Posts Tagged ‘மேல் முறையீடு’

குஷ்புவும், கசாப்பும்: இந்தியர்களின் நோக்கு!

மே 7, 2010

குஷ்புவும், கசாப்பும்: இந்தியர்களின் நோக்கு!

குஷ்புவின் கற்புப் பற்றிய வழக்குகளைத் தள்ளூபடி செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட குஷ்புவிற்கு சாதகமாக உச்சநீதி மன்றம் தீர்ப்ப்பு வழங்கியது.

ஓரளவிற்கு இந்தியர்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவித்து, தீர்ப்பு சரியில்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது, மக்கள் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்ப்பு தவறு என்றுதான் பொதுவாகச் சொல்கின்றனர்.

என்னசெய்வது தனக்கு என்று வரும்போதுதான், பிரச்சினையைப் பற்றி கவலைப் படுகின்றனர். ஆமாம், உச்சநீதி மன்ற நீதிபதியும் ஒரு மனிதர் தானே? இல்லை மகள், சகோதரி………..மற்ற பெண்குலத்துடன் பிறந்துள்ளவர் தானே? நாளைக்கு அவர்கள் எல்லோரும் அத்தகைய உரிமையோடு கிளம்பி விட்டால் என்னாவது?

சில தினங்களில், கசாப் என்ற குரூரக்கொலைக்காரன் 166 அப்பாவி மக்களைக் கொன்றதற்கானக் குற்றத்திற்காக மரணதண்டனை அளித்துத் தீர்ப்பு அளிக்கப் படுகிறது.

ஆனால், பொதுவாக இந்திய மக்கள் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை!

இன்னும் சொல்லப்போனால், ஊடகங்களைத் தவிர மற்றவர்கள் அமைதியாக இருந்ததுபோலத் தோன்றியது. அவரவர் தங்களது வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்; டிவி பார்க்கிறார்கள்; கிரிக்கெட் பார்க்கிறார்கள்;………………..அவ்வளவே தான்!

ஆனால், ஊடகங்கள் ஊளையிட ஆரம்பித்துவிட்டன:

கசாப்புக்கு தூக்குத் தண்டனை- நிறைவேற்றத்தான் ஆள் இல்லை!
வெள்ளிக்கிழமை, மே 7, 2010, 10:59[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/07/kasab-death-sentence-hangaman.html

அனுபவம் மிக்க தூக்குப் போடும் ஆசாமிகள் தேவை: கசாப்புக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு தயாராக இருந்தாலும் கூட அவரை தூக்கிலிடுவதற்கு ஆள்தான் இல்லையாம். மிகுந்த அனுபவம் உடையவர்களைத்தான் தூக்குத் தண்டனைக் கைதிகளை தூக்கிலிடுவதற்கு அழைப்பார்கள். ஆனால் நமதுநாட்டில் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு கயிறு மாட்டி விடுவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்துதான் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் சிறைத் துறையினர். இப்போது கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக தோன்றவில்லை. காரணம் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறையிலும் தூக்கு கயிறை மாட்டும் நபர் யாரும் இல்லையாம். மும்பையிலும் கூட யாரும் இல்லையாம்.

தூக்குப் போட யார் வேண்டுமானாலும் வரலாம்: இங்கு மட்டுமில்லை, டெல்லி திகார் சிறையிலும் கூட தூக்கு மாட்ட ஆள் கிடையாது. கடைசியாக திகாரில் 1989ம் ஆண்டுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இங்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களை வரவழைத்துதான் நிறைவேற்றினார்களாம். ஒருவேளை தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆளே கிடைக்காவிட்டால், காவல்துறையைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும், இதைச் செய்ய முன் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என விதிமுறையில் உள்ளதாம்.

தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்-வைஷாலி: இந்நிலையில் அஜ்மல் கசாபுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை அப்சல் குருவுக்கு தாமதிக்கப்படுவது போல் தாமதிக்காமல் உடனே நிறைவேற்ற வேண்டும் என அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட போலீஸ் எஸ்ஐ துக்காராம் ஓம்பலேயின் மகள் வைஷாலி ஓம்பலே கூறியுள்ளார். தெற்கு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று அஜ்மல் கசாபை பிடிக்க முயன்ற போது, கசாப் துப்பாக்கியால் சுட்டதில் துக்காராம் உயிரிழந்தார். ஆனாலும் அவரால் தான் அஜ்மல் கசாப் பிடிபட்டான்.

இந் நிலையில் ஓம்பலேவின் மகள் வைஷாலி கூறுகையில், கசாபுக்கு தூக்கு என்ற தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பின் மூலம் என் தந்தையின் தியாகத்திற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. மும்பை தாக்குதல்களில் தொடர்புடைய பலர் இன்னமும் பாகிஸ்தானில் உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்க இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு வேகமாக செயல்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் தாமதிக்கக் கூடாது. உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும். 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அப்சல் குருவுக்கு தாமதிக்கப்படுவது போல் அல்லாமல் கசாபுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றார் வைஷாலி.

தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்-பாஜக: இந் நிலையில் பாஜக தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகளால் மட்டும் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது. இந்தியாவிலிருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆதரவாளர்கள் துணையுடன்தான் இதை பயங்கரவாதிகள் செய்திருப்பார்கள். எனவே, இந்த தாக்குதலுக்கு காரணமான அனைத்துக் குற்றவாளிகளையும், இந்த சதியின் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கு முடிவு கட்ட முடியும். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நடந்துள்ள முழு சதியையும் முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அப்சல் குரு தூக்கு தண்டனை பெற்றும், இன்னும் அத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் கசாபும் நடத்தப்பட்டால், சட்டம், நீதித்துறை, அரசு ஆகியவை கேலிக்குரியதாகிவிடும். எனவே, மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். இதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச நிம்மதியைத் தரும். அதேநேரத்தில் இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழும் நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான எம்.பிக்களை கொல்ல முயன்ற அப்சல் குருவின் தூக்கு தண்டனையையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மரண தண்டனை-காத்திருப்போர் பட்டியலில் 30வது இடத்தில் கசாப்
வியாழக்கிழமை, மே 6, 2010, 15:16[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/05/06/kasab-afsal-guru-mumbai-attack-parliament.html

சாவிலும் சீனியாரிடி பார்க்கும் நீதிமான்கள்: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கசாப்புக்கு முன்னதாக 29 பேர் மரண தண்டனை விதித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பிற நாடுகளை எடுத்துக் கொண்டால், மரண தண்டனை விதிக்கப்பட்டால் உடனே அதை நிறைவேற்றி விடுவார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. மிக மிக அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன் பிறகும் கூட குடியரசுத் தலைவரிடம் கருணை காட்டுமாறு கோரி விண்ணப்பிக்கலாம். அந்த மனு மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுத்து அறிவித்த பிறகுதான் இந்த தண்டனையில் ஒரு முடிவுக்கு வர முடியும்.

பிரதிமா பாட்டில் ஒரு பொம்மை, அதெப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறது? தற்போது குடியரசுத் தலைவர் முன்பு 29 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றின் மீது முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு எதுவும் இல்லை. அவராக பார்த்து எப்போது முடிவெடுக்கிறாரோ அப்போதுதான் அதற்கு விடிவு காலம் பிறக்கும். கடந்த 2001ம் ஆண்டு 33 பேருக்கும், 2002ல் 23 பேருக்கும், 2005ல் 77 பேருக்கும், 2006ல் 40 பேருக்கும், 2007ம் ஆண்டு 100 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் அப்சல் குரு, சுஷில் சர்மா, அனந்த் மோகன், சந்தோஷ் குமார் சிங் ஆகியோர். 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சிக்கி அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2001ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவி பிரியதர்ஷினி மட்டூவை கற்பழித்துக் கொன்றதற்காக சந்தோஷ்குமார் சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல பீகாரில் முன்னாள் எம்.பி. அனந்த் மோகன் ஐஏஎஸ் அதிகாரியைக் கொலை செய்த வழக்கிலும், நைனா சஹானியைக் கொலை செய்த வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுஷில் சர்மாவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொலை செய்யலாம், ஆனால், கொலைகாரர்களுக்கு மட்டும் தண்டனை தாமதப் படுத்தப் படும்! கடந்த 2001ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரே ஒருவர்தான் தூக்கில் போடப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிக்கிய தனஞ்செய் சாட்டர்ஜி என்பவர் 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி தூக்கில் போடப்பட்டார். அப்சல் குருவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி பாஜக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில் தற்போது மரண தண்டனையை எதிர்நோக்குவோரின் பட்டியலில் கசாப் சேர்ந்துள்ளான்.