Archive for the ‘பிஜேபி’ Category

எல்.கே.அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முதலியோர் விடுவிப்பு – 2020ல் எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு 2022ல் தள்ளுபடி!

நவம்பர் 12, 2022

எல்.கே.அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முதலியோர் விடுவிப்பு – 2020ல் எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு 2022ல் தள்ளுபடி!

 

1992க்கு முன்புமற்றும் பின்பும் நடந்துள்ள சரித்திர-அகழாய்வு போராட்டங்கள்: பாபர் மசூதி-ராமஜன்மபூமி வழக்குகள் நீதிமன்றங்களில் பலமுறை, பல்லாண்டுகளாக நடைபெற்று வந்துள்ளன. “பாபர் மசூதி” மற்றும் “ராமஜன்மபூமி” பற்றியே நீதிமன்றத்திற்குள் நடந்த வாத-விவாதங்களை விட, நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த சர்ச்சைகள், வாத-விவாதங்கள், ஏன் சண்டைகள் அதிகம். அவையெல்லாம் சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு நிபுணர்கள், தொல்துறை வல்லுனர்கள், கல்வெட்டு பண்டிதர்கள் என்று பலவிதமான வித்வான்கள் செய்துள்ளனர். ஏகப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள், செய்திகள் என்று குவிக்கப் பட்டன. உலக அகழாய்வு மாநாடு-3 (World Archaeology Conference, WAC-3), இந்திய வரலாற்றுப் பேரவை (Indian History Congress, IHC) போன்றவையெல்லாம் அதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளன[1]. ஆனால், இவற்றில் குறிப்பிட்ட பாடத்துறையின் பாண்டித்தியம், நிபுணத்துவம் மற்றும் திறமை போன்றவற்றை விட, சித்தாந்தம், அரசியல், சித்தாந்தம் கலந்த சரித்திர வரைவியல் கோட்பாடுகள் முதலியவற்றால் பாதிக்கப் பட்டு, அவர்களைப் பிரித்து விட்டது. பொதுமக்களுக்கு உண்மையினை எடுத்துச் சொல்லத் தவறி விட்டது. அதனால், கடந்த முப்பது ஆண்டுகளில் அப்பிளவை சரிசெய்யவும் முடியாமல் இருக்கிறது எனலாம்.

 

சரித்திராசிரியர்கள் அரசியல்வாதிகள் ஆனது, சரித்திரம் தடுமாறியது: உச்சநீதி – உயர்நீதி மன்ற தீர்ப்புகள் வந்தபோது, ரோமிலா தாபர், இர்பான் ஹபீப் போன்றோரே மேல்முறையீடு செய்வோம் என்றெல்லாம் வீராப்பாகப் பேசி அமைதியாகி விட்டனர்[2]. இதனால், இந்திய அகழாய்வு, தொல்லியல், கல்வெட்டியல், சரித்திரத் துறைகளே பிளவு பட்டன எனலாம். அத்துறையினர் “மஸ்ஜித்/மசூதி-சரித்திராசிரியர்கள்” (Masjid historians) மற்றும் “மந்திர்/கோவில்- சரித்திராசிரியர்கள்” (Mandir historians) என்றே அடையாளம் காணப் பட்டனர். மேலும், உச்சநீதி மற்றும் உயர்நீதி மன்றங்களில் சரித்திராசிரியர்கள் அவ்வாறே பாரபட்சமாக சாட்சிகளாக வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளார்கள். நீதிபதிகள், “நீங்கள் நேரில் பார்த்தீர்களா, அல்வெட்டுகலைப் படித்தீர்களா, அகழாய்வு செய்தீர்களா,” என்றெல்லாம் குறுக்கு விசாரணையின் போது, கேட்டபோது, தாங்கள் அவ்வாறு செய்யவில்லை, சொல்லவில்லை, இன்னென்ன புத்தகங்களில் இருந்ததை சொன்னோம் என்றெல்லாம் கூறி தப்பித்துக் கொள்ளப் பார்த்தனர். அதாவது அவர்கள் எழுதிவைத்தார்கள்-சொன்னார்கள், நாங்கள் அவற்றைச் சொல்கிறோம் என்றனர். பொறுப்புள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் என்ற நிலைகளில் உள்ள அவர்களே அவ்வாறு பொய் சொன்னது அம்பலமானது. அவையெல்லாம் அவர்களது பாரபட்சத் தன்மையினை தோலுருத்திக் காட்டியுள்ளது. நீதிமன்றங்களும் அவர்களை கடுமையாக சாடியுள்லன, கண்டித்துள்ளன[3].

 

எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ கிளை 09-11-2022 புதன்கிழமை அன்று தள்ளுபடி செய்தது[4]. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் 1992, டிசம்பர் 6-ஆம் தேதி[5] பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், பிரிஜ் பூஷண் ஷரண் சிங், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேர் மீது கிரிமினல் வழக்கு தனியாக நடைபெற்று வந்தது[6]. 1992லிருந்து, ஊடகங்கள், சித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், ஏன் சரித்திராசிரியர்கள் கூட, இவர்கள் பாபர் மசூதியை இடித்ததில் பங்கு கொண்டார்கள், சந்தோஷப் பட்டார்கள் என்றெல்லாம், புகைப் படங்கள் போட்டு விவரங்களை வெளியிட்டார்கள். அவர்களை மிகப்பெரிய குற்றவாளிகளைப் போலச் சித்தரித்து எழுதினார்கள்.

 

 நேரிடையான ஆதாரங்கள் இல்லை: நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2020, செப். 30-ஆம் தேதி அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பு அளித்தது[7]. அதில், “பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது எடுக்கப்பட்டதாக நம்பப்படும் விடியோ பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றின் அசல்களை நீதிமன்றத்திற்கு முன்பு சமர்ப்பிக்கப் படவில்லைஅவை அசலானவை என்பதை நிரூபிக்கும் வகையில் நீதிமன்றத்தில் உண்மை ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆவணப் படத்தை ஆதாரமாக மட்டும் வைத்து இந்த வழக்கு முழுவதும் கட்டமைக்கப்பட்டுள்ளது. கரசேவகர்களுடன் பாபர் மசூதியை இடிக்கும் நோக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. இதை நீதிமன்றம் நம்புமுடியாது. பாபர் மசூதியை அவர்கள் திட்டமிட்டு இடிக்கவில்லை; தற்செயலாக நடந்துவிட்டது என்று தெரிவித்தது[8].

 

 2020ல் சில முஸ்லிம்கள் செய்த மேல் முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து அயோத்தியில் வசிக்கும் ஹாஜி மஹமூது அகமது, சையத் அக்லாக் அகமது ஆகியோர் அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ கிளையில் 2020ல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.  அதில், “பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணையில் சாட்சிகளாக நாங்கள் இருந்தோம். உத்தர பிரதேச அரசும் சிபிஐயும் இந்த வழக்கில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றும், அதனால் நாங்கள் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் கூறுவது முற்றிலும் ஆட்சேபத்துக்குரியது. இவ்வழக்கு தொடர்பாக குற்றவாளிகளுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இருந்தும்கூட விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்காமல் தவறு செய்துவிட்டது. ஆகையால், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று அதில் கூறியிருந்தனர்.

 

 09-11-2022 அன்று மேல் முறையீட்டு மனு தள்ளுபடி: இந்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததா என்பதை அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. மேல்முறையீடு செய்த இருவரும் பாபர் மசூதி வழக்கில் புகார்தாரர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ இல்லை என்பதால் இந்த மனுவை ஏற்கக் கூடாது என உத்தர பிரதேச அரசு, சிபிஐ, குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் ஒருவரான சம்பத் ராய் ஆகியோர் தரப்பிலும் வாதிடப்பட்டது[9]. செப்டம்பர் 5-ஆம் தேதி சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக். 31-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, அலாகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ கிளையின் நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, சரோஜ் யாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து 09-11-2022 புதன்கிழமை அன்று உத்தரவிட்டது. அதில், “மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்த இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. மனுதாரர்களுக்கு வழக்குடன் தொடர்பு இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட மனோஜ் குமார் சிங் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

ஆடியோ-வீடியோக்கள் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள முடியுமா?: பொதுவாக ஆடியோ-வீடியோ போன்றவற்றை, இந்தியன் இவிடென்ஸ் ஆக்டில்  (Indian Evidence Act) ஆதாரங்களாக எடுத்துக் கொள்வதில்லை. அவற்றின் உண்மைத் தன்மை சோதனைக் கூடத்தில் அறியப் பட்டு, அவற்றில் உள்ளவர்கள்-பேசியவர்களின் குரல்களை ஒப்பிட்டு உறுதி செய்யப் பட்டு, மற்ற ஆதாரங்களுடன் ஒப்பிட்டு, தொடர்பு படுத்தி, சரிபார்த்து மெய்ப்பித்தால் தான் நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப் படும். வீரப்ப மொயிலி, 2-ஜி நீரா ராடியா டேப்புகள் முதலிய வழக்குகளில் அத்தகைய ஆதாரங்களை நீதி மன்றங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், இங்கு அவற்றில் நகல்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. நீதிமன்றம் எடுத்துக் காட்டியும், கேட்டும் ஒரிஜினல் / அசல் ஆடியோ-வீடியோக்கள் சமர்ப்பிக்கப் படவில்லை. இதனால் தான், நீதிமன்றம் அவற்றை ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளவில்லை.

 

© வேதபிரகாஷ்

12-11-2022.


[1]   இம்மாநாடுகளில் தீர்மானங்கள் (Resolutions) போட, நிறைவேற்ற சண்டைகள், கை-கலப்புகள் எல்லாம் நடந்தது உண்டு. ஆனால், எந்த சரித்திராசிரியனும் வெட்கப் ப்டவில்லை / பட்டதில்லை.

[2]  இவற்றைப் பற்றியெல்லாம், தி ஹிந்து (The Hindu), ஃபிரன்ட் லைன் (Frontline), பொருளாதாரம் மற்றும் அரசியல் மற்றிய வார இதழ் (Economic and Political weekly, EPW) போன்ற நாளிதழ்-சஞ்சிகைகளில் அதிகமாகவே காணலாம், படித்திருக்கலாம். அதிரடியாக அவர்களது பேட்டிகள், அறிக்கைகள் வெளிவந்து கொண்டே இருக்கும். ஆனால், அவ்வாறு அவர்கள் மேல் முறையீடு செய்தார்களா-இல்லையா போன்ற தகவல்கள் வராது.

[3]  இவற்றைப் பற்றியும் ஊடகங்கள் அவ்வளவாக செய்திகளை வெலியிடவில்லை. செக்யூலரிஸத் தனமாக, விமர்சனங்களை வைத்ததோடு சரி.

[4] தினமணி, அத்வானி, 31 பேர் விடுவிப்பு: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு தள்ளுபடி, By DIN  |   Published On : 10th November 2022 03:09 AM  |   Last Updated : 10th November 2022 03:09 AM.

[5]   இதை வைத்தும் நடத்திய, நடத்தி வரும் அரசியலை தெரிந்து கொள்ளலாம். சமீபகாலத்தில், இது கொஞ்சம் அடங்கியுள்ளது. முன்பெல்லாம், அதிக அளவில் கலாட்டா செய்யும் நிலையில், அதிகமான பாதுகாப்பு, சோதனை என்றெல்லாம் இருக்கும். முஸ்லிம் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்துவர்.

[6] https://www.dinamani.com/india/2022/nov/10/hc-dismisses-plea-against-acquittal-of-advani-and-other-accused-in-babri-mosque-demolition-case-3946962.html

[7] நியூஸ்.7.தமிழ், பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உட்பட 31 பேர் விடுவிப்பு, by G SaravanaKumarNovember 10, 2022.

[8] https://news7tamil.live/31-acquitted-including-advani-in-babri-masjid-demolition-case.html

[9] The trial judge had refused to believe newspaper cuttings and video clips as evidence as the originals of the same were not produced, while the entire edifice of the case rested on these pieces of documentary evidence. The trial judge had also held that the CBI could not produce any evidence that the accused had a meeting of mind with karsewaks who demolished the structure.

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (2)

ஏப்ரல் 4, 2018

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (2)

SC-ST Act- Bharat bandh-3600 detained in bihar

விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது: ஒரு நிலையில், இப்போராட்டம் பிஜேபிக்கு, மோடிக்கு எதிரானதாக எடுத்துச் செல்லப்பட்டதை கவனிக்க முடிந்தது. எதிர்கட்சிகளும் அத்தகைய போக்கைக் கடைப் பிடித்தன. எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்[1].

SC-ST Act- Bharat bandh-40 cops injured

அரசிலாக்கப் படும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள்: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எஸ்.சி. எஸ்.டி. சமூக எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர். அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதினார். இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.  திங்களன்று [02-03-2018] மக்களவையில் இன்று பலத்த அமளிக்கிடையே காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்பொழுது அவருக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: “எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு முழுமையாக பட்டியல் வகுப்பினர் பக்கம்தான் இருக்கிறது,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[2].

SC-ST Act- Bharat bandh-modi down

20-03-2018 அன்று அளிக்கப் பட்ட தீர்ப்பு என்ன?: எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கடந்த மார்ச் 20-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் மீது யார்மீதும் உடனடியாக கைது நட வடிக்கை எடுக்கக் கூடாது; தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும்; அதேபோல, அரசு ஊழியர்களையும் உடனடியாக கைது செய்யக்கூடாது. உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும் உன்று உத்தரவு பிறப்பித்தது. அதாவது, அச்சட்டத்தை துர்பிரயோகம் செய்வது தடுக்கப் பட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டியது. உச்சநீதிமன்றம் 02-03-2018 அன்று, “தனது முந்தைய தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், போராடுபவர்கள் தீர்ப்பைக் கூட படித்திருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது”, என்று அறிவித்தது[3]. முன்னர் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது[4].

SC-ST Act- Bharat bandh-Muslims

தலித்போர்வையில் எதிர்கட்சியினர் மற்றவர் தூண்டிவிட்டபாரத் பந்த்: தென் மாநிலங்களில் “காவிரி பிரச்சினை” வைத்துக் கொண்டு, அரசியல் நடந்து வருகின்றது, அது கர்நாடக  தேர்தலுடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால், எஸ்.சி மற்றும் எஸ்.டி அதிகமாக இருக்கும் மாநிலங்களில் மட்டும் தான், இந்த போராட்டம் நடத்தப் பட்டு, வன்முறையில் முடிந்து, 10 பேர் பலியாகி உள்ளனர், பொது மற்றும் தனியார் சொத்துகள் நாசமாக்கப் பட்டுள்ளன. இதன் பின்னணியில் எதிர் கட்சியினர், கம்யூனிஸ்ட் வகையறாக்கள், முஸ்லிம்-கிருத்துவ ஆதரவு நிறுவனங்கள் என்று தான் உள்ளன. முன்னர் ஜிக்னேஸ் மேவானியின் பேட்டி சனி-ஞாயிறு என்று இரண்டு நாட்களிலும் ஓடியது, அதில், வன்முறை தூண்டும் வகையில் பேச்சு இருந்தது. எஸ்.சி மற்றும் எஸ்.டி நலன், உரிமைகள் என்பதை விட, மோடி எதிர்ப்பு தான் ;பிரதானமாக இருந்தது. இதே பாட்டை மற்றவரும் பாடினர்.

SC-ST Act- Bharat bandh-Communists

உச்சநீதி மன்றம் தீர்ப்பை மறுஆய்வு செய்ய மறுத்து விட்டது: வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஏ.கே கோயல் மற்றும் யுயு லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது[5]: “‘நாங்கள் அளித்த தீர்ப்பை முழுமையாக புரிந்து கொள்ளாமல், சுயநல காரணங்களுக்காக தவறான விளக்கம் கொடுத்து, திசைத் திருப்ப சிலர் எதிர்க்கின்றனர். எங்கள் உத்தரவு எஸ்.சிஎஸ்.டி மக்களுக்கு எதிரானது அல்ல. இந்த சட்டம் தனிப்பட்ட காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கம் நீதிமன்றத்திற்கு இல்லை. புகார் அளித்த உடனேயே கைது செய்யக்கூடாது என்றுதான் கூறியுள்ளோம். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கலாம். அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். எந்த ஒரு சட்டமும், அப்பாவி மக்களைப் பாதித்து விடக் கூடாது என்பதுதான் நீதிமன்றத்தின் எண்ணம்.  எனினும் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த நீதிமன்றம் தயாராக உள்ளது. இதுதொடர்பாக முறையிட்டுள்ள அனைத்து தரப்பினரும் இரண்டு நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தும்,” எனக் கூறினர்[6].

SC-ST Act- Bharat bandh-arson, violence

ஊடகங்களின் திரிபு செய்திகளும், உச்சநீதி மன்றத்தின் விளக்கமும்: ஊடகங்களும் தீர்ப்பை ஒழுங்காகப் படிக்காமல்[7], தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு மற்றும் அடுத்தவர் சொன்னதை கேட்டுக் கொண்டு, எஸ்.சி-எஸ்.டியினர் ஏன் “பாரத் பந்த்”தில் ஈடுபட்டனர், அவர்களின் பாதிப்பு என்ன, போராட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[8]. அதாவது, உண்மையான விவரங்களை, செய்தி-விசயமாக போடாமல், தூண்டும், ஆதாரமில்லாத கருத்துகளை, அரைவேக்காட்டுத் தனமான விசயங்களை செய்திகள் போல போட்டு வருகின்றனர். 89-பக்கங்கள் கொண்ட தீர்ப்பளித்த நீதிபதி கோயல் கூறியதாவது[9], “எங்களுடைய தீர்ப்பு அரசியல் நிர்ணய சாசனத்தில் உள்ளதை நடைமுறைப் படுத்துகிறது. தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைகளை நாங்கள் நான்றாகவே உணர்ந்திருக்கிறோம், தான் அவை உயர்ந்த இடத்தில் வைக்கப் பட்டுள்ளன…… இருப்பினும் அதே நேரத்தில், அப்பாவி நபர் யாரும் இதில் பொய்யான முறையில் சிக்க வைக்கப் பட்டு, விசாரணை இல்லாமல் கைது செய்யப் படுவதைத் தடுக்கிறது. நாங்கள் இச்சட்டம் அமூல் படுத்துவதைத் தடுக்கவில்லை. இந்த சட்டம் என்ன அப்பாவி மக்களை கைது செய்யப் பட வேண்டும் என்றா சொல்கிறது? ஆகவே, எங்களது தீர்ப்பு அச்சட்டத்திற்கு எதிரானது அல்ல,” என்று எடுத்துக் காட்டினார்[10].

© வேதபிரகாஷ்

04-04-2018

SC-ST Act- Bharat bandh-boys run riot

[1] தினமணி, எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்! , By IANS | Published on : 02nd April 2018 02:04 PM

[2] http://www.dinamani.com/india/2018/apr/02/centre-files-review-petition-over-scst-act-order-2892179.html

[3] ZeeTVnews, Not against SC/ST Act, those agitating may not have read judgement: Supreme Court, By Zee Media Bureau | Updated: Apr 03, 2018, 15:04 PM IST

[4] http://zeenews.india.com/india/not-against-sc/st-act-those-agitating-may-not-have-read-judgement-supreme-court-2096083.html

[5] தி.இந்து, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உத்தரவு: இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு, பி.டி.ஐ, Published : 03 Apr 2018 16:10 IST; Updated : 03 Apr 2018 16:12 IST

[6] http://tamil.thehindu.com/india/article23424976.ece

[7] India Today, Why Dalits called a Bharat Bandh? SC/ST Act and the Supreme Court ruling explained, Anusha Soni, New Delhi, April 2, 2018: UPDATED 15:40 IST

[8] https://www.indiatoday.in/india/story/why-are-dalits-protesting-sc-st-act-and-the-supreme-court-ruling-explained-1202745-2018-04-02

[9] DNA, Relief for SC/ST can’t be at cost of innocent: Supreme Court, WRITTEN BY Ritika Jain, Updated: Apr 4, 2018, 05:05 AM IST.

[10] However, Justice Goel, the author of the 89-page judgement said, the judgment fortified the Act. “Our judgment implements what is said in the Constitution. We are conscious of the rights of the underprivileged and place it at the highest pedestal… but at the same time, an innocent person cannot be falsely implicated and arrested without proper verification. We have not stopped the implementation of the Act. Does the Act mandate the arrest of innocent persons? Our judgment is not against the Act,” Justice Goel said addressing Venugopal.

http://www.dnaindia.com/india/report-relief-for-scst-can-t-be-at-cost-of-innocent-supreme-court-2600762

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (1)

ஏப்ரல் 4, 2018

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (1)

State of SC-ST crimes 2014-16- DNA graphics
எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 உருவானது: வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் ஜாதியினர் / தாழ்த்தப்பட்டவர்கள் [செட்யூல்ட் காஸ்ட்ஸ்] மற்றும் பழங்குடி மக்களுக்கு [செட்யூல்ட் டிரைப்ஸ்] எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் [the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act] கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.  பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

SC-ST Act- Bharat bandh-Tiruma protest.jpg

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகள் நடந்து வருவது: கடந்த 2016 ஆம் ஆண்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 15.4% அளவுக்கே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணகத்தின் வருடாந்திர அறிக்கை சுட்டிக்காட்டுகிறது[1]. பொதுவான பிற வழக்குகளில் 33.3% அளவுக்கு குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்த வன்கொடுமைகள் 66% அதிகரித்திருக்கின்றன. சராசரியாக 18 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்பது தற்போது 15 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்று நடந்து வருகின்றது[2].  இப்படியெல்லாம் சார்பு எண்ணங்களுடன் விளக்கங்கள் கொடுத்தாலும், குறிப்பிட்ட வழக்குகளில் எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள், அடுத்தவர் தூண்டி விட்டு, புகார் கொடுப்பது, வழக்குப் போடுவது என்ற ரீதியில் உள்ளதும் விசாரணை மற்றும் நீதிமன்ற நடப்புகளில் தெரிய வந்தன. அதனால், ஒரு நிலையில் அத்தகைய பொய் புகார்கள், வழக்குகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்த வேண்டிய அவசியமும் உணரப் பட்டது.

SC-ST Act- cases filed, charge sheeted etc

எஸ்.சி சாதிகளுக்கிடையே, எஸ்.டி எஸ்.சி சாதிகளுக்கிடையே, மற்றும் எஸ்.டி சாதிகளிடையே ஏற்படும் வன்முறைகளை எவ்வாறு தடுப்பது?; இச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்போது காவல்நிலையம் கட்டப்பஞ்சாயத்து கூடங்களாக மாறி விடுகின்றன என்ற குற்றச்சாட்டும் வைக்கப் படுகின்றது. சட்டம் என்பது பொய்த்து, சாதிய வன்மம் அங்கே கட்டவிழ்த்து விடப்படுகிறது என்று சிலர் சொல்வது ஒரு தரப்பு வாதமாகிறது. காவல்நிலையத்திலும் இரு தரப்பு சாதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதால், இந்தச் சட்டத்தை சரிவர கையாளக் கூடிய நிலை அங்கு இல்லை. மேலும் பொதுமக்களும் இந்தச் சட்டத்தை தவறான வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதமும் அத்தகையது. எனவே இதில் உள்ள  குறைபாடுகளைக் களைய வேண்டும். மிக முக்கியமாக அதிகாரிகள், இதனை நேர்மையாகக் கையாள வேண்டும் என்று பொதுவாதம் வைப்பது, சட்டத்தைப் புரிந்து கொள்வதாகாது. கிராமங்களில் வன்முறையைத் தூண்டி விடுவதில், அச்சாதிகள்சம்பந்தப் பட்டுள்ளதால் தான், அத்தகைய சமரசங்கள் ஏற்பட்டுக்கின்றன. மேலும் எஸ்.சி சாதிகளுக்கிடையே, எஸ்.டி எஸ்.சி சாதிகளுக்கிடையே, மற்றும் எஸ்.டி சாதிகளிடையே ஏற்படும் வன்முறைகளைப் பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஏனெனில், அங்கு புகார் கொடுப்பதும், புகாருக்கு உட்படுபவகளும், அதே சாதியினராக இருக்கின்றன. இதனால், நேரங்கழித்து, மற்ற சாதிகளுடன் ஏற்பட்ட மோதல்களாக மாற்றப் பட்டு, சட்டம் வளைக்கப் படுகிறது.

SC-ST Act- Justices Goel and Lalit

மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பு: மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பில், இவ்வாறு தீர்ப்பளித்தது. 2015-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 15 முதல் 16 விழுக்காடு போலி வழக்குகள் என தெரியவந்துள்ளதாகவும். எனவே அப்பாவி பொதுமக்களை மதம் அல்லது சாதியின் பெயரால் பாதிப்புக்குள்ளாக்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்[3]. சாதி ரீதியான கொடுமைகளை நீக்க கொண்டு வரப்பட்ட சட்டம் சாதியை நிலைநிறுத்த பயன்படக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது[4]. இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன் ஜாமின் வழங்கியது. எந்த கைது நடவடிக்கைக்கு முன்னரும் அடிப்படையான விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்[5].

SC-ST Act- Bharat bandh-9 killed

ஊடகங்களின் சார்பு கொண்ட திரிபு செய்திகள் வெளியிடும் தன்மை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்த்தும் வகையியில் சுப்ரீம் கோர்ட் சில திருத்தங்கள் செய்து தீர்ப்பு வழங்கியது, என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிடுவதே தவறானது. சட்டத்தை நீதிமன்றங்கள் திருத்த முடியாது, பரிந்துரை தான் செய்ய முட்யும், அரசு தான் செய்ய முடியும். 02-04-2018 அன்று, இதற்கு எதிராக நாடு முழுவதும் தலித் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின. எஸ்.சி-எஸ்.டி ஆணையம் “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனத்தின் படியும் செல்லாது என்று சுட்டிக் காட்டியப் பிறகும், அதே தோரணையில் குறிப்பிடப் படுவதும் நோக்கட் தக்கது. குறிப்பாக வட மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியில் பேருந்து, கார் உள்ளிட்டவை போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டன. குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

SC-ST Act- Bharat bandh-poice van attacked

வட மாநிலங்களில் “பாரத் பந்த்,” போலீஸார் தாக்கப் படுதல், வன்முறை முதலியன: பஞ்சாப் மாநிலத்தில் ரெயில்கள் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்து வரும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் குவாலியர், ப்ஹிந்த், மோரேனா மற்றும் சாகர் பகுதிகளில் நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் ஆறு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதே போல, உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் இருவரும், ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் நடந்த வன்முறை நிகழ்வில் ஒருவர் பலியாகியுள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் தாக்கியதில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாகவும், போலீஸ் வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையே, அனைத்து மாநிலங்களிலும் சட்டம் – ஒழுங்கு கட்டுக்குள் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது[6]. மேலும், சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது[7].

© வேதபிரகாஷ்

04-04-2018

SC-ST Act- Bharat bandh-arson, loot, violence

[1] ஆதவன் தீட்சண்யா, உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமைஆதவன் தீட்சண்யா, BY த டைம்ஸ் தமிழ், மார்ச் 23, 2018

[2] https://thetimestamil.com/2018/03/23/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/

[3] தினகரன், விசாரணையின்றி கைது செய்யக் கூடாது : தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்ற அறிவுரை, 2018-03-21@ 14:40:19

[4] On March 20, the Supreme Court had diluted the provisions of the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, ruling that government servants should not be arrested without prior sanction and private citizens too, can be arrested only after an inquiry under the law.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=386337

[6] மாலைமுரசு, எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்டம் தளர்வுகலவரங்களில் பலி எண்ணிக்கை 9 ஆனது, பதிவு: ஏப்ரல் 02, 2018 19:27; மாற்றம்: ஏப்ரல் 02, 2018 19:48

[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/02192723/1154660/7-killed-in-SC-ST-violance-and-Bharat-Bandh.vpf

1996-2016 வருடங்களில் பிரச்சார ரீதியில் தொடர்ந்த ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல், பொய்யாகி, வழக்காகி சிறைதண்டனையில் முடிந்துள்ளது!

ஒக்ரோபர் 15, 2016

1996-2016 வருடங்களில் பிரச்சார ரீதியில் தொடர்ந்த ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல், பொய்யாகி, வழக்காகி சிறைதண்டனையில் முடிந்துள்ளது!

ramar-herbal-petrol-bjp-support-aug-2016

ஆகஸ்ட் 2016ல் வெளியிட்ட அறிக்கை[1]: தனது மூலிகைப் பெட்ரோல் விரைவில் சந்தைக்கு வரும் என ராமர்பிள்ளை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர்பிள்ளை, சிறிய அளவில் தொழிற்சாலை அமைத்து வெற்றிகரமாக டீசலுக்கு மாற்றாக மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆகஸ்ட் 14ம் தேதி மூலிகை பெட்ரோலை ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருவதாக ராமர்பிள்ளை தெரிவித்தார். தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். மீண்டும் மூலிகை பெட்ரோல் வருவதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும் என்றால் அது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கே என்றும் ராமர் பிள்ளை தெரிவித்தார். தாம் படிக்காததாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே மூலிகை பெட்ரோல் விவகாரம் பிரச்சனை ஆக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு தான் அளித்த விலை என்பது தனது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது தான் என்று ராமர்பிள்ளை கூறினார். டிசம்பர் மாதத்திற்குள்ளாக பெட்ரோல் விலை ரூ.10-ஆக குறையும் வகையில் மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்[2].

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-1

தனது மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாக கூறியது (ஆகஸ்ட் 2016):  வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இவ்வாறு கூறியதை பலர் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இருக்கும் நிலையில் மோடி நேரிடையாக பார்வையிட்டு ஆதரவு அளித்தார் என்பது, எவ்வளவு பெரிய பொய் என்பது தெரிகிறது. கூட ராணுவ அமைச்சர் பாரிகரையும் சேர்த்தது, மும்பையிலுள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தினம் 5,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டது எல்லாம் கொடுமைதான்! நிச்சயமாக தனது செயல்களில் குற்றம் இருக்கிறது எனும்போது, உண்மையினை ஒப்புக் கொள்ளாமல், மேன்மேலும், இவ்வாறு, பொய்களை சொல்லி பேட்டி கொடுப்பது முதகிய செயல்கள் விளம்பரத்திற்காக மற்றும் தனது தொடர்புகளைக் காட்டிக் கொள்ள முயன்றதாகத் தான் தெரிந்தது.

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-2

1996-2000 ஆண்டுகளில் அரசியல் ஆதரவுடன் கம்பெனி ஆரம்பிக்கப் பட்டது: ராமர் பிள்ளை ஏமாற்று விற்பனை திட்டத்திற்கு பல பணாக்காரர்கள் மற்றும் அதிகாரம் கொண்ட நபர்களின் உதவி பின்னணியில் இருந்தது. 1999-2000 காலக்கட்டத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. 1996லேயே, சென்னை ஐ.ஐ.டியில் சோதனையின் போது, அது பெட்ரோல் அல்ல, ரசாயனங்கள் கலந்த கலவை, போலி என்று தெரிய வந்தது[3].  ஏப்ரல் 2000ல், சிபிஐ விசாரணை மேற்கொண்டபோது, தனுஷ்கோடி ஆதித்தனே [former Union Minister and Tamil Maanila Congress leader, Mr. Dhanushkodi Adityan] ரூ.15 லட்சம் கொடுத்ததாக தெரிய வந்தது[4]. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், முன்பு மத்திய அமைச்சராக இருந்தவர். அதுமட்டுமல்லாது, இவரது கண்டுபிடிப்பிற்கு, பதிவு எண்ணை வாங்கிக் கொடுக்கவும் [a patent application (2274/MAS/97) on October 14 1997 ] உதவியுள்ளார்[5]. மார்ச் 1999 அன்று சென்னை ஓட்டலில் பாராட்டு விழா ஏற்பாடு செய்தபோது, அப்பொழுதைய முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்[6]. போதாகுறைக்கு, “சுவதேசி” ரீதியில், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் ஆதரவும் இருந்தது[7].

ramar-pillai-had-powerful-patrons-the-hindu-april-25-2000-3

மே.2010ல் ராமர் பிள்ளைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன[8]: மோசடியில் கைதான ராமர் பிள்ளையை, லயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் “ஓபன் மாகஸைன்” நிருபர் பேட்டி கண்டு, விவரங்களை வெளியிட்டார். இவரது கண்டுபிடிப்பை மெச்சி, தமிழக முதல்வர் கருணாநிதி, தொழிற்சாலை தொடங்கள் இலவசமாக இடம், ஆராய்ச்சி செய்ய நிதியுதவி எல்லாம் கொடுப்பதாக அறிவித்தார். 2000ல் இவரது மூலிகை பெட்ரோல் ஊற்றி ஓடிய வண்டிகள் பழுதடைந்தன, குறிப்பாக இஞ்சின்கள் பாழாகின. ஆனால், தான் கண்டுபிடித்ததை, மற்றவர்கள் அபகரிக்கவே இவ்வாறு செய்கிறார்கள் என்றார். 2008ல் ஐவான் கிரிஸ்டியன்சென் என்பவர் தன்னுடைய கண்டுபிடிப்பை பாராட்டினார் என்றார். ஆனால், “ஓபன் மாகஸைன்” அவரை தொடர்பு கொண்டபோது, தப்பாகி விட்டது, என்று ஒப்புக் கொண்டார், தனது வாழ்க்கையில் அவ்வாறு தவறாகி விட்டதற்காக வருத்தமும் தெரிவித்தார்[9].

toi-23-09-2010-herbal-fuel-inventor-back-with-a-new-claim

செப்டம்பர் 2010ல் மறுபடியும் அறிக்கை விட்ட ராமர் பிள்ளை[10]: ஒரு ஊடக சந்திப்பின் போது, மறுபடியும் ரூ.5/- க்கு பெட்ரோல் கிடைக்கும் என்று அறிவித்தார். “15 கிராம்ஆம்மோனியம் குளோரைட், 15 கிராம் மரத்தூள், 15 கிராம் யீஸ்ட் இவற்றை சேர்த்து வைத்தால், நுண்ணியுர்களால், பொங்கி வரும். இதனை 78 டிகிரிக்கு சூடேற்றி, பிறகு, அதனை வடிகட்டினால், வரும் திரவத்தை, ஒரு லிட்டர் நீரைச் சேர்த்து குளுக்கி வைத்தால், துகள்கள் கீழே சென்று, மேலே திரவம் நிற்கும். அதுதான் வேலார் ஹைட்ரோ கார்பன் எரிபொருள் ஆகும்”, என்று விளக்கினார்[11]. மார்ச் 2000ல் வெளி மார்க்கெட்டில் ரசாயன பொருட்களை வாங்கி, “மூலிகை பெட்ரோல்” என்று ஏமாற்றுகிறார் என்று கைது செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இவ்வாறு அறிக்கைகள் விட்டதும் வியப்புதான். பெட்ரோல் என்றாலே பாறையெண்ணை அதாவது, இயற்கையில்லேயே பூமிக்கடியில் உருவான எண்ணையாகும். ஆனால், அதனையே, நேரிடையாக உபயோகப்படுத்த முடியாது. அதனை பல அடுக்குகளில் சுத்தப்படுத்தி, பெட்ரோல் டீசல், என்று தயாரிக்கிறார்கள். அதற்கு பெரிய எண்ணை ஆலை தேவைப்படுகிறது. எனவே, சாதாரணமாக இப்படி கலந்து தயாரிக்கலாம் என்பதே விஞ்ஞான பூர்வமாக இல்லை என்பது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

15-10-2016

ramar-pillai-gets-3-years-ri-15-10-2016

[1] நியூஸ்.7.டிவி, இந்தியாவில் விரைவில் ரூ.10-க்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்” : ராமர்பிள்ளை நம்பிக்கை, August 02, 2016.

[2] http://ns7.tv/ta/herb-petrol-will-come-soon-says-ramar-pillai.html

[3]  In September 1996, during a validation experiment organised by the Department of Science and Technology (DST) at IIT, Chennai.

[4] The Hindu, Ramar Pillai had powerful patrons, By Mukund Padmanabhan, Tuesday, April 25, 2000. http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[5] Among other things, Mr. Adityan had arranged a house in Chennai’s Alwarthirunagar for Pillai and helped the now disgraced “scientist” register a patent application (2274/MAS/97) on October 14 1997 at the Patent Branch Office, Chennai.

http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[6] http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[7] In March 1999, at a function to celebrate the commercial launch of “Ramar Fuel” in a Chennai hotel, the guest of honour was no less than Chief Minister, Mr. M. Karunanidhi’s wife, Ms. Rajathiammal. As for Pillai’s powerful friendships within the RSS – some of whose members obviously regarded him as a swadeshi scientist – they are much too well-documented to bother elucidating.

http://www.thehindu.com/2000/04/25/stories/02250002.htm

[8] The Open Magazine, The Herbal Fuel Druid, 29 May 2010

http://www.openthemagazine.com/article/business/the-herbal-fuel-druid

[9]  In a 2008 letter, Christensen wrote: ‘Ramar has demonstrated several quick methods for producing bio-fuel. The fuel burned readily, and there is no doubt that plenty of fuel can be produced at low price. For this reason, his discovery is unique, and Ramar deserves some worldwide reputation, eg. By Nobel Prize.’ Contacted by Open, Christensen acknowledges the letter, but adds that he got carried away when he saw the experiments first hand. “We all make mistakes,” he says, “I think it was one of them. I’m afraid it is a blot on my scientific career.” http://www.openthemagazine.com/article/business/the-herbal-fuel-druid

[10] Times of India, Herbal fuel inventor’ back with a new claim, TNN | Sep 23, 2010, 12.25 AM IST

[11] He says his concoction when mixed with water and heated to 78 degrees Celsius turns into an inflammable bio-fuel that gives a smokeless blue flame. “The mixture is 15 gm ammonium chloride, 15 gm sawdust and 15 gm yeast. It is fermented and distilled. Then I mix it with a litre of water and shake it a bit. See how the water settles at the bottom. I call it Velar Bio Hydrocarbon Fuel,” he says.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Herbal-fuel-inventor-back-with-a-new-claim/articleshow/6609627.cms

 

மூலிகை பெட்ரோல் மோசடியில் ராமர் பிள்ளை மற்றும் நான்கு பேருக்கு சிறை தண்டனை, பெனால்டி!

ஒக்ரோபர் 15, 2016

மூலிகை பெட்ரோல் மோசடியில் ராமர் பிள்ளை மற்றும் நான்கு பேருக்கு சிறை தண்டனை, பெனால்டி!

ramar-pillai-gets-three-years-ri-for-fake-herbal-petrol-15-10-2016

மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் கலப்பட பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு சிறைதண்டனை: மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் கலப்பட பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக சி.பி.ஐ. போலீசார் தொடர்ந்த வழக்கில் ராமர்பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது[1]. கடந்த 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில் மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்துள்ளதாக ராமர் பிள்ளை என்பவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்[2]. அவர் கண்டுபிடித்ததாக கூறிய மூலிகை பெட்ரோல் மூலம் வாகனங்களையும் ஓட்டி காட்டினார். தன் மனைவியை பின்னால் உட்கார வைத்து, ஓட்டிக் காட்டினார். ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள் என்ற பெயரில் அவர் குறிப்பிட்ட பெட்ரோலை குறைந்த விலைக்கு விற்று ரூ.2.27 கோடி வரை சம்பாதித்ததாக தெரியவந்தது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பணக்காரர்கள் என்று அவர் பேச்சை நம்பி, பணம் மற்றும் இதர உதவிகளை செய்ய முன்வந்தனர். “தமிழன் கண்டுபிடிப்பு” என்று உணர்ச்சிகரமான பிரச்சாரங்களும் செய்யப்பட்டன.

ramar-pillai-lab-2

மூலிகை பெட்ரோல் அல்ல என்று சோனை மூலம் தெரிய வந்தது: இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்றனர். சோதனை கூடத்தில் பரிசோதனை செய்தபோது, ரசாயன கலவைதான் அது, மூலிகை அல்ல என்று தெரியவந்தது. அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை “மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றி, ‘ராமர் பெட்ரோல்’ ‘ராமர் தமிழ்தேவி மூலிகை எரிபொருள்’ என்ற பெயர்களில் விற்பனையில் இறங்கினார்[3]. இதுவும் சட்டநுணுக்கங்களிலிருந்து தப்பிக்கத் தான் என்று தெரிகிறது, ஏனெனில், பெட்ரோல் தயாரிப்பு, சுத்தகரிப்பு, சேகரிப்பு, வைப்பு, விற்பன முதலியவை மத்திய மற்றும் மாநில சட்டதிட்டங்களுக்குட்பட்டவையாகும்.

ramar-pillai-lab-1

ராமர் பையோ பியூயல் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி ஆரம்பித்தது (1998): நவம்பர் 5, 1998 அன்று, ரூ.2 கோடி மூலதனத்துடன் ராமர் பையோ பியூயல் பிரைவேட் லிமிடெட் [Ramar Bio Fuel Private Limited] என்ற கம்பெனி, L-5, கிண்டி தொழிற்பேட்டையில்  ஆரம்பிக்கப் பட்டது[4]. அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார்[5]. ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருள் ஐஎஸ்ஐ தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின[6]. குறிப்பாக இஞ்சின் பழுதாகின. சோதனையிட்டதில் கலப்பட பெட்ரோல், எரிபொருள் உபயோகப்படுத்தப் பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், பலர் அவர் மீது புகார் செய்தனர். புகார்கள் அதிகமானதால், சிபிஐ விசாரணையும் கோரப்பட்டது. பின்னர், தவறான தகவல்களை கூறி எரிபொருளை விற்பனை செய்து ரூ.2.27 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது[7].

ramar-pillai-gets-3-years-ri-for-fake-herbal-petrol-15-10-2016

ராமர் பிள்ளை மீது வழக்குப் போடப்பட்டது: ராமர் பிள்ளை தயாரித்து விற்பனை செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல என்றும், டொலூயீன், பென்சின் மற்றும் நாப்தா என்ற பெட்ரோலிய பொருட்கள் மூலம், ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் மோசடி பெட்ரோல் தயாரித்து விற்பதாக சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்தனர். மேற்கண்ட பெட்ரோலிய பொருட்களில் வாகனம் ஓட்ட முடியாது. அது சட்டப்படி குற்றம் ஆகும். அப்போது, சி.பி.ஐ. தென் மண்டல இணை இயக்குனராக பணியாற்றிய முகர்ஜி உத்தரவின்பேரில் சி.பி.ஐ. போலீசார், ராமர் பிள்ளை மீது, சட்டவிரோதமாக கலப்பட பெட்ரோல் தயாரித்து, அதை மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் விற்பனை செய்து ரூ.2.27 கோடி மோசடியாக சம்பாதித்ததாக வழக்கு போட்டனர்[8]. ராமர் பிள்ளை அப்போது கைது செய்யப்பட்டார்.

  1. ராமர்பிள்ளை,
  2. அவரது வளர்ப்பு தாயார் வேணுதேவி
  3. சின்னச்சாமி,
  4. ராஜசேகரன்,
  5. எஸ்.கே. பரத்

ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீசார், சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்[9]. சுமார் 16 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நேற்று ராமர் பிள்ளை உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது[10]. மாஜிஸ்திரேட்டு பாலசுப்பிரமணியம் இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தக்க நேரத்தில் சரியான, நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கு போட உத்தரவிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜி கூறினார்[11]. ஆனால், கடந்த ஆண்டுகளில், இவர் அடிக்கடி தன்னுடைய எரிபொருள் பற்றி, விளம்பர யுக்தியில் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார்.

© வேதபிரகாஷ்

15-10-2016

ramar-pillai-gets-3-years-ri-oct-14-2016

[1] தினத்தந்தி, மூலிகை பெட்ரோல் விற்று ரூ.2.27 கோடி மோசடி ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 15,2016, 12:25 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 15,2016, 3:45 AM IST

[2] http://www.dailythanthi.com/News/India/2016/10/15002536/Rama-pillai-is-3-years-imprisonment.vpf

[3] தி.இந்து, மூலிகை பெட்ரோல்மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, Published: October 15, 2016 08:01 ISTUpdated: October 15, 2016 13:22 IST

[4] RAMAR BIO FUEL PRIVATE LIMITED – Indian Non-Government Company with identification number U23201TN1998PTC041375. It was registered on 05 November 1998 and now is Under Process of Striking off. Directors are . Registered address: INDIA, Tamil Nadu -, CHENNAI-32, CHENNAI-32, L- 5 INDUSTRIAL ESTATEGUINDY. Corporate e-mail address: –  http://informix.in/ramar_bio_fuel_private_limited_chennai/1049178/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம், By: Karthikeyan, Published: Friday, October 14, 2016, 18:49 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/ramar-pillai-gets-3-years-prison-264971.html

[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/article9222812.ece

[8] தமிழ்.வெப்துனியா, மூலிகை பெட்ரோல்மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 14th October 2016.

[9] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/herbal-petrol-fraud-3-years-prison-for-ramar-pillai-116101500005_1.html

[10] தினமணி, மூலிகை பெட்ரோல்மோசடி வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, Last Updated on : 14th October 2016 08:09 PM

[11]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/14/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2581026.html?pm=home

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது – தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?:

செப்ரெம்பர் 26, 2015

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?:

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

தாவூத் இப்ராஹிமூக்கு இப்பணம் போகிறதா?: மேற்கு வங்க ஹவாலா கும்பல், பெருமளவு பணத்தை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி உள்ளனர். கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் ஹவாலா பணம் அனுப்பியுள்ளனர். இந்த பணம் கராச்சியில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் ஆட்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.5,000 கோடி அளவுக்கு பணம் கடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1175 செல்போன் மற்றும் போன் நம்பர்களை ஆய்வு செய்தனர். அப்போது 305 எண்கள் இந்தியாவில் இருந்து பேசப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த டெலிபோன் உரையாடல்கள் மூலம் தாவூத் இப்ராகிம் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்[1]. பணத்தை எண்ணுவதற்காக அருகில் இருந்த எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து பணம் எண்ணும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டன. பின்னர் டிரங்க் பெட்டிகள் வாங்கி வரப்பட்டு, அதில் வைத்து பணம் கொண்டு செல்லப்பட்டது. அடுத்த மாதம் பீகார் மாநில தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு விநியோகம் செய்யப்படுவதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது[2]. இந்திய கரன்ஸியாகவா துபாய்க்கு போகும்?

Santiago martin - DMK clout

Santiago martin – DMK clout

யார் இந்த மார்ட்டின்மார்டின் புராணம்[3]: திருவல்லிக்கேணியில் லாட்டரி டிக்கெட் விற்றுவந்த சான்டியாகோ மார்டின் இன்றும் லாட்டரி தொழிலில் படு பிசிதான். வடகிழக்கு மாநிலங்களில் மார்டின் சென்றால் அமோக வரவேற்பு தான். ஒரு கவர்னருக்குக் கூட அந்த அளவிற்கு மரியாதை, மதிப்பு இருக்காது என்று மக்கள் சொல்கிறார்கள். “எஸ்.எஸ்” பெயரில் டிவி செனல்[4], ஆன்-லைன் லாட்டரி முதலியவற்றில் கோடிகளை அள்ளி அவற்றை, நிலத்தில் போட்டு, செல்வத்தை வளர்க்கும் வித்தைக்காரர்[5].

* மார்ட்டின், போலி லாட்டரி விற்பனையின் சூத்திரதாரி என, அழைக்கப்படுபவர்.

* தமிழகத்தில், 2003ல், லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதும், பிற மாநிலங்களில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.

* சினிமா பட தயாரிப்பு நிறுவனம் துவங்கி, தி.மு.க., தலைவர் கருணாநிதி வசனத்தில், ‘இளைஞன், பொன்னர் – சங்கர்’ போன்ற, திரைப்படங்களை தயாரித்தார்.

* தி.மு.க., ஆட்சியில், லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் கொண்டு வர பல விதங்களில் முயற்சி செய்தார்.

* ‘ஆன் – லைன்’ வியாபாரம், ‘லாட்டரி இன்சிடர்.காம்’ என்ற இணையதளம் வாயிலாகவும் லாட்டரி விற்பனையை நடத்தி வந்தார்.

* மகாராஷ்டிரா, சிக்கிம், நாகாலாந்து, பஞ்சாப், மேகாலயா மாநிலங்களில், லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் உரிமம் பெற்று இருந்தார்; பூடான் லாட்டரியின் அகில இந்திய ஏஜன்டாகவும் செயல்பட்டார்.

* கோவையில், மனைவி பெயரில் ஒரு துணிக்கடை, செவிலியர் கல்லுாரி மற்றும், ‘மார்ட்டின் புரமோட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தினார்.

* ஆண்டுக்கு, 7,200 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் இவர், 2008ல், 2,112 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தவில்லை என, வருமான வரித்துறை சுட்டிக் காட்டியது.

* கடந்த, 2011ல், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். போலி லாட்டரி விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஏழு மாதம் சிறையில் இருந்த பின், ஜாமினில் வெளியே வந்துள்ளார். தற்போது அதிகாரத்தில் உள்ள சில, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் தொடர்பில், மார்ட்டின் மற்றும் அவர் குடும்பத்தினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

August 2011 - Santiago arrested in Salem for land grabbing case.3 DM

August 2011 – Santiago arrested in Salem for land grabbing case.3 DM

மார்டின் நிகழ்வு” (Martin phenomenon): அந்நிலையில் லாட்டரி சீட்டு விற்றே மில்லியனரான சாண்டியகோ மார்டின் சென்னையில்தான் உண்டு[6]. கே.ஏ.எஸ். ராமதாஸையும் மறந்திருக்க முடியாது. “மார்டின் நிகழ்வு” (Martin phenomenon) என்பது நிச்சயமாக ஒரு அதிசயமானதுதான். ஆகையால்தான் உதாரணத்திற்காக அது எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அதைச் சுற்றி மற்ற விஷயங்களும் வருகின்றன. மார்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பெரிய தாதா, இல்லை அதற்கும் மேலே. இந்திய ஜனாதிபதி-பிரதம மந்திரிக்குக் கூடக் கிடைக்காத மரியாதை மார்ட்டினுக்குத் தான் கிடைக்கும். அதே போல தமிழகத்திலும் மரியாதை, அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. கருணாநிதி ஆட்சியின் ஆரம்பத்தில் மார்ட்டினை விசாரிக்கும் படலம் ஆரம்பித்தது[7].

Santiago Martin, his son etc with Karunanidhi

Santiago Martin, his son etc with Karunanidhi

வரி ஏய்ப்பிலும் மார்டினின் கம்பெனிகள் சம்பந்தப் பட்டுள்ளன[8]. பர்மாவிலிருந்து வந்த மார்டின் சட்டத்திற்கு புரம்பாக லாட்டரி சீட்டு விற்பனை நடத்தி சம்பாதித்துள்ளது ரூ. 7200 கோடிகளாம்! இரண்டு  முறை சட்டரீதியில் நடவடிக்கை எடுத்தும், குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டும் சுதந்திரமாக திரிந்து வருவதுதான் மார்டினின் திறமை. அது மட்டுமல்லாது, FICCI எனப்படுகின்ற இந்தியாவின் பிரதம வியாபார நிறுவனத்தின் அங்கமான அனைத்திந்திய லாட்டரி வியாபார மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்துறை கூட்டமைப்பு (All India Federation of Lottery Trade and Allied Industry) என்பதில் அபரீதமான பங்கு வகிப்பதும் தெரிந்த விஷயமே[9].

Ram Madhava, Santiago Martin son and Singh

Ram Madhava, Santiago Martin son and Singh

சான்டியாகோ மார்ட்டினின் அரசியல் பின்னணி: ஆரம்ப காலங்களில் சென்னையில் லாட்டரி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, திராவிட கட்சிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் சான்டியாகோ மார்டின். கருணாநிதி எழுதிய இரண்டு படங்களை இவர் எடுத்துள்ளார். இவரது மனைவி லீமா ரோஸ், பாரி வேந்தரின் ஐ.ஜே.கே.வில் உள்ளார். மகன் பிஜேபியில் சேர்ந்துள்ளார்.

leema-rose- wife of Santiago Martin

leema-rose- wife of Santiago Martin

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவில் சேர மார்ட்டின் முயற்சி செய்தார். ஆனால், அவரை சேர்க்கக் கூடாது என தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் மார்ட்டினின் மகன் சார்லஸ் பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் புகைப்படமும் வெளியானது. ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பெரும்பாலானோருக்கே தெளிவான தகவல்கள் தெரியவில்லை. அவர்களும் ஊடகங்கள் வாயிலாகவே இந்த தகவலைப் பெற்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தி நியூஸ் மினிட்டிற்கு அளித்துள்ள பேட்டியில், சார்லஸ் மார்ட்டின் பாஜகவில் சேர்ந்ததை உறுதி படுத்தியுள்ளார்[10]. மேலும், ‘சார்லஸ் மீது வழக்குகள் எதுவும் இல்லை. அதோடு அவர் பாஜகவில் இணைந்து சமுதாயப் பணி செய்ய விரும்புகிறார். எனவே, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு?’ எனக் கேள்வி எழுப்பினார்[11].

© வேதபிரகாஷ்

25-09-2015

[1] விகடன்.காம், தாவூத் இப்ராகிமுக்கு ரூ.5,000 கோடி ஹவாலா பணம் கடத்தல்: விசாரணையில் தகவல்! Posted Date : 15:17 (26/09/2015); Last updated : 15:17 (26/09/2015)

[2] மாலைமலர், கொல்கத்தாவில் லாட்டரி ஏஜெண்டு மார்ட்டின் வீடுகளில் ரூ.100 கோடி சிக்கியது: பீகார் தேர்தல் செலவுக்கு பதுக்கலா?, மாற்றம் செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 10:41 AM IST;பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25, 8:20 AM IST.

[3] தினமலர், மூடை மூடையாக பணம் கடத்த திட்டம்: லாட்டரி அதிபர் மார்ட்டினை தேடும் போலீஸ், செப்டம்பர்.25, 2015. 22.42.

[4] http://www.ssmusic.tv/

[5] https://lawisanass.wordpress.com/2011/08/13/lottery-king-santiago-martin-arrested/

[6] SS-TV, SS-Lottery, Sur-Sangeet, etc., are owned by Santiago Martin. The ultra-modern offices at Chennai have been attraction to everybody, as everyday sleezy girls used come, while away time outside, before and after attending duty. Many sigh heavily when such girls go away in bikes with boys, who either used to come there to pick-up or come-and-go-together!

[7]டெலிவிஷன்–பாயின்ட், SS Music’s Santiago Martin in trouble over lottery business, http://www.televisionpoint.com/news2007/newsfullstory.php?id=1192264947

[8]  In a very recent decision in Union of India Vs. Martin Lottery Agencies Ltd. (2009-VIL-01-SC-ST), the Supreme Court had occasion to deal with some fundamental principles relating to taxation of services. http://www.business-standard.com/india/news/service-taxsalelottery-tickets/357677/

[9] http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne130210the_trader.asp

[10]  ஒன்.இந்தியா, லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் பாஜகவில் சேர்ந்ததில் என்ன தவறு? – கேட்கிறார் தமிழிசை, Posted by: Jayachitra, Published: Wednesday, June 24, 2015, 13:52 [IST].

[11] http://tamil.oneindia.com/news/india/lottery-martin-s-son-joins-bjp-229502.html

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது?

செப்ரெம்பர் 26, 2015

சான்டியாகோ மார்டின், லீமா ரோஸ், சார்லஸ்: திமுக, ஐஜேகே, பிஜேபி: ரெயிடுகள், கோடிகள் பறிமுதல், என்ன நடக்கிறது?

August 2011 - Santiago arrested in Salem for land grabbing case

August 2011 – Santiago arrested in Salem for land grabbing case

பில்லியனர் சான்டியாகோ மார்டின்: கோவையை சேர்ந்த சான்டியாகோ மார்ட்டின், பல ஆண்டு காலமாக லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  இவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் லாட்டரி விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான உரிமம் பெற்றுள்ளார். தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கேரளா, மேற்கு வங்கம் மற்றும்  மேகலாயா, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களை மையமாக வைத்து இவரது லாட்டரி தொழில் நடைபெற்று வருகிறது. கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி நடத்துதல், விற்பனை மற்றும் விநியோகத்தில் முறைகேடு செய்ததாக மார்ட்டின் மீது 32 வழக்குகள் உள்ளன. இது பற்றி 7 வழக்குகளில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணை நடத்தி வருகிறது தமிழ்நாட்டில் மார்ட்டின் மீது பல நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் அவர் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு லாட்டரி சாம்ராஜ்யம்  நடத்தும் மார்ட்டின்,  கடந்த 2011ஆம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை எழுதிய இரு படங்களை  தயாரித்தார். லாட்டரி தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாக  8 மாதங்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்[1].

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

Trunk for Currency Carrying from Raid at 127 B Sarat Bose Road on Thursday. Express photo

வருமானவரி துறை சான்டியாகோ கம்பெனிகளில் சோதனை: மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலும் மற்றும் சில இடங்களிலும் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழ்நாடு வரை இது பரவி இருப்பதாகவும், இதில் கோடிக்கணக்கான பணம் புழங்குவதாகவும் மத்திய புலனாய்வு துறையினர் மூலம் வருமான வரி துறையினருக்கு தகவல் கிடைத்தது[2]. வருமானவரி துறையினர் கீழ்கண்ட இடங்களில் சோதனையிட்டனர்[3]:

  1. ஜெனெரெல் சிஸ்டெம் [General System]
  2. பியூச்சர் பிலேன் என்டர்பிரைசஸ் [Future Plan Enterprisestwo South Kolkata based companies],
  3. எஸ். நாகார்ஜுனா [S Nagaarjuna] வீடு மற்றும்
  4. சான்டியாகோ மார்டீன் [Santiago Martin] வீடு
  5. ஜி. சிஸ்டம்ஸ் [G . Systems]
  6. எப். பி. என்டர்பிரசஸ் [ F. P. Enterprises]

மார்டின் காணவில்லை என்றும்,  எக்ஸ். அலெக்ஸ்சாந்தர் [X Alexander] என்பவரிடம் விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிகிறது[4]. மேற்கு வங்கத்தில் தமிழக லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. 25-09-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் மார்ட்டினுக்கு சொந்தமான இடத்தில் வருவாய்த்துறையும், அமலாக்கத் துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்[5].

Crores seized from Martins house - but he was missing DM Sep.2015

Crores seized from Martins house – but he was missing DM Sep.2015

கொல்கொத்தாவிலிருந்து கோடிகள் பறிமுதல்: கொல்கத்தாவில் பல வீடுகளை வாடகைக்கு எடுத்து, மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனம் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. அப்படி மேற்கு கொல்கத்தா பகுதியில், முன்னாள் நீதிபதி ஒருவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர். அந்த வீட்டில் இருந்து நேற்று 54 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதுபோல் தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 21 கோடியும், சிலிகுரியில் மார்ட்டின் நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் இருந்து 29 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் 104  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது[6]. சிலிகுரி என்ற இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், ரசீதுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின[7].

the curios case of Santiago Martin

the curios case of Santiago Martin

தமிழகத்தைச் சேர்ந்த எஸ். நாகராஜன் என்பவர் கைது: இதில், சாக்கு மூட்டையிலும், பீரோவிலும் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.1,000 கோடி பணம் சிக்கியது. இது தொடர்பாக மார்ட்டினுக்கு நெருக்கமான தமிழகத்தைச் சேர்ந்த எஸ். நாகராஜன் என்பவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், நாகராஜன் லாட்டரி விற்பனையுடன் ஹவாலா பணம் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நாகராஜனின் பாஸ்போர்ட்டை கைப்பற்றிய அதிகாரிகள், அவர் எந்தெந்த வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகராஜன் பல வருடங்களாக போலி லாட்டரி நடத்தி, பொது மக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி மோசடி செய்து இருக்கலாம். இந்த மோசடி பணத்தின் மூலம் ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்[8]. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர், மேற்கு வங்காளத்தில் அலுவலகங்கள் நடத்தி வருவதை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்[9]. மத்தியபிரதேச மாநிலத்தில் சிலரது வங்கி கணக்குகளில் திடீர் என்று லட்சக்கணக்கில் பணம் போடப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்த போது, அவர்கள் லாட்டரியில் விழுந்த பரிசு பணம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஹவாலா பணத்தை லாட்டரி பரிசு பணம் என்று சொல்லி வங்கியில் டெபாசிட் செய்து இருப்பது தெரிய வந்திருக்கிறது[10].

SS TV channel - Santiago Martin

SS TV channel – Santiago Martin

தமிழ்நாட்டில் இருந்து மே.வங்கத்திற்கு ஹவாலா பணம் போவது ஏன்? வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது எப்படி?: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, வங்கதேச நாட்டுக்கு எளிதில் பணத்தை கடத்த முடிகிறது. அங்கிருந்து அரபு நாடுகளுக்கு பணம் எளிதில் பரிமாறப்படுகிறது[11]. துபாயிலுள்ள தாவூத் கும்பல் இந்த பணத்தை பெற்று ஐபிஎல் போன்ற விளையாட்டுகளின்போது சூதாட்டத்திற்கு பயன்படுத்துகிறது. மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையிலும், இதே ரூட்தான் கையாளப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமானது. மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையிலும், இதே ரூட்தான் கையாளப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமானது[12]. தமிழகத்தில் பதுக்கி வைத்துள்ள, ரூபாய் நோட்டு மூட்டைகளை அவர், கன்டெய்னர் மூலம், பிற மாநிலங்களுக்கு கடத்த இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது[13]. இதுபற்றிய தகவலை தமிழக போலீசாருக்கு தெரிவித்து, அவர்களை உஷார்படுத்தி உள்ளோம், இவ்வாறு மத்திய உளவு போலீஸ் வட்டாரங்கள் கூறின[14].

© வேதபிரகாஷ்

25-09-2015

[1] http://www.maalaimalar.com/2015/09/25082004/Raid-of-lottery-companies-Rs-1.html

[2] http://www.dailythanthi.com/News/India/2015/09/25045505/Rs-45-crore-seized-in-a-raid-on-the-lottery-companies.vpf

[3] The CBDT officials with the help of Special Task Force of Kolkata Police carried out raids at two South Kolkata based companies, General System and Future Plan Enterprises, and at S Nagaarjuna and Santiago Martin. The operation was carried out in early hours based on inputs provided by IB about an alleged fake lottery racket which has its tentacles spread upto Tamil Nadu. A highly-placed Kolkata police officer said various teams, consisting of members of STF and its anti-bank fraud section, helped the tax department sleuths conduct the raids at five places in the city. “Raids are being conducted at four places in New Alipore police station limits and one on Sarat Bose Road area today,” the officer said. They said the teams, comprising about 100 members including local police, had to deploy about a dozen counting machines to estimate the cash recovered from two firms identified as G Systems and F P Enterprises.

http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA4NzEzNA%3D%3D

[4] http://indianexpress.com/article/cities/kolkata/hawala-crackdown-rs-80-crore-recovered-dawood-link-under-lens/

[5] விகடன்.காம், லாட்டரி மன்னன் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ஒரேநாளில் ரூ. 100 கோடி பறிமுதல்!, Posted Date : 12:23 (25/09/2015) Last updated : 12:23 (25/09/2015).

[6] http://www.vikatan.com/news/article.php?aid=52865

[7]  தினத்தந்தி, 16 சாக்கு மூட்டை, 27 சூட்கேஸ்கள் நிறைய கட்டுக்கட்டாக பணம் லாட்டரி நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.45 கோடி சிக்கியது, மாற்றம் செய்த நாள்:வெள்ளி, செப்டம்பர் 25,2015, 4:55 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, செப்டம்பர் 25,2015, 4:55 AM IST.

[8] தமிழ்.இந்து, கொல்கத்தாவில் ஹவாலா மோசடி அம்பலம்: தமிழக தொழிலதிபர் குடோனில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல், Published: September 24, 2015 15:40 ISTUpdated: September 24, 2015 17:37 IST.

[9]http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7684994.ece

[10] http://www.vikatan.com/news/article.php?aid=52930

[11] http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-west-bengal-how-the-hawala-route-was-un-earthed-236511.html

[12] ஒன்.இந்தியா, தமிழ்நாட்டில் இருந்து மே.வங்கத்திற்கு ஹவாலா பணம் போவது ஏன்? வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது எப்படி?, Posted by: Veera Kumar, Published: Saturday, September 26, 2015, 13:56 [IST]

[13]  தினமலர், மூடை மூடையாக பணம் கடத்த திட்டம்: லாட்டரி அதிபர் மார்ட்டினை தேடும் போலீஸ், செப்டம்பர்.25, 2015. 22.42.

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350215