Archive for the ‘நிர்ணய சட்டம்’ Category

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (2)

ஏப்ரல் 4, 2018

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (2)

SC-ST Act- Bharat bandh-3600 detained in bihar

விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது: ஒரு நிலையில், இப்போராட்டம் பிஜேபிக்கு, மோடிக்கு எதிரானதாக எடுத்துச் செல்லப்பட்டதை கவனிக்க முடிந்தது. எதிர்கட்சிகளும் அத்தகைய போக்கைக் கடைப் பிடித்தன. எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்[1].

SC-ST Act- Bharat bandh-40 cops injured

அரசிலாக்கப் படும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள்: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எஸ்.சி. எஸ்.டி. சமூக எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர். அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதினார். இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.  திங்களன்று [02-03-2018] மக்களவையில் இன்று பலத்த அமளிக்கிடையே காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்பொழுது அவருக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: “எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு முழுமையாக பட்டியல் வகுப்பினர் பக்கம்தான் இருக்கிறது,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[2].

SC-ST Act- Bharat bandh-modi down

20-03-2018 அன்று அளிக்கப் பட்ட தீர்ப்பு என்ன?: எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கடந்த மார்ச் 20-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் மீது யார்மீதும் உடனடியாக கைது நட வடிக்கை எடுக்கக் கூடாது; தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும்; அதேபோல, அரசு ஊழியர்களையும் உடனடியாக கைது செய்யக்கூடாது. உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும் உன்று உத்தரவு பிறப்பித்தது. அதாவது, அச்சட்டத்தை துர்பிரயோகம் செய்வது தடுக்கப் பட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டியது. உச்சநீதிமன்றம் 02-03-2018 அன்று, “தனது முந்தைய தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், போராடுபவர்கள் தீர்ப்பைக் கூட படித்திருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது”, என்று அறிவித்தது[3]. முன்னர் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது[4].

SC-ST Act- Bharat bandh-Muslims

தலித்போர்வையில் எதிர்கட்சியினர் மற்றவர் தூண்டிவிட்டபாரத் பந்த்: தென் மாநிலங்களில் “காவிரி பிரச்சினை” வைத்துக் கொண்டு, அரசியல் நடந்து வருகின்றது, அது கர்நாடக  தேர்தலுடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால், எஸ்.சி மற்றும் எஸ்.டி அதிகமாக இருக்கும் மாநிலங்களில் மட்டும் தான், இந்த போராட்டம் நடத்தப் பட்டு, வன்முறையில் முடிந்து, 10 பேர் பலியாகி உள்ளனர், பொது மற்றும் தனியார் சொத்துகள் நாசமாக்கப் பட்டுள்ளன. இதன் பின்னணியில் எதிர் கட்சியினர், கம்யூனிஸ்ட் வகையறாக்கள், முஸ்லிம்-கிருத்துவ ஆதரவு நிறுவனங்கள் என்று தான் உள்ளன. முன்னர் ஜிக்னேஸ் மேவானியின் பேட்டி சனி-ஞாயிறு என்று இரண்டு நாட்களிலும் ஓடியது, அதில், வன்முறை தூண்டும் வகையில் பேச்சு இருந்தது. எஸ்.சி மற்றும் எஸ்.டி நலன், உரிமைகள் என்பதை விட, மோடி எதிர்ப்பு தான் ;பிரதானமாக இருந்தது. இதே பாட்டை மற்றவரும் பாடினர்.

SC-ST Act- Bharat bandh-Communists

உச்சநீதி மன்றம் தீர்ப்பை மறுஆய்வு செய்ய மறுத்து விட்டது: வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஏ.கே கோயல் மற்றும் யுயு லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது[5]: “‘நாங்கள் அளித்த தீர்ப்பை முழுமையாக புரிந்து கொள்ளாமல், சுயநல காரணங்களுக்காக தவறான விளக்கம் கொடுத்து, திசைத் திருப்ப சிலர் எதிர்க்கின்றனர். எங்கள் உத்தரவு எஸ்.சிஎஸ்.டி மக்களுக்கு எதிரானது அல்ல. இந்த சட்டம் தனிப்பட்ட காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கம் நீதிமன்றத்திற்கு இல்லை. புகார் அளித்த உடனேயே கைது செய்யக்கூடாது என்றுதான் கூறியுள்ளோம். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கலாம். அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். எந்த ஒரு சட்டமும், அப்பாவி மக்களைப் பாதித்து விடக் கூடாது என்பதுதான் நீதிமன்றத்தின் எண்ணம்.  எனினும் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த நீதிமன்றம் தயாராக உள்ளது. இதுதொடர்பாக முறையிட்டுள்ள அனைத்து தரப்பினரும் இரண்டு நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தும்,” எனக் கூறினர்[6].

SC-ST Act- Bharat bandh-arson, violence

ஊடகங்களின் திரிபு செய்திகளும், உச்சநீதி மன்றத்தின் விளக்கமும்: ஊடகங்களும் தீர்ப்பை ஒழுங்காகப் படிக்காமல்[7], தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு மற்றும் அடுத்தவர் சொன்னதை கேட்டுக் கொண்டு, எஸ்.சி-எஸ்.டியினர் ஏன் “பாரத் பந்த்”தில் ஈடுபட்டனர், அவர்களின் பாதிப்பு என்ன, போராட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[8]. அதாவது, உண்மையான விவரங்களை, செய்தி-விசயமாக போடாமல், தூண்டும், ஆதாரமில்லாத கருத்துகளை, அரைவேக்காட்டுத் தனமான விசயங்களை செய்திகள் போல போட்டு வருகின்றனர். 89-பக்கங்கள் கொண்ட தீர்ப்பளித்த நீதிபதி கோயல் கூறியதாவது[9], “எங்களுடைய தீர்ப்பு அரசியல் நிர்ணய சாசனத்தில் உள்ளதை நடைமுறைப் படுத்துகிறது. தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைகளை நாங்கள் நான்றாகவே உணர்ந்திருக்கிறோம், தான் அவை உயர்ந்த இடத்தில் வைக்கப் பட்டுள்ளன…… இருப்பினும் அதே நேரத்தில், அப்பாவி நபர் யாரும் இதில் பொய்யான முறையில் சிக்க வைக்கப் பட்டு, விசாரணை இல்லாமல் கைது செய்யப் படுவதைத் தடுக்கிறது. நாங்கள் இச்சட்டம் அமூல் படுத்துவதைத் தடுக்கவில்லை. இந்த சட்டம் என்ன அப்பாவி மக்களை கைது செய்யப் பட வேண்டும் என்றா சொல்கிறது? ஆகவே, எங்களது தீர்ப்பு அச்சட்டத்திற்கு எதிரானது அல்ல,” என்று எடுத்துக் காட்டினார்[10].

© வேதபிரகாஷ்

04-04-2018

SC-ST Act- Bharat bandh-boys run riot

[1] தினமணி, எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்! , By IANS | Published on : 02nd April 2018 02:04 PM

[2] http://www.dinamani.com/india/2018/apr/02/centre-files-review-petition-over-scst-act-order-2892179.html

[3] ZeeTVnews, Not against SC/ST Act, those agitating may not have read judgement: Supreme Court, By Zee Media Bureau | Updated: Apr 03, 2018, 15:04 PM IST

[4] http://zeenews.india.com/india/not-against-sc/st-act-those-agitating-may-not-have-read-judgement-supreme-court-2096083.html

[5] தி.இந்து, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உத்தரவு: இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு, பி.டி.ஐ, Published : 03 Apr 2018 16:10 IST; Updated : 03 Apr 2018 16:12 IST

[6] http://tamil.thehindu.com/india/article23424976.ece

[7] India Today, Why Dalits called a Bharat Bandh? SC/ST Act and the Supreme Court ruling explained, Anusha Soni, New Delhi, April 2, 2018: UPDATED 15:40 IST

[8] https://www.indiatoday.in/india/story/why-are-dalits-protesting-sc-st-act-and-the-supreme-court-ruling-explained-1202745-2018-04-02

[9] DNA, Relief for SC/ST can’t be at cost of innocent: Supreme Court, WRITTEN BY Ritika Jain, Updated: Apr 4, 2018, 05:05 AM IST.

[10] However, Justice Goel, the author of the 89-page judgement said, the judgment fortified the Act. “Our judgment implements what is said in the Constitution. We are conscious of the rights of the underprivileged and place it at the highest pedestal… but at the same time, an innocent person cannot be falsely implicated and arrested without proper verification. We have not stopped the implementation of the Act. Does the Act mandate the arrest of innocent persons? Our judgment is not against the Act,” Justice Goel said addressing Venugopal.

http://www.dnaindia.com/india/report-relief-for-scst-can-t-be-at-cost-of-innocent-supreme-court-2600762

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

ஜூன் 2, 2016

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

indian advocates Act and professional ethics 1961

திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகள் நீதித்துறை சீரழிந்துள்ள நிலையைக் காட்டுகிறது: நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது[1]. அதாவது அத்தகைய பழக்க-வழக்கங்களை வக்கீல்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதற்கு முன்பாக, இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துவந்தது[2]. ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, சென்னை உயர்நீதிமன்றமோ, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமோ வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்[3]. சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது[4]:

The Adocates Act, 1961 - S-341961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டத்திருத்தம்: வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34(1) [Section 34(1) of the Advocates Act, 1961], அந்த சட்டத்தின் திருத்தம் கொண்டுவர ஐகோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அமைதியாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக வழக்கறிஞர் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கொண்டுவந்துள்ளது[5]. இதற்கேற்றபடி புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன[6]. வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-ஏ-வின் கீழ் [of the Advocates Act] குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட சில காலத்துக்கோ வக்கீல் செய்வதில் இருந்து நீக்கப்படுவார்கள்[7]. அதாவது கீழ்கண்ட குற்றங்களை செய்யும் வக்கீல்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்[8].

The Adocates Act, 1961 - S-14குற்றச்செயல் என்ன?[9]: இனி வக்கீல்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் காரியங்களில் எவையெல்லாம் குற்றம் என்று அடையாளம் காணப்படும் என்று விளக்கப்பட்டுள்ளது.

* நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிப்பவர். நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது என்று பொய் சொல்பவர்.

* நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்துபவர்கள். சேதப்படுத்தி அழிப்பவர்கள்.

* நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர்.

* நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர்.

* நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[10]. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள்.

* குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.

Judge injured during a clash with policemen, inside Madras High Court in Chennai. PTI Photo by R Senthil Kumarஇத்தகைய திருத்தப் பட்ட சட்டப் பிரிவுகளிலிருந்து அறியப்படுபவை: சட்டங்களை மீறிய வக்கீல்கள் இருந்துள்ளார்கள் இருக்கிறார்கள் என்பது, இந்த திருத்தப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

  1. நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து வக்கீல்கள் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  2. நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது, சாதகமாக தீர்ப்பு வாங்கிக் கொடுக்கிறேன் என்று வக்கீல்கள் பொய் சொல்லியிருக்கின்றனர்.
  3. நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்தப்பட்டுள்ளன, சேதப்படுத்தப்பட்டு அழித்தவர்கள் உள்ளனர். அதாவது, போர்ஜரி / கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  4. நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர் இருந்திருக்கின்றனர். நீதிபதிகளில் கால்களை ஒடிப்பேன் என்றெல்லாம் பேசியிருந்தது……..முதலியவற்றை கவனத்தில் கொள்ளலாம்.
  5. நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர் இருக்கிறார்கள்.
  6. நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[11]. தமிழக நீதிமன்றங்களில், இவை சாதாரணமாக ஏற்பட்டுள்ளன.
  7. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள். இவையும் சகஜமாக இருக்கின்றன
  8. குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.
  9. நீதிமன்ற வளாகங்களில் கொலைகள் நடந்திருக்கின்றன.

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] நியூஸ்.7.டிவி, வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றமே தடைவிதிக்கும் புதிய சட்டதிருத்தம், May 27, 2016; http://ns7.tv/ta/court-bans-advocates-who-diobeys-court.html

[2] பிபிசி, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம், மே.27, 2016.

[3] http://www.bbc.com/tamil/india/2016/05/160527_actiononlawyers

[4] தினத்தந்தி, வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம் ஐகோர்ட்டு அறிவிப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, மே 28,2016, 4:45 AM IST, பதிவு செய்த நாள்: சனி, மே 28,2016, 12:46 AM IST.

http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு, By: Mathi, Published: Saturday, May 28, 2016, 10:33 [IST].

http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[6] According to the new rules, the court has power under 14-A of Advocates Act to debar advocates who indulge in activities such as trying to influence a judge or participates in a procession inside court campus or holds placards inside the court hall, among others. The notification further said the court shall have the power to initiate action against misconduct under Rule 14-A .

http://www.deccanherald.com/content/549028/rules-advocates-act-amended.html

[7] “In exercise of powers conferred by Section 34(1) of Advocates Act, the court makes the following amendments to the existing rules. The amendments shall come into force with effect from the date of publication,” the notification released by the Registrar General of the High Court, said.

[8] http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[10] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

[11] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

370ன் படி விசேஷ அந்தஸ்து உள்ளது என்பதால் மனிதர்களின் உயிர்களை வித்தியாசமாக மதிப்பிட முடியாது – உச்சநீதி மன்றம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு எச்சரிக்கை!

செப்ரெம்பர் 17, 2013

370ன் படி விசேஷ அந்தஸ்து உள்ளது என்பதால் மனிதர்களின் உயிர்களை வித்தியாசமாக மதிப்பிட முடியாது – உச்சநீதி மன்றம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு எச்சரிக்கை!

தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்வதில் பாரபட்சம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு, கலவரத்தை அடக்குதல், தீவிரவாதிகளை சமாளித்தல் என பல காரியங்களில் ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள், என பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து, தொலைதூர ஊர்கள்-கிராமங்களினின்று வேலைக்குச் சேர்ந்து, இங்கு கடமையை செய்து வரும் வீரர்களாக இருக்கின்றனர். ஆனால், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், இந்தியவிரோதிகள் என்று பலவிதமான குழுக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வருகின்றன என்பதால், அவர்களுடன் போராடும் போது, பலர் இறக்க நேரிடுகிறது. அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. ஆனால், இப்பொழுது கிஸ்வார் பகுதியில் ஏற்பட்ட இறப்புகளுக்கு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குறைவாகத்தான் நிதியுதவி கொடுப்போம், ஏனெனில் இறந்தவர்கள் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இங்கு வாழ்பவர்களும் இல்லை, இங்கு நிரந்தரமாக வசிக்கும் மக்களும் அல்லர், என்று வாதிட்டு, நிதியை குறைத்துக் கொடுக்க முயற்சித்துள்ளது.

பொதுநல வழக்கும், மதவாத பிடிவாதமும்: கிஸ்த்வார் கலவரத்தை அடக்க வீரர்கள் அமர்த்தப் பட்டபோது[1], இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தகுந்த இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது[2]. அதற்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சார்பாக தாக்குதல் செய்யப்பட்ட தன்னிலை விளக்க பிரமாண அறிக்கையில், பாரபட்சம் மிக்க வாதங்கள் இடம் பெற்றன. எந்த 370 வேண்டும் என்கிறார்களோ,   புனிதம் என்று போற்றுகிறார்களோ, அதனை வைத்தே இந்தியர்களை பிரித்துப் பார்க்க முயல்கிறார்கள்.

உமர் அப்துல்லா பாரபட்ச போக்கை எதிர்த்து வழக்கு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு, கலவரத்தை அடக்குதல், தீவிரவாதிகளை சமாளித்தல் என பல காரியங்களில் ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள், என பலர் ஈடுபட்டு உயிரிழந்தவர்களையே இவ்வாறு நடத்துகின்றனர் என்பது ஏன் என்பதனை அறிந்து கொள்ளவேண்டும். அவர்களது வாதம், “ஏனெனில் எங்களுக்கு இந்திய அரசிய நிர்ணய சட்டத்தின் சரத்து 370ன் படி விசேஷ அந்தஸ்து, உரிமைகள் எல்லாம் உள்ளன[3]. அவை மற்ற மாநிலத்தவர்களுக்கு அளிக்கமுடியாது. அவ்வாறு செய்வது எங்களது உரிமைகளை, சட்ட அந்தஸ்த்தை குறைப்பதாகும், மீறுவதாகும்”, என்றெல்லாம், உமர் அப்துல்லா அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட ஆவணங்களில் வாதங்கள் வைக்கப்பட்டிருந்தன[4]. அப்படியென்றால், ஏன் அவர்கள் அங்கு வந்து சாகவேண்டும்? ஏன் அம்மாநிலம் மற்ற மாநிலங்களை எதிர்பார்த்து வாழ வேண்டும்?

உங்களது மாநிலத்தை மற்றவர்கள் உதவி இல்லாமல் நிர்வகிக்க முடியுமா?” இப்படி கேட்டது உச்சநீதி மன்றம்:  “உங்களது மாநிலத்தை மற்றவர்கள் உதவி இல்லாமல் நிர்வகிக்க முடியுமா? உங்களுக்கு அரசிய நிர்ணய சட்டத்தின் படி சிறப்பு அந்தஸ்து உள்ளது. ஆனால், மனிதர்களின் உயிர்களை வித்தியாசமாக மதிப்பிட முடியாது. அவர்கள் உங்கள் மாநிலத்தில் உயிரை இழந்துள்ளார்கள், தியாகம் செய்துள்ளார்கள். பிறகு எப்படி அவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?”, என்று தலைமை நீதிபது பி. சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சனா தேசாய் என்று எடுத்துக் காட்டி[5], மாநில செயலரை, வேறு தன்னிலை விளக்க பிரமாண அறிக்கையை தாக்குதல் செய்ய உத்தரவிட்டார். தவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்காக வாதிட்ட வக்கிலை நோக்கி, “உமது கட்சிக்காரருக்கு தாங்கள் சரியான முறையில் அறிவுரை, ஆலோசனை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. நாங்கள் ஏற்கெனவே பல வழக்குகளின் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஒத்துழைக்கவேண்டும்”, என்றும் நீதிமன்றம் அறிவுரைத்தது[6].

கிறிஸ்தவர் முஸ்லிம்களுக்காக வாதிடுகிறாரா அல்லது செக்யுலார் இந்திய சட்டங்களை வளைக்கிறாறா?: சுனில் பெர்னான்டிஸ் என்ற வக்கில் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அபிடேவிட்டில், மாநில போலீஸாருக்கு அளிக்கப்பட்ட “இறப்பு உதவியை” நியாயப்படுத்தி வாதங்கள் பதிவு செய்யப்பட்டன[7]. அவர்கள் இங்கேயே இருப்பவர்கள், இருக்க வேண்டியவர்கள், ஆனால், மற்ற ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள் இங்கிருந்து செல்லவேண்டியவர்கள். அதனால், இம்மாநில போலீஸாருக்குக் கொடுக்கப்படும் தொகை, மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள் இம்மாநிலத்தவர்கள் அல்லர் என்று வாதிடப்பட்டது.

மதரீதியில் இயங்கி வரும் ஜம்முகாஷ்மீர அரசு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசிய நிர்ணய சட்டத்தின் சரத்து 370ன் படி விசேஷ அந்தஸ்து உள்ளது என்பது எல்லோரும் அறிந்த விசயம் தான். அதிலும் பிஜேபி, அதனை நீக்கவேண்டும் என்று கேட்டுவருவதால், இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகள் எதிர்த்து வருவதும் தெரிந்த கததான். காஷ்மீர் இந்த்யாவுடன் இணைக்கப்பட்டபோது, சில உத்தரவாதங்கள், சரத்துகள் சேர்க்கப் பட்டு, அந்த 370 பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால், 1980களினின்று முஸ்லிம் அடிப்படைவாதம் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, இந்துக்களின் உரிமைகள் அடியோடு பறிக்கப்பட்டன; காஷ்மீர் பகுதிகளினின்று கொடுமைப் படுத்தி, சித்திரவய்ஹை செய்யப்பட்டு, பயமுறுத்தி வெளியேற்றப்பட்டு விட்டனர். இருக்கின்றவர்களையும் கட்டுப்படுத்த, இம்மாநில பெண்கள், இம்மாநில வாண்களைத்தன் திருமணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால் சொத்துரிமை கிடைக்காது என்ற சட்டத்தையும் எடுத்து வந்தனர். ஏனெனில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தவர் அல்லாதவர் அங்கு சொத்து எதையும் வாங்க முடியாது. எனவே, வெளிமாநிலத்தவர் அவ்வாறு திருமணம் செய்து கொண்டால், அவருக்கு எந்த்ஆ சொத்திலும் உரிமை கிடைக்காது. ஆனால், செக்யூலரிஸ சித்தாந்திகள் இவற்ரையெல்லாம் அதிகமாக ஊடகங்களில் விவாதிப்பதில்லை. ஏனெனில், அது அவர்கள் கடைபிடுத்து வரும் செக்யூலரிஸத்திற்கு ஓவ்வாதது என்று அமைதி காக்கின்றனர்.

காஷ்மீரப்பெண்களும், சொத்துகளும், சொத்துரிமைகளும்[8]: தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், இந்தியவிரோதிகள் என்று பலவிதமான குழுக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி இந்துக்களை விரட்டியடித்துள்ளனர். அந்த குரூரமான செயல்பாடுகளில் இந்து பெண்கள் லட்சக்கணக்கில் பலவந்தமாக தங்களது பெற்றோரிடத்திலிருந்து, சகோதரர்களிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து, காதலர்களிடமிருந்து, குழந்தைகளிடமிருந்துப் பிரித்திருக்கின்றது; அவர்கள் முன்பே அப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டிருக்கிறது; அதனால் பல இந்து பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; எதிர்த்தவர்கள்-பணியாதவர்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; …………….அவ்வாறு பாதிக்கப்பட்டு வெளியேறினாலும், கோடிக்கணக்கான சொத்துகள் அங்குதான் உள்ளன.

காஷ்மீரப்  போர்வையில்  இந்து பெண்களின்  உரிமைகளைப்  பரிக்க எடுத்து வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[5]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கென்று அளிக்கப் பட்டுள்ள 370 சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது, அவ்வாறு அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு, அம்மாநிலத்தின் குடியுரிமையை பெற்றிருந்தால், அது அச்சரத்தையே நீர்த்து விடும். ஆகையால் காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்து கொள்ளவேண்டும்”, என்பதுதான்!

மாநிலத்திலிருந்து விரட்டி விட்டப் பிறகும், இந்து பெண்ணுரிமைகளைப் பறிக்க திட்டமிட்ட மசோதா: அதாவது இந்து பெண்மணிகள் கூட தமக்கு தம் சொத்துரிமை, வேலையுரிமை வேண்டுமென்றால், காஷ்மீர ஆணைத் தான் மணந்து கொள்ளவேண்டும், அதாவது இந்து கிடைக்காவிட்டால் முஸ்லீமை மணந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால்…………………………………….சட்டரீதியிலான பிரச்சினை என்பதால், அந்த மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டனர்[9]. இப்பொழுதும் அதே கோணத்தில் தான், இம்மாநிலத்தவர் இல்லையென்றால், அத்தொகைக் கிடைக்காது, என்று குரூரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர் என்பது கவனிக்கத் தக்கது.

கிஷ்த்வார் கலவரத்தின் பின்னணி[10]: கிஷ்த்வார் கலவரம் என்பது ஒரு பானைக்கு ஒரு பருக்கை என்பார்களே அதுபோல. இங்கு “ஒரு பானை” என்பது –

  • காஷ்மீரத்தில் நடக்கும் மதவாத ஆட்சி
  • மத்தியில் நடக்கும் செக்யூலரிஸ ஆட்சி
  • தீவிரவாதிகளின் ஆதிக்கம்
  • இந்துக்களை மனிதர்களாகவே மதிக்காத இஸ்லாமிய அடிப்படைவாதம்
  • இருக்கும் இந்துக்களையும் ஒழித்து விடவேண்டும் என்ற மிருகத்தனமான வெறியாட்டம்
  • அதற்குத் துணைப்போகும் பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள்
  • ஜிஹாதி என்ற பயங்கரவாதத்தைப் பின்பற்றும் இஸ்லாமிஸ்டுகள்

என்று காரணங்கள் பல வெளிப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கவீங்கே படிக்கவும்[11]. இப்படி மதவாதத்தை “செக்யூலரிஸம்” என்று இந்தியர்களை ஏமாற்றி வந்து, நீதித்துறையையும் ஏமாற்ற முயன்ற போது, வசமாக மாட்டிக் கொண்டார்கள் எனலாம்.

© வேதபிரகாஷ்

17-09-2013


[1] The bench was hearing a PIL seeking a direction to the Centre and Jammu and Kashmir government to provide adequate security and safe passage to pilgrims stranded due to curfew in Kishtwar where communal clashes had taken place on the day of Eid-ul-Fitr.

http://zeenews.india.com/news/jammu-and-kashmir/sc-raps-jandk-government-for-differential-compensation_876959.html

[3] The state, at the same time, also justified its stand of differential compensation policy by invoking the Instrument of Accession and the Special Status granted to it by Article 370 of the Constitution. “It is most respectfully submitted that where ex-gratia payments are made by way of discretionary relief, no legally enforceable right is vested in any beneficiary to claim equally or identical treatment with another beneficiary of ex-gratia reliefs under the same policy,” the affidavit said.

http://www.thehindu.com/news/national/other-states/sc-rape-jk-govt-for-differential-compensation/article5134895.ece

[6] “You (lawyer for J&K) are not properly advising your client. You must cooperate when you see we are burdened with so many cases,” the bench, also comprising Justice Ranjana Prakash Desai, said.

http://jammu.greaterkashmir.com/news/2013/Sep/17/sc-raps-jk-for-differential-compensation–45.asp

[9] Notwithstanding the stand of ruling National Conference on the issue, Jammu & Kashmir Government has said it has no plans to re-introduce the Permanent Resident Women Disqualification Bill in near future.

http://www.greaterkashmir.com/news/2012/jun/17/govt-dumps-permanent-resident-women-disqualification-bill-58.asp