Archive for the ‘வழக்கை முடிக்க லஞ்சம்’ Category

சட்டங்களின் பெருக்கம், அதனால் உருவாகும் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள்!

ஜூன் 2, 2016

சட்டங்களின் பெருக்கம், அதனால் உருவாகும் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள்!

indian advocates Act and professional ethics 1961-தமிழ் திருத்தம்

வக்கீல் தொழிலுக்கு தடைவிதிக்கும் சரத்து[1]: மேற்சொன்ன செயல்களில் ஈடுபடும் வக்கீல்கள், ஐகோர்ட்டு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கீழ் கோர்ட்டுகளில் வக்கீல் தொழில் செய்ய நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடைவிதிக்கப்படும். இதன்பின்னர், நடவடிக்கைக்கு உள்ளான வக்கீல் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைப்பார்.  இவ்வாறு வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-பி வழிவகை செய்கிறது. அதேபோல, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுகளில், மேற்சொன்ன குற்றச்செயல்களை வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல் தொழில் செய்ய சம்பந்தப்பட்ட வக்கீல்களுக்கு தடை விதித்து, மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பிக்கலாம்[2].

indian advocates Act and professional ethics 1961-தமிழ்குற்றஞ்சாட்டி தண்டிக்கும் முன்பு விளக்கம் கேட்கவேண்டும்[3]: சார்பு நீதிமன்றங்கள், முன்சீப் அல்லது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் மேற்சொன்ன செயல்களில் வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த சம்பவம் குறித்து அறிக்கையை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு நீதிபதி அனுப்பி வைக்கவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அந்த வக்கீல் ஆஜராக தற்காலிக தடைவிதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிடவேண்டும்.  அதன்பின்னர், சம்பந்தப்பட்ட வக்கீலுக்கு, அவர் செய்த குற்றச்செயல் குறித்து அவருக்கு தெரிவித்து, அவரது விளக்கத்தை கேட்டு சம்மன் அனுப்பவேண்டும். நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தரமாக தடைவிதித்து இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அவரது கருத்தை கேட்பது அவசியமாகும்.

Advocates dharna and burning committee report 2003திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகள் அமலுக்கு வந்தது: அதன்பின்னர், அந்த வக்கீல் செய்ய குற்றச்செயல்களில் தன்மைக்கு ஏற்ப, ஐகோர்ட்டு உட்பட மாவட்ட கோர்ட்டுகளில் ஆஜராக நிரந்தர தடைவிதித்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிடலாம். இந்த புதிய சட்டத்திருத்தம், அறிவிக்கை வெளியிட்ட நாள் முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன. இந்த அறிவிக்கை கடந்த 20-ந் தேதி தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த புதிய சட்டத்திருத்தம் கடந்த 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.  மேலும், இந்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு தன்னுடைய அரசிதழிலும் வெளியிட்டுள்ளது[4].

Chandru, Gandhi, Paul Kanakaraj, Wilson - Adocates Act, 1961திருத்தப்பட்ட ஆட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆதரவுஎதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் பரவலாகக் காணப்படுகிறது. இது குறித்து நீதித் துறையைச் சேர்ந்த சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு[5]:

கே.சந்துரு (உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி)[6]: வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34-ன்படி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களின் நடத்தை விதிகளை வகுக்கலாம் என்று உள்ளது. டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர், சாட்சிகளை பணம் கொடுத்து மாற்ற முற்படுகையில் தெஹெல்கா ஊடகம் அதை ஆவணப்படுத்தி வெளியிட்டது. அதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 34-ல் போதுமான விதிகளை வகுக்கவில்லை. எனவே, இரண்டு மாத காலத்துக்குள் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என 2009-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதே, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அப்போது விதிகள் வகுக்கப்படவில்லை. இப்போது தான் விதிமுறைகளை வகுத்துள்ளனர். இந்த விதிமுறைகள் தற்போது தேவையான ஒன்றுதான்.

A policeman detains a bleeding lawyer-a clash between lawyers and police . AP Photoஆர்.காந்தி, (உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்): அனைத்து நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர்களை தடை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டால், வழக்கறிஞர்களின் தன்னம்பிக்கை, தைரியம் போய்விடும். அவர்களால் ஒருவார்த்தைகூட எதிர்த்துப் பேச முடியாது. மேலும், கீழமை நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்படும்போது பார் கவுன்சிலுக்கு வேலையே இல்லாமல் போய்விடும். பார்கவுன்சில்தான் தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டம் இருக்கும்போது, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது வழக்கறிஞர்களை மிரட்டுவது போலாகும். சில நேரங்களில் சில வழக்குகளில் வழக்கறிஞர்கள் கடுமையாக வாதிட வேண்டியிருக்கும். அதற்காக, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், எல்லா நிலையிலும் வழக்கறிஞர்கள் பயப்பட வேண்டிய சூழல் உருவாகும். இது நல்லதுக்கல்ல. வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் செய்துள்ள திருத்தங் கள் வழக்கறிஞர்களை அச்சுறுத்துவதாகவே உள்ளது.

Policemen chase the advocates after they set fire the police station inside the Madras High Court

பி.வில்சன் (முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்): வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் திருத்தம் செய்துள்ள விதிகளில் நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரி ஆகியோருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தினாலோ; நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை சுமத்தி மேல் நீதிமன்றங்களிடம் புகார் அளித்தாலோ உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியும் என்று உள்ளது. இந்த இரண்டு விதிமுறைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற விதிகள் அனைத்தும் தேவையான ஒன்றுதான்.

Policeman drag a motorbike to safety - advocates-police clash-AP Photoஆர்.சி.பால்கனகராஜ், (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்): வழக்கறிஞர் மீதான புகார் மீது உரிய நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு முடிந்தவரை சம்மன் தர வேண்டும். நேரில் ஆஜரான பிறகு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வேண்டும். அதன்பிறகு புகார் நிரூபிக்கப்பட்டால் அந்த வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாக தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடை விதிப்பதா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு நீதிபதி பணம் வாங்கிக் கொண்டுதான் உத்தரவு பிறப்பிக்கிறார் என்று ஆதாரத்துடன்தான் வழக்கறிஞர் புகார் தர வேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது. நீதிபதி பணம் வாங்கினால் அதை புகைப்படம் எடுத்தா நாங்கள் அனுப்ப முடியும். அதுதொடர்பாக வழக்கறிஞர் புகார் கொடுத்தால் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரத்துடன்தான் தர வேண்டும். இல்லாவிட்டால் புகார் கொடுத்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்க்கிறோம். அதுபோல நீதிமன்ற வளாகத்திலே போராட்டம் செய்யக்கூடாது என்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

Policemen chase the advocates after they set fire the police station inside the Madras High Court. PTI Photo R Senthil Kumarகே.சக்திவேல், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்[7]: புதிய திருத்தங்கள் தேவையற்றது. அரசியலமைப்பு சட்டத்தில், போராடுவதற்கான உரிமை வழங்கப் பட்டுள்ளது. தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தில், அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்கள், பார் கவுன்சிலுக்கு உள்ள அதிகாரங்களை பறிப்பதாக உள்ளன. நீதித் துறையில் இருப்பவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகள் அனுப்பக் கூடாது என்பது, ஊழலுக்கு தான் வழிவகுக்கும்[8].

Justice compromised, politicised, soldஅதிக சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் என்றால் நீதித்துறை மோசமாக உள்ளது என்பதனைக் காட்டுகிறது: சட்டம் என்பது நீதி வல்லுனர்களால் அதிகமாக யோசித்து, தீர அலசிப் பார்த்து, சட்டமுன்னோடிகளைக் கருத்திற் கொண்டு, எல்லாவற்றையும் தன்னுள் அடக்கும் வரையில் உருவாக்கப்பட்டுகிறது. இதனால், ஆரம்பகால சட்டங்கள் எல்லோருக்கும், எல்லா காலங்களிலும், எல்லா நிலைகளிலும் பொறுந்தியிருந்தது. ஆனால், நவீனகாலங்களில் வந்த சட்டங்கள், அவற்றைத் தயாரித்தர்களின் பாரபட்சம், பட்சதாபம், சுயநலம், ஓரவஞ்சனை, முதலிய மனச்சாதங்களுடன் உருவானதால், அவற்றில் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள், எப்படியும் விளக்கம் கொடுக்கலாம் போன்ற ரீதியில் சட்ட சரத்துகள், பிரிவுகள், உட்பிரிவுகள் முதலியவை அதிகமாக இருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும் குறிபிட்டு இருக்கும், தேவையென்றால், சில வார்த்தைக்களுக்கு அர்த்தம் இதுதான் என்ற வரையறையும் இருக்கும், என்ற நிலையும் வந்துவிட்டது. ஏனெனில், ஒரே செயல் ஒரு சட்டதின் கீழ் செய்தால் குற்றம், இன்னொரு சட்டத்தின் கீழ் செய்தால் குற்றமில்லை என்ற சாத்தியத்தையும் ஏற்படுத்தி விட்டனர். ஆனால், சட்டங்கள் அதிகமாகின்றன எனும்போது, நீதி பகுக்கப்படுகிறது, நீர்க்கப்படுகிறது, அநீதியாகிறது என்றாகிறது மேலும், புதிய சட்டம் அமூலுக்கு வரும்போது, அவை அந்தந்த தேதிகளிலிருந்து செல்லுபடியாகும் என்ற நிலையில், முந்தைய தேதிகளில் செய்த குற்றங்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். சட்டம், நீதித் துறைகளில் அதானால் தான் நியாயமானவர்கள் இருக்க வேண்டும், இல்லையென்றால், முரண்பாடுகளோடு தான் அத்துறைகள் இருக்கும். மக்களுக்கு சமநீதி கிடைக்காது.

 

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] மாலைமலர், வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, பதிவு: மே 28, 2016 04:33, மாற்றம்: மே 28, 2016 06:01

[2] http://www.maalaimalar.com/News/District/2016/05/28043325/1014768/The-Madras-High-Court-has-brought-in-stringent-disciplinary.vpf

[3] விகடன், ஒழுங்கீன வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை! உயர் நீதிமன்றம் அறிவிப்பு, Posted Date : 09:14 (28/05/2016).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/64636-tamil-nadu-courts-get-sweeping-power-to-advocates.art

[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8662831.ece

[6] தமிழ்.இந்து, வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா?ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு குரல்களும், Published: May 29, 2016 09:24 ISTUpdated: May 29, 2016 09:24 IST

[7] தினமலர், வக்கீல்கள் போராரட்டம், புதிய சட்டம், பதிவு செய்த நாள் : மே 27,2016,23:00 IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1530475

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

மார்ச் 17, 2012

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?


லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்

Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.

Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani) 

3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th 

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

  • ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
  • அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
  • அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
  • முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
  • கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
  • ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
  • இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?

திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –

  1. நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
  2. முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
  3. தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
  4. உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
  5. அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.

இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!

வேதபிரகாஷ்

16-03-2012


 


[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.

குஷ்பு, சுகாசினி வழக்கை காட்டி ஐகோர்ட்டில் நித்யானந்தா மனு!

ஜூலை 15, 2010

குஷ்பு, சுகாசினி வழக்கை காட்டி ஐகோர்ட்டில் நித்யானந்தா மனு!

கடந்த ஆண்டுகளில் தெரிந்தோ, தெரியாமலோ நீதிபதிகள் பிச்சினைகள் பலவாக இருந்தாலும், தனிநபர் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக, ஒன்று சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது இல்லை, அந்த தனிநபரின் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது என்றநிலயில் செய்பட்டுவருகிறார்கள். இது எல்லாநிலைகளிலும் சரிவருமா என்று தெரியவில்லை. இந்நிலையில், நித்யானந்தாவே அத்தகைய நிலையை சாதகமாக குறிப்பிட்டு, தனக்கு சட்டத்தீர்வு தீரவேண்டும் என்று கோரியிருப்பது, ப்றுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகிறது.

சென்னை : நடிகைகள் குஷ்பு, சுகாசினி தொடர்பான வழக்குகளை சுட்டிக்காட்டி, சென் னை ஐகோர்ட்டில் சுவாமி நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விவரம்: “கடந்த மார்ச் 2ம் தேதி தனியார், “டிவி’ ஒன்றில் என்னையும் என் பக்தையையும் (நடிகை ரஞ்சிதா) இணைத்து, வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதைத் தொ டர்ந்து மலிவான விளம்பர நோக்கில் பல்வேறு தரப்பினரும், என் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர். “ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தக் கூடாது’ என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகை குஷ்பு மீது ஒரே பிரச்னைக்காக பல்வேறு வழக்குகள் தொடர்ந்த போது, இது சுட்டிக்காட்டப்பட்டது. நடிகை சுகாசினி மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது, சுப்ரீம் கோர்ட் உத்தரவைக் காட்டி, சென்னை ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்தது. அதேபோல், என் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது: கடந்த மார்ச் மாதம் கார்த்திகேயன் என்பவர், என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் மீது சி.பி.ஐ., உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மனு, நடைமுறைக்கு சரியானது அல்ல. குஷ்பு, சுகாசினி வழக்கில் கூறியது போல், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. எந்த முடிவை எடுத்தாலும், என்னையும் சேர்த்துக் கொண்டு, என் கருத்தை கேட்க வேண்டும்”, இவ்வாறு நித்யானந்தா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்: இம்மனு மீதான விசாரணை, ஐகோர்ட் நீதிபதி வாசுகி முன்னிலையில் வந்தது. நித்யானந்தாவின் மனுவை அவர் ஏற்றுக் கொண்டு, “இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்‘ என, உத்தரவிட்டார். நித்யானந்தா தொடர்பான அனைத்து வழக்குகளும் கர்நாடக அரசுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு தவிர, புதுச்சேரி உருளையன்பேட்டையில் ஒரு வழக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கை முடிக்க ரூ. 5 கோடி: அமர் சிங் கிளப்பிய புகார்!

திசெம்பர் 23, 2009
வழக்கை முடிக்க ரூ. 5 கோடி: அமர் சிங் கிளப்பிய புகார்
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4767

Court news detailபுதுடில்லி: “சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள, முலாயம் சிங் யாதவிற்கு எதிரான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சாதகமான தீர்ப்பு வழங்க, பரூன் குமார் வர்மா ஐந்து கோடி ரூபாய் கேட்டார்’ என, அக்கட்சியைச் சேர்ந்த அமர் சிங், டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் நேற்று தெரிவித்தார்.சமாஜ்வாடி பொதுச் செயலர் அமர் சிங், அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒன்றில், பரூன் குமார் வர்மா என்பவர், தன்னிடம் பணம் பறிக்க முயல்வதாக, 2007ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக, டில்லி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் ஆஜரான அமர் சிங் கூறியதாவது: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு எதிராக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பரூன் குமார் வர்மா என்பவர் என்னை சந்தித்தார். அவர் தான், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மற்றும் அப்போதைய சட்டத்துறை அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் ஆகியோரை தனக்கு நன்கு தெரியும் என்று கூறினார்.தனக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்தால், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மருமகன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள முலாயம் சிங் யாதவிற்கு எதிரான வழக்கில், சாதகமான தீர்ப்பு வழங்க வைப்பதாகவும் தெரிவித்தார். அவரது நம்பகத்தன்மை குறித்து சந்தேகமடைந்த நான், டில்லி போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் பரூன் குமார் வர்மாவை கைது செய்தனர்.இவ்வாறு அமர் சிங் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அமர் சிங்கை, வர்மா சார்பில் ஆஜரான வக்கீல், அனூப் குமார் சர்மா குறுக்கு விசாரணை செய்தார். இந்த குறுக்கு விசாரணையின் போது, அமர் சிங் பலமுறை கோபமடைந்தார்.இதற்கிடையில், இவ்வழக்கு தொடர்பாக, வாக்குமூலம் அளிக்க, விசாரணை நடந்த போது, அமர் சிங் ஆஜராகாததால், அவருக்கு எதிராக கடந்த மாதம் 3ம் தேதி வழங்கப் பட்ட, வாரன்டை கோர்ட் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.