Posts Tagged ‘மௌலானா’

மௌதனியை கைது செய்த பெங்களூரு போலீஸ் அதிகாரிக்கு கேரள மாஜிஸ்ட்ரேட் சம்மன்!

செப்ரெம்பர் 2, 2010

மௌதனியை கைது செய்த பெங்களூரு போலீஸ் அதிகாரிக்கு கேரள மாஜிஸ்ட்ரேட் சம்மன்!

அப்துல் நாசர் மௌதனியை கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது, என்று போடப்பட்டு புகார் மனு: அப்துல் நாசர் மௌதனியை கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது, ஏனெனில் கைது செய்யப்பட்டவுடன் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் அழைத்துவராமல், வழியில்-கைது செய்யும்படியான வாரண்டை வைத்துக் கொண்டு பெங்களூரு போலீஸார், மௌதனியை கைது  செய்து கொண்டு போய்விட்டனர், என்ற புகார் வழக்கை விசாரித்த நீதிபதி / மாஜிஸ்ட்ரேட் சௌந்தரேஷ், ஓம்காரைய்யா என்ற பெங்களூரு துணை போலீஸ் கமிஷனரை செப்டம்பர் 13ம் தேதி ஆஜராகும்படி பணித்துள்ளார்[1].

ஓம்காரைய்யா வராவிட்டால் என்னாகும்? அப்துல் சலாம் என்ற அப்துல் நாசர் மௌதனியின் சகோதரர் அப்படியான புகார் ஆகஸ்ட் 30ம் தேதி மனு கொடுக்க, நீதி மன்றம் முன்பு கொல்லம் சூப்பிரென்டென்ட் ஆஃப் போலீஸை 01-09-2010 அன்று ஆஜராகும்படி பணித்தது[2]. அவர் தரப்பில் கேரள அரசு வக்கீல் வந்தாராம். ஆனால், ஓம்காரைய்யா தரப்பில் யாரும் வராதலால், இப்படி சம்மன் அனுப்பியுள்ளாராம்[3].

இமாம் மற்றும் மௌலானா விஷயங்களில் கேரள நீதிமன்றங்களின் இரட்டை வேடங்கள்: பெங்களுரு 2008 குண்டு வெடிப்பு வழக்கில் விசாரித்துவரும், கர்நாடக போலீஸ் அதிகாரியை ஆஜராகும்படி கேரள மாஜிஸ்ட்ரேட் சம்மன் அனுப்பியுள்ளது வேடிக்கையாக உள்ளது. முன்பு டில்லி இமாமை கைது செய்யும்படி மூன்றுக்கும் மேலான நீதிமன்றங்களில் வாரண்டுகள் பிறப்பித்தும், எந்த போலீஸாரும் கைது செய்யவில்லை. அதில் கேரள நீதிமன்றமும் ஒன்று[4]. மாறாக, இப்பொழுது கேரள நீதிமன்றம் உஷாராக வேலை செய்கிறது போலும். அதாவது ஒரு முஸ்லீம் அடிப்படைவாதி, நீதிபதிகளின் கால்களை உடைப்பேன்……………… என்ற ரீதியில் இன்னும் ……………………….பேசினாலும், நீதிபதிகள் மறந்து விடுவர். ஆனால், இன்னொரு முஸ்லீம் விஷயத்திலும் இப்படி நேர்மாறாக சம்மன் அனுப்புவார்களாம்! இப்படி சட்டத்தை உபயோகப் படுத்தினால், சட்டம் எப்படி வேலை செய்ய்ம்? அப்படி வேலை செய்யாவிட்டால், எப்படி மக்கள் சட்டத்ட்கை நம்புவார்கள்?

கேரள போலீஸார் நடித்தது அன்றே தெரிந்தது[5]: கேரள போலீஸார் மௌதனியை கைது செய்யாமல் நாடகம் ஆடி காலம் கழித்ததை[6] அப்பொழுது ஊடககங்களில் எல்லோரும் பார்த்துதான் ரசித்துக் கொண்டிருந்தனர். நாளிதழ்கள் கேரள போலீஸார் வ்வாறு வேண்டுமென்றே காலம் கடத்துவதை எடுத்துக் காட்டினர்[7].


[1] http://www.thehindu.com/news/states/kerala/article607181.ece

[2] http://news.oneindia.in/2010/09/01/madani-case-kerala-court-summons-bangalore-acp.html

[3] http://www.dnaindia.com/india/report_bangalore-acp-summoned-by-kerala-court-for-role-in-abdul-nasser-madani-s-arrest_1431946

[4] கோர்ட் அவமதிப்பு வழக்கில், நீபதிகள் மற்றும் நீதிபதிகளைப் பற்றி கேவலமாக, அவதூறக பேசிய டில்லி இமாமை கைது செய்யும்படிமூன்றுக்கும் மேலான நீதிமன்றங்களில் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த இமாம் கைது செய்யப்படவில்லை. அதாவது நீதி செயல்படவில்லை!

[5] A police team from Karnataka camping in south Kerala town Kollam could not on Wednesday arrest People’s Democratic Party chairman Abdul Naser Madani, an accused in the 2008 Bangalore serial blasts case, with the Kerala Police reportedly going back on its word to provide local support to them.

Indian Express, Kerala ‘delay tactics’ stall Madani arrest, August 12, 2010

http://www.indianexpress.com/news/Kerala–delay-tactics–stall-Madani-arrest/659087

http://timesofindia.indiatimes.com/city/bangalore/Cops-to-wait-for-some-time-to-arrest-Madani/articleshow/6295472.cms

[6] Economic Times, Madani’s arrest delayed, 12 Aug, 2010, 06.19AM IST,ET Bureau

http://economictimes.indiatimes.com/news/politics/nation/Madanis-arrest-delayed/articleshow/6296702.cms

[7] http://timesofindia.indiatimes.com/city/bangalore/Cops-to-wait-for-some-time-to-arrest-Madani/articleshow/6295472.cms