சி.பி.ஐ. அதிகாரி கைது: வேலியே பயிரை மேய்ந்த கதை!

சி.பி.ஐ.  அதிகாரி கைது: வேலியே பயிரை மேய்ந்த கதை!

சலாம், சாதிக், கிரீஸ் முதலிரோர் உறவினர்களாம்: கே. ஏ. ஏ. சலாம் [K. A. A. Salam]      என்ற டெபுடி சூப்ரென்டன்டு மற்றும் சாதிக், கிரீஸ் முதலிரோர், மத்திய அமூலாக்கப் பிரிவினரால் கைது செய்யப் பட்டனர். வினோத் குமார் மற்றும் வத்ஸ வரதன் என்ற இருவர் பிரஸ்ஸெல்ஸிலிருந்து, ஜெட் ஏர்வேஸ் மூலம் வந்து இறங்கினர். அப்பொழுது, கே. ஏ. ஏ. சலாம், அவர்களை வரவேற்ப்பது போல, கிரீன் செனல்வழியாக அழைத்து வந்தார். வரவேற்க வந்த மூவரும் உறவினர்கள் என்று தெரிகின்றது[1]. அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கக்கூடாது. அதாவது, சலாம், சாதிக், கிரீஸ் முதலிரோர் உறவினர்கள். எனவே பெயர்களை வைத்துக் கொண்டும், எந்த முடிவிற்கும் வரக்கூடாது. இக்காலத்தில், தங்களது அடையாளங்களை மறைக்க, இப்படி பெயர்களை வைத்துக் கொள்கிறார்களோ என்னவோ?

மின்னணு பொருட்கள் எடுத்து வந்துள்ளனராம்: அதாவது, அவர்கள் சட்டதிட்டங்களுக்கு எதிராக எந்த பொருளையும் எடுத்து வரவில்லை என்பது போல, வெளியே வர அவ்வாறு முயற்சித்தனர். ஆனால், சோதனையின் போது, பல மின்னணு சாதனங்கள், வரியில்லாமலேயே, மறைத்து எடுத்து வந்திருந்தது தெரியவந்தது. இதனால், இந்திய குற்றாவியல் சட்டம், சுங்கவரி சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவுகளில், அந்த ஐவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது[2]. சங்க அதிரிகாரிகளுக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறது என்று சி.பி.ஐ அதிகாரிகள் கருதுகின்றனர்[3]. ஆனால். சி. ராஜன், அடிஷெனல் டைரக்டர் ஜெனரல் கைது எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்[4]. பத்திரிக்கைகளும், இதைப் பற்றி வித்தியாசமாகவே தெரிவிக்கின்றன.

Five accused surrender in murder case

February 14th, 2011

கொலை வழக்கில் ஐந்து குற்றாஞ்சாட்டப் பட்டவர்கள் கைது” என்று டெக்கான் குரோனிகள் தலைப்பிட்டிருக்கிறது!

சென்னையில் சி.பி.ஐ., அதிகாரி உட்பட 5 பேர் கைது[5]: சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் இருந்து இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் 2 பேர் வந்தனர். அவர்களை வரவேற்க சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமான நிலையத்தை விட்டு வந்த 5 பேரையும், அங்கு காத்திருந்த அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பல மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 5 பேரும் எந்த குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

வேதபிரகாஷ்

14-02-2011


[1] http://www.thehindu.com/news/cities/Chennai/article1451523.ece

Airport sources said two passengers, who arrived here from Brazil this morning by a Jet Airways flight, were received by three relatives, including the CBI official.

[4] http://expressbuzz.com/cities/chennai/cbi-officer-among-4-held;-dri-denies-arrest/247855.html

However, the Additional-Director General of DRI C Rajan, denied any such arrest being made at the airport.

[5] சென்னையில் சி.பி.ஐ., அதிகாரி உட்பட 5 பேர் கைது, பிப்ரவரி 13,2011,, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=187006

 

குறிச்சொற்கள்: , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக