Posts Tagged ‘அமைச்சர்’

1996-2016 வருடங்களில் பிரச்சார ரீதியில் தொடர்ந்த ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல், பொய்யாகி, வழக்காகி சிறைதண்டனையில் முடிந்துள்ளது!

ஒக்ரோபர் 15, 2016

1996-2016 வருடங்களில் பிரச்சார ரீதியில் தொடர்ந்த ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல், பொய்யாகி, வழக்காகி சிறைதண்டனையில் முடிந்துள்ளது!

ramar-herbal-petrol-bjp-support-aug-2016

ஆகஸ்ட் 2016ல் வெளியிட்ட அறிக்கை[1]: தனது மூலிகைப் பெட்ரோல் விரைவில் சந்தைக்கு வரும் என ராமர்பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர்பிள்ளை, சிறிய அளவில் தொழிற்சாலை அமைத்து வெற்றிகரமாக டீசலுக்கு மாற்றாக மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆகஸ்ட் 14ம் தேதி மூலிகை பெட்ரோலை ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருவதாக ராமர்பிள்ளை தெரிவித்தார். தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். மீண்டும் மூலிகை பெட்ரோல் வருவதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால் அது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கே என்றும் ராமர் பிள்ளை தெரிவித்தார். தாம் படிக்காததாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே மூலிகை பெட்ரோல் விவகாரம் பிரச்சனை ஆக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு தான் அளித்த விலை என்பது தனது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது தான் என்று ராமர்பிள்ளை கூறினார். டிசம்பர் மாதத்திற்குள்ளாக பெட்ரோல் விலை ரூ.10-ஆக குறையும் வகையில் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்[2].

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-1

தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாக கூறியது (ஆகஸ்ட் 2016):  வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இவ்வாறு கூறியதை பலர் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இருக்கும் நிலையில் மோடி நேரிடையாக பார்வையிட்டு ஆதரவு அளித்தார் என்பது, எவ்வளவு பெரிய பொய் என்பது தெரிகிறது. கூட ராணுவ அமைச்சர் பாரிகரையும் சேர்த்தது, மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டது எல்லாம் கொடுமைதான்! நிச்சயமாக தனது செயல்களில் குற்றம் இருக்கிறது எனும்போது, உண்மையினை ஒப்புக் கொள்ளாமல், மேன்மேலும், இவ்வாறு, பொய்களை சொல்லி பேட்டி கொடுப்பது முதகிய செயல்கள் விளம்பரத்திற்காக மற்றும் தனது தொடர்புகளைக் காட்டிக் கொள்ள முயன்றதாகத் தான் தெரிந்தது.

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-2

1996-2000 ஆண்டுகளில் அரசியல் ஆதரவுடன் கம்பெனி ஆரம்பிக்கப் பட்டது: ராமர் பிள்ளை ஏமாற்று விற்பனை திட்டத்திற்கு பல பணாக்காரர்கள் மற்றும் அதிகாரம் கொண்ட நபர்களின் உதவி பின்னணியில் இருந்தது. 1999-2000 காலக்கட்டத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. 1996லேயே, சென்னை ஐ.ஐ.டியில் சோதனையின் போது, அது பெட்ரோல் அல்ல, ரசாயனங்கள் கலந்த கலவை, போலி என்று தெரிய வந்தது[3].  ஏப்ரல் 2000ல், சிபிஐ விசாரணை மேற்கொண்டபோது, தனுஷ்கோடி ஆதித்தனே [former Union Minister and Tamil Maanila Congress leader, Mr. Dhanushkodi Adityan] ரூ.15 லட்சம் கொடுத்ததாக தெரிய வந்தது[4]. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், முன்பு மத்திய அமைச்சராக இருந்தவர். அதுமட்டுமல்லாது, இவரது கண்டுபிடிப்பிற்கு, பதிவு எண்ணை வாங்கிக் கொடுக்கவும் [a patent application (2274/MAS/97) on October 14 1997 ] உதவியுள்ளார்[5]. மார்ச் 1999 அன்று சென்னை ஓட்டலில் பாராட்டு விழா ஏற்பாடு செய்தபோது, அப்பொழுதைய முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்[6]. போதாகுறைக்கு, “சுவதேசி” ரீதியில், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் ஆதரவும் இருந்தது[7].

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-3

மே.2010ல் ராமர் பிள்ளைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன[8]: மோசடியில் கைதான ராமர் பிள்ளையை, லயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் “ஓபன் மாகஸைன்” நிருபர் பேட்டி கண்டு, விவரங்களை வெளியிட்டார். இவரது கண்டுபிடிப்பை மெச்சி, தமிழக முதல்வர் கருணாநிதி, தொழிற்சாலை தொடங்கள் இலவசமாக இடம், ஆராய்ச்சி செய்ய நிதியுதவி எல்லாம் கொடுப்பதாக அறிவித்தார். 2000ல் இவரது மூலிகை பெட்ரோல் ஊற்றி ஓடிய வண்டிகள் பழுதடைந்தன, குறிப்பாக இஞ்சின்கள் பாழாகின. ஆனால், தான் கண்டுபிடித்ததை, மற்றவர்கள் அபகரிக்கவே இவ்வாறு செய்கிறார்கள் என்றார். 2008ல் ஐவான் கிரிஸ்டியன்சென் என்பவர் தன்னுடைய கண்டுபிடிப்பை பாராட்டினார் என்றார். ஆனால், “ஓபன் மாகஸைன்” அவரை தொடர்பு கொண்டபோது, தப்பாகி விட்டது, என்று ஒப்புக் கொண்டார், தனது வாழ்க்கையில் அவ்வாறு தவறாகி விட்டதற்காக வருத்தமும் தெரிவித்தார்[9].

toi-23-09-2010-herbal-fuel-inventor-back-with-a-new-claim

செப்டம்பர் 2010ல் மறுபடியும் அறிக்கை விட்ட ராமர் பிள்ளை[10]: ஒரு ஊடக சந்திப்பின் போது, மறுபடியும் ரூ.5/- க்கு பெட்ரோல் கிடைக்கும் என்று அறிவித்தார். “15 கிராம்ஆம்மோனியம் குளோரைட், 15 கிராம் மரத்தூள், 15 கிராம் யீஸ்ட் இவற்றை சேர்த்து வைத்தால், நுண்ணியுர்களால், பொங்கி வரும். இதனை 78 டிகிரிக்கு சூடேற்றி, பிறகு, அதனை வடிகட்டினால், வரும் திரவத்தை, ஒரு லிட்டர் நீரைச் சேர்த்து குளுக்கி வைத்தால், துகள்கள் கீழே சென்று, மேலே திரவம் நிற்கும். அதுதான் வேலார் ஹைட்ரோ கார்பன் எரிபொருள் ஆகும்”, என்று விளக்கினார்[11]. மார்ச் 2000ல் வெளி மார்க்கெட்டில் ரசாயன பொருட்களை வாங்கி, “மூலிகை பெட்ரோல்” என்று ஏமாற்றுகிறார் என்று கைது செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இவ்வாறு அறிக்கைகள் விட்டதும் வியப்புதான். பெட்ரோல் என்றாலே பாறையெண்ணை அதாவது, இயற்கையில்லேயே பூமிக்கடியில் உருவான எண்ணையாகும். ஆனால், அதனையே, நேரிடையாக உபயோகப்படுத்த முடியாது. அதனை பல அடுக்குகளில் சுத்தப்படுத்தி, பெட்ரோல் டீசல், என்று தயாரிக்கிறார்கள். அதற்கு பெரிய எண்ணை ஆலை தேவைப்படுகிறது. எனவே, சாதாரணமாக இப்படி கலந்து தயாரிக்கலாம் என்பதே விஞ்ஞான பூர்வமாக இல்லை என்பது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

15-10-2016

ramar-pillai-gets-3-years-ri-15-10-2016

[1] நியூஸ்.7.டிவி, இந்தியாவில் விரைவில் ரூ.10-க்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்” : ராமர்பிள்ளை நம்பிக்கை, August 02, 2016.

[2] http://ns7.tv/ta/herb-petrol-will-come-soon-says-ramar-pillai.html

[3]  In September 1996, during a validation experiment organised by the Department of Science and Technology (DST) at IIT, Chennai.

[4] The Hindu, Ramar Pillai had powerful patrons, By Mukund Padmanabhan, Tuesday, April 25, 2000. http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[5] Among other things, Mr. Adityan had arranged a house in Chennai’s Alwarthirunagar for Pillai and helped the now disgraced “scientist” register a patent application (2274/MAS/97) on October 14 1997 at the Patent Branch Office, Chennai.

http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[6] http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[7] In March 1999, at a function to celebrate the commercial launch of “Ramar Fuel” in a Chennai hotel, the guest of honour was no less than Chief Minister, Mr. M. Karunanidhi’s wife, Ms. Rajathiammal. As for Pillai’s powerful friendships within the RSS – some of whose members obviously regarded him as a swadeshi scientist – they are much too well-documented to bother elucidating.

http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[8] The Open Magazine, The Herbal Fuel Druid, 29 May 2010

http://www.openthemagazine.com/article/business/the-herbal-fuel-druid

[9]  In a 2008 letter, Christensen wrote: ‘Ramar has demonstrated several quick methods for producing bio-fuel. The fuel burned readily, and there is no doubt that plenty of fuel can be produced at low price. For this reason, his discovery is unique, and Ramar deserves some worldwide reputation, eg. By Nobel Prize.’ Contacted by Open, Christensen acknowledges the letter, but adds that he got carried away when he saw the experiments first hand. “We all make mistakes,” he says, “I think it was one of them. I’m afraid it is a blot on my scientific career.” http://www.openthemagazine.com/article/business/the-herbal-fuel-druid

[10] Times of India, Herbal fuel inventor’ back with a new claim, TNN | Sep 23, 2010, 12.25 AM IST

[11] He says his concoction when mixed with water and heated to 78 degrees Celsius turns into an inflammable bio-fuel that gives a smokeless blue flame. “The mixture is 15 gm ammonium chloride, 15 gm sawdust and 15 gm yeast. It is fermented and distilled. Then I mix it with a litre of water and shake it a bit. See how the water settles at the bottom. I call it Velar Bio Hydrocarbon Fuel,” he says.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Herbal-fuel-inventor-back-with-a-new-claim/articleshow/6609627.cms