Posts Tagged ‘ஐந்தாண்டு சிறைவாசம்’

விபச்சாரத்தைத் தவிர ஒருமித்த செக்ஸ் குற்றமில்லை: சொல்வது உச்சநீதிமன்ற நீதிபதி!

ஏப்ரல் 30, 2010

விபச்சாரத்தைத் தவிர ஒருமித்த செக்ஸ் குற்றமில்லை: சொல்வது உச்சநீதிமன்ற நீதிபதி!

வயதானவர்களிடம் ஒருமித்த மாற்றுப் புணர்ச்சி, திருமணத்திற்கு முந்தைய செக்ஸ், “விபச்சாரத்தை”த் தவிர, இருவர் ஈடுபட்டால், அது குற்றமாகாது [ Consensual heterosexual relation between adults, including pre-marital sex, is no offence except in cases where the partners are liable to be charged for “adultery”, ruled the Supreme Court].

“விபச்சாரம்” இல்லாத திருமண பந்தத்தில் வராத செக்ஸ் / உடலுறவு எதுவோ? 41-பக்கங்கள் தீர்ப்பு எழுதிய சௌஹான் குறிப்பிட்டுள்ளது, “நமது சமூகத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள்தாம் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அத்தகைய திருமண பந்தத்திற்கு வெளியில் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பினால் / வைத்துக் கொண்டால், அது சட்டப்படி குற்றாமாகாது. ஆனால், அச்செயல் – அத்தகைய உடலுறவு இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 497ல் சொல்லியபடி “விபச்சாரம்” என்ற வரையரைக்குள் வரக்கூடாது” [Justice Chauhan, writing the 41-page judgment for the Bench, said, “While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery’ as defined under Section 497 of the Indian Penal Code.”

இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 497 என்ன சொல்கிறது? யாராவது ஒருவரிடம் உடலுறவு வைத்துக் கொண்டால் , அவள் மற்றொருவருடைய மனைவி என்று தெரிந்தால், அவன் அனுமதி அல்லது சதியில்லாமல் இருந்தால், அந்த உடலலுறவு / செக்ஸ் கற்பழிப்பு ஆகாது. ஆனால் விபச்சாரக் குற்றத்தில் தண்டிக்கப் படுவர். அத்தண்டனை ஐந்தாண்டு சிறைவாசம், அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனையாக இருக்கும். அந்நிலையில் மனைவியும் ஒத்துழைத்தாள் என்று தண்டிக்கப் படுவாள் [ Section 497 provides, “Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case, the wife shall be punishable as an abettor.”]

கட்டுப்பாட்டில் இருக்கும் பிரபலமான / [இரபலமில்லாத தனிநபர் கருத்துகள் / கருத்துரிமை என்பதெல்லாம் வரைரைக்க முடியுமா?  “பிரபலமில்லாத கருத்துகளை வெளியிடுவதால் தனிப்பட்ட நபர்களை குற்றவியல் சட்டத்தினால் தண்டிப்பது என்பது (நீதிமன்றத்தின்) செயலாகாது. கருத்து சுதந்திரம், அதன் எல்லைகள், வரையரை-கட்டுப்பாடு முதலியவை உள்ளநிலையில், குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு அனுகூலமாகத் தான் அத்தகைய வரையரை-கட்டுப்பாடு இருக்கின்றது” [“It is not the task of criminal law to punish individuals merely for expressing unpopular views. The threshold for placing reasonable restrictions on the freedom of speech and expression is indeed very high and there should be a presumption in favour of the accused in such cases,” the Bench said.]

தப்பான சட்ட முன்மாதிரியை (bad legal precedence) ஏற்படுத்திருக்கிறாற்கள் நீதிபதிகள்: நீதிபதிகள் நிச்சயமாக அரசியல் ரீதியில் அல்லது தங்களது எஜமானர்களின் உத்தரவு படித்தான் இத்தீர்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது தெரிகிறது. சட்டத்தை இவ்வாறு வளைத்து, மற்றும் முழுவதுமாக மற்றப் பிரிவுகளைக் கருத்தில் கொள்ளாமல் [அதுவும் தெரிந்திருந்தே] அத்தகைய தீர்ப்புக் கொடுத்துள்ளது, மற்றும் அதற்கான சொதப்பலான விளக்கம் கொடுத்துள்ளது, நிச்சயமாக ஒரு கேடுகெட்ட சட்ட முன்மாதிரியை உண்டாக்கியுள்ளது எனலாம்.

காலம் நிச்சயம் எல்லோருக்கும் பதில் சொல்லும். அந்ந்நாள் சீக்கிரமே அருகில் உள்ளது எனலாம்.