ஆனால் வேட்பாளர்களாக கிரிமினல்களை ஏன நிறுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் தேர்தலில் நின்றால் ஜனநாயகத்தின் கோயில் என்னவாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் 150ற்கும் மேலான கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்கள்[13]: 543 எம்.பி.க்களில் 150 பேர்களுக்கு மேல் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் என்று ஏற்கெனவே பல அறிக்கைகள், செய்திகள், விவரங்கள் வந்துள்ளன[14]. அவர்கள் ஒன்றும் வெட்கப்பட்டு தேர்தலில் நிற்காமல் இல்லை, தோல்வியும் அடையவில்லை, பாராளுமன்றத்தில் உட்காரவும் இல்லை ……………………என்றெல்லாம் இல்லை.

“Of these 150 MPs, 72 have serious charges against them. The maximum criminal charges are against Congress MP from Porbandar in Gujarat Vitthalbhai Hansrajbhai Radadiya. He has a total of 16 cases out of which five cases are of serious nature,” the analysis revealed.”Bharatiya Janata Party (BJP) has maximum number of MPs having criminal cases with 42 MPs, of which 17 have serious criminal cases against them. It is closely followed by Congress with 41 MPs having criminal cases against them. Twelve Congress MPs have serious charges against them,” the study said. அந்த 150ல், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அதிக அளவில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 72 மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் இதைப் பற்றி கவலைப் படவில்லை.பி.ஜே.பியில் 42 எம்.பி.க்கள், காங்கிரஸில் 41 என்று உள்ளனர். அதனால்தான், இரு கட்சிக்காரர்களுக்கும் கோபம் வருகிறது போலும். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், இவர்களை ஏன் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க்கவைத்தன?

“டாப்-10” என்று கிரிமினல் எம்.பி.க்கள் பட்டியலே கொடுக்கப் பட்டது. அப்பொழுதும், யாருக்கும் பொத்துக் கொண்டு வரவில்லை. அதில் லல்லுவும் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் தான் பாபா ராம்தேவை “மென்டல்” என்று “கமன்ட்” வேறு அடிக்கிறார்.

 Here is a list of top ten MPs with a criminal background, compiled by the National Election Watch[15].

Name: Kameshwar Baitha (56)
Constituency represented: Palamau, Jharkhand
Party: Jharkhand Mukti Morcha
Criminal background: Accused in 35 cases and has 50 serious charges against him under the IPC
Convicted: NeverName: Jagadish Sharma, (58)
Constituency represented: Jahanabad, Bihar
Party: Janata Dal-United
Criminal background: Accused in 6 cases and has 17 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Bal Kumar Patel (48)
Constituency represented: Mirzapur, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 13 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Prabhatsinh Pratapsinh Chauvan (67)
Constituency represented: Panchamahal, Gujarat
Party: Bharatiya Janata Party
Criminal background: Accused in 3 cases and has 10 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kapil Muni Karwariya (42)
Constituency represented: Phulpur, Uttar Pradesh
Party: Bahujan Samaj Party
Criminal background: Accused in 4 cases and has 8 serious charges against him under the IPC
Convicted: Never

Name: P Karunakaran (64)
Constituency represented: Kasargod, Kerala
Party: Communist Party of India-Marxist
Criminal background: Accused in 12 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kunvarji Mohanbhai Bavaliya (54)
Constituency represented: Rajkot, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 2 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Vittalbhai Hansrajbhai Radadiya (51)
Constituency represented: Porbandar, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 16 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Ramkishun (49)
Constituency represented: Chandauli, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Lalu Prasad Yadav (60)
Constituency represented: Saran, Bihar
Party: Rashtriya Janata Dal
Criminal background: Accused in 7 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

நாட்டை ஆள்பவர்களுக்கு தகுதி, யோக்கியதை, தார்மீக பொறுப்பு முதலியவை வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. அதனை அவ்வாறு கூறுவதே தவறாகும். இப்படி கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, ஊழல், லஞ்சம் என்று பல குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகி, பைளில் வெளிவந்து, பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அரசு செலவில் உலா வந்தால் அது மக்களுக்கு அசிங்கம் இல்லையா? ஒரு லட்சம் வாங்கிய பங்காரு லட்சுமணன் ஜெயிலில் என்றால், 1,73,000 கோடிகள் சுருட்டியவர்கள் எப்படி வெளியில் இருக்கிறார்கள்? பிணையில் வெளிவந்து பாராளுமன்ரத்திலும் உட்கார்ந்து கொள்கிறார்கள்?இதனை எடுத்துக் காட்டும் போது, அவர்கள் கோபம் அடைகிறார்கள், சட்டப்படி, உரிமை மீறல் என்று நடவடிக்கை எடுப்போம் என்றால், சட்டப்படி அந்த 150 எம்,பிக்களையும் வீடிற்கு அனுப்ப வேண்டியது தானே? எம்.பி பதவியை பறிக்கவேண்டியது தானே? மந்திரியாக உள்ளவர்களின் பதவியையும் பறிக்க வேண்டியதுதானே? ஆனால், காங்கிரஸ் அல்லது மேலிடம் சோனியா மெய்னோ அவ்வாறு செய்யவில்லையே? தாமஸ் கதையை அதற்குள் மறந்து விட்டார்கள் போல!

வழக்கு முடிந்து, தான் குற்றவாளி இல்லை என்ற பிறகு பதவிக்கு வருவது தானே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஜே.பி ஆட்சி மூன்று மாநிலங்களில் கலைக்கப் பட்டது. ஆனால், தவறில்லை என்று தீர்ப்பு வந்தபோது, அது மறுபடியும் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. அந்த இளைஞர் ராகுல் ஏன் இதைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்வதில்லை? ஒருவேளை தனது அப்பாவே ஊழல் பேர்வழி என்ற பிரச்சினை உள்ளது என்று அமைதியாக உள்ளாரா? இல்லை பிரியங்கா அல்லது வதேராவை வைத்து மோட்டார் பைக்கில் ஊர்வலம் வரச் சொல்லலாமே? பாபா ராம்தேவின் உருவ பொம்மையை எரிப்பவர்கள், அந்த 150 எம்.பிக்களின் உருவ பொம்மைகளை எரிப்பார்களா அல்லது பாலாபிஷேகம் செய்வார்களா?

ஹவாலா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட எ,.கே.அத்வானி ராஜினாமா செய்து, காத்திருந்து, வழக்கு முடிந்து, தான் நிரபராதி என்று முடிவானப் பிறகுதான் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதேபோல மற்றவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை?

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று பாரம்பரியம் இருக்கும் போது, மக்கள் இனிமேல் அத்தகைய ஆட்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. முதலில் அந்தந்த கட்சிகள் அவர்களை தேர்தலில் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் தேர்தல் கமிஷன் அவர்களை நிறுத்தவேண்டும். தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போதே அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படவேண்டும். அப்பொழுது தான், இந்நிலை மாறும். இவ்வாறு சொல்வதே தவறு என்று பாராளுமன்றம் எப்படி சொல்ல முடியும்? அங்கிருக்கும் 150 பேர்கள் எப்படி தமக்கு எதிராக தாமே பேசுவார்கள் அல்லது தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள்? விவாதம் வரும் போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மற்றவர்கள் பேசுவதை கேட்பார்கள் அல்லது தாமே பேச முன்வருவார்கள்?

அது எப்படி சட்டப்படி செல்லுபடியாகும்? இதெல்லாம் அங்குள்ள மெத்தப் படித்த எம்.பிக்களுக்கு, ஐந்து / ஆறு முறை என்று எம்.பிக்களாக இருப்பவர்களுக்கு, சட்டம் படித்த மாமேதைகளுக்கு, லட்சங்களில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்-எம்,பிக்களுக்கு தெரியாமலா இருக்கும்?

வேதபிரகாஷ்

02-05-2012


தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

மார்ச் 17, 2012

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?


லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்

Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.

Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani) 

3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th 

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

  • ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
  • அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
  • அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
  • முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
  • கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
  • ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
  • இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?

திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –

  1. நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
  2. முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
  3. தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
  4. உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
  5. அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.

இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!

வேதபிரகாஷ்

16-03-2012


 


[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.

ராபர்டோ ரௌல் கந்தியை அடுத்து, ராபர்ட் வதேரா: இந்தியாவை ஆளப்போவது யார்?

பெப்ரவரி 7, 2012

ராபர்டோ ரௌல் கந்தியை அடுத்து, ராபர்ட் வதேரா: இந்தியாவை ஆளப்போவது யார்?

உபியில் ராபர்‌ட் வதேராவின் வாகன பேரணியை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி, கோவாவிற்கு பணியிடமாற்றம்: உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்‌ட் வதேராவின் வாகன பேரணியை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி, கோவா மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. அமேதி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராபர்‌ட் வதேரா பிரச்சாரம் செய்தார். அப்போது அனுமதிக்கப்பட்ட 10 வண்டிகள் அளவைவிட அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்கள் பேரணியில் கலந்துகொண்டதால் தேர்தல் பார்வையாளர் பவன் சென், ராப‌ர்‌ட் வதேரா ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினார்[1]. இதையடு‌த்து ஐ.ஏ.எஸ் அதிகாரியான பவன் சென், கோவா மாநிலத்திற்கு தேர்தல் அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரியங்காவின் கணவரை தடுத்து நிறுத்தியதால்தான் ஐஏஎ‌ஸ் அ‌திக‌ா‌ரி பவ‌ன்செ‌ன் மா‌‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ல் எ‌ன்ற சர்ச்சை எழுந்த நிலையில், அந்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மறுத்துள்ளார். பவன் சென்னை பணியிடமாற்றம் செய்ய காலையில் முடிவெடுத்துவிட்டதாகவும் அவர், மாலையில்தான் ராப‌ர்‌ட் வதேராவை தடுத்து நிறுத்தியதாகவும் குரேஷி விளக்கமளித்துள்ளார்[2]. அதாவது, இதற்கும்-அதற்கும் சம்பந்தல் இல்லை என்கிறார்! இருப்பினும், உபி எதிர்கட்சிகள் இதை தட்டிக் கேட்டுள்ளன. ஏனெனில், வதேரா சட்டத்தை மீறியது, மீறியது தான், இருப்பினும் அவர் விஷயத்தில் சட்டம் ஒன்றும் செய்யமுடியாது.

பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை – ராகுல் காந்தி: பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்[3]. உத்தர பிரதேசத்தில் வரும் 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது, எனக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப பாபா ராம்தேவ் குண்டர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். உத்தர பிரதேச அரசு மக்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர். பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை. கடந்த 22 ஆண்டு காலமாக அவதிப்படும் இந்த மாநில மக்களுக்கு ஒரு விடிவுகாலம் ஏற்படவே நான் பாடுபடுகிறேன். வெளிப்படையாக கூறுவது என்றால் தேர்தல் முடிவுகள் பற்றி எனக்கு கவலை இல்லை. கடந்த 22 ஆண்டுகளாக உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வருவது பெரும் குற்றமாகும். மோசமான ஆட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது நமது கடமையாகும். மாநில மக்கள் மீது ஆட்சியாளர் விளையாட்டு நடத்தி உள்ளனர். மாநிலத்தின் மக்களின் கவுரவத்தை மீட்பதே முக்கிய நோக்கமாகும். இந்த மாநிலத்தில் மக்களின் சக்தியை நான் உணர்ந்து கொண்டுள்ளேன். உத்திரபிரதேசத்தை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். 2012, 14 தேர்தல்களில் இதற்காக முயல்வேன். உத்திரபிரதேசம் மீண்டும் தனது சொந்த காலில் நிற்கும் வரை ஓயமாட்டேன். இதற்கிடையே, ராகுலுக்கு எதிராக தான் யாரையும் ஏவிவிடவில்லை என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். ராகுல் ஏன் கருப்புப் பணத்தை பற்றி பேசவேயில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகன்-மகள்-மறுமகன் கைகளில் இந்தியா: நான் பிரதமராக வர ஆசையில்லை எனும் நேரத்தில், நான் அரசியலுக்கு வருவேன் என்று ராபர்ட் வதேரா கூறியிருப்பது, அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிச்சயமாக, மாமியார் – சோனியா மறுமகனுக்கு ஒரு இடம் உண்டு, என்று ஏற்பாடு செய்துள்ளது போல தெரிகிறது. ரஜினிகாந்த் பாணியில் வதேரா கூறியிருப்பது மற்ற காங்கிரச்காரர்களை கலகத்தில் தள்ளியுள்ளது. நரசிம்ம ராவ் போல ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் என்றமேங்கிக் கொண்டிருந்தவர்களின் கனவுகளும் சிதரியதைப் போன்றாகியது.

எனது கணவர் ஒரு பிசினஸ்மேன், எனவே அரசியலுக்கு வர மாட்டார்[4]: அமேதி: எனது கணவர் ஒரு பிசினஸ்மேன். அதில் அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். எனவே அரசியலுக்கு வர மாட்டார் என்று ராபர்ட் வதேராவின் மனைவியான பிரியங்கா கூறியுள்ளார். ஏற்கனவே சோனியா காந்திக்கு அடுத்து ராகுல் காந்தி என்ற ஒரு ஆர்டரை ஏற்படுத்தி காங்கிரஸார் செயல்பட்டு வருகின்றனர். சிலர் பிரியங்காவை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நானும் அரசியலுக்கு வருவேன் என்று கூறி டென்ஷனை கூட்டியுள்ளார் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா[5]. மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வியாபாரத்தை விடுத்து வருவேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் மூலம் அவர் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இதுகுறித்து பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ராபர்ட்டின் ட்விட்டர் செய்தியை மீடியாக்கள் தவறாக அர்த்தம் எடுத்துக் கொண்டுள்ளன. அவர் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருந்து வருகிறார். அதில் அவர் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். தனது தொழிலை மாற்றும் எண்ணம் அவருக்கு இல்லை. அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றார் பிரியங்கா. இருப்பினும் தற்போது உ.பியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்திக்கு உதவியாக களம் இறங்கியுள்ளார். மேலும் மனைவி பிரியங்காவுக்குத் துணையாகவும் போய்க் கொண்டிருக்கிறார். இருவருக்கும் உதவுவதற்காக தனது மகள் மிரியாவுடன் உ.பியில் முகாமிட்டுள்ளார் ராபர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராபர்ட் வதேராவின் தொழில், செல்வம், அதிகாரம்[6]: தொழிலதிபராக தம்மை வதேரா காட்டிக் கொண்டாலும் சோனியா குடும்பத்து சொத்து விவகாரங்களை வெளிநாடுகளில் கவனித்துக் கொள்பவராக வலம் வருகிறவர். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான “எக்னாமிக் டைம்ஸ்” நாளிதழில் ராபர்ட் வதேராவின் சொத்துக் கணக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ராபர்ட் வதேரா திடீரென உச்சததுக்குச் சென்று விட்டார். ரியல் எஸ்டேட் துறையில் அவர் கொடி கட்டி பறக்கிறார். டி.எல்.எப். நிறுவனத்தில் அவர் பங்குதாரராக உள்ளார். அரியானா முதல் ராஜஸ்தான் வரை அவரது தொழில் சாம்ராஜ்யம் விரிந்து பரந்துள்ளது என அதில் விவரிக்கப்பட்டுள்ளது. அரசியலில் நேரடியாக பங்கேற்காமலேயே அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்வதில் வல்லவர் ராபர்ட் வதேராவை அரசியல் உலகம் ஆச்சரியத்துடன் பார்க்கும் சூழலில் அரசியலுக்கு வருகிறாராம் ராபர்ட்! ராகுல் என்ன நினைக்கிறாரோ? அரசியல் என்பது அரிசிக் கடைக்குப் போவது போலாகி விட்டது. யார் நினைத்தாலும் வரலாம், புகலாம், குதிக்கலாம், குதூகலிக்கலாம் என்றாகி விட்டது. ஆனால், வதேரா அப்படியில்லை. சமயம் பார்த்து அறுவடை என்ன, லாபத்தில் பங்கைப் பெற வல்லவர்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு[7]: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாகக் கூறி வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, “சுவிஸ் நாட்டில் ஒரு வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கு சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு சொந்தமானது என்ற சந்தேகம் உள்ளது. இந்த கணக்கு மீது இவர்கள் இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்ற போதிலும், இந்த சொத்துக்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், இந்த விபரத்தை இருவரும் மறைத்துவிட்டனர். எனவே, சுவிஸ் வங்கியில் உள்ள சம்பந்தப்பட்ட கணக்கு விபரங்களை பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தங்களது நிலையை விளக்கவும், அந்த கணக்கில் உள்ள பணத்தை இந்திய வங்கிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்”, என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்திராவும், சோனியாவும்: சோனியா இந்திரா போலவே நடிக்கிறார், மக்களைக் கவர வேஷம் போடுகிறார், பாவனை செய்கிறார் என்றெல்லாம் ஊடகங்கள் கூறுகின்றன, எடுத்துக் காட்டுகின்றன. அது போல, எதிரிகளை கரம் வைத்து வஞ்சம் தீர்ப்பதில் வல்லவராக இருக்கிறார். வழக்குகள் என்பதும், ஒன்றும் பயந்துவிடவில்லை. சோனியா இதற்கெல்லாம் சளைத்தவர் அல்லர். எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன, ஆனால், எந்த நீதிபதிக்கும் அவற்றை எடுத்து விசாரிக்க தைரியம் இல்லை. நகர்வாலாவிற்கு என்ன நடந்தது என்று அனைவருகும் நினைவஇல் இருக்கும். ஆகையால், தனக்குப் பிறகு யார், இந்தியாவிஒன் அடுத்த பிரதமர் யார் என்பதனை சோனியா தான் தீர்மானிப்பார் என்பதில் எந்த சதேகமுனம் இல்லை. சாகும் வரை தான் காங்கிரஸின் தலைவராக இருந்து கொண்டு, மகன், மகள் மற்றும் மறுமகள் இவர்களுக்கு உரிய பதவிகளைக் கொடுத்து, இந்தியாவை மறைமுகமாக ஆண்டுதான் வருவார்.

வேதபிரகாஷ்

07-02-2012


மறுபடியும் அசிங்க அர்ச்சகர் தேவநாதன்! சரி, மற்ற அழகான வில் ஹியூம், மாத்யூஸ், ஊட்டி பிஷப், கோவளம் பக்கிரி இவர்கள் எல்லாம் எங்கே?

ஆகஸ்ட் 21, 2010

மறுபடியும் அசிங்க அர்ச்சகர் தேவநாதன்! சரி, மற்ற  அழகான வில் ஹியூம், மாத்யூஸ், ஊட்டி பிஷப், கோவளம் பக்கிரி இவர்கள் எல்லாம் எங்கே?

மறுபடியும் அசிங்க அர்ச்சகர் தேவநாதன்!

குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றார் அசிங்க அர்ச்சகர் தேவநாதன்: காஞ்சிபுரம் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டு அசிங்கப்படுத்தியதாக கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அர்ச்சகர் தேவநாதனிடம் நேற்று குற்றப்பத்திரிக்கை நகல் தரப்பட்டது[1]. போலீஸார், தேவநாதன் விஷயத்தில், ஜோராக்காத்தான் வேலைசெய்கிறார்கள். ஆனால், வில் ஹியூம்[2], மாத்யூஸ்[3], ஊட்டி பிஷப்[4], முதலியோர் விஷயங்களில் தூங்கிவிடுகிறார்கள் போலும்!

இப்பொழுது வேடிக்கை என்னவென்றால், தேவநாதனுடைய வக்கீலையே, சாட்களில் ஒருவராக போட்டிருக்கிறார்கள்! இதை எதிர்த்து, ஒரு பெடிஷன் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

தேவநாதன்-குற்றப்பத்திரிக்கை-8-2010

தேவநாதன்-குற்றப்பத்திரிக்கை-8-2010

மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன்: காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன் (35)[5]. இவர் கோவில் கருவறையில் சாமி சிலைக்கு அருகே வைத்து பல பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்ட செயல் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அசிங்கம் பிடித்த காட்சிகளை அவரே செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார். இது பின்னர் வெளியில் லீக் ஆகி வீடியா காட்சிள் பரவத்தொடங்கியதைத் தொடர்ந்து சிக்கினார் தேவநாதன். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் தேவநாதன்.

தேவநாதன் - 2010

தேவநாதன் - 2010

குற்றப்பத்திரிக்கை வாங்கிக்கொள்ள வந்த தேவநாதன்: இந்த வழக்கை காஞ்சிபுரம் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் விசாரித்து, சில வாரங்களுக்கு முன்பு தேவநாதன் மீது குற்றப்பத்திரிகையை காஞ்சீபுரம் 2- வகுப்பு குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ஸ்ரீகுமார் முன்னிலையில் தாக்கல் செய்தனர். அதில், 35 சாட்சிகள் கொண்ட 15 பக்க குற்றப்பத்திரிக்கையும், 35 சாடிகளுடன் 60 பக்கம்கொண்ட இரண்டாவது குற்றப்பத்திரிக்கையும் தயார் செய்யப்பட்டு தாக்குதல் செய்யப்பட்டன. இதன் நகலைப் பெறுவதற்காக வக்கீல்கள் தமிழ்செல்வன், தேசாய் ஆகியோருடன் நேற்றுக்காலை தேவநாதன் நீதிமன்றம் வந்தார்[6]. நேற்று அவர் முதலாவது வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் குற்றப்பத்திரிக்கை நகல் தரப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு நீதிபதி சுதா ஒத்திவைத்தார்.


[1] தட் ஈஸ் தமிள், குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றார் அசிங்க அர்ச்சகர் தேவநாதன், சனிக்கிழமை, ஆகஸ்ட் 21, 2010,

http://thatstamil.oneindia.in/news/2010/08/21/kanchipuram-temple-sex-scandal-devanathan.html

[2] இரண்டு முறை கைது செய்யப்பட்ட குற்றவாளி.

[3] செக்ஸ் லீலைகள், பலான கொக்கோகங்கள் புரிந்து, அலேக்காக, பிரிடிஷ் போலீஸாரால், இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவன். எல்லா லீலைகளும் புரிந்தது சிங்காரச் சென்னையில்தான்!

[4] இந்த ஆளைக் கேட்கவே வேண்டாம், ஏனெனில், அமெரிக்கக் குட்டிகள்தாம் பிடித்த ஐட்டங்களாம், அதனால், இந்தியர்கள் தப்பித்துக் கொண்டார்கள்.

[5] தினகரன் வயது 38 என்று குறிப்பிடுகின்றது!

[6] http://www.dinakaran.com/crimedetail.aspx?id=13422&id1=11

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

ஜூலை 14, 2010

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

சங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

அதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.

குற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.

அங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.

மகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.

அதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.

ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:

  1. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
  2. தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
  3. அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
  4. அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
  5. மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
  6. நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
  7. அரசுதரப்பில் தாமதம் செய்வது,
  8. சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
  9. ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது / இருப்பது.
  10. ஃபைல்கட்டுகள் கொடுக்காமல் இருப்பது, தாமதிப்பது, காணாமல் போவது………………
  11. சில அவணங்கள் தாக்குதல் செய்யப்படாமல் இருப்பது…………………………..
  12. கருணாநிதியே, தமது அந்தஸ்த்தை உபயோகித்து கோர்ட்டில் ஆஜராகமல் தவிர்ப்பது…………….

இப்படி, எத்தனையோ விஷயங்களைப் பட்டியிலிட்டுக் காட்டலாம். ஆனால், இவர்கள்தாம் நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா, நீதிபதிகளா, சட்டங்களா………………………..என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால், வழக்கு என்றதும் ஓடிமறைவார்கள்.

The number os cases pending against Muthuvelar Karunanindhi as per his affidavit filed before the Election Commission:

http://archive.eci.gov.in/AFF_AENov2006/Tamil%20Nadu/11/M.Karunanidhi/MKarunanidhi%20.htm

No. Of Cases pending Case No Name of the Court Date of the court for ordering enquiry The details of offence, Sections violated To defame, intention to defame etc
1 CC.No. 29/2003 Additional magistrate III 16-06-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
2 CC.No. 91/2003 Additional magistrate III 01-12-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
3 CC.No. 5/2004 Additional magistrate VII 27-01-2004 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
4 CC.No.12/2005 Additional magistrate V 10-06-2005 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
5 CC.No. 1/2006 Additional magistrate VII 06-01-2006 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
6 CC.No. 3156/2006 Additional magistrate XIV 03-03-2006 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings
7 CC.No. 15522/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
8 CC.No. 15523/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
9 CC.No. 4495/2005 XVII Criminl Court, Saidapet 16-06-2005 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings


Follow

Get every new post delivered to your Inbox.