Posts Tagged ‘விலை’

சட்டங்களின் பெருக்கம், அதனால் உருவாகும் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள்!

ஜூன் 2, 2016

சட்டங்களின் பெருக்கம், அதனால் உருவாகும் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள்!

indian advocates Act and professional ethics 1961-தமிழ் திருத்தம்

வக்கீல் தொழிலுக்கு தடைவிதிக்கும் சரத்து[1]: மேற்சொன்ன செயல்களில் ஈடுபடும் வக்கீல்கள், ஐகோர்ட்டு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கீழ் கோர்ட்டுகளில் வக்கீல் தொழில் செய்ய நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடைவிதிக்கப்படும். இதன்பின்னர், நடவடிக்கைக்கு உள்ளான வக்கீல் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைப்பார்.  இவ்வாறு வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-பி வழிவகை செய்கிறது. அதேபோல, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுகளில், மேற்சொன்ன குற்றச்செயல்களை வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல் தொழில் செய்ய சம்பந்தப்பட்ட வக்கீல்களுக்கு தடை விதித்து, மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பிக்கலாம்[2].

indian advocates Act and professional ethics 1961-தமிழ்குற்றஞ்சாட்டி தண்டிக்கும் முன்பு விளக்கம் கேட்கவேண்டும்[3]: சார்பு நீதிமன்றங்கள், முன்சீப் அல்லது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் மேற்சொன்ன செயல்களில் வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த சம்பவம் குறித்து அறிக்கையை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு நீதிபதி அனுப்பி வைக்கவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அந்த வக்கீல் ஆஜராக தற்காலிக தடைவிதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிடவேண்டும்.  அதன்பின்னர், சம்பந்தப்பட்ட வக்கீலுக்கு, அவர் செய்த குற்றச்செயல் குறித்து அவருக்கு தெரிவித்து, அவரது விளக்கத்தை கேட்டு சம்மன் அனுப்பவேண்டும். நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தரமாக தடைவிதித்து இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அவரது கருத்தை கேட்பது அவசியமாகும்.

Advocates dharna and burning committee report 2003திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகள் அமலுக்கு வந்தது: அதன்பின்னர், அந்த வக்கீல் செய்ய குற்றச்செயல்களில் தன்மைக்கு ஏற்ப, ஐகோர்ட்டு உட்பட மாவட்ட கோர்ட்டுகளில் ஆஜராக நிரந்தர தடைவிதித்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிடலாம். இந்த புதிய சட்டத்திருத்தம், அறிவிக்கை வெளியிட்ட நாள் முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன. இந்த அறிவிக்கை கடந்த 20-ந் தேதி தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த புதிய சட்டத்திருத்தம் கடந்த 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.  மேலும், இந்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு தன்னுடைய அரசிதழிலும் வெளியிட்டுள்ளது[4].

Chandru, Gandhi, Paul Kanakaraj, Wilson - Adocates Act, 1961திருத்தப்பட்ட ஆட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆதரவுஎதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் பரவலாகக் காணப்படுகிறது. இது குறித்து நீதித் துறையைச் சேர்ந்த சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு[5]:

கே.சந்துரு (உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி)[6]: வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34-ன்படி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களின் நடத்தை விதிகளை வகுக்கலாம் என்று உள்ளது. டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர், சாட்சிகளை பணம் கொடுத்து மாற்ற முற்படுகையில் தெஹெல்கா ஊடகம் அதை ஆவணப்படுத்தி வெளியிட்டது. அதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 34-ல் போதுமான விதிகளை வகுக்கவில்லை. எனவே, இரண்டு மாத காலத்துக்குள் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என 2009-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதே, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அப்போது விதிகள் வகுக்கப்படவில்லை. இப்போது தான் விதிமுறைகளை வகுத்துள்ளனர். இந்த விதிமுறைகள் தற்போது தேவையான ஒன்றுதான்.

A policeman detains a bleeding lawyer-a clash between lawyers and police . AP Photoஆர்.காந்தி, (உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்): அனைத்து நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர்களை தடை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டால், வழக்கறிஞர்களின் தன்னம்பிக்கை, தைரியம் போய்விடும். அவர்களால் ஒருவார்த்தைகூட எதிர்த்துப் பேச முடியாது. மேலும், கீழமை நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்படும்போது பார் கவுன்சிலுக்கு வேலையே இல்லாமல் போய்விடும். பார்கவுன்சில்தான் தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டம் இருக்கும்போது, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது வழக்கறிஞர்களை மிரட்டுவது போலாகும். சில நேரங்களில் சில வழக்குகளில் வழக்கறிஞர்கள் கடுமையாக வாதிட வேண்டியிருக்கும். அதற்காக, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், எல்லா நிலையிலும் வழக்கறிஞர்கள் பயப்பட வேண்டிய சூழல் உருவாகும். இது நல்லதுக்கல்ல. வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் செய்துள்ள திருத்தங் கள் வழக்கறிஞர்களை அச்சுறுத்துவதாகவே உள்ளது.

Policemen chase the advocates after they set fire the police station inside the Madras High Court

பி.வில்சன் (முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்): வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் திருத்தம் செய்துள்ள விதிகளில் நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரி ஆகியோருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தினாலோ; நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை சுமத்தி மேல் நீதிமன்றங்களிடம் புகார் அளித்தாலோ உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியும் என்று உள்ளது. இந்த இரண்டு விதிமுறைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற விதிகள் அனைத்தும் தேவையான ஒன்றுதான்.

Policeman drag a motorbike to safety - advocates-police clash-AP Photoஆர்.சி.பால்கனகராஜ், (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்): வழக்கறிஞர் மீதான புகார் மீது உரிய நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு முடிந்தவரை சம்மன் தர வேண்டும். நேரில் ஆஜரான பிறகு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வேண்டும். அதன்பிறகு புகார் நிரூபிக்கப்பட்டால் அந்த வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாக தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடை விதிப்பதா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு நீதிபதி பணம் வாங்கிக் கொண்டுதான் உத்தரவு பிறப்பிக்கிறார் என்று ஆதாரத்துடன்தான் வழக்கறிஞர் புகார் தர வேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது. நீதிபதி பணம் வாங்கினால் அதை புகைப்படம் எடுத்தா நாங்கள் அனுப்ப முடியும். அதுதொடர்பாக வழக்கறிஞர் புகார் கொடுத்தால் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரத்துடன்தான் தர வேண்டும். இல்லாவிட்டால் புகார் கொடுத்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்க்கிறோம். அதுபோல நீதிமன்ற வளாகத்திலே போராட்டம் செய்யக்கூடாது என்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

Policemen chase the advocates after they set fire the police station inside the Madras High Court. PTI Photo R Senthil Kumarகே.சக்திவேல், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்[7]: புதிய திருத்தங்கள் தேவையற்றது. அரசியலமைப்பு சட்டத்தில், போராடுவதற்கான உரிமை வழங்கப் பட்டுள்ளது. தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தில், அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்கள், பார் கவுன்சிலுக்கு உள்ள அதிகாரங்களை பறிப்பதாக உள்ளன. நீதித் துறையில் இருப்பவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகள் அனுப்பக் கூடாது என்பது, ஊழலுக்கு தான் வழிவகுக்கும்[8].

Justice compromised, politicised, soldஅதிக சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் என்றால் நீதித்துறை மோசமாக உள்ளது என்பதனைக் காட்டுகிறது: சட்டம் என்பது நீதி வல்லுனர்களால் அதிகமாக யோசித்து, தீர அலசிப் பார்த்து, சட்டமுன்னோடிகளைக் கருத்திற் கொண்டு, எல்லாவற்றையும் தன்னுள் அடக்கும் வரையில் உருவாக்கப்பட்டுகிறது. இதனால், ஆரம்பகால சட்டங்கள் எல்லோருக்கும், எல்லா காலங்களிலும், எல்லா நிலைகளிலும் பொறுந்தியிருந்தது. ஆனால், நவீனகாலங்களில் வந்த சட்டங்கள், அவற்றைத் தயாரித்தர்களின் பாரபட்சம், பட்சதாபம், சுயநலம், ஓரவஞ்சனை, முதலிய மனச்சாதங்களுடன் உருவானதால், அவற்றில் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள், எப்படியும் விளக்கம் கொடுக்கலாம் போன்ற ரீதியில் சட்ட சரத்துகள், பிரிவுகள், உட்பிரிவுகள் முதலியவை அதிகமாக இருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும் குறிபிட்டு இருக்கும், தேவையென்றால், சில வார்த்தைக்களுக்கு அர்த்தம் இதுதான் என்ற வரையறையும் இருக்கும், என்ற நிலையும் வந்துவிட்டது. ஏனெனில், ஒரே செயல் ஒரு சட்டதின் கீழ் செய்தால் குற்றம், இன்னொரு சட்டத்தின் கீழ் செய்தால் குற்றமில்லை என்ற சாத்தியத்தையும் ஏற்படுத்தி விட்டனர். ஆனால், சட்டங்கள் அதிகமாகின்றன எனும்போது, நீதி பகுக்கப்படுகிறது, நீர்க்கப்படுகிறது, அநீதியாகிறது என்றாகிறது மேலும், புதிய சட்டம் அமூலுக்கு வரும்போது, அவை அந்தந்த தேதிகளிலிருந்து செல்லுபடியாகும் என்ற நிலையில், முந்தைய தேதிகளில் செய்த குற்றங்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். சட்டம், நீதித் துறைகளில் அதானால் தான் நியாயமானவர்கள் இருக்க வேண்டும், இல்லையென்றால், முரண்பாடுகளோடு தான் அத்துறைகள் இருக்கும். மக்களுக்கு சமநீதி கிடைக்காது.

 

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] மாலைமலர், வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, பதிவு: மே 28, 2016 04:33, மாற்றம்: மே 28, 2016 06:01

[2] http://www.maalaimalar.com/News/District/2016/05/28043325/1014768/The-Madras-High-Court-has-brought-in-stringent-disciplinary.vpf

[3] விகடன், ஒழுங்கீன வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை! உயர் நீதிமன்றம் அறிவிப்பு, Posted Date : 09:14 (28/05/2016).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/64636-tamil-nadu-courts-get-sweeping-power-to-advocates.art

[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8662831.ece

[6] தமிழ்.இந்து, வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா?ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு குரல்களும், Published: May 29, 2016 09:24 ISTUpdated: May 29, 2016 09:24 IST

[7] தினமலர், வக்கீல்கள் போராரட்டம், புதிய சட்டம், பதிவு செய்த நாள் : மே 27,2016,23:00 IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1530475