Archive for the ‘வரையரை-கட்டுப்பாடு’ Category

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வக்கில்கள் ஆர்பாட்டம், கலாட்டா, போராட்டம் முதலியவற்றை ஏன் செய்யவேண்டும்?

செப்ரெம்பர் 23, 2015

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வக்கில்கள் ஆர்பாட்டம், கலாட்டா, போராட்டம் முதலியவற்றை ஏன் செய்யவேண்டும்?

Law-graduates bar council enrollment

Law-graduates bar council enrollment

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது (22-09-2015): தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தால், 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று உத்தர விடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் 22-09-2015 அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது[1]: 2010-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால், வழக்கறிஞருக்கான பதிவு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன[2]. 2010ல் முதலில் நுழைவு தேர்வு அறிமுகப்பப்படுத்தியபோதே சிலர் எதிர்த்தனர், ஆனல், அது கட்டாயமாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டுவ்முதல் இது வரை அகில இந்திய பார் கவுன்சில் 8 தகுதித் தேர்வுகளை நடத்தியுள்ளது. பதிவு செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞராக தொழில் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது[3].

Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday

Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday

20-03-2015 அன்று பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கிய வழக்கறிஞர்கள்[4] சஸ்பென்ட்: 20-3-2015 அன்று சில வழக்கறிஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கினார்கள். அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[5]. மேலும், நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் வி. மணிகண்டன் வதன் செட்டியார் [Manikandan Vathan Chettiar], ஆர். மதன்குமார் [R Madhan Kumar ] ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன[6]. அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[7]. சென்ற வருடம் பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்துபோது, நீதிபதிகள் பேசியது, இப்பொழுது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest

Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest

வழக்கறிஞர்கள், தொழில் தர்மத்தை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது,” என, கூறினார்[8]: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று, பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பேசியதாவது: வழக்கறிஞர்கள் பணி, நீதிபதிகள் பணியை விட முக்கியமானது. சமூகத்தில், இவர்களது பணி மிகவும் பொறுப்பு வாய்ந்தது.வழக்காடிகளுடன், வழக்கறிஞர்களின் உறவு பெரும் நம்பிக்கைக்கு உரியது. எனவே, வழக்கறிஞர்கள், நேர்மையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.சமூகத்திலும், நீதித் துறையிலும், முக்கிய பங்காற்றும் வழக்கறிஞர்கள் கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும். சமூக நீதிக்காகப் பணியாற்றும் வழக்கறிஞர்கள் பணி, சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்நிலையில், தொழில் தர்மத்தை மீறி, வழக்கறிஞர்கள் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது; அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நம்பிக்கை குறைவான எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது.சமூக சேவையின் ஒரு பகுதியாக, வழக்கறிஞர் பணியை கருத வேண்டும். வழக்கறிஞர்களுக்கு, பார் கவுன்சில் வகுத்துள்ள விதிகளுக்கு தலை வணங்கி, பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings

Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings

சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை[9]:  விழாவில் வாழ்த்துரை வழங்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பேசியதாவது: நீதிபதி நாகப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றிய போது, சென்னை சட்டக் கல்லூரியில், பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றினேன். தற்போதுள்ள சட்டக் கல்வியுடன், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பார் கவுன்சில் உறுப்பினர்கள் முன்வர வேண்டும். வழக்காடிகளை எப்படி அணுகுவது, நீதிமன்றத்தில் எப்படி பேசுவது போன்ற, அடிப்படை பயிற்சிகளை, சட்டம் பயிலும்போதே, மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். இப்பணியை, சமூக சேவையாகக் கருதி, பார் கவுன்சிலின் மூத்த உறுப்பினர்கள், திறமையான இளம் வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர் தொழில் என்பது, பணம் சம்பாதிக்கும் வியாபாரம் அல்ல. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், பணம் தேவை என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை.

In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen

In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen

வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்: நீதிபதி பானுமதி: இளம் வழக்கறிஞர்களுக்காக, பார் கவுன்சில், தொடர் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இதற்காக, சட்ட கமிஷன் நிதி அளிக்கிறது. இதைப் பயன்படுத்தி, இளம் வழக்கறிஞர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், கருத்தரங்குகளை பார் கவுன்சில் நடத்த வேண்டும். சென்னை பார் கவுன்சில் மூலம், வழக்கறிஞர்களுக்கு அளிக்கப்படும், குடும்ப நல நிதி, விபத்து காப்பீடு போன்றவை, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.

Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015

Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015

நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்: கடந்த, 1928ல் துவங்கப்பட்ட சென்னை பார் கவுன்சில், பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது. நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள். மென்பொருள், சிறப்பாக இருந்தால் தான், நீதிமன்றம் என்ற கணினியும் நன்றாகச் செயல்படும்.சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அவர்களால், பெருந்தொகையை கட்டணமாகக் கொடுத்து, வழக்காட முடியாது. எனவே, சாதாரண மக்களை மனதில் கொண்டு, வழக்கறிஞர்கள் பணியாற்ற வேண்டும். நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.

A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter

A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter

நீதிபதிகளுக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷம் [செப்டம்பர்.17, 2015][10]: வக்கீல்கள் இப்பொழுதெல்லாம் போலீஸாருடன் சண்டை போடுவது, பொது இடங்களில் கலாட்டா செய்வது, போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கருப்புக் கோட்டு போடாலே, ஏதோ அவர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்து விடுகின்றன, யாரும் அவர்களை ஒன்றும் கேட்க முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு அந்து விடுகிறது. செப்டம்பர்.13, 2015 அன்று சென்னை உயர் நீதிமன்ற அரங்குக்குள், வழக்கறிஞர்களை அனுமதிக்காததால், நீதித்துறை மற்றும் போலீசாருக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். இதனால், உயர் நீதிமன்றத்தில், பரபரப்பு ஏற்பட்டது. கட்டாய, ‘ஹெல்மெட்’ உத்தரவைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள், ஊர்வலம் சென்று, நீதிபதிகளுக்கு எதிராக, கோஷம் எழுப்பினர். அதுமட்டுமல்லாது, கோர்ட்டு அறையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையின் பாதுகாப்பு பணியை மத்திய போலீசாரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது[11].  மதுரையிலும் வக்கில்கள் கலாட்டா செய்து வருகிறார்கள்[12]. வக்கீல்கள் ஏற்கெனவே கட்சி, ஜாதி என்ற முறைகளில் பிரிந்து கிடக்கிறார்கள். இதனால், பரபட்சமற்ற முறையில் வழக்காடுவது, வழக்குகளை நடத்துவது, தம்மை வந்தவர்களுக்கு உதவுவது போன்ற குணங்கள் எல்லாம் மறைந்து விட்டன. அதாவது, சட்டத்தைக் காக்க வேண்டிய வக்கில்களே, இவ்வாறு சட்டங்களை மீறி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

23-09-2015

[1]  தினமணி, 2,495 வழக்குரைஞர்களாக செயல்படத் தடை: தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை, By சென்னை, First Published : 23 September 2015 02:35 AM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/2495-law-graduates-lose-permission-to-practise-in-Tamil-Nadu/articleshow/49059294.cms

[3]  தி.இந்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் 2,495 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தற்காலிக தடை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்,Published: September 23, 2015 08:24 ISTUpdated: September 23, 2015 08:25 IST.

[4] The tussle between between two groups of Madras High Court lawyers over the recognition accorded to the Tamil Nadu Advocates Association (TNAA) reached the doorsteps of the Bar Council. Advocates affiliated to the Madras High Court Association (MHAA) barged into the council building protesting the grant of recognition and vandalised a portion of it on Friday (20-03-2015).

http://www.newindianexpress.com/cities/chennai/Bar-Council-Bldg-Vandalised-During-Protest-by-Lawyers/2015/03/21/article2723454.ece

[5] http://www.dinamani.com/tamilnadu/2015/09/23/2495-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/article3042677.ece

[6] http://tamil.chennaionline.com/news/chennai/newsitem.aspx?NEWSID=ce2a7e8f-571c-44af-8374-ca8fd40f82a9&CATEGORYNAME=TCHN

[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2495-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article7680134.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1110457

[9]  தினமலர், வழக்கறிஞர்கள் தொழில் தர்மத்தை மீறுவதை ஏற்க முடியாது! சுப்ரீம் கோர்ட் நீதிபதி காட்டம், நவம்பர்.9, 2014,02.00.

[10]  தினமலர், நீதிபதிகள், போலீசாருக்கு எதிராக கோஷம் : உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் முற்றுகை, செப்டம்பர்.17, 2015.00.49.

[11] http://www.dailythanthi.com/News/State/2015/09/15010329/In-the-court-room-the-lawyers-movement.vpf

[12] http://www.deccanchronicle.com/150917/nation-current-affairs/article/lawyers-create-ruckus-madras-high-court

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

மே 3, 2012

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

நல்லவர்களாக, தூயவர்களாக, புனிதர்களாக இருந்தால் எம்.பி.க்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஊடகக்காரர்கள் ஒரு மொழியிலிருந்து, மற்ற மொழிக்கு மாற்றம் செய்யும் போது, அம்மொழிக்கே உரித்தான சில சொல்லாற்றங்கள், வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றிலிருந்து பெறப்படும் அர்த்தங்கள், அம்மொழியின் தன்மையில் எடுத்துக் கொள்ளவில்லையென்றால், அல்லது சாதாரணமாக மொழிபெயர்த்தால், சரியான பொருள் கிடைக்காது. இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்க்கும்போது அவ்வாறுதான் ஏற்படுகிறது. वे इनसान की शक्ल में शैतान हैं। “மனித உருவில் உள்ள சாத்தான்களின் வடிவங்கள்” அல்லது சைத்தான் மனித உருவில் உள்ளன என்று மொழிபெயத்தால், உண்மையிலேயே எம்.பிக்கள் “சைத்தான்” என்று சொல்லப்படவில்லை. அம்மொழிப்பிரயோகத்தில் அவர்கள் அத்தகைய கெட்டவர்கள் என்றுதான் பொருள்வரும். இந்தியிலேயே, இரு நாளிதழ்கள் அச்செய்தியை இருவிதமாக வெளியிட்டிருப்பதை கீழே காணலாம்:

क्या बोले थे बाबा[1]छत्तीसगढ़ के दुर्ग से मंगलवार को अपनी यात्रा शुरू करते हुए रामदेव ने कहा था कि सांसदों में अच्छे लोग भी हैं और वह उनका सम्मान करते हैं। लेकिन वहां डकैत, हत्यारे और जाहिल भी हैं। वे वह लोग हैं, जिन्हें किसानों, मजदूरों और देश की लोगों की कोई चिंता नहीं है। वे सिर्फ पैसे के गुलाम हैं। वे इनसान की शक्ल में शैतान हैं। जिन्हें उस पद के लिए चुना गया है, जिसके कि वे काबिल ही नहीं हैं। हमें संसद को बचाना है। हमें भ्रष्ट लोगों को हटाना है। संसद में लुटेरे, हत्यारे व जाहिल बैठे हैं[2]। सत्ता की कुर्सी पर इंसान की शक्ल में हैवान हैं। हमने उन्हें कुर्सी पर बैठाया है। लेकिन वो सत्ता चलाने की पात्रता नहीं रखते। वे लोग किसानों और मजदूरों से हमदर्दी नहीं रखते। वे देश इसलिए चला रहे, क्योंकि हमने ऐसा ही सिस्टम बनाया है। हमने मान लिया है कि 543 रोगी हिंदुस्तान चलाएंगे[3]। हालांकि उनमें कुछ अच्छे भी हैं। हमें संसद को बचाना होगा।

பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று எம்.பி.க்களை பாபா ராம்தேவ் சரமாரி தாக்கி உள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்[4].எம்.பி.க்களை திருடர்கள், கொலைகாரர்கள் என்று யோக குரு ராம்தேவ் விமர்சித்துள்ளதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் புதன்கிழமை (02-05-2012) கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேவையற்று வெளிப்படும் ரோஷம்: ராம்தேவின் பேச்சுக்கு மக்களவைத் தலைவர் மீராகுமார், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அரசியல் சாசன சட்டமே மேலானது. அது நாடாளுமன்றத்துக்கு என்று தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. அதை நாம் முதலில் கட்டிக்காக்க வேண்டும்’ என்று மீரா குமார் தெரிவித்தார்.  “நாடாளுமன்றத்தையும், சட்டம் இயற்றுபவர்களையும் விமர்சிப்பது சாதாரணமாகிவிட்டது. யார் அதிகமாக அவமதிக்கிறார்களோ அவர் பெரிய ஹீரோ ஆகிறார். இது முற்றிலும் தவறு. ஜனநாயக நிறுவனங்களை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரிதான்’ என்றார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இது போன்ற கருத்துகளை ராம்தேவிடமிருந்து தாம் எதிர்பார்க்கவில்லை. 144 சட்டம் அமூலில் இருக்கும் போது மின்சாரம் இல்லை என்று போரடினால் நானும் சட்டப்படி “கிரிமினல்” ஆகிவிடுவேன்[5], என்று பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.

உரிமை மீறல் நோட்டீஸ்: “”எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். “பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவோரால் நாடாளுமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அவர்கள் (ராம்தேவ் பெயரைக் குறிப்பிடவில்லை) மீது நாடாளுமன்ற உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நோட்டீûஸக் கொடுத்துள்ளேன்” என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர் சைலேந்திர குமார் தெரிவித்தார்[6]. இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “ராம்தேவின் பேச்சால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமுதாயத்தில் கெடுகிறது. அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ, உறுப்பினர்களின் உரிமை மீறல் நோட்டீஸ் அனைத்தும் மக்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. அவர் முடிவு எடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

எம்.பி.க்கள் மீது ராம்தேவ் தாக்கு: முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராம்தேவ், “எம்.பி.க்கள் எதிலும் அக்கறையில்லாதவர்கள். விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நாட்டு மக்களையும் நேசிக்காதவர்கள்‘ என்று கடுமையாக குற்றம்சாட்டினார்[7].

அவர்கள் பணத்துக்கு அடிமைகளாகவும், நண்பர்களாகவும் உள்ளனர். நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மனித உருவில் வாழும் பிசாசுகள். அவர்களுக்கு தகுதி கிடையாது.  நாடாளுமன்றத்தில் நல்லவர்களும் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களில் கல்வியறிவற்றவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் உள்ளனர். எனவே நாம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல்வாதிகளை நீக்க வேண்டும்’ என்று கடுமையாக பேசினார் ராம்தேவ். Addressing the media while launching his month-long yatra in Chhattisgarh’s Durg on Tuesday, Baba Ramdev said there were good people among the parliamentarians and he respected them[8]. “But there are dacoits, murderers, illiterates among them[9]. We have to save Parliament. We have to remove corrupt people.” He accused the MPs of not caring for farmers and labourers. “They are friends and slaves of money. They are illiterate, dacoits and murderers. They are devils in the form of humans, who we have elected to those posts. They are not worth it,” he said.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும், அவரது குழுவினரும் எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில் ராம்தேவும் எம்.பி.க்களை கடுமையாக குறைகூறி பேசியுள்ளார்.

ராம்தேவ் ஒரு மென்டல் கேஸ்: லாலு தாக்கு[10]: யோகாகுரு பாபா ராம்தேவ் பைத்தியக்காரர் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்[11]. சத்திஸ்கரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யோகாகுரு பாபா ராம்தேவ், எம்.பி.,க்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் கேட்டபோது, ராம்தேவின் பேச்சு பயனற்றது. இது போன்று பேசுபவர்களும் பயனற்றவர்கள். ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.

ராம்தேவ் கூறியது சரிதான்: அன்னா ஹசாரே[12]எம்.பி.க்கள் குறித்து ராம்தேவ் பேசியதில் தவறில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.நேற்று முன்தினம், சத்தீஸ்கரில் ராம்தேவ் கூறுகையில், “தற்போதுள்ள எம்.பி.,க் களில் சில நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். அதே நேரத்தில், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், படிப்பறிவற்றவர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, பார்லிமென்டை காக்க வேண்டும் என்றார். இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: ராம்தேவ் கூறியதில் எந்தவிதத்திலும் தவறில்லை. அவர் கூறிவது தவறு என்றால், இன்று ஏராளமான எம்.பி.க்களுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.  இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் கொடுக்கும் போது , மக்கள் ஏன்? நெருக்கடி கொடுக்கக்கூடாது. கட்சிகளுக்கு தேவை ஓட்டு. ஆனால் வேட்பாளர்களாக கிரிமினல்களை ஏன நிறுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் தேர்தலில் நின்றால் ஜனநாயகத்தின் கோயில் என்னவாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் 150ற்கும் மேலான கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்கள்[13]: 543 எம்.பி.க்களில் 150 பேர்களுக்கு மேல் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் என்று ஏற்கெனவே பல அறிக்கைகள், செய்திகள், விவரங்கள் வந்துள்ளன[14]. அவர்கள் ஒன்றும் வெட்கப்பட்டு தேர்தலில் நிற்காமல் இல்லை, தோல்வியும் அடையவில்லை, பாராளுமன்றத்தில் உட்காரவும் இல்லை ……………………என்றெல்லாம் இல்லை.

“Of these 150 MPs, 72 have serious charges against them. The maximum criminal charges are against Congress MP from Porbandar in Gujarat Vitthalbhai Hansrajbhai Radadiya. He has a total of 16 cases out of which five cases are of serious nature,” the analysis revealed.”Bharatiya Janata Party (BJP) has maximum number of MPs having criminal cases with 42 MPs, of which 17 have serious criminal cases against them. It is closely followed by Congress with 41 MPs having criminal cases against them. Twelve Congress MPs have serious charges against them,” the study said. அந்த 150ல், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அதிக அளவில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 72 மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் இதைப் பற்றி கவலைப் படவில்லை.பி.ஜே.பியில் 42 எம்.பி.க்கள், காங்கிரஸில் 41 என்று உள்ளனர். அதனால்தான், இரு கட்சிக்காரர்களுக்கும் கோபம் வருகிறது போலும். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், இவர்களை ஏன் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க்கவைத்தன?

“டாப்-10” என்று கிரிமினல் எம்.பி.க்கள் பட்டியலே கொடுக்கப் பட்டது. அப்பொழுதும், யாருக்கும் பொத்துக் கொண்டு வரவில்லை. அதில் லல்லுவும் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் தான் பாபா ராம்தேவை “மென்டல்” என்று “கமன்ட்” வேறு அடிக்கிறார்.

 Here is a list of top ten MPs with a criminal background, compiled by the National Election Watch[15].

Name: Kameshwar Baitha (56)
Constituency represented: Palamau, Jharkhand
Party: Jharkhand Mukti Morcha
Criminal background: Accused in 35 cases and has 50 serious charges against him under the IPC
Convicted: NeverName: Jagadish Sharma, (58)
Constituency represented: Jahanabad, Bihar
Party: Janata Dal-United
Criminal background: Accused in 6 cases and has 17 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Bal Kumar Patel (48)
Constituency represented: Mirzapur, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 13 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Prabhatsinh Pratapsinh Chauvan (67)
Constituency represented: Panchamahal, Gujarat
Party: Bharatiya Janata Party
Criminal background: Accused in 3 cases and has 10 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kapil Muni Karwariya (42)
Constituency represented: Phulpur, Uttar Pradesh
Party: Bahujan Samaj Party
Criminal background: Accused in 4 cases and has 8 serious charges against him under the IPC
Convicted: Never

Name: P Karunakaran (64)
Constituency represented: Kasargod, Kerala
Party: Communist Party of India-Marxist
Criminal background: Accused in 12 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kunvarji Mohanbhai Bavaliya (54)
Constituency represented: Rajkot, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 2 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Vittalbhai Hansrajbhai Radadiya (51)
Constituency represented: Porbandar, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 16 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Ramkishun (49)
Constituency represented: Chandauli, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Lalu Prasad Yadav (60)
Constituency represented: Saran, Bihar
Party: Rashtriya Janata Dal
Criminal background: Accused in 7 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

நாட்டை ஆள்பவர்களுக்கு தகுதி, யோக்கியதை, தார்மீக பொறுப்பு முதலியவை வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. அதனை அவ்வாறு கூறுவதே தவறாகும். இப்படி கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, ஊழல், லஞ்சம் என்று பல குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகி, பைளில் வெளிவந்து, பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அரசு செலவில் உலா வந்தால் அது மக்களுக்கு அசிங்கம் இல்லையா? ஒரு லட்சம் வாங்கிய பங்காரு லட்சுமணன் ஜெயிலில் என்றால், 1,73,000 கோடிகள் சுருட்டியவர்கள் எப்படி வெளியில் இருக்கிறார்கள்? பிணையில் வெளிவந்து பாராளுமன்ரத்திலும் உட்கார்ந்து கொள்கிறார்கள்?இதனை எடுத்துக் காட்டும் போது, அவர்கள் கோபம் அடைகிறார்கள், சட்டப்படி, உரிமை மீறல் என்று நடவடிக்கை எடுப்போம் என்றால், சட்டப்படி அந்த 150 எம்,பிக்களையும் வீடிற்கு அனுப்ப வேண்டியது தானே? எம்.பி பதவியை பறிக்கவேண்டியது தானே? மந்திரியாக உள்ளவர்களின் பதவியையும் பறிக்க வேண்டியதுதானே? ஆனால், காங்கிரஸ் அல்லது மேலிடம் சோனியா மெய்னோ அவ்வாறு செய்யவில்லையே? தாமஸ் கதையை அதற்குள் மறந்து விட்டார்கள் போல!

வழக்கு முடிந்து, தான் குற்றவாளி இல்லை என்ற பிறகு பதவிக்கு வருவது தானே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஜே.பி ஆட்சி மூன்று மாநிலங்களில் கலைக்கப் பட்டது. ஆனால், தவறில்லை என்று தீர்ப்பு வந்தபோது, அது மறுபடியும் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. அந்த இளைஞர் ராகுல் ஏன் இதைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்வதில்லை? ஒருவேளை தனது அப்பாவே ஊழல் பேர்வழி என்ற பிரச்சினை உள்ளது என்று அமைதியாக உள்ளாரா? இல்லை பிரியங்கா அல்லது வதேராவை வைத்து மோட்டார் பைக்கில் ஊர்வலம் வரச் சொல்லலாமே? பாபா ராம்தேவின் உருவ பொம்மையை எரிப்பவர்கள், அந்த 150 எம்.பிக்களின் உருவ பொம்மைகளை எரிப்பார்களா அல்லது பாலாபிஷேகம் செய்வார்களா?

ஹவாலா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட எ,.கே.அத்வானி ராஜினாமா செய்து, காத்திருந்து, வழக்கு முடிந்து, தான் நிரபராதி என்று முடிவானப் பிறகுதான் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதேபோல மற்றவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை?

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று பாரம்பரியம் இருக்கும் போது, மக்கள் இனிமேல் அத்தகைய ஆட்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. முதலில் அந்தந்த கட்சிகள் அவர்களை தேர்தலில் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் தேர்தல் கமிஷன் அவர்களை நிறுத்தவேண்டும். தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போதே அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படவேண்டும். அப்பொழுது தான், இந்நிலை மாறும். இவ்வாறு சொல்வதே தவறு என்று பாராளுமன்றம் எப்படி சொல்ல முடியும்? அங்கிருக்கும் 150 பேர்கள் எப்படி தமக்கு எதிராக தாமே பேசுவார்கள் அல்லது தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள்? விவாதம் வரும் போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மற்றவர்கள் பேசுவதை கேட்பார்கள் அல்லது தாமே பேச முன்வருவார்கள்?

அது எப்படி சட்டப்படி செல்லுபடியாகும்? இதெல்லாம் அங்குள்ள மெத்தப் படித்த எம்.பிக்களுக்கு, ஐந்து / ஆறு முறை என்று எம்.பிக்களாக இருப்பவர்களுக்கு, சட்டம் படித்த மாமேதைகளுக்கு, லட்சங்களில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்-எம்,பிக்களுக்கு தெரியாமலா இருக்கும்?

வேதபிரகாஷ்

02-05-2012


விபச்சாரத்தைத் தவிர ஒருமித்த செக்ஸ் குற்றமில்லை: சொல்வது உச்சநீதிமன்ற நீதிபதி!

ஏப்ரல் 30, 2010

விபச்சாரத்தைத் தவிர ஒருமித்த செக்ஸ் குற்றமில்லை: சொல்வது உச்சநீதிமன்ற நீதிபதி!

வயதானவர்களிடம் ஒருமித்த மாற்றுப் புணர்ச்சி, திருமணத்திற்கு முந்தைய செக்ஸ், “விபச்சாரத்தை”த் தவிர, இருவர் ஈடுபட்டால், அது குற்றமாகாது [ Consensual heterosexual relation between adults, including pre-marital sex, is no offence except in cases where the partners are liable to be charged for “adultery”, ruled the Supreme Court].

“விபச்சாரம்” இல்லாத திருமண பந்தத்தில் வராத செக்ஸ் / உடலுறவு எதுவோ? 41-பக்கங்கள் தீர்ப்பு எழுதிய சௌஹான் குறிப்பிட்டுள்ளது, “நமது சமூகத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள்தாம் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அத்தகைய திருமண பந்தத்திற்கு வெளியில் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பினால் / வைத்துக் கொண்டால், அது சட்டப்படி குற்றாமாகாது. ஆனால், அச்செயல் – அத்தகைய உடலுறவு இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 497ல் சொல்லியபடி “விபச்சாரம்” என்ற வரையரைக்குள் வரக்கூடாது” [Justice Chauhan, writing the 41-page judgment for the Bench, said, “While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery’ as defined under Section 497 of the Indian Penal Code.”

இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 497 என்ன சொல்கிறது? யாராவது ஒருவரிடம் உடலுறவு வைத்துக் கொண்டால் , அவள் மற்றொருவருடைய மனைவி என்று தெரிந்தால், அவன் அனுமதி அல்லது சதியில்லாமல் இருந்தால், அந்த உடலலுறவு / செக்ஸ் கற்பழிப்பு ஆகாது. ஆனால் விபச்சாரக் குற்றத்தில் தண்டிக்கப் படுவர். அத்தண்டனை ஐந்தாண்டு சிறைவாசம், அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனையாக இருக்கும். அந்நிலையில் மனைவியும் ஒத்துழைத்தாள் என்று தண்டிக்கப் படுவாள் [ Section 497 provides, “Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case, the wife shall be punishable as an abettor.”]

கட்டுப்பாட்டில் இருக்கும் பிரபலமான / [இரபலமில்லாத தனிநபர் கருத்துகள் / கருத்துரிமை என்பதெல்லாம் வரைரைக்க முடியுமா?  “பிரபலமில்லாத கருத்துகளை வெளியிடுவதால் தனிப்பட்ட நபர்களை குற்றவியல் சட்டத்தினால் தண்டிப்பது என்பது (நீதிமன்றத்தின்) செயலாகாது. கருத்து சுதந்திரம், அதன் எல்லைகள், வரையரை-கட்டுப்பாடு முதலியவை உள்ளநிலையில், குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு அனுகூலமாகத் தான் அத்தகைய வரையரை-கட்டுப்பாடு இருக்கின்றது” [“It is not the task of criminal law to punish individuals merely for expressing unpopular views. The threshold for placing reasonable restrictions on the freedom of speech and expression is indeed very high and there should be a presumption in favour of the accused in such cases,” the Bench said.]

தப்பான சட்ட முன்மாதிரியை (bad legal precedence) ஏற்படுத்திருக்கிறாற்கள் நீதிபதிகள்: நீதிபதிகள் நிச்சயமாக அரசியல் ரீதியில் அல்லது தங்களது எஜமானர்களின் உத்தரவு படித்தான் இத்தீர்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது தெரிகிறது. சட்டத்தை இவ்வாறு வளைத்து, மற்றும் முழுவதுமாக மற்றப் பிரிவுகளைக் கருத்தில் கொள்ளாமல் [அதுவும் தெரிந்திருந்தே] அத்தகைய தீர்ப்புக் கொடுத்துள்ளது, மற்றும் அதற்கான சொதப்பலான விளக்கம் கொடுத்துள்ளது, நிச்சயமாக ஒரு கேடுகெட்ட சட்ட முன்மாதிரியை உண்டாக்கியுள்ளது எனலாம்.

காலம் நிச்சயம் எல்லோருக்கும் பதில் சொல்லும். அந்ந்நாள் சீக்கிரமே அருகில் உள்ளது எனலாம்.

நீதிபதிகளின் விமர்சனம், வக்கீல்களின் தொழில்!

திசெம்பர் 29, 2009
தலைமை நீதிபதியை விமர்சிக்கிறார் கர்நாடக நீதிபதி
டிசம்பர் 28,2009,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4812&ncat=IN&archive=1&showfrom=12/28/2009

பெங்களூரு: “தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நச்சுப் பல் பிடுங்கப்பட்ட ஒரு நல்ல பாம்பு. தவறு செய்யும் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. மேலும், நீதிபதிகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வருவது என்பதும் நடைமுறைக்கு ஒவ் வாததாகவே உள்ளது,” என கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சைலேந்திர குமார் தெரிவித்துள்ளார். மீண்டும், மீண்டும் தலைமை நீதிபதியை விமர்சித்து தன் அதிருப்தியை காட்டிவருகிறார்.

கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனை விமர்சித்தவர் நீதிபதி சைலேந்திர குமார். மேலும், கர்நாடக ஐகோர்ட் நீதிபதியான இவர், அம்மாநில வக்கீல்கள் சங்க மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள விழா மலருக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: தவறு செய்யும் நீதிபதிகளை தண்டிக்கும் அதிகாரம், நீதித்துறையின் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு இல்லை. நில அபகரிப்பு புகாரில் சிக்கிய கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில், மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நச்சுப் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல உள்ளார். அதை மாற்ற வேண் டும். தவறு செய்யும் நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்க வேண்டும்.சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உட்பட நீதித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் முறையற்றதாக, ஒழுங்கீனமானதாக இருப்பது அதிகரித்து வருவதால், நீதித்துறையில் பொறுப்புடைமையை உருவாக்க வேண்டியது அவசியம்.

மேலும், நீதிபதிகளுக்கு எதிராக பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரும் விவகாரமும், நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை.இவ்வாறு கட்டுரையில் சைலேந்திர குமார் தெரிவித்துள்ளார்.மொய்லி கருத்து என்ன?””நீதிபதிகளின் நடத்தை மற்றும் பொறுப்புடைமை மசோதா அடுத்த மாதம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்,” என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: இந்த மசோதா அமலுக்கு வந்தால், நீதிபதிகள் முறைகேடுகளில் ஈடுபடுவது தடுக்கப்படும். நீதித்துறையின் குறைபாடுகளும் சரி செய்யப்படும். பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரின் போது, இரு சபைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா நிறைவேறி விட்டால், களங்கம் நிறைந்த நீதிபதிகள் யாரும் பதவியில் தொடர முடியாது. அவர்கள் மீது சட்ட அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுக்க முடியும். நீதித்துறையின் புனிதம் காக்கப்படும்.

வக்கீல் தொழில் புனிதமானது என்றெல்லாம் சிதம்பரம் பேசியுள்ளார்.

ஆனால் திடீரென்று அது தினமலர் தளத்திலிருந்து மறைந்துவிட்டது!

இருப்பினும் வாசகர்கள் இப்படி போரிந்து தள்ளிவிட்டனர்:

நிதி அமைச்சராக இருந்தபோது தன் மனைவி ஒரு கம்பனியின் நிதி சம்பந்தபட்ட வழக்கில் வாதடினாரே அது தற்போதய உள்துறை அமைச்சருக்கு மறந்து போய்விட்டதா?

வக்கீல் தொழில் புனிதமானது என்பதால் தான், மக்களிடம் இருந்து deposit collect செய்து ஏமாற்றி ஓடிய அனுபவ் நடேசனுக்காக, வாதடினாரோ சிதம்பரம்

மாமா ஏ சி முத்தையா மீதுள்ள வழக்குகளை ஒரு இன்ச் முன்னேற விட்டிருக்கிறாரா?

இவரது உறவினர் மெர்க்கண்டைல் கிரெடிட் கார்பரஷன் புகழ் டைரக்டர்கள் ஓடி ஒழிந்தபோது ஏழை டெபாசிட்டர்கள் பக்கம் நின்றாரா அல்லது கிரிமினல் பக்கம் நின்றாரா?அவர்களைப் போலீசில் பிடித்துக்கொடுக்க ஏதேனும் முயற்சி எடுத்தாரா?

தங்கக் காசு மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு வாதாடியது யார்? அதில் பலர் வெளிநாட்டிற்கு ஓடப்போவது முன்கூட்டியே தெரிந்தும் தப்பவிட்ட சக்தி இவர் இல்லையா?

இதல்லாம் கிடக்கட்டும், இவரது தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக ஜெயின் கமிஷனால் கூறப்பட்ட சந்திராசாமி மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா?

“எஸ்ஸி”ற்கு எதிராக “எஸ்ஸி”! [SC versus SC]

திசெம்பர் 20, 2009

“எஸ்ஸி”ற்கு எதிராக “எஸ்ஸி”! [SC versus SC]

நீதிபதிகள் மற்றவர்கள் கூட ஜாதி அடிப்படையில் வாதிடுவது வேடிக்கையாக உள்ளது.

மேலும், பால் டேனியல் தினகரன் பிரேம்குமார் ஒரு கிருத்துவர்.

இவர் மதம் மாறியவுடனே ஏசுவின் கிருபையால் மிகவும் உயர்ந்து விட்டார்.

பிறகு, “தலித்” என்றெல்லாம் கூறிக் கொள்வது, ஏசுவையே அவமதிப்பது, ஏமாற்றும் செயலாகும். மேலும், ஏற்கெனெவே உள்ள உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் (Soosai vs UOI 1985 AIR) அவமதிப்பது போன்றதாகும்.

ஆகவே, கிருத்துவர்கள் போலி நாடகம் ஆடக் கூடாது, ஒன்று ஏசுவை நம்பவேண்டும், இல்லை, தங்களை நம்பவேண்டும்.

தலித் என்தனால்தான் தினகரன் தாக்கப்படுகிறார்[1]! மதிப்புக்குரிய- பொறுப்புள்ள எம்பிக்கள் தினகரன் விஷயத்தில் ஜாதி ரீதியில் பேச ஆரம்பித்தது வியப்பாக உள்ளது. தினகரன் நீக்கப்படுவதற்காக மற்ற எம்பிக்கள் அறிக்கைக் கொடுத்தபோது அவர் எஸ்ஸி[2] என்பதனால்தான் அவ்வாறு குறிவைக்கப்பட்டுள்ளார் என்று குற்றாஞ்சாட்டினர். கட்சிநிலைகளைக் கடந்து பாராளுமன்ற எஸ்ஸி குழு ராஜ்ய சபாவில் தினகரன் நீக்கப்படுவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தனர். ஊழலில் சிக்கியுள்ள எல்லா நீதிபதிகளின் மீதும் விசாரணைச் செய்யப்படவேண்டும் என்ற தீர்மானமும் நிறவேற்றப்பட்டது. ராதாகாந்த் நாயக் என்ற அந்த குழுவின் தலைவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அதைத் தெரிவித்தார். காங்கிரஸ் எம்பிக்கள் அதில் கையெழுத்திடவில்லை என்பது நோக்கத்தக்கது. ஆனால் பிஜேபி, இடதுசாரி, எஸ்.ஜே.பி எம்பிக்கள் கையெழுத்திட்டனர்.

Conspiracy against Dalit: தலித்திற்கு எதிரான சதி: பி. எல். பூனியா என்ற உபியைச் சேர்ந்த காங்.எம்பி இது தலித்திர்கு எதிரான சதி என்றார். நீதிபதி நீக்கப் படவேண்டும் என்ற நிலை சௌமித்ர சென் என்ற கொல்கொத்தா நீதிபதி விஷயத்திலும் உள்ளது. ஆனால் அவர் விஷயத்தில் இத்தகைய பரபரப்பு இல்லை. ஆன்னல் தினகரன் விஷயம் அதிக கவனத்தை ஈர்க்கிறது[4].  ஆதலால் விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். 1990ல் நீதிபதி வி. ராமசாமிக்கு எதிராக அத்தகைய முயற்ச்சி நடந்தது.  அப்பொழுது அது தென்னிந்தையருக்கு எதிரானது என்று சொல்லப்பட்டது, பிறகு அவரும் தப்பித்துக் கொண்டார். ராஜ்யசபையில் இப்பிரச்சினை எழுப்பப் பட்டது. இந்த அமைப்பு தினகரனுக்கு எதிரான பதவி நீக்கம் பரிந்துரைப்பை எதிர்க்கவில்லை,ஆனால் அவர்மீதுள்ள ஊழல் குற்றங்கள் தகுந்தமுறையில்  விசாரிக்கவேண்டும், ஊடகங்கள் சொல்வதின் மீது செயல்படுத்தக் கூடாது, என்றார். இவ்விதமாக கடைசியில் இதை ஜாதிப்பிரச்சினையாக்கிவிட்டனர். போதாகுறைக்கு மாயாவதி வேறு ஒரு கடித்தை எழுதியிருக்கிறார்[1]. எந்த காரணத்திற்காகவும் தினகரன் விஷயத்தில் அநீதி இழைக்கப்படக் கூடாது, என்று குறிப்பிட்டுள்ளார்.  இவ்விதமாக ஜாதி-மதம் என்று திசை மாறுவது, முன்பு அஸாருத்தீன் தான் முஸ்லீமென்பதைனால்தான் அவ்வாறு நடத்தப் படுகிறார் என்று குற்றஞ்சாட்டியதுதான் ஞாபகம் வருகிறது!

08-08-08: பால் டேனியல் தினகரன் பிரேம்குமார்[3] வெள்ளிக்கிழமை கர்நாடக ஆளுனர் ராமேஸ்வர தாகூர் முன்னிலையில் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் நீபதியாக பதவி ஏற்றூக் கொண்டபோது அவர், கிருத்துவர் என்றோ, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர், தலித் என்றேல்லாமோ எவரும் நினைத்ததுக் கூட இல்லை. சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாஅக இருந்தவர், பதவி உயர்விற்கு அங்கு சென்றார். நிகழ்ச்சியில் மனை, மகள்கல் சகிதம் முதலமைச்சர் எடியூரப்பவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டார். அப்பொழுது திமுகவினர் தம்மைக் கண்காணிக்க இவரை அனுப்பிவைத்தனர், காவிரி, ஒகெனக்கல் பிரச்சினைகளில் அவர் எதிராகச் செயல்படுவார்  என்றெல்லாம் அவர் நினைத்திருக்க மாட்டார். ஆனால், இன்றோ  பால் டேனியல் தினகரன் பிரேம்குமார் அவர்களின் சாதி பற்றி பேசப்படுகிறது!




[1] It is onluy because of the press that created the hype. At the time of swearing over ceremony, the press never made it a big issue that he was a SC / Dalit or a Christian and so on!



[1] http://timesofindia.indiatimes.com/india/Dinakaran-being-hounded-for-being-a-Dalit-MPs/articleshow/5353352.cms

[2] It is wrong and illegal also to raise such issue, as he was from a converted family and being a practicing Christian now.

[3] http://www.thehindu.com/2008/08/09/stories/2008080959450500.htm

[4] http://timesofindia.indiatimes.com/india/Dinakaran-row-Now-Maya-writes-to-PM/articleshow/5357532.cms


போலீஸ் அதிகாரிகள் மீது கல்லூரி முதல்வர் புகார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

திசெம்பர் 18, 2009
போலீஸ் அதிகாரிகள் மீது கல்லூரி முதல்வர் புகார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
டிசம்பர் 18,2009,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4734

இப்படி செய்திகள் வருகின்றன. இவை மக்களை பாதிக்கும் விஷயம்.

ஏதோ பணம் இருக்கிறது கல்லூரி ஆரம்பித்தேன். பிரச்சினையில் மாட்டிக் கொண்டேன் என்றெல்லாம் முதல்வர் சொன்னால், படிக்கும் மாணவர்களின் கதி என்னாவது?

நீதிமன்றத்தின் ஆணைப் படி நடவடிக்கை எடுக்கப் பட்டதா, இல்லையா?

பிறகு என்னவாயிற்று?

மக்களுக்கு தெரியபடுத்த என்ன வழி?

Court news detail

சென்னை:”போலீஸ் மீது கல்லூரி முதல்வர் அளிக்கும் புகாரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்து சட்டப்படி விசாரிக்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜோயல் என்பவர் தாக்கல் செய்த மனு:

பணம் இருக்கிறது என்று காலேஜ் / கல்லூரி ஆரம்பித்தது: தூத்துக்குடி அருகில் நாசரேத்தில் உள்ள கல்லூரியில் முதல்வராக உள்ளேன். எனக்கு சக்ரவர்த்தி டேனியல், அவரது மனைவி சுலோச்சனா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. மூன்று பேரும் சேர்ந்து ஒரு அறக்கட்டளையை துவக்கினோம். எனது சேமிப்பு பணத்தை, அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு மாற்றினேன். இந்நிலையில், சட்டவிரோதமாக அறக்கட்டளையின் வங்கி கணக்கில் இருந்து 40 லட்சம் ரூபாயை சக்ரவர்த்தி, அவரது மனைவி மாற்றிக் கொண்டனர்.

போலீஸார் தாக்குதல்: இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தேன். புகாரை பதிவு செய்தனர்.கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகாலையில் எனது வீட்டின் வெளியில் சிலர் நின்று கொண்டு சத்தம் போட்டனர். கதவை திறந்து வெளியில் வந்தேன். அப்போது, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் என்னைபிடித்து தாக்கினார். அவருடன் வந்த போலீசாரும் என்னை தாக்கினர்.ஒரு வேனில் கோவில்பட்டிக்கு கூட்டிச் சென்றனர். அங்குள்ள ஒரு ஓட்டல் அறையில் அடைத்து வைத்தனர். பேப்பரில் கையெழுத்திடுமாறு மிரட்டினர்.

போலீஸாரே காசு / லஞ்சம் கேட்டது: பின், சென்னைக்கு வேனில் அழைத்து வந்தனர். 2007ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி, தாம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலீசார் என்னை துன்புறுத்தியது குறித்து மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தேன். என்னை புழல் சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன். சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்காணிப்பாளர், விரிவான விசாரணை நடத்தி விஜிலென்ஸ் கமிஷனருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். போலீஸ் காவலில் இருக்கும் போது என்னிடம் ஐந்து லட்சம் ரூபாய் தருமாறு சப்-இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் கேட்டது, கோவையில் எனது உறவினரிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றது பற்றி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலீஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்தல்: எனது புகாரின்படி, முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீசார் மறுக்கின்றனர். எனவே, கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி நான் அளித்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார்.

நீதிமன்ற உத்தரவு: மனுதாரர் சார்பில் வக்கீல் பால் கனகராஜ் வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி செல்வம், “புகாரின் நகலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்காணிப்பாளருக்கு மனுதாரர் அளிக்க வேண்டும். அதை பதிவு செய்து, தகுந்த விசாரணை நடத்தி, சட்டப்படி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கண்காணிப்பாளர் செயல்பட வேண்டும்’ என உத்தரவிட்டார்.