Archive for the ‘வழக்கறிஞர் சட்டம்’ Category

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

திசெம்பர் 27, 2021

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

கொரோனா காலமும், காணோலி விசாரணையும், நீதிமன்றங்களும்: காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2021 கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியபோது முதலில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே, ஊரடங்கில் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நீதிமன்றங்கள் தொடங்கி பள்ளிகள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அந்த சமயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஏராளமாக இருந்தால், விரைந்து முடிக்க காணொளி காட்சி முறை கொண்டு வந்தாக வேண்டிய சூழல் இருந்தது[2].

கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை: கொரோனா தொற்று ஆரம்பித்த சமயத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடியாகவும் விசாரணை நடைபெறுகிறது, அதே நேரத்தில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது. அனைத்து வழக்கு விசாரணையும் இப்படியே நடந்து வருகிறது. சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சக வழக்கறிஞர்கள் மட்டுமின்றி நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சகா வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியது.

செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்: இந்த விவகாரம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்[3]. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், எனவே வழக்கு விசாரணையில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[4]. நிச்சயமாக, அந்த வீடியோ பார்த்தவர்கள், அந்த வக்கீலின், அட்வகேட்டின், வழக்கறிஞரின் நடவடிக்கை தலைகுனிய வைக்கும். மேலும், அந்த பெண் ஏன் அவ்வாறு அத்தகைய கேவலமான செயலுக்கு உட்படுத்தப் பட்டாள் என்றும் தெரியவில்லை. கருப்பு நிற அங்கி முதலியவற்றைப் பார்க்கும் போது, அப்பெண்ணும் ஒரு வழக்கறிஞரா, ஜூனியரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஒருவேளை, பெண்ணின் அடையாளம் தெரியக் கூடாது என்ற ரீதியில், அவை தெரிவிக்கப் படவில்லை போலும்.

தானாகவே, சொந்தமாகவே, கேட்காமலே (suo moto) வழக்காக எடுத்துக் கொண்டது: இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்[5]. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.டி. சந்தான கிருஷ்ணன் “மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் விர்ச்சுவல் மீட்டிங்கில் கலந்துகொள்ளும் போது அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக” அவரை சஸ்பெண்ட் செய்தது[6]. மிகவும் மன வருத்தம் அளிப்பதாக இருக்கிறது[7], இது போன்ற சம்பவங்களைக் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது எனத் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்[8]. சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்[9]. இதனை சூ மோட்டோ வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்[10].

வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது: நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது[11]. முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது, இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ், “இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம்” என்றும் “பதவியை ராஜினாமா செய்து விடலாமா?” என்று யோசித்ததாகவும் வேதனை தெரிவித்தார்[12]. நிச்சயமாக, அந்த நீதிபதி அந்த அளவுக்கு வருத்தமடைந்திருப்பது தெரிகிறது. நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் காக்கக் கூடிய அத்தொழிலை செய்பவர்கள், இவ்வாறு ஈடுபட்டது, மிகக் கேவலமாகும். ஏற்கெனவே வக்கீல்களைப் பற்றி பலவிதமான செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் எப்படி வழக்கறிஞர்கள் ஆனார்கள் என்ற திகைப்பும் ஏற்படுகின்றன. அந்நிலையில், வீடியோவில் சிக்கிக் கொண்ட அந்த “பலான / செக்ஸ் வழக்கறிஞர்” அத்தொழிலுக்கு அவமானம் தான்.

நீதி, நேர்மை, நியாயம் காக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் இத்தகைய குற்றங்கள் ஏன் தொடர்ந்து நடந்து வருகின்றன, நீதி, நேர்மை, நியாயம்….போன்றவை ஏன் மதிக்கப் படுவதில்லை, மாறாக ஏளனப் படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக சினிமா, டிவி சீரியல்களில் இவை கிள்ளுக்கீறையாக மதிக்கப் படுகின்றன. நகைச்சுவை போர்வையில் ஆபாசப் படுத்தப் படுகின்றன. அதுபோலவே, அத்துறையைச் சேர்ந்தவர்களும் இழிவு படுத்தப் படுகின்றனர். சமீபகாலங்களில் நீதிபதிகளின் தீர்ப்புகளும், நீதிபதிகளும் விமர்சிக்கப் படுகின்றனர். நிச்சயமாக, நீதிபதி நியமனங்களில் அரசியல், ஜாதி, மதம் போன்ற காரணிகள் செயல்படுகின்றன. ஏனெனில், அவ்விதமாக நியமனங்கள் நடக்கின்றன. நீதிமன்றங்களிலும் கட்சிக்கு ஒரு சங்கம் செயல்பட்டு வருகின்றது. அதுபோல, ஜாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன. பிறகு பாரபட்சம், ஒருதலைப்பட்சம், பாகுபாடு, வித்தியாசம், வேறுபாடு, அரசியல் அழுத்தம் போன்றவையும் இருக்கத்தான் செய்யும். அவற்றையும் மீறி தீர்ப்புகள் கொடுக்கப் படவேண்டும். ஆகவே, நிச்சயமாக அத்தொழிலில் இருப்பவர்கள் சுத்தமாகவும், நேர்மையாகவும், யோக்கியமானவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயம், அவசியம் மற்றும் அத்தியாவசியம் உள்ளது. அப்பொழுது தான், அவர்கள் சட்டமீறல்கள் செய்யாமலும், குற்றங்களில் ஈடுபடாமலும் இருக்க முடியும்.

© வேதபிரகாஷ்

27-12-2021


[1] ஏ.பிபி.லைஃப், நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்: வழக்கறிஞர் சஸ்பெண்ட்சிபிசிஐடி வழக்கு பதிவு!, By: ABP NADU | Updated : 22 Dec 2021 11:34 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/chennai/cb-cid-to-probe-lawyer-s-act-on-camera-31615

[3] NEWS18 TAMIL, மிகப்பெரிய அசிங்கம்.. ராஜினாமா செய்ய நினைத்தேன்உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை, First published: December 23, 2021, 22:40 IS; LAST UPDATED : DECEMBER 23, 2021, 22:40 IST.

https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[5] புதியத்தலைமுறை, வழக்கறிஞரின் ஒழுங்கீனத்தால் பதவியை ராஜினாமா செய்ய நினைத்தேன்நீதிபதி வேதனை, kaleelrahman, தமிழ்நாடு, Published :23,Dec 2021 03:38 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/125450/Attorneys-Disorder-Thought-to-resign-Judge-tormented

[7] இடிவி.பாரத், வழக்கறிஞரின் செயலால் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினேன்நீதிபதி வேதனை, Published on: Dec 23, 2021, 2:56 PM IST.

[8]  https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/advocate-misbehave-on-video-conference-mhc-judge-has-upset/tamil-nadu20211223145626901

[9] தமிழ்.ஒன்.இந்தியா, கேமரா ஆனில் இருப்பது தெரியாமல்.. பெண்ணிடம் தவறாக நடந்த வக்கீல்.. வாழ்நாள் தடை போட்ட சென்னை ஐகோர்ட், By Vigneshkumar, Updated: Tuesday, December 21, 2021, 20:27 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-ordered-to-ban-a-lawyer-who-misbehaved-with-woman-during-a-video-trial-442879.html

[11] தினத்தந்தி, ஆன்லைன் விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞர்..!, பதிவு : டிசம்பர் 23, 2021, 10:06 PM

[12] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/12/23220640/2978084/Lawyer-who-conducted-irregular-in-online-trial.vpf.vpf

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

அகழாய்வு பற்றி நிறைய வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்திய தொல்துறை கட்டிடங்கள், சிற்பங்கள், கோவில்கள் போன்றவை, தூரமான இடங்களில் தனியாக, பாதுகாப்பு இன்றி இருப்பது தெரிந்த விசயமே.
இவர் சென்று பார்க்கும் போது கூட அந்நிலையை அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட அதிகாரிகள், ஆய்வாளர்கள் தான், எப்பொழுதும் குழிகள் அருகிலேயே இருக்கின்றனர்.

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நடக்கின்ற வழக்குகள்தீர்ப்புகள், தொடரும் முறைகள்: தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பற்றி எழுத்தாளர் எஸ்.காமராஜ்[1], மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்[2]. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்தது[3]. இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் முன்பு 10-08-2021 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் அவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான திராவிடன் கிளை அலுவலகம் சென்னையில் அமைக்கப்பட்டது: மத்திய அரசுத்தரப்பில், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டது[4]. 4 தமிழ் கல்வெட்டியலாளர்களும் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது[5]. “சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில் 1 சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகளின், இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்த கேள்விக்கு, மொத்தமாக –

  • 86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டிருப்பதாகவும்,
  • அவற்றில் 27,000 தமிழ் கல்வெட்டுக்கள்,
  • 25,756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை
  • 12,000 கல்வெட்டுக்கள் பெர்ஷியன் மற்றும் அராபிக் மொழிக்கானவை,
  • 9,400 கல்வெட்டுக்கள் கன்னட மொழிக்கானவை,
  • 7300 கல்வெட்டுக்கள் தெலுங்கு மொழிக்கானவை,
  • 225 கல்வெட்டுக்கள் மலையாள மொழிக்கானவை என பதிலளிக்கப்பட்டது.

இதிலிருந்தே, தமிழில் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்பது பொய்யாகிறது. 27,000 தமிழ் எனும் போது, 57,000 தமிழ் அல்லாதது என்றாகிறது. எனவே, இத்தகைய வாதம், வழக்கு, செய்திகள் எல்லாமே பொய் என்றாகிறது.

அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை?: அதற்கு நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. அப்படியாயினும் அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்[6]. தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[7]. அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[8]. அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? என கேள்வி எழுப்பினர்[9]. நீதிபதிகள் இவ்வாறு கேட்டனரா அல்லது செய்திகள் அவ்வாறு வந்துள்ளனவா என்று தெரியவில்லை. இருப்பினும், இத்தகைய கேள்விகள் கேட்டுள்ளதும், விசித்திரமாக உள்ளது. ஏனெனில், நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்கும் முன்பே, அவற்றைப் பற்றி நன்றாகப் படித்து கொண்டு வந்து, வாதாடும், வக்கீல்களை குறுக்கு விசாரணை செய்யும் அளவுக்கு இருபார்கள், இருக்கிறாற்கள். மாறாக, இவ்வாறு, கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது, திகைப்பாக இருக்கிறது.

மைசூருவில் வைத்தது ஏன்?: அதற்கு நீதிபதிகள், “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது. நாடு முழுவதும் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. அந்த கல்வெட்டுகளை மைசூருவில் ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுக்களை வைக்க நடவடிக்கை எடுக்கலாமே? 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கு என கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? அதை திராவிட மொழி கல்வெட்டுகள் என கூறுவது ஏன்?,” எனவும் கேள்வி எழுப்பினர்[10]. அதற்கு மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “இது அரசின் கொள்கை முடிவு’’ என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இருப்பினும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும்” என்றனர்[11].

விளக்கம் அளிக்க உத்தரவுவிரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்: மேலும், தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எதற்கானவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்[12]. இதுகுறித்து தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை இன்றை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்[13].  “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது,” என்று நீதிபதிகள் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே அரசின் ஆவணங்கள் எல்லாம் வெளிப்படையாக உள்ளன. அவற்றையெல்லாம் கனம் நீதிபதிகள் படித்திருப்பார்கள். அந்நிலையில், இத்தகைய கேள்விகள் எழுப்பப் படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அரசியல் ஆதரவு நியமன நீதிபதிகள் அவ்வாறு சித்தாந்த ரீதியில் சார்புடையவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] WP(MD) 1174/2021; KAMARAJ MUTHALAKURICHI KAMARAJ.S VS THE UNION OF INDIA AND 4 OTHERS; M/S.ALAGUMANI.RRAMESHKUMAR. S 8486484817; M/S. VICTORIA GOWRI.L. ASGIMEMO OF APP FILED FOR R1 andAMP; R2 COUNTER AFFIDAVIT-USR-9534/21 FOR R 1 2 4 and AMP; 5 AGP TAKES NOTICE FOR R3, in the COURT NO. 1 before The Honourable Mr Justice N. KIRUBAKARAN and The Honourable Mr Justice M.DURAISWAMY

[2] தினத்தந்தி, 60 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு என கூறுவது ஏன்? மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி, பதிவு: ஆகஸ்ட் 10,  2021 04:35 AM.

[3] https://www.dailythanthi.com/News/State/2021/08/10043535/Why-is-it-said-that-60000-Tamil-inscriptions-are-Dravidian.vpf

[4] புதியதலைமுறை, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? – நீதிபதிகள், தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 04:04 PM.

[5] https://www.puthiyathalaimurai.com/newsview/112414/What-is-the-need-to-appoint-an-inscription-scholor-for-Sanskrit-language-in-Tamil-Nadu—-Judges

[6] புதியதலைமுறை, அதிக கல்வெட்டுகள் உள்ள தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :10,Aug 2021 05:41 PM

[7] https://www.puthiyathalaimurai.com/newsview/112628/actor-Vijay-Antony-Next-is-Mazhai-Pidikatha-Manidhan-Directed-by-Vijay-Milton.html

[8] புதியதலைமுறை, தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழிக்கானவை என அடையாளப்படுத்துவது ஏன்? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 03:55 PM

[9] https://www.puthiyathalaimurai.com/newsview/112412/Why-identify-60-000-Tamil-inscriptions-as-Dravidian—-Judges

[10] பாலிமர்.செய்தி, தமிழ்க் கல்வெட்டுகளை ஏன் மைசூரில் வைத்திருக்க வேண்டும்? – நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி, August 09, 2021 06:02:59 PM.

[11] https://www.polimernews.com/dnews/152481

[12] தமிழ்.ஒன்.இந்தியா, அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் இல்லை?.மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி!, By Rayar A Updated: Wednesday, August 11, 2021, 7:30 [IST]

[13] https://tamil.oneindia.com/news/chennai/why-is-the-tamil-language-with-so-many-inscriptions-not-important-tn-hc-to-centre-429576.html

சட்டங்களின் பெருக்கம், அதனால் உருவாகும் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள்!

ஜூன் 2, 2016

சட்டங்களின் பெருக்கம், அதனால் உருவாகும் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள்!

indian advocates Act and professional ethics 1961-தமிழ் திருத்தம்

வக்கீல் தொழிலுக்கு தடைவிதிக்கும் சரத்து[1]: மேற்சொன்ன செயல்களில் ஈடுபடும் வக்கீல்கள், ஐகோர்ட்டு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கீழ் கோர்ட்டுகளில் வக்கீல் தொழில் செய்ய நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடைவிதிக்கப்படும். இதன்பின்னர், நடவடிக்கைக்கு உள்ளான வக்கீல் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைப்பார்.  இவ்வாறு வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-பி வழிவகை செய்கிறது. அதேபோல, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுகளில், மேற்சொன்ன குற்றச்செயல்களை வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல் தொழில் செய்ய சம்பந்தப்பட்ட வக்கீல்களுக்கு தடை விதித்து, மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பிக்கலாம்[2].

indian advocates Act and professional ethics 1961-தமிழ்குற்றஞ்சாட்டி தண்டிக்கும் முன்பு விளக்கம் கேட்கவேண்டும்[3]: சார்பு நீதிமன்றங்கள், முன்சீப் அல்லது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் மேற்சொன்ன செயல்களில் வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த சம்பவம் குறித்து அறிக்கையை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு நீதிபதி அனுப்பி வைக்கவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அந்த வக்கீல் ஆஜராக தற்காலிக தடைவிதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிடவேண்டும்.  அதன்பின்னர், சம்பந்தப்பட்ட வக்கீலுக்கு, அவர் செய்த குற்றச்செயல் குறித்து அவருக்கு தெரிவித்து, அவரது விளக்கத்தை கேட்டு சம்மன் அனுப்பவேண்டும். நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தரமாக தடைவிதித்து இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அவரது கருத்தை கேட்பது அவசியமாகும்.

Advocates dharna and burning committee report 2003திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகள் அமலுக்கு வந்தது: அதன்பின்னர், அந்த வக்கீல் செய்ய குற்றச்செயல்களில் தன்மைக்கு ஏற்ப, ஐகோர்ட்டு உட்பட மாவட்ட கோர்ட்டுகளில் ஆஜராக நிரந்தர தடைவிதித்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிடலாம். இந்த புதிய சட்டத்திருத்தம், அறிவிக்கை வெளியிட்ட நாள் முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன. இந்த அறிவிக்கை கடந்த 20-ந் தேதி தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த புதிய சட்டத்திருத்தம் கடந்த 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.  மேலும், இந்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு தன்னுடைய அரசிதழிலும் வெளியிட்டுள்ளது[4].

Chandru, Gandhi, Paul Kanakaraj, Wilson - Adocates Act, 1961திருத்தப்பட்ட ஆட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆதரவுஎதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் பரவலாகக் காணப்படுகிறது. இது குறித்து நீதித் துறையைச் சேர்ந்த சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு[5]:

கே.சந்துரு (உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி)[6]: வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34-ன்படி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களின் நடத்தை விதிகளை வகுக்கலாம் என்று உள்ளது. டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர், சாட்சிகளை பணம் கொடுத்து மாற்ற முற்படுகையில் தெஹெல்கா ஊடகம் அதை ஆவணப்படுத்தி வெளியிட்டது. அதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 34-ல் போதுமான விதிகளை வகுக்கவில்லை. எனவே, இரண்டு மாத காலத்துக்குள் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என 2009-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதே, விதிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அப்போது விதிகள் வகுக்கப்படவில்லை. இப்போது தான் விதிமுறைகளை வகுத்துள்ளனர். இந்த விதிமுறைகள் தற்போது தேவையான ஒன்றுதான்.

A policeman detains a bleeding lawyer-a clash between lawyers and police . AP Photoஆர்.காந்தி, (உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்): அனைத்து நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர்களை தடை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டால், வழக்கறிஞர்களின் தன்னம்பிக்கை, தைரியம் போய்விடும். அவர்களால் ஒருவார்த்தைகூட எதிர்த்துப் பேச முடியாது. மேலும், கீழமை நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்படும்போது பார் கவுன்சிலுக்கு வேலையே இல்லாமல் போய்விடும். பார்கவுன்சில்தான் தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டம் இருக்கும்போது, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது வழக்கறிஞர்களை மிரட்டுவது போலாகும். சில நேரங்களில் சில வழக்குகளில் வழக்கறிஞர்கள் கடுமையாக வாதிட வேண்டியிருக்கும். அதற்காக, நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், எல்லா நிலையிலும் வழக்கறிஞர்கள் பயப்பட வேண்டிய சூழல் உருவாகும். இது நல்லதுக்கல்ல. வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் செய்துள்ள திருத்தங் கள் வழக்கறிஞர்களை அச்சுறுத்துவதாகவே உள்ளது.

Policemen chase the advocates after they set fire the police station inside the Madras High Court

பி.வில்சன் (முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்): வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் திருத்தம் செய்துள்ள விதிகளில் நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரி ஆகியோருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தினாலோ; நீதிபதிகள் மீது ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை சுமத்தி மேல் நீதிமன்றங்களிடம் புகார் அளித்தாலோ உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியும் என்று உள்ளது. இந்த இரண்டு விதிமுறைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற விதிகள் அனைத்தும் தேவையான ஒன்றுதான்.

Policeman drag a motorbike to safety - advocates-police clash-AP Photoஆர்.சி.பால்கனகராஜ், (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்): வழக்கறிஞர் மீதான புகார் மீது உரிய நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு முடிந்தவரை சம்மன் தர வேண்டும். நேரில் ஆஜரான பிறகு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தர வேண்டும். அதன்பிறகு புகார் நிரூபிக்கப்பட்டால் அந்த வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாக தடை விதிப்பதா அல்லது நிரந்தரமாக தடை விதிப்பதா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு நீதிபதி பணம் வாங்கிக் கொண்டுதான் உத்தரவு பிறப்பிக்கிறார் என்று ஆதாரத்துடன்தான் வழக்கறிஞர் புகார் தர வேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது. நீதிபதி பணம் வாங்கினால் அதை புகைப்படம் எடுத்தா நாங்கள் அனுப்ப முடியும். அதுதொடர்பாக வழக்கறிஞர் புகார் கொடுத்தால் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரத்துடன்தான் தர வேண்டும். இல்லாவிட்டால் புகார் கொடுத்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்க்கிறோம். அதுபோல நீதிமன்ற வளாகத்திலே போராட்டம் செய்யக்கூடாது என்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

Policemen chase the advocates after they set fire the police station inside the Madras High Court. PTI Photo R Senthil Kumarகே.சக்திவேல், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்[7]: புதிய திருத்தங்கள் தேவையற்றது. அரசியலமைப்பு சட்டத்தில், போராடுவதற்கான உரிமை வழங்கப் பட்டுள்ளது. தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தில், அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்கள், பார் கவுன்சிலுக்கு உள்ள அதிகாரங்களை பறிப்பதாக உள்ளன. நீதித் துறையில் இருப்பவர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுகள் அனுப்பக் கூடாது என்பது, ஊழலுக்கு தான் வழிவகுக்கும்[8].

Justice compromised, politicised, soldஅதிக சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் என்றால் நீதித்துறை மோசமாக உள்ளது என்பதனைக் காட்டுகிறது: சட்டம் என்பது நீதி வல்லுனர்களால் அதிகமாக யோசித்து, தீர அலசிப் பார்த்து, சட்டமுன்னோடிகளைக் கருத்திற் கொண்டு, எல்லாவற்றையும் தன்னுள் அடக்கும் வரையில் உருவாக்கப்பட்டுகிறது. இதனால், ஆரம்பகால சட்டங்கள் எல்லோருக்கும், எல்லா காலங்களிலும், எல்லா நிலைகளிலும் பொறுந்தியிருந்தது. ஆனால், நவீனகாலங்களில் வந்த சட்டங்கள், அவற்றைத் தயாரித்தர்களின் பாரபட்சம், பட்சதாபம், சுயநலம், ஓரவஞ்சனை, முதலிய மனச்சாதங்களுடன் உருவானதால், அவற்றில் பிழைகள், ஓட்டைகள், அணுகூலங்கள், விலக்குகள், சலுகைகள், எப்படியும் விளக்கம் கொடுக்கலாம் போன்ற ரீதியில் சட்ட சரத்துகள், பிரிவுகள், உட்பிரிவுகள் முதலியவை அதிகமாக இருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும் குறிபிட்டு இருக்கும், தேவையென்றால், சில வார்த்தைக்களுக்கு அர்த்தம் இதுதான் என்ற வரையறையும் இருக்கும், என்ற நிலையும் வந்துவிட்டது. ஏனெனில், ஒரே செயல் ஒரு சட்டதின் கீழ் செய்தால் குற்றம், இன்னொரு சட்டத்தின் கீழ் செய்தால் குற்றமில்லை என்ற சாத்தியத்தையும் ஏற்படுத்தி விட்டனர். ஆனால், சட்டங்கள் அதிகமாகின்றன எனும்போது, நீதி பகுக்கப்படுகிறது, நீர்க்கப்படுகிறது, அநீதியாகிறது என்றாகிறது மேலும், புதிய சட்டம் அமூலுக்கு வரும்போது, அவை அந்தந்த தேதிகளிலிருந்து செல்லுபடியாகும் என்ற நிலையில், முந்தைய தேதிகளில் செய்த குற்றங்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். சட்டம், நீதித் துறைகளில் அதானால் தான் நியாயமானவர்கள் இருக்க வேண்டும், இல்லையென்றால், முரண்பாடுகளோடு தான் அத்துறைகள் இருக்கும். மக்களுக்கு சமநீதி கிடைக்காது.

 

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] மாலைமலர், வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, பதிவு: மே 28, 2016 04:33, மாற்றம்: மே 28, 2016 06:01

[2] http://www.maalaimalar.com/News/District/2016/05/28043325/1014768/The-Madras-High-Court-has-brought-in-stringent-disciplinary.vpf

[3] விகடன், ஒழுங்கீன வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை! உயர் நீதிமன்றம் அறிவிப்பு, Posted Date : 09:14 (28/05/2016).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/64636-tamil-nadu-courts-get-sweeping-power-to-advocates.art

[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8662831.ece

[6] தமிழ்.இந்து, வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா?ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு குரல்களும், Published: May 29, 2016 09:24 ISTUpdated: May 29, 2016 09:24 IST

[7] தினமலர், வக்கீல்கள் போராரட்டம், புதிய சட்டம், பதிவு செய்த நாள் : மே 27,2016,23:00 IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1530475

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

ஜூன் 2, 2016

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

indian advocates Act and professional ethics 1961

திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகள் நீதித்துறை சீரழிந்துள்ள நிலையைக் காட்டுகிறது: நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது[1]. அதாவது அத்தகைய பழக்க-வழக்கங்களை வக்கீல்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதற்கு முன்பாக, இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துவந்தது[2]. ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, சென்னை உயர்நீதிமன்றமோ, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமோ வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்[3]. சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது[4]:

The Adocates Act, 1961 - S-341961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டத்திருத்தம்: வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34(1) [Section 34(1) of the Advocates Act, 1961], அந்த சட்டத்தின் திருத்தம் கொண்டுவர ஐகோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அமைதியாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக வழக்கறிஞர் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கொண்டுவந்துள்ளது[5]. இதற்கேற்றபடி புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன[6]. வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-ஏ-வின் கீழ் [of the Advocates Act] குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட சில காலத்துக்கோ வக்கீல் செய்வதில் இருந்து நீக்கப்படுவார்கள்[7]. அதாவது கீழ்கண்ட குற்றங்களை செய்யும் வக்கீல்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்[8].

The Adocates Act, 1961 - S-14குற்றச்செயல் என்ன?[9]: இனி வக்கீல்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் காரியங்களில் எவையெல்லாம் குற்றம் என்று அடையாளம் காணப்படும் என்று விளக்கப்பட்டுள்ளது.

* நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிப்பவர். நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது என்று பொய் சொல்பவர்.

* நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்துபவர்கள். சேதப்படுத்தி அழிப்பவர்கள்.

* நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர்.

* நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர்.

* நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[10]. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள்.

* குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.

Judge injured during a clash with policemen, inside Madras High Court in Chennai. PTI Photo by R Senthil Kumarஇத்தகைய திருத்தப் பட்ட சட்டப் பிரிவுகளிலிருந்து அறியப்படுபவை: சட்டங்களை மீறிய வக்கீல்கள் இருந்துள்ளார்கள் இருக்கிறார்கள் என்பது, இந்த திருத்தப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

  1. நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து வக்கீல்கள் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  2. நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது, சாதகமாக தீர்ப்பு வாங்கிக் கொடுக்கிறேன் என்று வக்கீல்கள் பொய் சொல்லியிருக்கின்றனர்.
  3. நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்தப்பட்டுள்ளன, சேதப்படுத்தப்பட்டு அழித்தவர்கள் உள்ளனர். அதாவது, போர்ஜரி / கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  4. நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர் இருந்திருக்கின்றனர். நீதிபதிகளில் கால்களை ஒடிப்பேன் என்றெல்லாம் பேசியிருந்தது……..முதலியவற்றை கவனத்தில் கொள்ளலாம்.
  5. நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர் இருக்கிறார்கள்.
  6. நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[11]. தமிழக நீதிமன்றங்களில், இவை சாதாரணமாக ஏற்பட்டுள்ளன.
  7. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள். இவையும் சகஜமாக இருக்கின்றன
  8. குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.
  9. நீதிமன்ற வளாகங்களில் கொலைகள் நடந்திருக்கின்றன.

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] நியூஸ்.7.டிவி, வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றமே தடைவிதிக்கும் புதிய சட்டதிருத்தம், May 27, 2016; http://ns7.tv/ta/court-bans-advocates-who-diobeys-court.html

[2] பிபிசி, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம், மே.27, 2016.

[3] http://www.bbc.com/tamil/india/2016/05/160527_actiononlawyers

[4] தினத்தந்தி, வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம் ஐகோர்ட்டு அறிவிப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, மே 28,2016, 4:45 AM IST, பதிவு செய்த நாள்: சனி, மே 28,2016, 12:46 AM IST.

http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு, By: Mathi, Published: Saturday, May 28, 2016, 10:33 [IST].

http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[6] According to the new rules, the court has power under 14-A of Advocates Act to debar advocates who indulge in activities such as trying to influence a judge or participates in a procession inside court campus or holds placards inside the court hall, among others. The notification further said the court shall have the power to initiate action against misconduct under Rule 14-A .

http://www.deccanherald.com/content/549028/rules-advocates-act-amended.html

[7] “In exercise of powers conferred by Section 34(1) of Advocates Act, the court makes the following amendments to the existing rules. The amendments shall come into force with effect from the date of publication,” the notification released by the Registrar General of the High Court, said.

[8] http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[10] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

[11] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் நியமனம், அரசியல் தலையீடு, இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம்!

ஜூன் 2, 2016

நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் நியமனம், அரசியல் தலையீடு, இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம்!

Indian judicial system, SC, etc

இந்திய நீதித்துறையில் அரசியல் தலையீடு: முன்பெல்லாம் நீதித்துறையில் இருப்பவர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரபட்சமற்றத் தன்மை, நடுநிலை, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதி முதலிய தார்மீக குணங்களோடு செயல்பட்டு வந்தனர். நீதித்துறையில் இருப்பவர்கள், குறிப்பாக நீதிபதியாக இருப்பவர்களின் குடும்பங்களில் ஏழுதலைமுறைக்கு யாரும் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனைப் பெற்றிருக்கக் கூடாது என்று இந்திய நூல்கள், கல்வெட்டுகள் முதலியவை கூறுகின்றன[1]. அதாவது அத்தகைய பொறுப்புகளுக்கு வருபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முகலாயர்[2] மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் மதம், இனவெறி முதலிய காரணங்களினால் நீதிநெறி, சட்டமுறை மற்றும் நியாயத்தை அமூல் படுத்தும் தன்மை மாறியது. ஊழல் நுழைந்து சீரழிக்க ஆரம்பித்தது[3]. சுதந்திரம் கிடைத்தப் பின்னரும், நீதித்துறை, அரசியல்வாதிகளின் அதிகாரங்களில் கட்டுப்பட்டதால் தீர்ப்புகள் பாரபட்சமாக இருந்தன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிட ஆட்சிகளில் நீதித்துறையில் ஊழல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் இதர நீதித்துறை அலுவலகர்கள் அரசியல் கட்சி சார்புடையவர்களாக, அவர்களின் பரிந்துரையின் மேல் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் அத்தகைய நியமங்கள் ஜாதி, மதம், மொழி போன்ற காரணிகளால் மாசுப்பட்டுள்ளது. அதனால், நியமனம் செய்யப்பட்டவர்கள், தங்களின் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்கவே விரும்புகின்றனர். இதனால், தங்களது பதவிகளும் உயர்ந்து வருகின்றன என்பதனை அவர்கள் உணர்ந்தே உள்ளார்கள்.

Judges appointment based on caste, religion etc

வக்கீல்கள் ஜாதி, மதம், மொழி, சித்தாந்தம் காரணங்களால் பிரிந்திருப்பது: ஒருபக்கம் ரூ.50/-, 100/- என்ற ரீதியில் வக்கீல்கள் வேலை செய்யும் நேரத்தில், இன்னொரு பக்கம் ஆயிரங்கள் மற்றும் லட்சங்கள் என்று அள்ளும் வக்கீல்களும் இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சட்டம், சட்ட-நுணுக்கங்கள், மொழி வல்லுமை, வாதிடும் திறன், முதலியவை இல்லாதவர்கள் மேலே போய் கொண்டிருக்கின்றனர், ஆனால், எல்லாம் இருப்பவர்கள் அப்படியே வக்கீலாக இருந்து ஓய்வு பெற்று விடுகின்றனர் அல்லது விலகியும் விடுகின்றனர். திராவிட கட்சிகளின் ஆட்சியில், நீதித்துறையில் இருப்பவர்கள் சங்கங்களை ஆரம்பித்து, கட்சி ரீதியில் செயல்பட்டு வந்தனர்[4]. அதேபோல கம்யூனிஸ்டுகள், தீவிர திராவிட இனவெறியாளர்கள், தமிழ்-சித்தாந்திகள் போன்றோரும் சித்தாந்த ரீதியில் செயல்பட்டு, தங்களவரை பாதுகாத்து வந்தனர். முந்தைய பிரிவினரால் ஊழல் மலிந்தது என்றால், பிந்தைய கூட்டத்தினரால் தீவிரவாதம், வன்முறை, சமூக சீரழிவுகள் அதிகமாகின.

Judges appointment based on caste, religion etc-The Hindu

நீதித்துறை அரசியல் கட்சி, ஜாதி, மதம் போன்ற காரணிகளால் பிரிந்து கிடப்பது: இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசி, வியக்கியானம் கொடுத்து, கூச்சலிட்டு வருவதெல்லாம் விளம்பரமாகிவிட்டது. நீதித்துறை என்றுமே அரசியல் கட்சி, ஜாதி, மதம் போன்ற காரணிகளால் பிரிந்து கிடப்பது வெளிப்படையாக ரகசியமாக இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் – 44 பிரிவின்படி,  குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை (Uniform Civil Code) இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச்சிகளை அரசு எடுக்க வேண்டும், என்றுள்ளது. கடந்த 41 வருடங்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உச்சநீதி மன்ற கேட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டன[5]. ஷா பானு முதல் சர்ளா முத்கல் தீர்ப்பு வரை நீதிபதிகள் எடுத்துக் காட்டி விட்டார்கள்[6]. ஆனால், எந்த அரசியல் கட்சியும் இதனை அமூல் படுத்தவில்லை. பிஜேபி போன்ற கட்சிகள் இதைப் பற்றி பேசினால், அதனை “கம்யூனல்” என்று அடக்கி விடுகின்றனர். இந்திய சட்டங்களும் செக்யூலரிஸமயமாக்கப் படவில்லை (Secularization of Law and Judiciary)[7]. “சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம்” என்பவர்கள் “எல்லோருக்கும் ஒரே சட்டம்” என்றால் கொதித்து போகிறார்கள். மண்டல் தீர்ப்பு வந்தபோது கூட, “கிரீமி லேயர்” பற்றிய சர்ச்சையை பெரிதாக்கி எதிர்த்தனர். சமத்துவம் பேசுபவர்கள் எல்லாம் சமநீதி, பொதுநீதி, ஒரே நீதி என்றால் மறுத்து ஆர்பாட்டம் செய்கிறார்கள். நீதி ஒழிக, நீதிமன்றகள் அழிக….என்றேல்லாம் போராட்டங்களை நடத்துவர். அரசியல் ரீதியில் நீதித்துறைகளில் வழக்கறிஞர் முதல் நீதிபதி வரை, பெஞ்ச் கிளர்க் முதல் ரிஜிஸ்ட்ரர் வரை நியமனங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, எப்படி சட்டங்கள் சமமாகும், நீதி சமன்படும், நியாயங்கள் ஒன்றாக இருக்கும். தான் தினம்-தினம் வேலை செய்யும் போது, வரும் ஆயிரக்கணக்கான மக்களை சமமாக பாவிக்க, நடத்த, நீதி அளிக்க ஒழுங்காக, தார்மீகத்துடன், நியாயமாக நடந்து கொள்வார்கள் என்ற உத்திரவாதம் கொடுக்க முடியுமா?

Karnanidhi-Jayalalita

தமிழகத்தில் முதல் மந்திரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள், நீதிஅமூல்படுத்தப்பட்ட விதம்: இரு தமிழக முதல்வர்கள்[8], ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, வழக்குகளில் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்குட் படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் மறுபடி-மறுபடி முதலமைச்சர் பதவியை ஏற்கும் போது, நீதி-சட்டம், போலீஸ் முதலிய துறைகளுக்கு மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள். அந்நிலைகளில் அவருக்கு எதிரான வழக்குகளில், அவர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகும் போது அல்லது அவர்களுக்கு பதிலாக வாத-பிரதிவாதங்கள் செய்யும்போது, வக்கீல்கள், அரசு-வக்கீல்கள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் எப்படி சார்பற்றவர்களாக, பாரபட்சமில்லாதவர்களாக, நடுநிலையாக நடந்து கொள்ள முடிந்திருக்க முடியும் என்று யோசிக்கத்தக்கது. நியாயமாக அந்நிலைகளில் அவர்கள் ராஜினாமா செய்து, வழக்கு முடியும் வரை தனியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சிறைசென்ற நிலையில் தான் விலகியிருந்தார்கள், மறுபடியும் முதலமைச்சார்களாக பதவி வகித்தனர்.

judicial-system-inancientindia1-12-638

அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள்: மதுரை வழக்கறிஞர் ஏ.கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் இவ்விவகாரங்கள் காணப்படுகின்றன[9]: “சட்ட அறிவு, வாதிடும் திறமை, அனுபவம் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்வதில்லை. இவர்களை நியமிக்கும் முன், உயர்நீதிமன்ற ஆலோசனைகளைப் பெற வேண்டும். சில சமயங்களில், அரசு சார்பில் அளிக்கப்படும் தேர்வு செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பட்டியலை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களுக்கு சம வாய்ப்பு அளிப்பதில்லை. அரசியல் கட்சிகளின் சிபாரிசில்தான், அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சமூகநலன் சார்ந்த வழக்குகளில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால், அரசுத்துறை வழக்குகள் தோல்வியடைந்து, மேல்முறையீடு செய்கின்றனர். அரசுக்கு பணிச்சுமை அதிகரித்து, பணம் விரையமாகிறது.நீதித்துறை கமிஷன் அமைத்து, தகுதி, திறமை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். 2011 முதல் தற்போதுவரை நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்”, இவ்வாறு, கண்ணன் மனு செய்திருந்தார்[10]. நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் கொண்ட அமர்வு பிப்.,25 க்கு ஒத்திவைத்தது. மனுதாரர் ஆஜரானார்.

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] Calcutta monthly Journal and General Register of Occurrences throughout the British Dominions in the East forming an Epitome of the Indian press for the year 1837, Calcutta, Samuel Smith Co, 1838, p.20.

[2] முகலாயர், அதாவது முகமதியர் தங்களது இஸ்லாமிய சட்டத்தை அமூல் படுத்தி, இந்துக்களை கொடூரமுறையில் வழக்குகளை நடத்தி, குரூர தண்டனைகள் கொடுத்து, அநியயம் செய்தனர்.  இந்துக்களுக்கும் ஷரீயத் என்கின்ற முஸ்லிம் சட்டத்தை அமூல் படுத்தி, ஜெஸியா போன்ற வரிகளை விதித்து கொடுமைப்படுத்தினர்.

[3] வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் நந்தகுமார் வழக்கு எவ்வாறு இந்தியர் மீது அபாண்டமான குற்றம் சாட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படுவார் என்பதற்கு ஒரு சான்று. உண்மையில் போர்ஜரி செய்தது வாரன் ஹேஸ்டிங்ஸ் தான்! நந்தகுமாருக்கு தூக்கு தண்டனை கொடுத்த நீதிபடி அவரது நண்பர்! இவ்வழக்கு “நீதி கொலை செய்யப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டது.

[4] ஒரு கட்சிக்குள்ளேயே பிரச்சினை வந்தபோது, தனியாக இன்னொரு சங்க ஆரம்பித்த போக்கும் உண்டு.

Advocates belonging to the Dravida Munnetra Kazhagam met here on Sunday (March 17, 2009) and decided to form the Vellore Advocates Progressive Association. The new development is a sequel to the expulsion of 11 advocates belonging to the DMK by the Bar Association, Vellore, following their alleged misbehaviour with other members on the premises of the Integrated Courts Complex here on Friday.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/dmk-advocates-to-form-new-association/article333605.ece

[5]  It appears that even 41 years thereafter, the Rulers of the day are not in a mood to retrieve Article 44 from the cold storage where it is lying since 1949. The Governments – which have come and gone – have so far failed to make any effort towards “unified personal law for all Indians”.

Supreme Court of India, Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635; Author: Kuldip  Singh; Judgment dated 10-05-1995; https://indiankanoon.org/doc/733037/

[6] Coming back to the question “uniform civil code” we may refer to the earlier judgments of this Court on the subject. A Constitution Bench of this Court speaking through Chief Justice Y.V. Chandrachud in Mohd. Ahmed Khan vs. Shah Bano Begum AIR 1985 SC 945 held as under: “It is also a matter of regret that Article 44 of our Constitution has remained a dead letter. …… There is no evidence of any official activity for framing a common civil code for the country.”

[7] Justice Kuldip Singh recorded, “One wonders how long will it take for the Government of the day to implement the mandate of the framers of the Constitution under Article 44 of the Constitution of India………There is no justification whatsoever in delaying indefinitely the introduction of a uniform personal law in the country. …..The Successive Governments till-date have been wholly re-miss in their duty of implementing the constitutional mandate under Article 44 of the Constitution of India. We, therefore, request the Government of India through the Prime Minister of the country to have a fresh look at Article 44 of the Constitution of India and “endeavour to secure for the citizens a uniform civil code throught the territory of India“.https://indiankanoon.org/doc/733037/

[8] கருணாநிதியின் கோதுமை ஊழல் முதலியன், ஜெயலிதாவின் சொத்துக் குவிப்பு முதலியன.

[9] தினமலர், அரசு வழக்கறிஞர்கள் நியமன முறையை எதிர்த்து வழக்கு, ஜனவரி,29, 2016.21.01

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1444462