Archive for the ‘சென்னை கஸ்டம்ஸ்’ Category

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

மார்ச் 8, 2015

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi - Photo- R.M. Rajarathinam

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi – Photo- R.M. Rajarathinam

சோதனை, விசாரணை முதலியவற்றிற்குப் பிறகு ஐந்து அதிகாரிகள் கைது: அங்கிருந்த ஆவணங்கள், விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்யும் முறை, வசூலிக்கும் பணம் ஆகியவை குறித்து சிபிஐ குழுவினர்  சோதனை செய்தனர். விமான பயணிகள் வெளியேறும் பகுதியில் உள்ள 10 சுங்க இலாகா கவுண்டர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த சுங்க அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று காலை 9 மணிவரை நீடித்தது. பின்னர் சுங்க அதிகாரிகளுக்கு சொந்தமான பைக், கார் போன்ற வாகனங்களில் பணம் எதுவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் சுங்க அதிகாரிகளை அழைத்து கொண்டு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க துறை அலுவலக வளாக குடியிருப்பில் உள்ளவர்களின் வீடுகளுக்கும் சென்று மதியம் வரை  சோதனை நடத்தினர்[1]. இந்த சோதனையில் முறைகேடாக பெறப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது[2]. அத்துடன் சுங்க இலாகா அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் அவர்களில் அதிகாரிகள் ஐந்து, பிரயாணி ஒன்று – நாகூர் மீரான்[3]:

  1. சிவசாமி – சூப்பிரென்டென்ட்டென்ட்
  2. ரவிகுமார் – சூப்பிரென்டென்ட்டென்ட்
  3. தினேஸ்பிரஜாபதி – இன்ஸ்பெக்டர்.
  4. சுரேஸ்குமார் – இன்ஸ்பெக்டர்.
  5. அவ்ஜித்சக்கரபர்த்தி – இன்ஸ்பெக்டர்.

சி.பி.ஐ. அதிகாரிகள். இச்சோதனையும் கைது நடவடிக்கையும் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4].

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

பணத்தை கையாலும் போது, கையாடல் செய்கிறானா, இல்லையா?: கௌடில்யர் சொன்னது போல, “நீரில் வாழும் மீன் நீரைக்குடித்து உயிர் வாழ்கிறதா இல்லையா என்பது போல, கருவூலத்தில் இருக்கும் பாதுகாவலன் பணத்தை கையாடல் செய்கிறானா இல்லையா என்று சொல்லமுடியாது”, என்ற ரீதியில் இன்று பணத்தை கையாலும் எல்லோருமே, ஆசையில் திளைத்துதான் இருக்கின்றனர், பணத்தை கையாலும் போது, கையாடல் செய்யத்தான் செய்கிறான். அதனால் தான், வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமாகக் கொடுக்கப் படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் போதவில்லை என்று அடிக்கடி ஸ்ட்ரைக் செய்து தான் வருகிறார்கள். அதேபோல, வரித்துறைகளில் உள்ளவர்களும் நேரிடையாகவோ, மறைமுகவோ பணத்துடன் செயல்படுவதால், அவர்களுக்கும் சரியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், வரிதளர்த்தல், வரிவிலக்கு, முறைகளில் வரியேப்ப்பு ஏற்படும். அது ஊழல் ஏற்பட, வளர, அதிகமாக வாய்ப்புகள் உண்டாக்கப் படுகின்றன.

advocates-வழக்கறிஞர்கள்-

advocates-வழக்கறிஞர்கள்-

உள்ளே-வெளியே நீயாயங்கள் – அநியாயங்கள்: எப்படி 100% தங்கக்கடத்தல்காரர்களை பிடிக்க முடியவில்லையோ, அதேபோல, எல்லா ஊழல்காரர்களும் பிடிக்கப்படுவதில்லை. மாட்டிக் கொள்பவர்கள் மட்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டவர்கள், மற்றவர்கள் புனிதர்கள் என்றாகாது. வரித்துறை அலுவலகங்களில், அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் வேலைசெய்ய, பதவி / போஸ்டிங் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. இதனால், ஒழுங்காக, நியாயமாக இருக்கும் அதிகாரிகள் 30-40 வருடங்களாக, மாத சம்பளம் வாங்கிக் கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ஆனால், நேற்று வந்தவர்கள் வளமாக, வசதிகளோடு, மேலதிகாரிகளின் ஆதரவோடு இருந்து கொண்டிருப்பதை காணலாம்.  இத்தகைய நடுநிலைமயற்ற போக்கும் வேலைசெய்பவர்களின் மனநிலையை பாதிக்கிறது. யோக்கியமானவனாக இருப்பவன், ஏன் நானும் அதுமாதிரி செய்யக் கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறான். அவ்வாறு அவன் நினைக்கும் போதே, ஊழல் ஏற்படுவதில்லை, நியாயமே செத்துவிடுகிறது. சட்டங்கள் வளைக்கப்பட்டு விடுகின்றன. நியாயமானவன், அநியாயம் செய்யும் போது சமூகம் தாங்கிக் கொள்ளமுடியாது. இப்பொழுது, சமுதாயம் இக்கட்டான சூழ்நிலைகளில் தான் சென்றுகொண்டிருக்கிறது.

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

நீதி, சட்டம் அமூல் படுத்துவர்கள் நியாயவான்களா, இல்லையா?: நீதித்துறையும் ஊழலில் தான் மலிந்து கிடக்கிறது. நீதிபதிகள் அரசியல், செல்வாக்கு போன்ற காரணிகளைக் கொண்டுதான் பதவிக்கு அமர்த்தப் படுகிறார்கள். இதனால், அவர்கள் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஏனெனில் திறமை, அனுபவம், முதிர்ச்சி முதலியன, தம்மைவிட அதிகமாக இருந்தாலும், நீதிபதி ஆகாத சீனியர் அட்வகேட்டுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். அதேபோலத்தான், சி.பி.ஐ கதையும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அதனை காங்கிரஸின் கைப்பாவை என்று விமர்சிக்கப்பட்டது. இன்று ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால், பாரபட்சம் இல்லாமல் செயல்படுமா என்று தெரியாது. இப்பொழுது சித்தாந்தம் வேறு பேசப்படுகிறது, அது ஜாதி, மதம், மொழி என்ற பலவித காரணிகளுடன் சேர்ந்து நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. நீதி-சட்டம் அதற்கேற்றாற்போலத்தான் மாறிக்கொண்டும், வளைந்து கொண்டும் இருக்கும். வரியேய்ப்பு என்றால், அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக் கூடாத அளவுக்கு, சட்டங்கள் இருக்க வேண்டும். தங்கத்தைக் கடத்தவே முடியாது என்ற அளவில் இருந்தால், எப்படி தங்கத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வரமுடியும். ஹென்னா பவுடரில், சாக்கிலெட்டில், மனித உறுப்புகளில், மிஷனரி பார்ட்ஸ் என்ற வகைகளில் கொண்டு வருகிறார்கள் என்றால், அதனைக் கண்டுபிடிக்கும் திறமை வேண்டும். வேலைசெய்பவர்களிடத்தில் அந்த அறிவு, ஞானம், நேர்மை போன்ற உணர்வுகள் உள்ளவர்களால் தான் அது முடியும். இப்பொழுதுள்ள சமூக-அமைப்புகளில் உள்ள நேர்மையற்றத் தன்மைகளை மாற்றினால் தான், இந்தியாவை மாற்ற முடியும்.

நீதிமுறை அழுக்குகள்ஐந்திய சமுதாயத்தை சுத்தப்படுத்த வேண்டும்: சுத்தம் வேண்டுமானால், அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும். உடல்-மனம் இரண்டையும் சுத்தப் படுத்த வேண்டும் என்பதுப்போல, இந்தியாவை சுத்தப்படுத்த வேண்டுமானால், இந்தியர்களை சுத்தப் படுத்த வேண்டும், ஏனெனில், அவர்கள் பற்பலவிதமான அழுக்குகளோடு, நுற்றுக்கணக்கான ஆண்டுகளில் அசுத்தமாக இருந்துகொண்டிருக்கிறார்கள். முகமதியம், ஐரோப்பியம், கிருத்துவம், கம்யூனிஸம் என்ற சித்தாந்தளினால் ஏற்பட்ட கறைகளும், அழுக்குகளும் ஏராளம். சுதந்திரம் வந்தபிறகும் ஆங்கில ஆட்சிமுறையைப் பின்பற்றி வருவதால், அவர்களுடன் கூடிய அசுத்தங்களும் அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அவர்கள் ஏதோ ஆட்சிமுறையினைக் கொடுத்தார்கள் என்று பீழ்த்திக் கொண்டாலும், உள்ள ஆட்சிமுறையினைக் கெடுத்தார்கள் என்றாகியுள்ளது. அவர்கள் காலத்தில் ஆட்சியாளர்களுக்கு, இந்தியர்களுக்கு என்று இரட்டை நீதி-சட்டங்கள் இருந்தன. அதே முறைதான் இப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. ஆனால், சட்டங்கள் ஒன்றாக இருப்பதினால், அவைகளில் ஓட்டைகள் போடப்படுகின்றன, வளைக்கப்படுகின்றன, முடியவில்லை என்றால், மாற்றப்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 08-03-2015

[1]  தினகரன், சுங்கவரி வசூலில் முறைகேடு: திருச்சி ஏர்போர்ட்டில் சி.பி. அதிரடி சோதனை, சனிக்கிழமை, 07-03-2015: 01:21:11.

[2] http://m.thehindu.com/news/cities/Tiruchirapalli/cbi-searches-customs-wing-at-tiruchi-airport/article6968065.ece/?secid=12614

[3] Further investigations revealed that five customs officials – two superintendents Sivaswamy and Ravikumar, three inspectors Dinesh Prajapati, Suresh Kumar, Avijit Chakraborthy had been accepting bribes and not levying requisite duty for dutiable goods being brought by passengers from various countries through the airport.

http://timesofindia.indiatimes.com/city/trichy/CBI-arrests-six-including-five-customs-officials-on-graft-charges/articleshow/46489295.cms

[4] தமிழ்.ஒன்.இந்தியா, சுங்கவரியில் முறைகேடு: திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ திடீர் ரெய்டு– 6 பேர் கைது, Posted by: Mathi, Updated: Saturday, March 7, 2015, 12:23 [IST]

கேடமைன் போதை மருந்து கடத்தல் : சென்னை–இந்தோனிசியா-மலேசியா-சிங்கப்பூர் பாதைகள்!

செப்ரெம்பர் 22, 2010

கேடமைன் போதை மருந்து கடத்தல் : சென்னை–இந்தோனிசியா-மலேசியா-சிங்கப்பூர் பாதைகள்!

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் c-magudapathy-customs-arrested-dinamalar-22-09-2010.jpg

கேடமைன்கடத்தலுக்கு உதவிய கஸ்டம்ஸ் அதிகாரி கைது[1]: சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கன்டெய்னர்கள் மூலம் போதை மருந்து பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், போதைப் பொருள் கொண்ட கன்டெய்னர் ஒன்று ஏற்கனவே சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கப்பல் மூலம் சென்றுவிட்டது தெரிய வந்தது. இந்நிலையில், மலேசிய துறைமுகத்தில் இறக்கப்பட்ட அந்த கன்டெய்னரை மலேசிய கஸ்டம்ஸ் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். பின், இது குறித்து சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினர். வருவாய் புலனாய்வு பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் தலைமையில், கஸ்டம்ஸ் அதிகாரிகள் கொண்ட தனிப்படை ஒன்று இவ்வழக்கு குறித்த விசாரணையை துவக்கியது.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் magudapathy-customs-officer-arrested-for-ketamine-dinamalar-22-09-2010.jpg

இளையான்குடி முகம்மது நாசர்: இதில், இளையான்குடியைச் சேர்ந்த முகம்மது நாசர் (49) என்பவர் தலைமையில், ஏஜன்டுகள் அருள்ராஜ், அவரது சகோதரர் ஸ்டீபன் மாசிலாமணி ஆகியோர் சர்வதேச அளவில் போதைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில், இவர்கள் மூவர் தான் மலேசியாவிற்கும் கன்டெய்னர் மூலம் போதைப் பொருட்களை அனுப்பியது தெளிவானது. இதையடுத்து, இளையான்குடியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்து கொண்டிருந்த முகம்மது நாசரை, தாம்பரம் ரயில் நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், அருள்ராஜும், ஸ்டீபன் மாசிலாமணியும் கைதாகினர். வருவாய் புலனாய்வு பிரிவு உயர் அதிகாரிகள், போதை மருந்து கடத்தல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்[2].

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் c-magudapathy-arrested-september-2010.jpg

மகுடபதிக்கும் முகம்மது நாசருக்கும் என்ன தொடர்பு: சென்னை கஸ்டம்ஸ் பிரிவில் சூப்பிரண்டென்டாக பணியாற்றும் மகுடபதி (50), மலேசியாவிற்கு போதை மருந்து கடத்துவதற்கு பல்வேறு வகைகளில் உதவியுள்ளது விசாரணையில் தெரிந்தது[3]. இவர் திருவொற்றியூர் கன்டைனர் பிரிவில் வேலை செய்து வருகிறார். முக்கியமக, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பொறுப்பில் இவர் இருந்தபோது வெளிநாடுகளுக்கு அதிகமாக போதைப் பொருள் அனுப்பப்பட்டதாக புகார்கள் வந்தன. மயிலாப்பூரில் வசித்து வரும் மகுடபதியை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த புகார்களை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதனிடையே சென்னை துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களில் பதுக்கி வைத்து கேட்டமைன் என்னும் போதைப் பொருள் கடத்தப்பட்டு வந்ததாகவும், ரூ.50 கோடி முதல் 100 கோடி வரை  கடத்தல் பொருள்கள் கடத்தப்பட்டதாகவும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையில் தகவல் கிடைத்தது[4]. இதில், போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதற்காக முகம்மது நாசரிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றதை மகுடபதி ஒப்புக் கொண்டார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்[5]. சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஒருவரே இந்த கடத்தல் விஷயத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் மேலும் பல அதிகாரிகள் சிக்கலாம் என சுங்கத்துறை துணை கமிஷனர் ஒருவர் தெரிவித்தார். மேலும் இளையான்குடிக்கும் கடத்தல் போன்றவைக்கும் தொடர்புகள் அதிகமாக உள்ளது தெரிகிறது[6].

கேடமைன் கடத்தலில், இந்தியர்கள் / தமிழர்கள் ஈடுபடுவது: கேடமைன் கடத்தலில், இந்தியர்கள் ஈடுபடுவது, குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்படுவது கவனிக்க வேண்டியதாக உள்ளது. ஜூல.7, 2010 அன்று பாங்காக்கில் கல்யாணசுந்தரம் கருப்பைய்யா என்பவர் கேடமைன் கடத்தலுக்காக கைது செய்யப் பட்டார்[7]. ஏப்ரல் 2010ல் ஜாகர்த்தா விமானநிலைத்தில் நாராயணசாமி பாஸ்கரன் (Rp 15 billion ($1.67 million) of ketamine) பிடிக்கப்பட்டார்[8]. பிப்ரவரி. 13 2010 அன்று ரங்கசாமி முகம்மது உமர் (Rangaswary Mohammed Umar)[9] பாலி, இந்தோனிசியா விமானநிலைத்தில் கைது செய்யப் பட்டார்[10]. மேலும், இங்குள்ளவர்களின் பெயர்களும் – டேவிட் கோல்மென் ஹெட்மேன் / ஜாவூத் ஜிலானி போன்று விசித்திரமாக இருக்கிறது.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் customs-officer-arrested-for-raping-girl-rediff.com-2005.jpg

தொடர்ந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் பிடிபடுவது: நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கஸ்டம்ஸ் அதிகாரிகள், தொடர்ந்து கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவதும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். அவர்கள் இப்படி கடத்தல் போன்ற காரியங்களுக்கு உதவுவதால் கிடைக்கும் பணமும் அவர்களை சீரழிக்கத்தான் செய்கிறது. அது மறுபடியும் மற்ற தீய காரியங்களை செய்ய ஊக்குவிக்கிறது. இதனால்தான் அவைகளே செக்ஸ், போதை என்ற செயல்களில் ஈடுபட்டு, இந்திய சமூகத்தையும் கெடுக்கிறார்கள். கடந்த அகஸ்ட் 2008ல், லோனாவாலவில் 22 சுங்க அதிகாரிகள், குடித்து, பெண்களுடன் நிர்வாணமாக இருந்தபோதே கைது செய்யப்பட்டனர்[11]. 2005ல் சென்னை சூளைபேட்டில், ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி, சிறுமியைக் கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டார். இவர் வாணியம்பாடி, வேலூர் போன்ற இடங்களிலும் அவ்வாறு ஈடுபட்டதாக செய்திகள் வந்துள்ளன[12]. வரி ஏய்ப்பிற்கு உதவிய அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்[13].


[1] தினமலர், கேடமைன்கடத்தலுக்கு உதவிய கஸ்டம்ஸ் அதிகாரி கைது, செப்டம்பர் 22, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=90171

 

[2] http://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID=947f4a34-601b-47e7-b209-c316d31f6626&CATEGORYNAME=CHN

[3] http://www.hindu.com/2010/09/21/stories/2010092150860500.htm

http://www.thehindu.com/news/cities/Chennai/article740723.ece

[4] மாலச்சுடர், சூப்பிரண்ட் கைது, Tuesday, 21 September, 2010 http://www.maalaisudar.com/newsindex.php?id=35338%20&%20section=24

[5] http://ibnlive.in.com/generalnewsfeed/news/four-arrested-for-smuggling-ketamine/338228.html

[6] M. Meera Hussain @ Kalibathulla vs State Of Tamil Nadu, Rep. By on 22 April, 2003; http://www.indiankanoon.org/doc/1000160/

The detenu was scheduled to leave Madras for Singapore by Singapore Airlines on 18.11.1995. He was intercepted while proceeding for security check on completion of Immigration and Customs formalities and was found in possession of currencies and Travellers Cheques equivalent to Indian Rupees 10,19,250/-. It is stated that the detenu had admitted to smuggle the said currencies out of India by way of concealment in his rectum, in contravention of the provisions of Customs Act, 1962 and also those of the Foreign Exchange Regulation Act, 1973. The detenu is said to have admitted his offence in his statement dated 19.11.1995 stating that he used to go to Singapore frequently to bring foreign goods and sell them at Madras and that he used to conceal foreign currencies in this manner for taking them out of India.

[7] http://www.pattayadailynews.com/en/2010/07/07/indian-man-arrested-smuggling-7kg-of-ketamine-in-bangkok/

[8] http://www.thejakartaglobe.com/jakarta/airport-officials-arrested-in-drug-bust/372087

[9] இதென்ன “ரங்கசாமி முகம்மது உமர்” என்று தெரியவில்லை, ஒருவேளை இவர்கள் எல்லோரும் “கேரியர்கள்” எனப்படுகின்ற “குருவிகள்” ஆகயிருக்கலாம். அப்படியெனேறால், தலைவன் / கூட்டம் யார் என்ற கேள்வி எழுகிறது.

[10] http://www.thejakartapost.com/news/2010/02/13/bali-airport-customs-arrest-indian-national-allegedly-carrying-drug.html

[11] Prashant Aher & Gitesh Shelke, 22 Mumbai customs officials arrested,  Published: Wednesday, Aug 27, 2008, 19:03 IST, http://www.dnaindia.com/mumbai/report_22-mumbai-customs-officials-arrested_1186147-all

[12] Rediff,news, Chennai customs officer arrested in rape case, April 08, 2005,

http://www.rediff.com/news/2005/apr/08girl.htm

[13] Indian Express, Duty evasion scam: Two Customs officers arrested, March.3, 2010;

http://www.indianexpress.com/news/duty-evasion-scam-two-customs-officers-arre/586078/