Archive for the ‘தாக்கத்தை ஏற்படுத்தவது’ Category

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

திசெம்பர் 27, 2021

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

கொரோனா காலமும், காணோலி விசாரணையும், நீதிமன்றங்களும்: காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2021 கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியபோது முதலில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே, ஊரடங்கில் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நீதிமன்றங்கள் தொடங்கி பள்ளிகள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அந்த சமயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஏராளமாக இருந்தால், விரைந்து முடிக்க காணொளி காட்சி முறை கொண்டு வந்தாக வேண்டிய சூழல் இருந்தது[2].

கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை: கொரோனா தொற்று ஆரம்பித்த சமயத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடியாகவும் விசாரணை நடைபெறுகிறது, அதே நேரத்தில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது. அனைத்து வழக்கு விசாரணையும் இப்படியே நடந்து வருகிறது. சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சக வழக்கறிஞர்கள் மட்டுமின்றி நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சகா வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியது.

செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்: இந்த விவகாரம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்[3]. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், எனவே வழக்கு விசாரணையில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[4]. நிச்சயமாக, அந்த வீடியோ பார்த்தவர்கள், அந்த வக்கீலின், அட்வகேட்டின், வழக்கறிஞரின் நடவடிக்கை தலைகுனிய வைக்கும். மேலும், அந்த பெண் ஏன் அவ்வாறு அத்தகைய கேவலமான செயலுக்கு உட்படுத்தப் பட்டாள் என்றும் தெரியவில்லை. கருப்பு நிற அங்கி முதலியவற்றைப் பார்க்கும் போது, அப்பெண்ணும் ஒரு வழக்கறிஞரா, ஜூனியரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஒருவேளை, பெண்ணின் அடையாளம் தெரியக் கூடாது என்ற ரீதியில், அவை தெரிவிக்கப் படவில்லை போலும்.

தானாகவே, சொந்தமாகவே, கேட்காமலே (suo moto) வழக்காக எடுத்துக் கொண்டது: இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்[5]. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.டி. சந்தான கிருஷ்ணன் “மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் விர்ச்சுவல் மீட்டிங்கில் கலந்துகொள்ளும் போது அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக” அவரை சஸ்பெண்ட் செய்தது[6]. மிகவும் மன வருத்தம் அளிப்பதாக இருக்கிறது[7], இது போன்ற சம்பவங்களைக் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது எனத் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்[8]. சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்[9]. இதனை சூ மோட்டோ வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்[10].

வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது: நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது[11]. முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது, இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ், “இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம்” என்றும் “பதவியை ராஜினாமா செய்து விடலாமா?” என்று யோசித்ததாகவும் வேதனை தெரிவித்தார்[12]. நிச்சயமாக, அந்த நீதிபதி அந்த அளவுக்கு வருத்தமடைந்திருப்பது தெரிகிறது. நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் காக்கக் கூடிய அத்தொழிலை செய்பவர்கள், இவ்வாறு ஈடுபட்டது, மிகக் கேவலமாகும். ஏற்கெனவே வக்கீல்களைப் பற்றி பலவிதமான செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் எப்படி வழக்கறிஞர்கள் ஆனார்கள் என்ற திகைப்பும் ஏற்படுகின்றன. அந்நிலையில், வீடியோவில் சிக்கிக் கொண்ட அந்த “பலான / செக்ஸ் வழக்கறிஞர்” அத்தொழிலுக்கு அவமானம் தான்.

நீதி, நேர்மை, நியாயம் காக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் இத்தகைய குற்றங்கள் ஏன் தொடர்ந்து நடந்து வருகின்றன, நீதி, நேர்மை, நியாயம்….போன்றவை ஏன் மதிக்கப் படுவதில்லை, மாறாக ஏளனப் படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக சினிமா, டிவி சீரியல்களில் இவை கிள்ளுக்கீறையாக மதிக்கப் படுகின்றன. நகைச்சுவை போர்வையில் ஆபாசப் படுத்தப் படுகின்றன. அதுபோலவே, அத்துறையைச் சேர்ந்தவர்களும் இழிவு படுத்தப் படுகின்றனர். சமீபகாலங்களில் நீதிபதிகளின் தீர்ப்புகளும், நீதிபதிகளும் விமர்சிக்கப் படுகின்றனர். நிச்சயமாக, நீதிபதி நியமனங்களில் அரசியல், ஜாதி, மதம் போன்ற காரணிகள் செயல்படுகின்றன. ஏனெனில், அவ்விதமாக நியமனங்கள் நடக்கின்றன. நீதிமன்றங்களிலும் கட்சிக்கு ஒரு சங்கம் செயல்பட்டு வருகின்றது. அதுபோல, ஜாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன. பிறகு பாரபட்சம், ஒருதலைப்பட்சம், பாகுபாடு, வித்தியாசம், வேறுபாடு, அரசியல் அழுத்தம் போன்றவையும் இருக்கத்தான் செய்யும். அவற்றையும் மீறி தீர்ப்புகள் கொடுக்கப் படவேண்டும். ஆகவே, நிச்சயமாக அத்தொழிலில் இருப்பவர்கள் சுத்தமாகவும், நேர்மையாகவும், யோக்கியமானவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயம், அவசியம் மற்றும் அத்தியாவசியம் உள்ளது. அப்பொழுது தான், அவர்கள் சட்டமீறல்கள் செய்யாமலும், குற்றங்களில் ஈடுபடாமலும் இருக்க முடியும்.

© வேதபிரகாஷ்

27-12-2021


[1] ஏ.பிபி.லைஃப், நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்: வழக்கறிஞர் சஸ்பெண்ட்சிபிசிஐடி வழக்கு பதிவு!, By: ABP NADU | Updated : 22 Dec 2021 11:34 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/chennai/cb-cid-to-probe-lawyer-s-act-on-camera-31615

[3] NEWS18 TAMIL, மிகப்பெரிய அசிங்கம்.. ராஜினாமா செய்ய நினைத்தேன்உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை, First published: December 23, 2021, 22:40 IS; LAST UPDATED : DECEMBER 23, 2021, 22:40 IST.

https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[5] புதியத்தலைமுறை, வழக்கறிஞரின் ஒழுங்கீனத்தால் பதவியை ராஜினாமா செய்ய நினைத்தேன்நீதிபதி வேதனை, kaleelrahman, தமிழ்நாடு, Published :23,Dec 2021 03:38 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/125450/Attorneys-Disorder-Thought-to-resign-Judge-tormented

[7] இடிவி.பாரத், வழக்கறிஞரின் செயலால் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினேன்நீதிபதி வேதனை, Published on: Dec 23, 2021, 2:56 PM IST.

[8]  https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/advocate-misbehave-on-video-conference-mhc-judge-has-upset/tamil-nadu20211223145626901

[9] தமிழ்.ஒன்.இந்தியா, கேமரா ஆனில் இருப்பது தெரியாமல்.. பெண்ணிடம் தவறாக நடந்த வக்கீல்.. வாழ்நாள் தடை போட்ட சென்னை ஐகோர்ட், By Vigneshkumar, Updated: Tuesday, December 21, 2021, 20:27 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-ordered-to-ban-a-lawyer-who-misbehaved-with-woman-during-a-video-trial-442879.html

[11] தினத்தந்தி, ஆன்லைன் விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞர்..!, பதிவு : டிசம்பர் 23, 2021, 10:06 PM

[12] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/12/23220640/2978084/Lawyer-who-conducted-irregular-in-online-trial.vpf.vpf

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

அகழாய்வு பற்றி நிறைய வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்திய தொல்துறை கட்டிடங்கள், சிற்பங்கள், கோவில்கள் போன்றவை, தூரமான இடங்களில் தனியாக, பாதுகாப்பு இன்றி இருப்பது தெரிந்த விசயமே.
இவர் சென்று பார்க்கும் போது கூட அந்நிலையை அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட அதிகாரிகள், ஆய்வாளர்கள் தான், எப்பொழுதும் குழிகள் அருகிலேயே இருக்கின்றனர்.

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நடக்கின்ற வழக்குகள்தீர்ப்புகள், தொடரும் முறைகள்: தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பற்றி எழுத்தாளர் எஸ்.காமராஜ்[1], மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்[2]. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்தது[3]. இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் முன்பு 10-08-2021 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் அவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான திராவிடன் கிளை அலுவலகம் சென்னையில் அமைக்கப்பட்டது: மத்திய அரசுத்தரப்பில், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டது[4]. 4 தமிழ் கல்வெட்டியலாளர்களும் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது[5]. “சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில் 1 சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகளின், இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்த கேள்விக்கு, மொத்தமாக –

  • 86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டிருப்பதாகவும்,
  • அவற்றில் 27,000 தமிழ் கல்வெட்டுக்கள்,
  • 25,756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை
  • 12,000 கல்வெட்டுக்கள் பெர்ஷியன் மற்றும் அராபிக் மொழிக்கானவை,
  • 9,400 கல்வெட்டுக்கள் கன்னட மொழிக்கானவை,
  • 7300 கல்வெட்டுக்கள் தெலுங்கு மொழிக்கானவை,
  • 225 கல்வெட்டுக்கள் மலையாள மொழிக்கானவை என பதிலளிக்கப்பட்டது.

இதிலிருந்தே, தமிழில் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்பது பொய்யாகிறது. 27,000 தமிழ் எனும் போது, 57,000 தமிழ் அல்லாதது என்றாகிறது. எனவே, இத்தகைய வாதம், வழக்கு, செய்திகள் எல்லாமே பொய் என்றாகிறது.

அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை?: அதற்கு நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. அப்படியாயினும் அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்[6]. தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[7]. அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[8]. அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? என கேள்வி எழுப்பினர்[9]. நீதிபதிகள் இவ்வாறு கேட்டனரா அல்லது செய்திகள் அவ்வாறு வந்துள்ளனவா என்று தெரியவில்லை. இருப்பினும், இத்தகைய கேள்விகள் கேட்டுள்ளதும், விசித்திரமாக உள்ளது. ஏனெனில், நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்கும் முன்பே, அவற்றைப் பற்றி நன்றாகப் படித்து கொண்டு வந்து, வாதாடும், வக்கீல்களை குறுக்கு விசாரணை செய்யும் அளவுக்கு இருபார்கள், இருக்கிறாற்கள். மாறாக, இவ்வாறு, கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது, திகைப்பாக இருக்கிறது.

மைசூருவில் வைத்தது ஏன்?: அதற்கு நீதிபதிகள், “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது. நாடு முழுவதும் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. அந்த கல்வெட்டுகளை மைசூருவில் ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுக்களை வைக்க நடவடிக்கை எடுக்கலாமே? 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கு என கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? அதை திராவிட மொழி கல்வெட்டுகள் என கூறுவது ஏன்?,” எனவும் கேள்வி எழுப்பினர்[10]. அதற்கு மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “இது அரசின் கொள்கை முடிவு’’ என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இருப்பினும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும்” என்றனர்[11].

விளக்கம் அளிக்க உத்தரவுவிரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்: மேலும், தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எதற்கானவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்[12]. இதுகுறித்து தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை இன்றை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்[13].  “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது,” என்று நீதிபதிகள் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே அரசின் ஆவணங்கள் எல்லாம் வெளிப்படையாக உள்ளன. அவற்றையெல்லாம் கனம் நீதிபதிகள் படித்திருப்பார்கள். அந்நிலையில், இத்தகைய கேள்விகள் எழுப்பப் படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அரசியல் ஆதரவு நியமன நீதிபதிகள் அவ்வாறு சித்தாந்த ரீதியில் சார்புடையவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] WP(MD) 1174/2021; KAMARAJ MUTHALAKURICHI KAMARAJ.S VS THE UNION OF INDIA AND 4 OTHERS; M/S.ALAGUMANI.RRAMESHKUMAR. S 8486484817; M/S. VICTORIA GOWRI.L. ASGIMEMO OF APP FILED FOR R1 andAMP; R2 COUNTER AFFIDAVIT-USR-9534/21 FOR R 1 2 4 and AMP; 5 AGP TAKES NOTICE FOR R3, in the COURT NO. 1 before The Honourable Mr Justice N. KIRUBAKARAN and The Honourable Mr Justice M.DURAISWAMY

[2] தினத்தந்தி, 60 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு என கூறுவது ஏன்? மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி, பதிவு: ஆகஸ்ட் 10,  2021 04:35 AM.

[3] https://www.dailythanthi.com/News/State/2021/08/10043535/Why-is-it-said-that-60000-Tamil-inscriptions-are-Dravidian.vpf

[4] புதியதலைமுறை, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? – நீதிபதிகள், தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 04:04 PM.

[5] https://www.puthiyathalaimurai.com/newsview/112414/What-is-the-need-to-appoint-an-inscription-scholor-for-Sanskrit-language-in-Tamil-Nadu—-Judges

[6] புதியதலைமுறை, அதிக கல்வெட்டுகள் உள்ள தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :10,Aug 2021 05:41 PM

[7] https://www.puthiyathalaimurai.com/newsview/112628/actor-Vijay-Antony-Next-is-Mazhai-Pidikatha-Manidhan-Directed-by-Vijay-Milton.html

[8] புதியதலைமுறை, தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழிக்கானவை என அடையாளப்படுத்துவது ஏன்? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 03:55 PM

[9] https://www.puthiyathalaimurai.com/newsview/112412/Why-identify-60-000-Tamil-inscriptions-as-Dravidian—-Judges

[10] பாலிமர்.செய்தி, தமிழ்க் கல்வெட்டுகளை ஏன் மைசூரில் வைத்திருக்க வேண்டும்? – நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி, August 09, 2021 06:02:59 PM.

[11] https://www.polimernews.com/dnews/152481

[12] தமிழ்.ஒன்.இந்தியா, அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் இல்லை?.மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி!, By Rayar A Updated: Wednesday, August 11, 2021, 7:30 [IST]

[13] https://tamil.oneindia.com/news/chennai/why-is-the-tamil-language-with-so-many-inscriptions-not-important-tn-hc-to-centre-429576.html

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

மார்ச் 17, 2012

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?


லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்

Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.

Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani) 

3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th 

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

  • ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
  • அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
  • அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
  • முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
  • கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
  • ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
  • இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?

திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –

  1. நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
  2. முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
  3. தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
  4. உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
  5. அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.

இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!

வேதபிரகாஷ்

16-03-2012


 


[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.

பாதிரியார்கள் பத்திரிக்கையாளர்களை தாக்கினர்!

செப்ரெம்பர் 16, 2010

பாதிரியார்கள் பத்திரிக்கையாளர்களை தாக்கினர்!

ஆட்களை ஒளித்து வைக்கும், பிடித்துவைக்கும் பிஷப்: சாந்தோம் பிஷப்புகள் என்றாலே கோர்ட், வழக்கு, மோசடி, அடிதடி என்பதெல்லாம் சகஜம் போல இருக்கிறது. முன்பு, அருளாப்பாவைப் போலவே இந்த சின்னப்பாவும், தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்குவது வேடிக்கையாக உள்ளது, முன்பு, ஊட்டி பலான பாதிரி செக்ஸ் விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்க சபை புகார் கூறியது. அதுமட்டுமல்ல, அந்த பிஷப்பையே ஒளித்தவைத்ததாக புகார் கூறப்பட்டது. ஆக இப்படியெல்லாம், ஆட்களை ஒளித்து வைப்பது, பிடித்து வைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம், பிஷப்புகளுக்கு வாடிக்கையாகி விட்டன போலும்.

பிஷப்புக்கும் ஆசிரியைக்கும் சண்டை: மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சாட்சியாக சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது[1].

Mediamen-detained-attacked-by-Church

Mediamen-detained-attacked-by-Church

சின்னப்பா பிஷப்புக்கு கோர்ட் சம்மன்: கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டதும், சின்னப்பாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பேராயர் வழக்கு தொடர்ந்தார். சம்மன் அனுப்பியதற்கு தடை விதித்த ஐகோர்ட், வக்கீல்கள் குழு அமைத்து பேராயரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பரிந்துரைத்தது. வக்கீல் ஜான் தலைமையில் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. வக்கீல்கள் குழு நேற்று காலை சாந்தோம் சர்ச் வளாகத்தில் உள்ள பேராயர் வீட்டுக்குச் சென்றது. இதையறிந்துதான், டைம்ஸ்-நௌ டிவிக்காரர்கள் அங்கு வந்தனர்.

Dinamalar-16.Sep.2010

Dinamalar-16.Sep.2010

உள்ளூர் ஊடகங்கள் மறக்கும் டில்லி செனல்காரர்கள் வந்தனராம்: முன்பே எடுத்துக் காட்டியுள்ளபடி, உள்ளூர் உடகக்காரர்கள் பெரும்பாலோர் கிருத்துவர்கள் அல்லது கிருத்துவ சார்புடையவர்கள், ஏனெனில், அவர்களுக்கு “கவர்கள்” முதல் எல்லாமே வாடிக்கையாகக் கொடுக்கப் பட்டுக் கவனிக்கப் படுகிறார்கள். ஆகையால், அவர்கள் இதைப் பற்றி கவலைப் படுதில்லை போலும். இந்நிலையில், இதை படம் எடுக்க தனியார் “டிவி’ நிறுவனத்தினர் உள்ளே நுழைந்தனர்.

பாதிரியாளர்கள் தாக்கு, சிறைபிடிப்பு: “டைம்ஸ் நெள” தொலைக்காட்சியின் செய்தியாளர் விக்ரம் கோபிநாத் மற்றும் கேமராமேன் மணிஷ் தணானி ஆகியோர் செய்தி சேகரிப்பதற்காக சாந்தோம் பேராயர் இல்லத்திற்கு இன்று காலை சென்றனர். அப்போது, அங்கிருந்த இரு பாதிரியார்களும் அலுவலக ஊழியர்களும் அவர்களை தாக்கினர். மேலும், அவர்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்துக்கொண்டனர்[2]. இன்னொரு செய்தியின்படி, சின்னப்பாவே பிடித்துவைத்தர் என்றுள்ளது: “சென்னையில் சாந்தோமில் உள்ள சர்ச் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ஒருவரை சாந்தோம் சர்ச் பிஷப் சின்னப்பா உள்ளிட்ட பாதிரியார்கள் பிஷ்ப் ஹவுசில் அடைத்து வைத்துத் தாக்கினர்[3].

சாலை மறியல் அடுத்து பத்திரிக்கையாளர்கள் விடுதலை: இதையடுத்து, தகவல் கேள்விபட்டு அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டனர். பின்னர் சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் தலைமையிலான போலீஸார் மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலையீட்டின் பேரில் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு அடைத்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தாக்கப் பட்டவர்கள், தாக்கிய பாதிரிகளை போலீஸரிடம் அடையாளங்காட்டினர்: இதையடுத்து மறியலை கைவிட்ட பத்திரிக்கையாளர்கள், தாக்குதல் நடத்திய பாதிரியாரை போலீசாருக்கு அடையாளம் காட்டினர்.    போலீசார் பாதிரியாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.    இந்த சம்பவத்தினால் சாந்தோம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டருக்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சின்னப்பா மன்னிப்பு கேட்டார்: வேறு வழியில்லாமல், சின்னப்பா வெளியே வந்து, நிலைமையை பார்த்தார். மேலும், இச்சம்பவத்திற்காக பேராயர் சின்னப்பா பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார்.


[1] தினமலர், டிவிகுழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல், பதிவு செய்த நாள்: செப்டம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=85561

[2] http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=73219434-2107-4564-a1ad-76a3fd10d362&CATEGORYNAME=TCHN

[3] http://www.thenaali.com/newsinner.php?id=1374

மௌதனியை கைது செய்த பெங்களூரு போலீஸ் அதிகாரிக்கு கேரள மாஜிஸ்ட்ரேட் சம்மன்!

செப்ரெம்பர் 2, 2010

மௌதனியை கைது செய்த பெங்களூரு போலீஸ் அதிகாரிக்கு கேரள மாஜிஸ்ட்ரேட் சம்மன்!

அப்துல் நாசர் மௌதனியை கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது, என்று போடப்பட்டு புகார் மனு: அப்துல் நாசர் மௌதனியை கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது, ஏனெனில் கைது செய்யப்பட்டவுடன் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் அழைத்துவராமல், வழியில்-கைது செய்யும்படியான வாரண்டை வைத்துக் கொண்டு பெங்களூரு போலீஸார், மௌதனியை கைது  செய்து கொண்டு போய்விட்டனர், என்ற புகார் வழக்கை விசாரித்த நீதிபதி / மாஜிஸ்ட்ரேட் சௌந்தரேஷ், ஓம்காரைய்யா என்ற பெங்களூரு துணை போலீஸ் கமிஷனரை செப்டம்பர் 13ம் தேதி ஆஜராகும்படி பணித்துள்ளார்[1].

ஓம்காரைய்யா வராவிட்டால் என்னாகும்? அப்துல் சலாம் என்ற அப்துல் நாசர் மௌதனியின் சகோதரர் அப்படியான புகார் ஆகஸ்ட் 30ம் தேதி மனு கொடுக்க, நீதி மன்றம் முன்பு கொல்லம் சூப்பிரென்டென்ட் ஆஃப் போலீஸை 01-09-2010 அன்று ஆஜராகும்படி பணித்தது[2]. அவர் தரப்பில் கேரள அரசு வக்கீல் வந்தாராம். ஆனால், ஓம்காரைய்யா தரப்பில் யாரும் வராதலால், இப்படி சம்மன் அனுப்பியுள்ளாராம்[3].

இமாம் மற்றும் மௌலானா விஷயங்களில் கேரள நீதிமன்றங்களின் இரட்டை வேடங்கள்: பெங்களுரு 2008 குண்டு வெடிப்பு வழக்கில் விசாரித்துவரும், கர்நாடக போலீஸ் அதிகாரியை ஆஜராகும்படி கேரள மாஜிஸ்ட்ரேட் சம்மன் அனுப்பியுள்ளது வேடிக்கையாக உள்ளது. முன்பு டில்லி இமாமை கைது செய்யும்படி மூன்றுக்கும் மேலான நீதிமன்றங்களில் வாரண்டுகள் பிறப்பித்தும், எந்த போலீஸாரும் கைது செய்யவில்லை. அதில் கேரள நீதிமன்றமும் ஒன்று[4]. மாறாக, இப்பொழுது கேரள நீதிமன்றம் உஷாராக வேலை செய்கிறது போலும். அதாவது ஒரு முஸ்லீம் அடிப்படைவாதி, நீதிபதிகளின் கால்களை உடைப்பேன்……………… என்ற ரீதியில் இன்னும் ……………………….பேசினாலும், நீதிபதிகள் மறந்து விடுவர். ஆனால், இன்னொரு முஸ்லீம் விஷயத்திலும் இப்படி நேர்மாறாக சம்மன் அனுப்புவார்களாம்! இப்படி சட்டத்தை உபயோகப் படுத்தினால், சட்டம் எப்படி வேலை செய்ய்ம்? அப்படி வேலை செய்யாவிட்டால், எப்படி மக்கள் சட்டத்ட்கை நம்புவார்கள்?

கேரள போலீஸார் நடித்தது அன்றே தெரிந்தது[5]: கேரள போலீஸார் மௌதனியை கைது செய்யாமல் நாடகம் ஆடி காலம் கழித்ததை[6] அப்பொழுது ஊடககங்களில் எல்லோரும் பார்த்துதான் ரசித்துக் கொண்டிருந்தனர். நாளிதழ்கள் கேரள போலீஸார் வ்வாறு வேண்டுமென்றே காலம் கடத்துவதை எடுத்துக் காட்டினர்[7].


[1] http://www.thehindu.com/news/states/kerala/article607181.ece

[2] http://news.oneindia.in/2010/09/01/madani-case-kerala-court-summons-bangalore-acp.html

[3] http://www.dnaindia.com/india/report_bangalore-acp-summoned-by-kerala-court-for-role-in-abdul-nasser-madani-s-arrest_1431946

[4] கோர்ட் அவமதிப்பு வழக்கில், நீபதிகள் மற்றும் நீதிபதிகளைப் பற்றி கேவலமாக, அவதூறக பேசிய டில்லி இமாமை கைது செய்யும்படிமூன்றுக்கும் மேலான நீதிமன்றங்களில் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த இமாம் கைது செய்யப்படவில்லை. அதாவது நீதி செயல்படவில்லை!

[5] A police team from Karnataka camping in south Kerala town Kollam could not on Wednesday arrest People’s Democratic Party chairman Abdul Naser Madani, an accused in the 2008 Bangalore serial blasts case, with the Kerala Police reportedly going back on its word to provide local support to them.

Indian Express, Kerala ‘delay tactics’ stall Madani arrest, August 12, 2010

http://www.indianexpress.com/news/Kerala–delay-tactics–stall-Madani-arrest/659087

http://timesofindia.indiatimes.com/city/bangalore/Cops-to-wait-for-some-time-to-arrest-Madani/articleshow/6295472.cms

[6] Economic Times, Madani’s arrest delayed, 12 Aug, 2010, 06.19AM IST,ET Bureau

http://economictimes.indiatimes.com/news/politics/nation/Madanis-arrest-delayed/articleshow/6296702.cms

[7] http://timesofindia.indiatimes.com/city/bangalore/Cops-to-wait-for-some-time-to-arrest-Madani/articleshow/6295472.cms

இலவச கலர் “டிவி’ திட்டம் சரியே: சுப்ரீம் கோர்ட் கருத்து: இதிலும் முழு பெஞ்ச் என்ற பிரச்சினை உள்ளது!

ஓகஸ்ட் 17, 2010

இலவச கலர் “டிவி’ திட்டம் சரியே: சுப்ரீம் கோர்ட் கருத்து: இதிலும் முழு பெஞ்ச் என்ற பிரச்சினை உள்ளது!

புதுடில்லி (16-08-2010): பொது மக்களுக்கு இலவசமாக கலர் “டிவி’ வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இங்கேயும் நீதிபதிகள் தங்களது சொந்த கருத்துகளை சட்டரீதியானது போல சொல்வதோ, தமது கருத்தைத் திணிக்கவோ, மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவது போன்றோ பேசுவது தவறானது ஆகும்.

தேர்தல் வெற்றிக்கு அரசு பணம் செலவழிக்கலாமா, கூடாதா என்பது தான் பிரச்சினை: வெற்றி பெறும் பட்சத்தில், எல்லாருக்கும் இலவசமாக கலர் “டிவி’ வழங்கப்படும் என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, அவ்வாறே பல கட்டங்களாக “டிவி’க்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மக்களின் வரிப்பணத்தில் இருந்து கலர் “டிவி’க்கள் வழங்கப்படுவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என, தென்காசியைச் சேர்ந்த வக்கீல் சுப்ரமணியம் பாலாஜி என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மக்களுக்கு இலவசமாக காஸ் அடுப்புகள், வேட்டி, சேலைகள், நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள், பஸ் பாஸ், சைக்கிள்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில் எந்த தவறும் இல்லை; ஆனால், இலவச கலர் “டிவி’யால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே, இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியம் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்குப் போட்டவரே இரண்டுவிதமான கருத்துகளைச் சொல்லியிருப்பதால், உள்நோக்கத்துடன் போட்ட வழக்கா என்று ஆராயவேண்டியுள்ளது: இக்காலத்தில் கட்சி சார்புடையவர்கள் அல்லது அத்தகைய விளம்பரம் வேண்டும் அல்லது உள்ளப் பிரச்சினைகளை திசைத் திருப்பவேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும் அரசாங்கமே வழக்குகளைப் போட வைக்கிறது. அவ்வப்போது ராமஜன்மபூமி வழக்கை எப்படி காங்கிரஸ்காரர்கள் எடுத்துக் கொண்டு நீதித்துறையைக் கேவலப்படுத்திவருகிறார்களோ அதுபோலத்தான். “………………மக்களுக்கு இலவசமாக காஸ் அடுப்புகள், வேட்டி, சேலைகள், நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள், பஸ் பாஸ், சைக்கிள்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில் எந்த தவறும் இல்லை; ஆனால், இலவச கலர் “டிவி’யால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே, இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்“, என கேட்டுக் கொண்டார், என்றுள்ளபோது, அவரது உள் நோக்கம் என்னவென்பது அறியவேண்டியுள்ளது.

நீதிபதிகள் கூறியதாவது: ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டே இலவசமாக கலர் “டிவி’க்கள் வழங்கப்படுகின்றன. மனுதாரரின் வக்கீல், ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று இதை பார்க்கலாம். ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக சைக்கிள்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இருப்பினும், இந்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை, மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டே இலவசமாக கலர் “டிவி’க்கள் வழங்கப்படுகின்றன: இவ்வாறு கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இரண்டு வேளை சாப்பிடுவதற்கு வழியில்லாமல் இருப்பவர்களுக்கு, டிவி பார்ப்பதனால் நலன் ஏற்படுகிறது என்று நீதிபதிகள் நினைப்பது, கருத்தைச் சொல்வது என்னவென்று புரியவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிப்பது என்ரு எடுத்துக் கொண்டால், அது அவர்களது நிலையினையே கேள்விக்குறியாக்கிவிடும்.