Archive for the ‘கே. வீரமணி’ Category

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

மார்ச் 17, 2012

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?


லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்

Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.

Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani) 

3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th 

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

  • ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
  • அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
  • அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
  • முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
  • கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
  • ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
  • இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?

திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –

  1. நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
  2. முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
  3. தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
  4. உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
  5. அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.

இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!

வேதபிரகாஷ்

16-03-2012


 


[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.

கொழுத்த திராவிட அரசியல் முதலாளிகள் தங்களது பணத்தை ஏன் மக்களுக்காக செலவிடக்கூடாது?

ஜூலை 10, 2011

கொழுத்த திராவிட அரசியல் முதலாளிகள் தங்களது பணத்தை ஏன் மக்களுக்காக செலவிடக்கூடாது?

 

பத்மநாபசாமி கோயில்-புட்டபர்த்தி ஆசிரம சொத்துகள்: மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்-வீரமணி[1]: இந்து விரோதியான திக-வீரமணி  இவ்வாறு சொல்லியுள்ளது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவில் உள்ள கோயில் சொத்துகள், புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்களின் சொத்துகளை மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும், மக்கள் அளித்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாட்டில் இந்தியாவில் உள்ள முதலாளித்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

 

  1. 1.   ஒன்று, கோயில்களில் உள்ள கடவுள் அவதாரங்களின் அள்ளக் குறையாத, முதல் போடா மூலதனப் பெருக்கம் கோடி கோடியாக கொட்டிக் கொண்டு இருப்பதும், அங்கே அதைக்கோயில் பெருச்சாளிகள் கொள்ளையடிப்பதும் ஒரு வகையான விசித்திர முதலாளிகள், கடவுள்கள்.
  2. 2.   இரண்டு, பிறவியினால் எவ்வித உழைப்பும் இன்றி, உயர்ஜாதி, ஆண்டவனின் முகத்தில் பிறந்த ஜாதி என்று முத்திரைக் குத்திக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தர்ப்பையும், பஞ்சாங்கத்தையுமே மூலப் பொருளாகக் கொண்டு, பெரும்பாலான அடிமைப்படுத்தப்பட்ட மக்களையே சுரண்டிக் கொழுக்கும் பிறவி முதலாளிகள்.
  3. 3.   மூன்று, மூலதனம் போட்டு தனது மூளை உழைப்பு, சுரண்டல் புத்தியைக் கூர்மையாக்கி தொழிலாளர்களின் உழைப்பை மூலதனமாகக் கருதாமல், அதற்கு ஏதோ ஒருவகைக் கூலி மட்டும் கொடுத்து, அதை விலை உயர்வு மூலம் ஒரு கையில் கொடுத்ததை, மறுகையில் பிடுங்கிக் கொள்ளையடிக்கும் முதலாளிகள் மனித முதலாளிகள்

 

இவர்களை ஒழிப்பது, மற்ற மேலே சுட்டப்பட்ட இருவகை முதலாளிகைளயும் ஒழிப்பதை விட எளிது ஆகும்! ஒரு அவசரச் சட்டம் போட்டுக்கூட, பணக்கார முதலாளிகளிடம் இருக்கும் பணம், சொத்துகளை அரசுகளால் எடுத்துக்கொள்ள முடியுமே அவை உண்மையான சமதர்ம அரசுகளாக இருந்தால். ஆனால், கோயில், மதம், உயர் ஜாதி இவைகளிடம் நெருங்குவதற்கு எக்கட்சி அரசானாலும் துணிவதில்லை”.

 

கருணாநிதியின் சிதம்பரக் கொள்ளை: வீரமணி சொல்கிறார், “சிதம்பரம் கோயிலில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் தீட்சதர் கூட்டத்தால் சுரண்டப்பட்ட மக்கள் தந்த, தருகின்ற வருமானம், மன்னர்கள் விட்டுச் சென்ற சொத்துகளைக் காப்பாற்ற பல அரசுகள் முயன்றும் கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. அரசால்தான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் ஆதிக்கத்தின்கீழ் அதன் வருமானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதத் திருமேனிகள் கூட்டம் வழக்குப் போட்டது; அது தள்ளுபடி செய்யப்பட்டு, அதன் மீது மேல்முறையீட்டினை (அப்பீல்) உச்சநீதிமன்றத்தில் செய்துள்ளனர்! வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. (புதிய அரசு அதில் விட்டுக் கொடுத்தால் அது மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது உறுதி!)

 

“ஆந்திராவில் புட்டபர்த்தி சாய்பாபாவின் மடத்தின் சொத்துகளை நிர்வகிப்பது முதல், பல பிரச்சனைகளில் சண்டைகள் பல மாதங்களாக சில ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளன. சாய்பாபாவின் மரணத்திற்குப்பின் அங்கே இருந்த தங்கம், வைரம், ரூபாய் நோட்டுகள் என்று பல லட்சம், பல கோடிக்கணக்கில் அவை கடத்தப்பட்டு, ஆந்திர அரசே அதுபற்றி புலன் விசாரணைகளை நடத்தும் நிலை உள்ளது! மடத்திலிருந்து லாரியில் கடத்திச் சென்றுள்ள பணம், தங்கம், வைர நகைகள் பிடிபட்டதாக செய்திகள் வந்தவைகளை மீடியாக்கள் பெரிதும் உயர் ஜாதி ஊடகங்கள் அமுக்கி வாசித்தன.

 

ஒரு வார இடைவெளிக்குப் பின்னர், அது சம்பந்தப்பட்ட தமிழ்நாட்டு உயர் ஜாதி தொழிலதிபர் ஒருவர், அந்த ரொக்கம் ஏதோ, பாபா சமாதி கட்ட, ஒப்பந்தக்காரருக்கு, யாரோ கொடுத்ததாக ஒரு பேட்டி கொடுத்தார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டார்கள்; ஏன் உடனே செய்யவில்லை? பிடிபட்ட நேரத்தில், பிடிபட்டவர்தானே அப்படி வாக்குமூலம் கொடுத்திருக்க வேண்டும்? பிறகு அதிலிருந்து மீள்வதற்கே இப்படி ஒருஅற்புத யோசனைஅறிவுரை நிபுணர்களால்அவாளுக்குசொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும்! தோண்டத் தோண்ட வெளிவரும் புதையல்போல, பாபா அறையிலிருந்து தங்கக் குவியல்கள் வந்தவண்ணம் உள்ளதாம்! செய்தி ஏடுகளால் மறைக்க முடியாது சிலவற்றை வெளியிடுகின்றன. பிரசாந்தி நிலையத்தில் இருந்து ஏராளமான ரொக்கப் பணமும், நகைகளும் கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற சில வாகனப் பரிசோதனைகளின்போது ரூபாய் 10 கோடி மற்றும் 35 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது கடத்திச் செல்லப்பட்டவை என்று ஆந்திர போலீசார் கருதுகிறார்கள். கடந்த முறை யஜுர் வேத மந்திர் அறையில் கண்டெடுக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் மதிப்பிடப்பட்டு, அவை வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டதாம்!

 

மீண்டும் அதே யஜுர்வேத மந்திரில் அனந்தப்பூர் மாவட்ட இணை ஆட்சியர் அனிதா ராமச்சந்திரன் தலைமையிலான அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள், ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உள்ளது. சாய்பாபா அறை, அவரது உதவியாளர் சத்யஜித்தின் அறை, சிறப்பு அலுவலக அறை, உணவு அருந்தும் அறை ஆகியவைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன! சாய்பாபா அறக்கட்டளையின் உண்மை சொத்துகளின் மதிப்பு பற்றி அதன் நிர்வாகிகள் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள சாய்பாபா பக்தர்களே கேட்கும் அளவுக்கு நிலைமை அங்கு மோசமாகியுள்ளது எனத் தெரிய வருகிறது!

 

பத்மநாபசாமி கோயிலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்துகள்திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயில் அறைகள் திறக்கப்பட்டு நகைகள் எண்ணப்பட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் போட்ட வழக்கில், இரண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அய்வர் ஆக எழுவர் கொண்ட குழுவினரின் முன்னிலையில் அது திறக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என்று இடைக்கால ஆணை வழங்கப்பட்டதையொட்டி, கடந்த சில நாள்களாக அங்கே ஆறு பாதாள அறைகள் திறக்கப்பட்டதில், இது வரை கண்டு எடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது!

 

திருப்பதிகோயிலையும் மிஞ்சும் சொத்து இதற்கு இருக்கும் போல் உள்ளது! “கேரள மாநில பட்ஜெட்டையும் தாண்டும் சொத்து இந்த ஒரு கோயிலிலேயே முடக்கப்பட்ட மூலதனமாக கிடக்கிறது! இவைகளில்கோயில் பெருச்சாளிகள்கொண்டு சென்றவை எவ்வளவோ? யாருக்குத் தெரியும்? குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வருமானம், சபரிமலை அய்யப்பன் கோயில் வருமானம் இப்படி பலவகை வருமானங்கள் மூலம் கிடைக்கும் தொகை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், எவ்வளவு அரசு கல்லூரிகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை எழுப்பலாம்! நமது மத்திய அரசு, லாபம் தரும் பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பதை நிறுத்திவிட்டு இந்த மூலதனங்களை எடுத்துப் பயன்படுத்தலாமே! கோயில் பூஜை, புனளிகாரம் என்பவைகளால் வழக்கம்போல் நடைபெறுவதற்குப் பதிலாக இம்மாதிரி அரசு எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவழிப்பது எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாதே! அரசியல் சட்டத்தின் 25,26 என்ற பிரிவுகளைக் காட்டி சிலர் சட்டப் பூச்சாண்டி காட்டலாம். அதுபற்றிக் கவலைப்படாமல் துணிந்து முடிவு எடுத்தால் அப்பிரிவுகளிலேயே அதற்கு தாராளமாக இடம் உள்ளது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! மக்கள் கொடுத்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறு ஏதும் இல்லையே! மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துமாக!”, இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

மார்க்சீயவாதி சரித்திர ஆசிரியர் கூறியுள்ள கருத்து: கண்டுபிடிக்கப் பட்டுள்ள விலையுயர்ந்த பொர்ருட்கள் எல்லாம் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று ராஜன் குருக்கள் என்ற மார்க்சீயவாதி சரித்திர ஆசிரியர் கூறியுள்ளார்[2]. அரசு சார்பில் மஹாத்மா காந்தி பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருக்கும் இவர், ஒரு அடிப்படை கம்யூனிசவாதி. அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் அரிய சிலைகள் முதலியவற்றிற்கு, இந்தியாவில் போதிய அளவில் பாதுகாப்பு இல்லை. மேலும் கருத்து சொன்ன சரித்திர ஆசிரியரைப் போன்றவர்களே பல சட்ட விரோதமான வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர். மிகவும் பழமையான விலைமதிக்கமுடியாத சிலைகள், நாணயங்கள் முதலியவை 100 ஆண்டுகளுக்கும் குறைவானக் காலத்தையுடையது என்று சான்றிதழ் கொடுத்து, கடத்தல் பேர்வழிகளுக்கு உதவியுள்ளார்கள். ஃபிளின் என்ற ஆஸ்திரேலியர் விஷயத்தில் பலர் சம்பந்தப்பட்டுள்ளதை முன்னரே என்னால் எடுத்துக் காட்டப்பட்டது[3]. ஆகவே அரசையும், இம்மாதிரியான நாத்திகவாதிகள், கம்யூனிஸ்டுகள், குறிப்பாக இந்து-விரோதவாதிகளை நம்ப முடியாது. இங்கு இப்பொழுதைய ராணி, அவை கோவிலுக்குள்ளேயே வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது[4]. ஆர். நாகசாமி ஏன் அவற்றை அருங்காட்சியகத்தில் வைக்கக் கூடாது என்று விளக்கியுள்ளார்[5]. தான் லண்டனில் பத்தூர் நடராஜர் விக்கிரம் சார்பாக, நீதிபதி முன்பு, கோவில் விக்கிரகம் கோவிலில் முறைப்படி வைக்கப்பட்டு, அதற்கான பூஜைகள் முதலியவை செய்யப்படவேண்டியுள்ளதால், அது அருங்காட்சியகத்தில் வைக்கக் கூடாது என்று எடுத்துக் காட்டியதை குறிப்பிட்டுள்ளார். அதாவது, அதுபோலவே, இந்ந்கைகள் முதலியவை, விஷ்ணுவிற்கு சாத்தப் பட்டு. அதற்கான பூஜைகள், கிரியைகள் முதலியவைச் செய்யப்படவேண்டும். இத்தனை ஆண்டுகள் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் அவை மறைத்து வைக்கப் பட்டிருந்தன.

 

நாகங்களினால் பாதுகாத்து வரப்படும் அறையா? “B” என்று அடையாளமிடப்பட்டுள்ள அறையைத் திறந்தால், அரேபியக் கடல் நீரே உள்ளேவரக்கூடும் என்று ஒரு கோவில் அதிகாரி எச்சரித்தார். 20ம் நூற்றாண்டில் ஒருமுறை, ராஜவம்சத்தனர் அவ்வாறு திறக்க முயற்சித்தபோது, கடல் அலைகளின் ஆரவார சத்தம் கேட்டது என்று அவர் கூறுகிறார். அதுமட்டுமல்லாது, வாசலில் இருக்கும் ஒரு நாகப்பாம்பின் கல்வெட்டைக் காண்பித்து, அது எச்சரிக்கைச் சின்னம் என்பதையும் எடுத்துக் காட்டி, அதனை திறப்பதால் ஏற்படும் அபாயத்தை எச்சரித்தார்[6]. நாகங்களினால் ஏற்படும் சப்தத்தைக் கருத்திற்க் கொண்டு பயந்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன[7]. எது எப்படியாகிலும், உச்சநீதி மன்றம் அதனைத் திறக்க வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. அகில-உலக ஊடகங்களுக்கும் இதன் கண்டுபிடிப்பில் தலை-கால் தெரியவில்லை, விமர்சித்துத் தள்ளுகின்றன[8].

 

சாய்பாபாவிடம் கருணாநிதி காலில் விழுந்து கெஞ்சியதை வீரமணி எப்படி மறந்தார்? கருணாநிதி போன்ற மக்கள் கொள்ளைக்காரர்களிடமிருந்து பணத்தை எடுத்து மக்களுக்கு பயன்படச் செய்யவேண்டும் என்று ஏன் வீரமணி போன்றோர் சொல்லவில்லை என்று தெரியவில்லை. கடந்த 10-20-30 ஆண்டுகளில் சாதாரணமாக இருந்த திமுகவினர், இன்று ஆயிரக் கணக்கான கோடிகளுக்கு அதிபர்களாக இருக்கிறார்கள் – வீடுகள், பங்களாக்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், தோட்டங்கள், பண்னை வீடுகள், தொழிற்சாலைகள் என்று பட்டியல்கள் நீளுகின்றன. இதை அவர்கள் மக்களுக்காக செலவிடுவார்களா? அத்தகைய சாய்பாபா கால்களில் விழுந்துதான், அதே கருணாநிதி, சென்னைக் குடிநீருக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டதை வீரமணி மறந்து விட்டார் போலும்! அப்பொழுது மட்டும், பணம் அங்கிருந்து வர வேண்டுமா? ஏன் கருணாநிதியே தன்து பணத்திலிருந்து கொடுத்து, அந்த நல்ல காரியத்தைச் செய்திருக்கலாமே? இலவசம் என்று வரும்போது, அரசு அதாவது மக்கள் வரிப்பணம் என்றாதால் தாராளமாக வாரி இரைக்கின்றனர். ஆனால், சொந்த பணம் என்று வரும்போது, அத்தகைய தாராளம், தானம், தர்மம் முதலியவை மனத்திற்கு வருவதில்லை!


[3] Mr. V.J.A. Flynn and Mr. Shyam … vs Union Of India (Uoi) And Ors. on 26 November, 2002

Equivalent citations: 2003 (66) DRJ 381, 2003 (86) ECC 129; http://www.indiankanoon.org/doc/924272/

2004-ITS-46-SC-(ELT-163/A59)-V.J.A. Flynn v. U.O.I., dated 14-4-2003

Dr. V.J.A. Flynn vs S.S. Chauhan And Another on 4 March, 1996; Equivalent citations: 1996 CriLJ 3080, 1996 (37) DRJ 195, ILR 1998 Delhi 426; http://208.79.211.6/doc/246782/

ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் வழக்கும், பத்மநாப சுவாமி கோவில் வழக்கும்!

ஜூலை 10, 2011

ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் வழக்கும், பத்மநாப சுவாமி கோவில் வழக்கும்:

 

ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் வழக்கு: மேற்கு வங்கத்தில் இருக்கும் ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்து-விரோத சக்திகளின் கைகளில் இருந்து வருகிறது[1]. அந்நிலையில் 1986ல் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் விஷயத்தில் தப்பித்துக் கொள்ள, தன்னை ஒரு “இந்து அல்லாத சிறுபான்மையின நம்பிக்கையாளர்களின் நிறுவனம்/குழுமம்” (non-Hindu minority institution) என்று பிரகடனப்படுத்திக் கொண்டு அவ்வாறே, அப்பொழுதைய கல்கத்தா உயர்நீதி மன்றமும் தீர்ப்பளித்தது. பிறகு, அதன் பின்னணியில் இருந்த அத்தகைய விஷமத்தனமான, அதே நேரத்தில் இந்நாட்டிற்கு பலவிரதங்களில் பாதிக்கக் கூடிய விஷயனம் உள்ளது என்ற உண்மையறிந்து, மேல் முறையீடு செய்யப்பட்ட போது, உச்சநீதி மன்றம், அத்தகைய தீர்ப்பை தள்ளுபடி செய்து, எப்படி சுவாமி விவேகானந்தரால், தமது குருவின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் வேதங்கள், உபநிஷதங்கள் முதலியவற்றின் ஆதாராமாகக் கொண்டு அமைக்கப் பட்டது என்ற விளக்கத்தோடு தீர்ப்பை வழங்கியது[2].

 

பத்மநாப சுவாமி கோவில் வழக்கு: இதேபோலத்தான் இந்த பத்மநாப சுவாமி கோவில் வழக்கிலும், இப்பொழுது உச்சநீதி மன்றம் டி. பி. சுந்தரராஜன் மற்றும் டி. பி. அனந்தபத்மநாபன் இருவரையும் கோவில் வளாகத்திலிருந்து வெளியேறுமாறு ஆணையிட்டுள்ளது[3]. இவர்கள் மற்றும் இன்னும் நான்கு பேர் 2007லிருந்து, மிகக்குறைந்த வாடகையான ரூ 10/- கூட செல்லுத்தாமல் இருந்தனர். இதனால், வாடகையை உயர்த்தி வசூல் செய்ய கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்தபோது, வழக்குத் தொடரப் பட்டது. உடனே, கேரளா உயர்நீதி மன்றம், கோவிலை அரசே எடுத்து நடத்த டிசம்பர் 2009ல் தீர்ப்பளித்தது. ஆனால், பிறகு உச்சநிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அத்தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, ஆறு அறைகளையும் மூடி சீல் வைக்க ஆணையிட்டது. பிறகு தான், அவ்வறைகளைத் திறக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

உச்சநீதி மன்றத்தின் ஆணைகளின் வேகம்: வழக்கம் போல அல்லது ராமஜன்மபூமி விவகாரம் போல, உச்சநீதி மன்றம் இவ்வளவு வேகமாக செயல்படுவது ஆச்சரியமாக இருக்கிறது:

ஜூலை 3: கோவிலில் கிடைத்த விலை மதிப்பிடற்கரிய பொருட்கள் கோவிலிலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என, தொல்லியல் நிபுணர்கள் கோரிக்கை.

ஜூலை 4: கடைசி அறையைத் திறப்பது குறித்து 8ம்தேதி முடிவு செய்வதாக ஏழு பேர் கொண்ட குழு அறிவிப்பு; “கோவில் சொத்து கோவிலுக்குத் தான்’ என்றார் முதல்வர் உம்மன் சாண்டி; கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடத் தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மன்னர் குடும்பம் மனு தாக்கல்.

ஜூலை 5: மன்னர் மனு விசாரணையில், “கணக்கெடுப்பை வீடியோ எடுக்க வேண்டும்; தகவல்களை வெளியிடக் கூடாது’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

ஜூலை 7: கோவிலைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், 500 மீ., சுற்றளவுக்கு சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தல் ஆகியவை குறித்து போலீசார் ஆலோசனை.

ஜூலை 8: மீதமுள்ள இரு அறைகளைத் திறக்க வேண்டாம் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு. வழக்கு 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பு.

 

அனந்த பத்மநாப சுவாமிக்கு சொந்தனாவைப் பற்றி மற்றவர்கள் கருத்து கூறுவது: உச்சநீதிமன்ற பல தீர்ர்ப்புகளின் படி, உள்ள சட்டத்தின் படி, கோவில் விக்கிரம் என்பது சட்டப்படி, ஒரு நபர் ஆவர். அதன்படி, அந்த விக்கிரத்திற்கு எல்லா உரிமைகளும் உள்ளன. முன்பு பத்தூர் நடராஜர் சிலை இங்கிலாந்திற்குக் கடத்திச் சென்றபோது, லண்டன் நீதிமன்றத்தில் அத்தகைய உரிமையை எடுத்துக் காட்டியதால் தான், அந்த விக்கிரம் கோவிலுக்கு சொந்தமானது அன்று திர்ப்பளிக்கப் பட்டு, லண்டனிலிருந்து, கொவிலுக்கே அனுப்பி வைக்கப்பட்டது. அதுபோல, நகைகள், ஆபரணங்கள், விக்கிரம், பூஜைப் பாத்திரங்கள் எல்லாமே அனந்த பத்மநாப சுவாமிக்கு சொந்தம் என்பது சட்டப்படியுள்ள விஷயம். இதற்கு எதிராக, ஏதேதோ கருத்துகளை சொல்லிவருவது, அதிகபிரங்கித் தனமானது.


[1] Ram Swarup, Ramakrishna Mission in search of New Identity, V oice of India, New Delhi,

[2] Bramchari Sidheswar Shai and Others vs. State of West Bengal 1995 4 SCC 646: AIR 1995 SC 2089, 1995 SCC (4) 646; http://www.indiankanoon.org/doc/967081/

நீதிபதிகளின் விமர்சனம், வக்கீல்களின் தொழில்!

திசெம்பர் 29, 2009
தலைமை நீதிபதியை விமர்சிக்கிறார் கர்நாடக நீதிபதி
டிசம்பர் 28,2009,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4812&ncat=IN&archive=1&showfrom=12/28/2009

பெங்களூரு: “தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நச்சுப் பல் பிடுங்கப்பட்ட ஒரு நல்ல பாம்பு. தவறு செய்யும் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. மேலும், நீதிபதிகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வருவது என்பதும் நடைமுறைக்கு ஒவ் வாததாகவே உள்ளது,” என கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சைலேந்திர குமார் தெரிவித்துள்ளார். மீண்டும், மீண்டும் தலைமை நீதிபதியை விமர்சித்து தன் அதிருப்தியை காட்டிவருகிறார்.

கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனை விமர்சித்தவர் நீதிபதி சைலேந்திர குமார். மேலும், கர்நாடக ஐகோர்ட் நீதிபதியான இவர், அம்மாநில வக்கீல்கள் சங்க மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள விழா மலருக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: தவறு செய்யும் நீதிபதிகளை தண்டிக்கும் அதிகாரம், நீதித்துறையின் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு இல்லை. நில அபகரிப்பு புகாரில் சிக்கிய கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில், மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நச்சுப் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல உள்ளார். அதை மாற்ற வேண் டும். தவறு செய்யும் நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்க வேண்டும்.சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உட்பட நீதித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் முறையற்றதாக, ஒழுங்கீனமானதாக இருப்பது அதிகரித்து வருவதால், நீதித்துறையில் பொறுப்புடைமையை உருவாக்க வேண்டியது அவசியம்.

மேலும், நீதிபதிகளுக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரும் விவகாரமும், நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை.இவ்வாறு கட்டுரையில் சைலேந்திர குமார் தெரிவித்துள்ளார்.மொய்லி கருத்து என்ன?””நீதிபதிகளின் நடத்தை மற்றும் பொறுப்புடைமை மசோதா அடுத்த மாதம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்,” என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: இந்த மசோதா அமலுக்கு வந்தால், நீதிபதிகள் முறைகேடுகளில் ஈடுபடுவது தடுக்கப்படும். நீதித்துறையின் குறைபாடுகளும் சரி செய்யப்படும். பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரின் போது, இரு சபைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா நிறைவேறி விட்டால், களங்கம் நிறைந்த நீதிபதிகள் யாரும் பதவியில் தொடர முடியாது. அவர்கள் மீது சட்ட அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுக்க முடியும். நீதித்துறையின் புனிதம் காக்கப்படும்.

வக்கீல் தொழில் புனிதமானது என்றெல்லாம் சிதம்பரம் பேசியுள்ளார்.

ஆனால் திடீரென்று அது தினமலர் தளத்திலிருந்து மறைந்துவிட்டது!

இருப்பினும் வாசகர்கள் இப்படி போரிந்து தள்ளிவிட்டனர்:

நிதி அமைச்சராக இருந்தபோது தன் மனைவி ஒரு கம்பனியின் நிதி சம்பந்தபட்ட வழக்கில் வாதடினாரே அது தற்போதய உள்துறை அமைச்சருக்கு மறந்து போய்விட்டதா?

வக்கீல் தொழில் புனிதமானது என்பதால் தான், மக்களிடம் இருந்து deposit collect செய்து ஏமாற்றி ஓடிய அனுபவ் நடேசனுக்காக, வாதடினாரோ சிதம்பரம்

மாமா ஏ சி முத்தையா மீதுள்ள வழக்குகளை ஒரு இன்ச் முன்னேற விட்டிருக்கிறாரா?

இவரது உறவினர் மெர்க்கண்டைல் கிரெடிட் கார்பரஷன் புகழ் டைரக்டர்கள் ஓடி ஒழிந்தபோது ஏழை டெபாசிட்டர்கள் பக்கம் நின்றாரா அல்லது கிரிமினல் பக்கம் நின்றாரா?அவர்களைப் போலீசில் பிடித்துக்கொடுக்க ஏதேனும் முயற்சி எடுத்தாரா?

தங்கக் காசு மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு வாதாடியது யார்? அதில் பலர் வெளிநாட்டிற்கு ஓடப்போவது முன்கூட்டியே தெரிந்தும் தப்பவிட்ட சக்தி இவர் இல்லையா?

இதல்லாம் கிடக்கட்டும், இவரது தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக ஜெயின் கமிஷனால் கூறப்பட்ட சந்திராசாமி மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா?