Posts Tagged ‘ராஹுல்’

ராபர்டோ ரௌல் கந்தியை அடுத்து, ராபர்ட் வதேரா: இந்தியாவை ஆளப்போவது யார்?

பிப்ரவரி 7, 2012

ராபர்டோ ரௌல் கந்தியை அடுத்து, ராபர்ட் வதேரா: இந்தியாவை ஆளப்போவது யார்?

உபியில் ராபர்‌ட் வதேராவின் வாகன பேரணியை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி, கோவாவிற்கு பணியிடமாற்றம்: உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்‌ட் வதேராவின் வாகன பேரணியை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி, கோவா மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. அமேதி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராபர்‌ட் வதேரா பிரச்சாரம் செய்தார். அப்போது அனுமதிக்கப்பட்ட 10 வண்டிகள் அளவைவிட அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்கள் பேரணியில் கலந்துகொண்டதால் தேர்தல் பார்வையாளர் பவன் சென், ராப‌ர்‌ட் வதேரா ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினார்[1]. இதையடு‌த்து ஐ.ஏ.எஸ் அதிகாரியான பவன் சென், கோவா மாநிலத்திற்கு தேர்தல் அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரியங்காவின் கணவரை தடுத்து நிறுத்தியதால்தான் ஐஏஎ‌ஸ் அ‌திக‌ா‌ரி பவ‌ன்செ‌ன் மா‌‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ல் எ‌ன்ற சர்ச்சை எழுந்த நிலையில், அந்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மறுத்துள்ளார். பவன் சென்னை பணியிடமாற்றம் செய்ய காலையில் முடிவெடுத்துவிட்டதாகவும் அவர், மாலையில்தான் ராப‌ர்‌ட் வதேராவை தடுத்து நிறுத்தியதாகவும் குரேஷி விளக்கமளித்துள்ளார்[2]. அதாவது, இதற்கும்-அதற்கும் சம்பந்தல் இல்லை என்கிறார்! இருப்பினும், உபி எதிர்கட்சிகள் இதை தட்டிக் கேட்டுள்ளன. ஏனெனில், வதேரா சட்டத்தை மீறியது, மீறியது தான், இருப்பினும் அவர் விஷயத்தில் சட்டம் ஒன்றும் செய்யமுடியாது.

பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை – ராகுல் காந்தி: பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்[3]. உத்தர பிரதேசத்தில் வரும் 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது, எனக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப பாபா ராம்தேவ் குண்டர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். உத்தர பிரதேச அரசு மக்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர். பிரதமராக வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். ஆனால் நான் விரும்பவில்லை. கடந்த 22 ஆண்டு காலமாக அவதிப்படும் இந்த மாநில மக்களுக்கு ஒரு விடிவுகாலம் ஏற்படவே நான் பாடுபடுகிறேன். வெளிப்படையாக கூறுவது என்றால் தேர்தல் முடிவுகள் பற்றி எனக்கு கவலை இல்லை. கடந்த 22 ஆண்டுகளாக உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வருவது பெரும் குற்றமாகும். மோசமான ஆட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது நமது கடமையாகும். மாநில மக்கள் மீது ஆட்சியாளர் விளையாட்டு நடத்தி உள்ளனர். மாநிலத்தின் மக்களின் கவுரவத்தை மீட்பதே முக்கிய நோக்கமாகும். இந்த மாநிலத்தில் மக்களின் சக்தியை நான் உணர்ந்து கொண்டுள்ளேன். உத்திரபிரதேசத்தை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். 2012, 14 தேர்தல்களில் இதற்காக முயல்வேன். உத்திரபிரதேசம் மீண்டும் தனது சொந்த காலில் நிற்கும் வரை ஓயமாட்டேன். இதற்கிடையே, ராகுலுக்கு எதிராக தான் யாரையும் ஏவிவிடவில்லை என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். ராகுல் ஏன் கருப்புப் பணத்தை பற்றி பேசவேயில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகன்-மகள்-மறுமகன் கைகளில் இந்தியா: நான் பிரதமராக வர ஆசையில்லை எனும் நேரத்தில், நான் அரசியலுக்கு வருவேன் என்று ராபர்ட் வதேரா கூறியிருப்பது, அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிச்சயமாக, மாமியார் – சோனியா மறுமகனுக்கு ஒரு இடம் உண்டு, என்று ஏற்பாடு செய்துள்ளது போல தெரிகிறது. ரஜினிகாந்த் பாணியில் வதேரா கூறியிருப்பது மற்ற காங்கிரச்காரர்களை கலகத்தில் தள்ளியுள்ளது. நரசிம்ம ராவ் போல ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் என்றமேங்கிக் கொண்டிருந்தவர்களின் கனவுகளும் சிதரியதைப் போன்றாகியது.

எனது கணவர் ஒரு பிசினஸ்மேன், எனவே அரசியலுக்கு வர மாட்டார்[4]: அமேதி: எனது கணவர் ஒரு பிசினஸ்மேன். அதில் அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். எனவே அரசியலுக்கு வர மாட்டார் என்று ராபர்ட் வதேராவின் மனைவியான பிரியங்கா கூறியுள்ளார். ஏற்கனவே சோனியா காந்திக்கு அடுத்து ராகுல் காந்தி என்ற ஒரு ஆர்டரை ஏற்படுத்தி காங்கிரஸார் செயல்பட்டு வருகின்றனர். சிலர் பிரியங்காவை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நானும் அரசியலுக்கு வருவேன் என்று கூறி டென்ஷனை கூட்டியுள்ளார் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா[5]. மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வியாபாரத்தை விடுத்து வருவேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் மூலம் அவர் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இதுகுறித்து பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ராபர்ட்டின் ட்விட்டர் செய்தியை மீடியாக்கள் தவறாக அர்த்தம் எடுத்துக் கொண்டுள்ளன. அவர் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருந்து வருகிறார். அதில் அவர் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். தனது தொழிலை மாற்றும் எண்ணம் அவருக்கு இல்லை. அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றார் பிரியங்கா. இருப்பினும் தற்போது உ.பியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்திக்கு உதவியாக களம் இறங்கியுள்ளார். மேலும் மனைவி பிரியங்காவுக்குத் துணையாகவும் போய்க் கொண்டிருக்கிறார். இருவருக்கும் உதவுவதற்காக தனது மகள் மிரியாவுடன் உ.பியில் முகாமிட்டுள்ளார் ராபர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராபர்ட் வதேராவின் தொழில், செல்வம், அதிகாரம்[6]: தொழிலதிபராக தம்மை வதேரா காட்டிக் கொண்டாலும் சோனியா குடும்பத்து சொத்து விவகாரங்களை வெளிநாடுகளில் கவனித்துக் கொள்பவராக வலம் வருகிறவர். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான “எக்னாமிக் டைம்ஸ்” நாளிதழில் ராபர்ட் வதேராவின் சொத்துக் கணக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ராபர்ட் வதேரா திடீரென உச்சததுக்குச் சென்று விட்டார். ரியல் எஸ்டேட் துறையில் அவர் கொடி கட்டி பறக்கிறார். டி.எல்.எப். நிறுவனத்தில் அவர் பங்குதாரராக உள்ளார். அரியானா முதல் ராஜஸ்தான் வரை அவரது தொழில் சாம்ராஜ்யம் விரிந்து பரந்துள்ளது என அதில் விவரிக்கப்பட்டுள்ளது. அரசியலில் நேரடியாக பங்கேற்காமலேயே அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்வதில் வல்லவர் ராபர்ட் வதேராவை அரசியல் உலகம் ஆச்சரியத்துடன் பார்க்கும் சூழலில் அரசியலுக்கு வருகிறாராம் ராபர்ட்! ராகுல் என்ன நினைக்கிறாரோ? அரசியல் என்பது அரிசிக் கடைக்குப் போவது போலாகி விட்டது. யார் நினைத்தாலும் வரலாம், புகலாம், குதிக்கலாம், குதூகலிக்கலாம் என்றாகி விட்டது. ஆனால், வதேரா அப்படியில்லை. சமயம் பார்த்து அறுவடை என்ன, லாபத்தில் பங்கைப் பெற வல்லவர்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு[7]: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாகக் கூறி வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, “சுவிஸ் நாட்டில் ஒரு வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கு சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு சொந்தமானது என்ற சந்தேகம் உள்ளது. இந்த கணக்கு மீது இவர்கள் இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்ற போதிலும், இந்த சொத்துக்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், இந்த விபரத்தை இருவரும் மறைத்துவிட்டனர். எனவே, சுவிஸ் வங்கியில் உள்ள சம்பந்தப்பட்ட கணக்கு விபரங்களை பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தங்களது நிலையை விளக்கவும், அந்த கணக்கில் உள்ள பணத்தை இந்திய வங்கிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்”, என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்திராவும், சோனியாவும்: சோனியா இந்திரா போலவே நடிக்கிறார், மக்களைக் கவர வேஷம் போடுகிறார், பாவனை செய்கிறார் என்றெல்லாம் ஊடகங்கள் கூறுகின்றன, எடுத்துக் காட்டுகின்றன. அது போல, எதிரிகளை கரம் வைத்து வஞ்சம் தீர்ப்பதில் வல்லவராக இருக்கிறார். வழக்குகள் என்பதும், ஒன்றும் பயந்துவிடவில்லை. சோனியா இதற்கெல்லாம் சளைத்தவர் அல்லர். எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன, ஆனால், எந்த நீதிபதிக்கும் அவற்றை எடுத்து விசாரிக்க தைரியம் இல்லை. நகர்வாலாவிற்கு என்ன நடந்தது என்று அனைவருகும் நினைவஇல் இருக்கும். ஆகையால், தனக்குப் பிறகு யார், இந்தியாவிஒன் அடுத்த பிரதமர் யார் என்பதனை சோனியா தான் தீர்மானிப்பார் என்பதில் எந்த சதேகமுனம் இல்லை. சாகும் வரை தான் காங்கிரஸின் தலைவராக இருந்து கொண்டு, மகன், மகள் மற்றும் மறுமகள் இவர்களுக்கு உரிய பதவிகளைக் கொடுத்து, இந்தியாவை மறைமுகமாக ஆண்டுதான் வருவார்.

வேதபிரகாஷ்

07-02-2012