Archive for the ‘கிருஷ்ணய்யர்’ Category

சென்னை சட்டக்கல்லூரி மாணவி-மாணவர் போராட்டம், தெருக்களில் தர்ணா, பொது மக்கள் அவதிக்குள்ளானது (3)

பிப்ரவரி 5, 2015

சென்னை சட்டக்கல்லூரி மாணவி-மாணவர் போராட்டம், தெருக்களில் தர்ணா, பொது மக்கள் அவதிக்குள்ளானது (3)

சட்டக்கல்லூரி மாணவிகள் அடித்துக் கொண்டது - நவம்பர் 2008

சட்டக்கல்லூரி மாணவிகள் அடித்துக் கொண்டது – நவம்பர் 2008

வாகனங்கள் நிறுத்தம், பொது மக்கள் அவதி: பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி மாணவர்கள் சாலை மறியலால் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிவரை பாரிமுனையிலிருந்து கடற்கரை   சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எந்த வாகனங்களும் அந்த சாலையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால், வாகனங்கள்   கொடிமர இல்ல சாலையில் திருப்பி விடப்பட்டன. ஆனால், குறளகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த சாலையிலும் வாகனங்கள்   போக முடியாமல் திணறின. வாகனங்களில் சென்றுகொண்டிருந்த பயணிகளும், பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக   பாதிக்கப்பட்டனர். இதனால், போலீசாருக்கு எப்படி போக்குவரத்தை சரிக்கட்டுவது என்று குழப்பம் ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்குமுறை பின்பற்ற வேண்டிய மாணவ-மாணவியர், அதிலும் குறிப்பாக சட்டம் பட்ப்பவர்கள் இவ்வாறு தெருக்களில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைறாதிக அளவில் பாதிக்கும் அளவில் நடந்து கொண்டது வருத்தமாகவே இருந்தது.

 

Law college students- baton charged to disburse by the police- தி ஹிந்து போட்டோ

Law college students- baton charged to disburse by the police- தி ஹிந்து போட்டோ

பொது மக்களின் அதிருப்தியை சம்பாதித்த சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம்: சட்டக்கல்லூரி மாணவி-மாணவியர் பீச் ரோடு – பாரி முனை தெருக்களில் உட்கார்ந்து கொண்டு, ஆர்பாட்டம் நடத்தினர். சுமார் மதியம் ஒரு மணி அளவில் பேருந்துகள், மற்ற வாகனங்கள் செல்லாதவாறு சாலைகளில் உட்கார்ந்து கொண்டு மறியல் செய்தனர். இதனால், பொது மக்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்தனர். முதியவர், பெண்கள், குழந்தைகள், மற்றவர்கள் விசயம் புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். சென்ட்ரலுக்கு ரெயில் பிடிக்க பேருந்தில் வந்தவர்கள் தவித்தனர். பொது மருத்துவமனை (சென்ட்ரலுக்கு எதிரில்) மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனைகளுக்கு மதிய உணவை எடுத்துச் சென்ற பெண்களும் பரிதவித்தனர்.  பொதுமக்களில் சிலர் வெளிப்படையாகவே, அவர்களைத் தட்டிக் கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அவர்கள் அதனைக் கேட்பதாக இல்லை. மூன்று வாரங்களாக நாங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடுகிறோம் என்று வாதிட்டனர். ஒருவர், பீச் ரோட்டில் இருந்து வரும் வண்டிகளை போகவிடுங்கள் என்று கெஞ்சினார். வக்கீல் போல கோட்டு போட்டுக் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி அவரிடம் கேளுங்கள் என்றனர். சென்று அவரிடம் கேட்டால், அவர் மசியவில்லை.

 

Ambedkar college - 2008 knife-wielding law srudents

Ambedkar college – 2008 knife-wielding law srudents

மாணவிகள் தெருக்களில் உட்கார்ந்து நடத்திய தர்ணா: மாணவிகளை ரோட்டில் / தெருவில் உட்காரவைத்து, இந்த மறியல் போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத் தக்கது! இப்படி மாணவிகளை முன்னிலைப் படுத்தி சாலை மறியல் நடத்தியது விசித்திரமாக இருந்தது. மேலும் அம்மாணவியர் சிறிது கூட இரக்கம் இல்லாத விதத்தில் பேசியது, வாதம் புரிந்தது முதலியன பொது மக்களுக்குத் திகைப்பாக இருந்தது. பொது மக்களின் கஷ்டம், அவதி, தொந்தரவு படும் நிலை முதலியவற்றை அந்த மாணவிகளுக்கு விளக்கினார் அவர்! கையெடுத்து கும்பிடவும் செய்தார்! ஆனால், அந்த மாணவிகள் மசியவில்லை, இரக்கம் காட்டவில்லை! நாளைக்கு ஒருவேளை அவர்களது பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள், உற்றோர், மற்றோர் அவ்வாறு சிக்கிக் கொண்டால் என்ன செய்வார்கள் என்று அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை! பெண் என்றால் பேயும் இரங்கும் என்பர், ஆனால், இந்த இளம் பெண்கள் யாருக்கும் இரங்கவில்லை! ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வந்து ஒரு பெண் தலைவியிடம், “டி.எல்.எஸ்.டம் பேசியாகி விட்டதா?”, என்று கேட்டார். “அவர் வந்து கொண்டிருக்கிறார், நீங்கள் வழி விட்டால் தான் இங்கு வரமுடியும்”, என்று அவர் சொன்னார். ஆனால், அந்த இளம்பெண், அலட்சியமாகவே இருந்தார்! போலீஸார் இவர்களிடம் ஏன் இந்த அளவிற்கு மெத்தனமாக நடந்து கொள்கின்றனர் என்று தெரியவில்லை! அவர்கள் நடந்த கொண்ட விதம், யாரோ தூண்டி விட்டு, இவ்வாறு ஆர்பாட்டம் செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது! இதற்குப் பிறகு தான், கல்வீச்சு, தடியடி முதலியன நிகழ்ந்தன.

 

ம.க.இ.க- சித்தாந்த மோதல்-சட்டக்கல்லூரி

ம.க.இ.க- சித்தாந்த மோதல்-சட்டக்கல்லூரி

அரசியல் பின்னணி, சித்தாந்தவாதி கட்சிகளின் தூண்டுதல் முதலியன: திராவிட அரசியலில் மாணவர்களைத் தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்துவது, நடத்தி வைப்பது என்பது சகஜமான விசயம் தான். இத்தகைய விசயத்தில் “பேருந்து ஸ்ட்ரைக்” போன்ற விவகாரங்களும் அடங்கும். மேலும், சட்டக் கல்லூரியில், திராவிட கட்சிகளின் தாக்கம் மட்டும் இல்லாமல் சித்தாந்த கட்சிகள், இயக்கங்களின் தாக்கங்களும் இருந்து கொண்டு செயல்பட்டு வருகின்றன. மகஇக, “புரட்சிகர” அமைப்புகள், கம்யூனிஸ்ட் தீவிரவாத கோஷ்டிகளும் (சிபிஎம்எல் போன்றவை), தனித்தமிழ்நாடு கேட்கும் பிரிவினை கும்பல்கள் (தன்னுரிமை, தமிழ்-தேசிய பிரிவுகள்) இதில் அடக்கம். மாணவ-மாணவியர்களை ஜாதி, மதம், மொழி, கட்சி முதலியவற்றின் மூலம் பிரிப்பது, துவேசத்தை வளர்ப்பது முதலியவை இவற்றின் வேலையாகும். நோட்டீசுகள், குறும்புத்தகங்கள் முதலியவற்றை மாணவ-மாணவியர்களிடம் சுற்றுக்கு விடுவர். உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் சுவரொட்டிகளையும் கல்லூரி வளாகங்களில் ஒட்டுவர். அவற்றை அப்புறப்படுத்தும் விசயத்திலும் கலாட்டா செய்வர்.

 

CPI-ML Candidate Lawyer K. Bharathi seen addressing students and members of AISA, the students wing of CPI-ML (Liberation) as they hold a demonstration

CPI-ML Candidate Lawyer K. Bharathi seen addressing students and members of AISA, the students wing of CPI-ML (Liberation) as they hold a demonstration

மாணவமாணவியர்களைப் பிரிக்கும் சித்தாந்த கும்பல்கள்: அடிக்கடி கூட்டம், மாநாடு போன்றவற்றை நடத்தி அதில் மாணவ-மாணவியர்களை கலந்து கொள்ள செய்கின்றனர். இதனால், அவர்களின் மனங்களில் அத்தகைய எண்ணங்கள் உருவாகி, சந்தர்ப்பம் கிடைத்தால் வன்முறையில் ஈடுபடவேண்டும் என்ற மனப்பாங்குடன் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். படிக்கும் மற்ற மாணவ-மாணவியர்களை சீண்டுவது, தொந்தரவு செய்வது, வலுக்கட்டாயமாக கூட்டம்-மாநாடுகளில் பங்கு கொள்ள செய்வது, சந்தா கட்ட செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாணவ-மாணவியர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், வெளியே சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர். ஆளும் கட்சிக்கு இடைஞ்சல் கொடுக்க வேண்டும் என்ற விதத்தில் உள்ள மற்ற கட்சிகள் இத்தகைய போராட்டங்களைத் தூண்டு விடுகின்றன. மகஇக, “புரட்சிகர” அமைப்புகள் (மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்ன, பெண்கள் விடுதலை முன்னணி), கம்யூனிஸ்ட் கோஷ்டிகள் அதில் குளிர் காய்கின்றன.

CPIML- splinter groups

CPIML- splinter groups

இத்தகைய மாணவ-மாணவியர்கள் நாளைக்கு வக்கிலாக தொழிலுக்கு வரும்போதும், அதே மனப்பாங்குடன் இருக்கின்றனர், செயல்பட்டு வருகின்றனர், நீதிபதி ஆனாலும், அத்தகைய மனப்பாங்கு மாறுவதில்லை, மாறாக இருகிப் போகின்றது. இதனால், பல தீர்ப்புகளும் பாரபட்சமாக இருந்து, சமூகத்தைப் பாதிக்கின்றன. இவ்வாறு 60-100 வருடங்களாக தமிழக மக்களைப் பிரிந்து, சித்தாந்த ரீதியிலேயே உழன்று, மாநிலத்தை பின் தங்க வைத்துள்ளது தான் இவர்களது சாதனையாக உள்ளது.

 

© வேதபிரகாஷ்

05-02-2015

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

மார்ச் 17, 2012

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?


லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்

Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.

Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani) 

3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th 

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

  • ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
  • அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
  • அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
  • முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
  • கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
  • ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
  • இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?

திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –

  1. நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
  2. முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
  3. தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
  4. உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
  5. அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.

இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!

வேதபிரகாஷ்

16-03-2012


 


[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.

சிக்கலில் பாலகிருஷ்ணனும், வருத்தத்தில் கிருஷ்ண அய்யரும்!

திசெம்பர் 28, 2010

சிக்கலில் பாலகிருஷ்ணனும், வருத்தத்தில் கிருஷ்ண அய்யரும்!

 

சிக்கலில் பாலகிருஷ்ணனும், வருத்தத்தில் கிருஷ்ண அய்யரும்! “தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றபோது நான் புதிய அத்தியாயம் பிறந்ததாக மகிழ்ந்தேன். ஆனால் இப்போது நாம் ஏன் நீதிபதியாக இருந்தோம் என்று வருத்தமடைகிறேன். கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்ததாக புகார்கள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்”, என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரிக்கை விடுத்துள்ளார்[1]. இவர்கள் எல்லோருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடத் தக்கது. இவரை அடுத்து நீதித்துறையைச் சேர்ந்த  மற்றவர்களும், இதைப் பற்றி விசாரிக்க உத்தரவு இடவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்[2].

 

பாலகிருஷ்ணின் குடும்பத்தினரின் சொத்து விவரங்கள்[3]: கேரளாவின் ஒரு டிவி சேனலில் ( Asianet TV channel[4]) கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும், பல்வேறு நகரங்களில் மிகப் பெரிய அளவுக்கு அவர்கள் சொத்துக்களை சட்டத்திற்குப் புறம்பாக வாங்கி குவித்துள்ளதாகவும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. DYFI அவர்மீது உரிய நடவடிக்கை ந்டுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது, இப்பொழுதுள்ள பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று கூறியுள்ளது.

 

ஏ. ராஜா- கே. வீரமணி – பாலகிருஷ்ணன் சம்பத்தை ஆராய வேண்டும்: சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதியை முன்னாள் அமைச்சர் ராசா மிரட்டியதாக எழுந்த சர்ச்சையில் கே.ஜி.பாலகிருஷ்ணன் பெயரும் அடிபட்டது. ராசாவை காப்பாற்றும் நோக்கில் அவர் செயல்பட்டதாகவும் சர்ச்சைகள் வெடித்தன. ராசாவின் பெயரைக் குறிப்பிட்டு கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு கடிதம் போனதாக ரகுபதி கூறினார்[5].ஆனால் அதை பாலகிருஷ்ணன் மறுத்தார். ஆனால் ரகுபதி எழுதிய கடிதத்தை நான்தான் பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன் என்று விளக்கினார் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே. இதனால் பாலகிருஷ்ணன் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலகிருஷ்ணனின் குடும்பம் சொத்துக் குவிப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணய்யர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான கிருஷ்ணய்யர், இந்தியாவின் முன்னணி மனித உரிமை ஆர்வலரும் கூட. தூக்குத் தண்டனைக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வருபவர்.

 

கிருஷ்ண அய்யர் வருத்தப் பட்டுக் கூறியது! பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீதான புகார்கள் குறித்து அவர் கூறுகையில், “நான் நீதிபதியாக இருந்தேன் என்பது இப்போது எனக்கு அருவெறுப்பாக உள்ளது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக உயர்ந்தபோது புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளதாக பெருமைப்பட்டேன். ஆனால் இப்போது அப்படி நான் நினைக்கவில்லை.

பாலகிருஷ்ணனின் மகள், மருமகன், மாமியார் மீது ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தலைமை நீதிபதிகள் அடங்கிய கமிஷனை அமைத்து தீவிரமாக விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களின் சொத்துக்கள், அவருடைய வங்கி கணக்கு விவரங்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த விசாரணைக் கமிஷனை பிரதமர் உடனடியாக அமைக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்றம் விரைவாக ஒப்புதல் தர வேண்டும். மேலும், தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ள கே.ஜி.பாலகிருஷ்ணன் உடனடியாக பதவி விலக வேண்டும் என குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும், என்றார் கிருஷ்ணய்யர்.

 

130% மடங்கு எப்படி உயர்ந்துள்ள சொத்துக்கள்: பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீனிஜின் (P V Sreenijin) கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவர் 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நரக்கல் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். அப்போது அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு விவரத்தில், ஒரு சொத்தும் தனது பெயரில் கிடையாது என்றும், மனைவியிடம் வெறும் ரூ. 4.38 லட்சம் பெறுமானமுள்ள நகைகளும், ரூ. 1 லட்சம் ரொக்கமும் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் 3 ஆண்டுகள் கழித்து ஸ்ரீனிஜினும் அவரது மனைவி சோனியும் ( K B Sony) (இருவரும் வக்கீல்கள்) வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்த ரிட்டர்ன் படிவத்தில், ரூ. 35 லட்சம் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  ஆனால் தற்போது இவர்கள் வசம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது[6]. திருச்சூரில் மிகப் பெரிய ரிசார்ட் ஒன்றையும் இவர்கள் கட்டி வருகின்றனராம்.  இவர்கள் வசம் தற்போது உள்ள சொத்துக்களின் மதிப்பு, அவர்கள் பதிவு செய்தபோது சொன்ன தொகையை விட பல மடங்கு அதிகமாகுமாம். 130% மடங்கு எப்படி உயர்ந்துள்ளது என்பது வியப்பாக உள்ளது என்று உள்ளூர் மக்களே வியக்கின்றனராம்! நான்காண்டுகளுக்கு முன்பு வங்கியில் மிகச்சிறிதே பணம் இருந்ட நிலையில், இப்படி கோடிக்கணக்கான சொத்துக்களை எப்படி வாங்கிக் குவித்துள்ளார் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் இப்பணம் தங்களது தொழிற் ஆலோசனை சேவை (‘professional consultancy’) மூலம்[7] வந்தாகக் கூறுகின்றனராம்!

 

துபாய், பங்களூரு கனெக்க்ஷன்ஸ் / தொடர்புகள்: கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் குறித்து தற்போது தெரிய வந்துள்ளவை மிகச் சிறிய அளவிலானவைதான். உரிய விசாரணை நடத்தினால் மிகப் பெரிய ஊழலையும், சொத்துக் குவிப்பையும் நாட்டு மக்கள் அறிய முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர் ராஜேஷ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், துபாய், பெங்களூரில் பாலகிருஷ்ணன் குடும்பத்தினரும், உறவினர்களும் மிகப் பெரிய அளவில் சொத்துக்களைக் குவித்துள்ளனர். தமிழகத்திலும் பெரிய அளவில் அவர்கள் சொத்துக்களை வைத்துள்ளனர். பாலகிருஷ்ணன்தான் இந்த சொத்துக் குவிப்பின் மையப் புள்ளியாக தெரிகிறார். எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

 

டில்லி பத்திரிக்கையாளர் கொடுத்துள்ள புகார்! சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பர்குவான் என்பவர், கடந்த ஜூன் மாதம் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெருமளவில் சொத்துக்கள் உள்ளன. இவை பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான பின்னர்தான் வாங்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்தப் புகார் கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார் அன்சாரி. உள்துறை அமைச்சகம் அக்கடிதத்தை சிபிஐக்கு அனுப்பியது. தற்போது இக்கடிதம் சிபிஐயின் கொச்சி அலுவலகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

வேதபிரகாஷ்

© 28-12-2010


[5] நீதித்துறையில் அமைச்சர் ராஜா தலையிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சிலரை காப்பாற்றுவதற்காக தன்னை யாரும் நிர்ப்பந்தி்க்க வில்லை என முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீதித்துறையில் அமைச்சர் ராஜா தலையிட்டதாக, அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு அப்போதைய சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே ஒரு அறிக்கை அனுப்பி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன், கோகலே தனக்கு அனுப்பிய அறிக்கையுடன் இருந்த கடிதத்தில் எந்த அமைச்சர் பெயரையும் குறிப்பிடவில்லை எனவும், இவ்விவகாரத்தில் தன்னை இது தொடர்பாக எவரும் நிர்ப்பந்திக்கவில்லை என்றும் தெரிவித்தார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=146523