‘இலவச கிரைண்டர்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

சீனாவுடன் துணைப்போகும் தமிழ் ஆட்சியாளர்கள்! எதிர்க்கும் வரி-ஏய்ப்பு செய்த-செய்யும் தமிழக உற்பத்தியாளர்கள்!

ஜூலை 23, 2011

சீனாவுடன் துணைப்போகும் தமிழ் ஆட்சியாளர்கள்! எதிர்க்கும் வரி-ஏப்பு செய்த-செய்யும் தமிழக உற்பத்தியாளர்கள்!

 

சீனாவுடன் துணைப்போகும் தமிழ் ஆட்சியாளர்கள்! இடைக்காலத்தில் சீனா-அரேபியர் கூட்டு சதியால் சோழர்களின் பேரரசு மறைய காரணமாயிற்று. அறிந்தறிந்தே, தமிழ் ஆட்சியாளர்கள், சோழர்களுக்கு எதிராக செயல்பட்டு, அவர்களது கடல் கடந்த வியாபாரத்தைக் கெடுத்து, வணிகக் குழுக்களைப் பிரித்து, மதம் மாற்றி என பல வழிகளில் காரியங்களை செய்து வந்த சீனர்கள் மற்றும் அரேபியர்களுக்குத் துணை போயினர். அதே போல, இன்று, தமிழ் ஆட்சியாளர்கள் சீனர்களுடன் துணைபோவது கவலையாக உள்ளது. அப்பொழுது, இலங்கையின் மூலம் தான் இந்தியாவிற்கு ஆபத்து வந்தது. இப்பொழுதும், சைனா பாகிஸ்தானுடன், இலங்கையுடன் ராணுவ தொடர்பு வைத்திருக்கின்றது. இலங்கையும் இந்திய விரோதி நாடுகளான வியாபார ரீதியில் சைனா மற்றும் எல்லா வகைகளிலும் எதிராக செயல்படும் பாகிஸ்தான் நாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளது. அந்நிலையில் ஆட்சியாளர்களின் முடிவும் சரியாக இல்லை. அதே நேரத்தில் தமிழக உற்பத்தியாளர்கள், குறிப்பாக கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது விந்தையிலும் விந்தையான விஷயமாகிறது!

 

கோவை வணிகர்கள் ஸ்டிரைக் செய்வதைவிட தரமான கிரைண்டர்களை உற்பத்தி செய்யவேண்டும்: கோவையில் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் இலவச கிரைண்டர் திட்டத்திற்கு உள்நாட்டிலேயே கிரைண்டர் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், கிரைண்டர் திட்டத்திற்கு சீன கிரைண்டர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர்[1].  தமிழக அரசின் இலவச கிரைண்டர் திட்டத்துக்கு சீனா வெட் கிரைண்டர்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் நேற்று கிரைண்டர் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அரசின் முடிவை கைவிடக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, தமிழகத்தில் 1.83 கோடி குடும்பங்களுக்கு இலவச வெட்கிரைண்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

 

வரி ஏய்ப்புச் செய்து வரும் கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும்: கிரைண்டர் சப்ளை செய்வதற்கு விலைப்புள்ளி பட்டியல் கோரப்பட்டது. கோவை உற்பத்தியாளர்கள் உட்பட ஏராளமான நிறுவனங்கள் விலைப்புள்ளி பட்டியல் சமர்ப்பித்தன. விலைப்புள்ளி அடிப்படையில் முதல்கட்டமாக 19 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. தற்போது, விலைப்புள்ளி பட்டியல் அளித்த 19 நிறுவனங்களில் பலர் சீனாவில் வடிவமைக்கப்படும் கிரைண்டர்களை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள். சீன கிரைண்டர்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தால் கோவையில் பாரம்பரியமாக நடந்து வரும் வெட்கிரைண்டர் உற்பத்தி தொழில் நசிந்து விடும். சீன கிரைண்டர்களை இறக்குமதி செய்வதற்கு வழிவகுக்கும் அரசின் முடிவை கண்டித்து, கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு சங்கம்(கவுமா) சார்பில் நேற்று ஒரு நாள் ஸ்டிரைக் நடந்தது. இதில் கோவையை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள், உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளனர். ஸ்டிரைக் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இயங்கிவரும் வெட்கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள், அதை சார்ந்த ஒர்க்ஷாப்கள் மூடப்பட்டன.

 

தரம் குறைந்த தயாரிப்புகளை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபடுபவர்கள் யார்?:  கவுமா சங்க தலைவர் சக்தி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், செஞ்சிலுவை சங்கம் முன் திரண்டனர். சீன கிரைண்டர்கள் கொள்முதல் செய்யும் நோக்கத்திலான திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தி, கலெக்டர் கருணாகரனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘தமிழக அரசின் இலவச வெட்கிரைண்டர் கொடுக்கும் திட்டத்தில் தயாரிப்பாளர் அல்லாத நிறுவனத்தினர் பங்கேற்று முதல்கட்டமாக 21 லட்சம் கிரைண்டர்கள் கொடுப்பதற்கு விலைப்புள்ளி பட்டியல் கொடுத்துள்ளனர்[2]. இந்நிறுவனத்தினர் சீனாவின் தரம் குறைந்த தயாரிப்புகளை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபடுபவர்கள். அரசின் இலவச திட்டத்தில் இந்நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால் கோவையின் பாரம்பரிய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்படும். இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பர். எனவே சீன கிரைண்டர்களுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது’, என மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

ஏமாந்தஉற்பத்தியாளர்கள்: கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்களில் ஒருவரான சாஸ்தா ராஜா கூறுகையில், ‘‘கோவையில் வெட்கிரைண்டர் உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பலன் பெறுகின் றனர். தமிழக அரசின் இத்திட்டத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். வர்த்தக வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேவையான மூலப்பொருட்களை லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருப்பு வைத்தோம். சீன கிரைண்டர்களுக்கு அரசு அனுமதி வழங்கினால் முற்றிலும் தொழில் நசிந்து கடனாளிகளாக மாறும் நிலை ஏற்படும்”, என்றார்.

 

நேற்று வரை மக்களை ஏமாற்றி வந்தவர்கள் சட்டமீறல் பற்றி பேசுவது: கவுமா முன்னாள் செயலாளர் சவுந்திரகுமார் கூறுகையில், ‘‘கோவை வெட்கிரைண்டர்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு கிடைத்ததற்கு காரணமே கிரைண்டரில் பயன்படுத்தப்படும் கல் மூலம் கிடைக்கும் சுவைதான். சீன உற்பத்தி கிரைண்டர்களுக்கு பயன்படுத்தப்படுவது மூலம் புவிசார் குறியீட்டு பயன்பாடு சட்டத்தை மீறிய செயலாகும்’’ என்றார்.


[2] http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=1781


Follow

Get every new post delivered to your Inbox.