Posts Tagged ‘குடி’

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

ஜூன் 2, 2016

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

indian advocates Act and professional ethics 1961

திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகள் நீதித்துறை சீரழிந்துள்ள நிலையைக் காட்டுகிறது: நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது[1]. அதாவது அத்தகைய பழக்க-வழக்கங்களை வக்கீல்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதற்கு முன்பாக, இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துவந்தது[2]. ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, சென்னை உயர்நீதிமன்றமோ, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமோ வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்[3]. சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது[4]:

The Adocates Act, 1961 - S-341961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டத்திருத்தம்: வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34(1) [Section 34(1) of the Advocates Act, 1961], அந்த சட்டத்தின் திருத்தம் கொண்டுவர ஐகோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அமைதியாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக வழக்கறிஞர் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கொண்டுவந்துள்ளது[5]. இதற்கேற்றபடி புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன[6]. வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-ஏ-வின் கீழ் [of the Advocates Act] குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட சில காலத்துக்கோ வக்கீல் செய்வதில் இருந்து நீக்கப்படுவார்கள்[7]. அதாவது கீழ்கண்ட குற்றங்களை செய்யும் வக்கீல்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்[8].

The Adocates Act, 1961 - S-14குற்றச்செயல் என்ன?[9]: இனி வக்கீல்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் காரியங்களில் எவையெல்லாம் குற்றம் என்று அடையாளம் காணப்படும் என்று விளக்கப்பட்டுள்ளது.

* நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிப்பவர். நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது என்று பொய் சொல்பவர்.

* நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்துபவர்கள். சேதப்படுத்தி அழிப்பவர்கள்.

* நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர்.

* நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர்.

* நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[10]. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள்.

* குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.

Judge injured during a clash with policemen, inside Madras High Court in Chennai. PTI Photo by R Senthil Kumarஇத்தகைய திருத்தப் பட்ட சட்டப் பிரிவுகளிலிருந்து அறியப்படுபவை: சட்டங்களை மீறிய வக்கீல்கள் இருந்துள்ளார்கள் இருக்கிறார்கள் என்பது, இந்த திருத்தப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

  1. நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து வக்கீல்கள் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  2. நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது, சாதகமாக தீர்ப்பு வாங்கிக் கொடுக்கிறேன் என்று வக்கீல்கள் பொய் சொல்லியிருக்கின்றனர்.
  3. நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்தப்பட்டுள்ளன, சேதப்படுத்தப்பட்டு அழித்தவர்கள் உள்ளனர். அதாவது, போர்ஜரி / கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  4. நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர் இருந்திருக்கின்றனர். நீதிபதிகளில் கால்களை ஒடிப்பேன் என்றெல்லாம் பேசியிருந்தது……..முதலியவற்றை கவனத்தில் கொள்ளலாம்.
  5. நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர் இருக்கிறார்கள்.
  6. நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[11]. தமிழக நீதிமன்றங்களில், இவை சாதாரணமாக ஏற்பட்டுள்ளன.
  7. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள். இவையும் சகஜமாக இருக்கின்றன
  8. குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.
  9. நீதிமன்ற வளாகங்களில் கொலைகள் நடந்திருக்கின்றன.

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] நியூஸ்.7.டிவி, வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றமே தடைவிதிக்கும் புதிய சட்டதிருத்தம், May 27, 2016; http://ns7.tv/ta/court-bans-advocates-who-diobeys-court.html

[2] பிபிசி, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம், மே.27, 2016.

[3] http://www.bbc.com/tamil/india/2016/05/160527_actiononlawyers

[4] தினத்தந்தி, வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம் ஐகோர்ட்டு அறிவிப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, மே 28,2016, 4:45 AM IST, பதிவு செய்த நாள்: சனி, மே 28,2016, 12:46 AM IST.

http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு, By: Mathi, Published: Saturday, May 28, 2016, 10:33 [IST].

http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[6] According to the new rules, the court has power under 14-A of Advocates Act to debar advocates who indulge in activities such as trying to influence a judge or participates in a procession inside court campus or holds placards inside the court hall, among others. The notification further said the court shall have the power to initiate action against misconduct under Rule 14-A .

http://www.deccanherald.com/content/549028/rules-advocates-act-amended.html

[7] “In exercise of powers conferred by Section 34(1) of Advocates Act, the court makes the following amendments to the existing rules. The amendments shall come into force with effect from the date of publication,” the notification released by the Registrar General of the High Court, said.

[8] http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[10] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

[11] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255