Posts Tagged ‘கே.ஜி.பாலகிருஷ்ணன்’

சிக்கலில் பாலகிருஷ்ணனும், வருத்தத்தில் கிருஷ்ண அய்யரும்!

திசெம்பர் 28, 2010

சிக்கலில் பாலகிருஷ்ணனும், வருத்தத்தில் கிருஷ்ண அய்யரும்!

 

சிக்கலில் பாலகிருஷ்ணனும், வருத்தத்தில் கிருஷ்ண அய்யரும்! “தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றபோது நான் புதிய அத்தியாயம் பிறந்ததாக மகிழ்ந்தேன். ஆனால் இப்போது நாம் ஏன் நீதிபதியாக இருந்தோம் என்று வருத்தமடைகிறேன். கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்ததாக புகார்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்”, என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரிக்கை விடுத்துள்ளார்[1]. இவர்கள் எல்லோருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடத் தக்கது. இவரை அடுத்து நீதித்துறையைச் சேர்ந்த  மற்றவர்களும், இதைப் பற்றி விசாரிக்க உத்தரவு இடவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்[2].

 

பாலகிருஷ்ணின் குடும்பத்தினரின் சொத்து விவரங்கள்[3]: கேரளாவின் ஒரு டிவி சேனலில் ( Asianet TV channel[4]) கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும், பல்வேறு நகரங்களில் மிகப் பெரிய அளவுக்கு அவர்கள் சொத்துக்களை சட்டத்திற்குப் புறம்பாக வாங்கி குவித்துள்ளதாகவும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. DYFI அவர்மீது உரிய நடவடிக்கை ந்டுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது, இப்பொழுதுள்ள பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று கூறியுள்ளது.

 

ஏ. ராஜா- கே. வீரமணி – பாலகிருஷ்ணன் சம்பத்தை ஆராய வேண்டும்: சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதியை முன்னாள் அமைச்சர் ராசா மிரட்டியதாக எழுந்த சர்ச்சையில் கே.ஜி.பாலகிருஷ்ணன் பெயரும் அடிபட்டது. ராசாவை காப்பாற்றும் நோக்கில் அவர் செயல்பட்டதாகவும் சர்ச்சைகள் வெடித்தன. ராசாவின் பெயரைக் குறிப்பிட்டு கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு கடிதம் போனதாக ரகுபதி கூறினார்[5].ஆனால் அதை பாலகிருஷ்ணன் மறுத்தார். ஆனால் ரகுபதி எழுதிய கடிதத்தை நான்தான் பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன் என்று விளக்கினார் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே. இதனால் பாலகிருஷ்ணன் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலகிருஷ்ணனின் குடும்பம் சொத்துக் குவிப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணய்யர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான கிருஷ்ணய்யர், இந்தியாவின் முன்னணி மனித உரிமை ஆர்வலரும் கூட. தூக்குத் தண்டனைக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வருபவர்.

 

கிருஷ்ண அய்யர் வருத்தப் பட்டுக் கூறியது! பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீதான புகார்கள் குறித்து அவர் கூறுகையில், “நான் நீதிபதியாக இருந்தேன் என்பது இப்போது எனக்கு அருவெறுப்பாக உள்ளது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக உயர்ந்தபோது புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளதாக பெருமைப்பட்டேன். ஆனால் இப்போது அப்படி நான் நினைக்கவில்லை.

பாலகிருஷ்ணனின் மகள், மருமகன், மாமியார் மீது ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தலைமை நீதிபதிகள் அடங்கிய கமிஷனை அமைத்து தீவிரமாக விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களின் சொத்துக்கள், அவருடைய வங்கி கணக்கு விவரங்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த விசாரணைக் கமிஷனை பிரதமர் உடனடியாக அமைக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்றம் விரைவாக ஒப்புதல் தர வேண்டும். மேலும், தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ள கே.ஜி.பாலகிருஷ்ணன் உடனடியாக பதவி விலக வேண்டும் என குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும், என்றார் கிருஷ்ணய்யர்.

 

130% மடங்கு எப்படி உயர்ந்துள்ள சொத்துக்கள்: பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீனிஜின் (P V Sreenijin) கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவர் 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நரக்கல் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். அப்போது அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு விவரத்தில், ஒரு சொத்தும் தனது பெயரில் கிடையாது என்றும், மனைவியிடம் வெறும் ரூ. 4.38 லட்சம் பெறுமானமுள்ள நகைகளும், ரூ. 1 லட்சம் ரொக்கமும் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் 3 ஆண்டுகள் கழித்து ஸ்ரீனிஜினும் அவரது மனைவி சோனியும் ( K B Sony) (இருவரும் வக்கீல்கள்) வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த ரிட்டர்ன் படிவத்தில், ரூ. 35 லட்சம் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  ஆனால் தற்போது இவர்கள் வசம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது[6]. திருச்சூரில் மிகப் பெரிய ரிசார்ட் ஒன்றையும் இவர்கள் கட்டி வருகின்றனராம்.  இவர்கள் வசம் தற்போது உள்ள சொத்துக்களின் மதிப்பு, அவர்கள் பதிவு செய்தபோது சொன்ன தொகையை விட பல மடங்கு அதிகமாகுமாம். 130% மடங்கு எப்படி உயர்ந்துள்ளது என்பது வியப்பாக உள்ளது என்று உள்ளூர் மக்களே வியக்கின்றனராம்! நான்காண்டுகளுக்கு முன்பு வங்கியில் மிகச்சிறிதே பணம் இருந்ட நிலையில், இப்படி கோடிக்கணக்கான சொத்துக்களை எப்படி வாங்கிக் குவித்துள்ளார் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் இப்பணம் தங்களது தொழிற் ஆலோசனை சேவை (‘professional consultancy’) மூலம்[7] வந்தாகக் கூறுகின்றனராம்!

 

துபாய், பங்களூரு கனெக்க்ஷன்ஸ் / தொடர்புகள்: கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் குறித்து தற்போது தெரிய வந்துள்ளவை மிகச் சிறிய அளவிலானவைதான். உரிய விசாரணை நடத்தினால் மிகப் பெரிய ஊழலையும், சொத்துக் குவிப்பையும் நாட்டு மக்கள் அறிய முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர் ராஜேஷ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், துபாய், பெங்களூரில் பாலகிருஷ்ணன் குடும்பத்தினரும், உறவினர்களும் மிகப் பெரிய அளவில் சொத்துக்களைக் குவித்துள்ளனர். தமிழகத்திலும் பெரிய அளவில் அவர்கள் சொத்துக்களை வைத்துள்ளனர். பாலகிருஷ்ணன்தான் இந்த சொத்துக் குவிப்பின் மையப் புள்ளியாக தெரிகிறார். எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

 

டில்லி பத்திரிக்கையாளர் கொடுத்துள்ள புகார்! சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பர்குவான் என்பவர், கடந்த ஜூன் மாதம் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெருமளவில் சொத்துக்கள் உள்ளன. இவை பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான பின்னர்தான் வாங்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்தப் புகார் கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார் அன்சாரி. உள்துறை அமைச்சகம் அக்கடிதத்தை சிபிஐக்கு அனுப்பியது. தற்போது இக்கடிதம் சிபிஐயின் கொச்சி அலுவலகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

வேதபிரகாஷ்

© 28-12-2010


[5] நீதித்துறையில் அமைச்சர் ராஜா தலையிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சிலரை காப்பாற்றுவதற்காக தன்னை யாரும் நிர்ப்பந்தி்க்க வில்லை என முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீதித்துறையில் அமைச்சர் ராஜா தலையிட்டதாக, அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு அப்போதைய சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே ஒரு அறிக்கை அனுப்பி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன், கோகலே தனக்கு அனுப்பிய அறிக்கையுடன் இருந்த கடிதத்தில் எந்த அமைச்சர் பெயரையும் குறிப்பிடவில்லை எனவும், இவ்விவகாரத்தில் தன்னை இது தொடர்பாக எவரும் நிர்ப்பந்திக்கவில்லை என்றும் தெரிவித்தார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=146523

 

நீதிபதிகளின் விமர்சனம், வக்கீல்களின் தொழில்!

திசெம்பர் 29, 2009
தலைமை நீதிபதியை விமர்சிக்கிறார் கர்நாடக நீதிபதி
டிசம்பர் 28,2009,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4812&ncat=IN&archive=1&showfrom=12/28/2009

பெங்களூரு: “தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நச்சுப் பல் பிடுங்கப்பட்ட ஒரு நல்ல பாம்பு. தவறு செய்யும் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. மேலும், நீதிபதிகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வருவது என்பதும் நடைமுறைக்கு ஒவ் வாததாகவே உள்ளது,” என கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சைலேந்திர குமார் தெரிவித்துள்ளார். மீண்டும், மீண்டும் தலைமை நீதிபதியை விமர்சித்து தன் அதிருப்தியை காட்டிவருகிறார்.

கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனை விமர்சித்தவர் நீதிபதி சைலேந்திர குமார். மேலும், கர்நாடக ஐகோர்ட் நீதிபதியான இவர், அம்மாநில வக்கீல்கள் சங்க மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள விழா மலருக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: தவறு செய்யும் நீதிபதிகளை தண்டிக்கும் அதிகாரம், நீதித்துறையின் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு இல்லை. நில அபகரிப்பு புகாரில் சிக்கிய கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில், மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நச்சுப் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல உள்ளார். அதை மாற்ற வேண் டும். தவறு செய்யும் நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்க வேண்டும்.சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உட்பட நீதித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் முறையற்றதாக, ஒழுங்கீனமானதாக இருப்பது அதிகரித்து வருவதால், நீதித்துறையில் பொறுப்புடைமையை உருவாக்க வேண்டியது அவசியம்.

மேலும், நீதிபதிகளுக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரும் விவகாரமும், நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை.இவ்வாறு கட்டுரையில் சைலேந்திர குமார் தெரிவித்துள்ளார்.மொய்லி கருத்து என்ன?””நீதிபதிகளின் நடத்தை மற்றும் பொறுப்புடைமை மசோதா அடுத்த மாதம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்,” என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: இந்த மசோதா அமலுக்கு வந்தால், நீதிபதிகள் முறைகேடுகளில் ஈடுபடுவது தடுக்கப்படும். நீதித்துறையின் குறைபாடுகளும் சரி செய்யப்படும். பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரின் போது, இரு சபைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா நிறைவேறி விட்டால், களங்கம் நிறைந்த நீதிபதிகள் யாரும் பதவியில் தொடர முடியாது. அவர்கள் மீது சட்ட அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுக்க முடியும். நீதித்துறையின் புனிதம் காக்கப்படும்.

வக்கீல் தொழில் புனிதமானது என்றெல்லாம் சிதம்பரம் பேசியுள்ளார்.

ஆனால் திடீரென்று அது தினமலர் தளத்திலிருந்து மறைந்துவிட்டது!

இருப்பினும் வாசகர்கள் இப்படி போரிந்து தள்ளிவிட்டனர்:

நிதி அமைச்சராக இருந்தபோது தன் மனைவி ஒரு கம்பனியின் நிதி சம்பந்தபட்ட வழக்கில் வாதடினாரே அது தற்போதய உள்துறை அமைச்சருக்கு மறந்து போய்விட்டதா?

வக்கீல் தொழில் புனிதமானது என்பதால் தான், மக்களிடம் இருந்து deposit collect செய்து ஏமாற்றி ஓடிய அனுபவ் நடேசனுக்காக, வாதடினாரோ சிதம்பரம்

மாமா ஏ சி முத்தையா மீதுள்ள வழக்குகளை ஒரு இன்ச் முன்னேற விட்டிருக்கிறாரா?

இவரது உறவினர் மெர்க்கண்டைல் கிரெடிட் கார்பரஷன் புகழ் டைரக்டர்கள் ஓடி ஒழிந்தபோது ஏழை டெபாசிட்டர்கள் பக்கம் நின்றாரா அல்லது கிரிமினல் பக்கம் நின்றாரா?அவர்களைப் போலீசில் பிடித்துக்கொடுக்க ஏதேனும் முயற்சி எடுத்தாரா?

தங்கக் காசு மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு வாதாடியது யார்? அதில் பலர் வெளிநாட்டிற்கு ஓடப்போவது முன்கூட்டியே தெரிந்தும் தப்பவிட்ட சக்தி இவர் இல்லையா?

இதல்லாம் கிடக்கட்டும், இவரது தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக ஜெயின் கமிஷனால் கூறப்பட்ட சந்திராசாமி மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா?