Posts Tagged ‘விமான நிலையம்’

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

மார்ச் 8, 2015

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi - Photo- R.M. Rajarathinam

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi – Photo- R.M. Rajarathinam

சோதனை, விசாரணை முதலியவற்றிற்குப் பிறகு ஐந்து அதிகாரிகள் கைது: அங்கிருந்த ஆவணங்கள், விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்யும் முறை, வசூலிக்கும் பணம் ஆகியவை குறித்து சிபிஐ குழுவினர்  சோதனை செய்தனர். விமான பயணிகள் வெளியேறும் பகுதியில் உள்ள 10 சுங்க இலாகா கவுண்டர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த சுங்க அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று காலை 9 மணிவரை நீடித்தது. பின்னர் சுங்க அதிகாரிகளுக்கு சொந்தமான பைக், கார் போன்ற வாகனங்களில் பணம் எதுவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் சுங்க அதிகாரிகளை அழைத்து கொண்டு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க துறை அலுவலக வளாக குடியிருப்பில் உள்ளவர்களின் வீடுகளுக்கும் சென்று மதியம் வரை  சோதனை நடத்தினர்[1]. இந்த சோதனையில் முறைகேடாக பெறப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது[2]. அத்துடன் சுங்க இலாகா அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் அவர்களில் அதிகாரிகள் ஐந்து, பிரயாணி ஒன்று – நாகூர் மீரான்[3]:

  1. சிவசாமி – சூப்பிரென்டென்ட்டென்ட்
  2. ரவிகுமார் – சூப்பிரென்டென்ட்டென்ட்
  3. தினேஸ்பிரஜாபதி – இன்ஸ்பெக்டர்.
  4. சுரேஸ்குமார் – இன்ஸ்பெக்டர்.
  5. அவ்ஜித்சக்கரபர்த்தி – இன்ஸ்பெக்டர்.

சி.பி.ஐ. அதிகாரிகள். இச்சோதனையும் கைது நடவடிக்கையும் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4].

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

பணத்தை கையாலும் போது, கையாடல் செய்கிறானா, இல்லையா?: கௌடில்யர் சொன்னது போல, “நீரில் வாழும் மீன் நீரைக்குடித்து உயிர் வாழ்கிறதா இல்லையா என்பது போல, கருவூலத்தில் இருக்கும் பாதுகாவலன் பணத்தை கையாடல் செய்கிறானா இல்லையா என்று சொல்லமுடியாது”, என்ற ரீதியில் இன்று பணத்தை கையாலும் எல்லோருமே, ஆசையில் திளைத்துதான் இருக்கின்றனர், பணத்தை கையாலும் போது, கையாடல் செய்யத்தான் செய்கிறான். அதனால் தான், வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமாகக் கொடுக்கப் படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் போதவில்லை என்று அடிக்கடி ஸ்ட்ரைக் செய்து தான் வருகிறார்கள். அதேபோல, வரித்துறைகளில் உள்ளவர்களும் நேரிடையாகவோ, மறைமுகவோ பணத்துடன் செயல்படுவதால், அவர்களுக்கும் சரியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், வரிதளர்த்தல், வரிவிலக்கு, முறைகளில் வரியேப்ப்பு ஏற்படும். அது ஊழல் ஏற்பட, வளர, அதிகமாக வாய்ப்புகள் உண்டாக்கப் படுகின்றன.

advocates-வழக்கறிஞர்கள்-

advocates-வழக்கறிஞர்கள்-

உள்ளே-வெளியே நீயாயங்கள் – அநியாயங்கள்: எப்படி 100% தங்கக்கடத்தல்காரர்களை பிடிக்க முடியவில்லையோ, அதேபோல, எல்லா ஊழல்காரர்களும் பிடிக்கப்படுவதில்லை. மாட்டிக் கொள்பவர்கள் மட்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டவர்கள், மற்றவர்கள் புனிதர்கள் என்றாகாது. வரித்துறை அலுவலகங்களில், அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் வேலைசெய்ய, பதவி / போஸ்டிங் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. இதனால், ஒழுங்காக, நியாயமாக இருக்கும் அதிகாரிகள் 30-40 வருடங்களாக, மாத சம்பளம் வாங்கிக் கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ஆனால், நேற்று வந்தவர்கள் வளமாக, வசதிகளோடு, மேலதிகாரிகளின் ஆதரவோடு இருந்து கொண்டிருப்பதை காணலாம்.  இத்தகைய நடுநிலைமயற்ற போக்கும் வேலைசெய்பவர்களின் மனநிலையை பாதிக்கிறது. யோக்கியமானவனாக இருப்பவன், ஏன் நானும் அதுமாதிரி செய்யக் கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறான். அவ்வாறு அவன் நினைக்கும் போதே, ஊழல் ஏற்படுவதில்லை, நியாயமே செத்துவிடுகிறது. சட்டங்கள் வளைக்கப்பட்டு விடுகின்றன. நியாயமானவன், அநியாயம் செய்யும் போது சமூகம் தாங்கிக் கொள்ளமுடியாது. இப்பொழுது, சமுதாயம் இக்கட்டான சூழ்நிலைகளில் தான் சென்றுகொண்டிருக்கிறது.

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

நீதி, சட்டம் அமூல் படுத்துவர்கள் நியாயவான்களா, இல்லையா?: நீதித்துறையும் ஊழலில் தான் மலிந்து கிடக்கிறது. நீதிபதிகள் அரசியல், செல்வாக்கு போன்ற காரணிகளைக் கொண்டுதான் பதவிக்கு அமர்த்தப் படுகிறார்கள். இதனால், அவர்கள் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஏனெனில் திறமை, அனுபவம், முதிர்ச்சி முதலியன, தம்மைவிட அதிகமாக இருந்தாலும், நீதிபதி ஆகாத சீனியர் அட்வகேட்டுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். அதேபோலத்தான், சி.பி.ஐ கதையும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அதனை காங்கிரஸின் கைப்பாவை என்று விமர்சிக்கப்பட்டது. இன்று ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால், பாரபட்சம் இல்லாமல் செயல்படுமா என்று தெரியாது. இப்பொழுது சித்தாந்தம் வேறு பேசப்படுகிறது, அது ஜாதி, மதம், மொழி என்ற பலவித காரணிகளுடன் சேர்ந்து நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. நீதி-சட்டம் அதற்கேற்றாற்போலத்தான் மாறிக்கொண்டும், வளைந்து கொண்டும் இருக்கும். வரியேய்ப்பு என்றால், அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக் கூடாத அளவுக்கு, சட்டங்கள் இருக்க வேண்டும். தங்கத்தைக் கடத்தவே முடியாது என்ற அளவில் இருந்தால், எப்படி தங்கத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வரமுடியும். ஹென்னா பவுடரில், சாக்கிலெட்டில், மனித உறுப்புகளில், மிஷனரி பார்ட்ஸ் என்ற வகைகளில் கொண்டு வருகிறார்கள் என்றால், அதனைக் கண்டுபிடிக்கும் திறமை வேண்டும். வேலைசெய்பவர்களிடத்தில் அந்த அறிவு, ஞானம், நேர்மை போன்ற உணர்வுகள் உள்ளவர்களால் தான் அது முடியும். இப்பொழுதுள்ள சமூக-அமைப்புகளில் உள்ள நேர்மையற்றத் தன்மைகளை மாற்றினால் தான், இந்தியாவை மாற்ற முடியும்.

நீதிமுறை அழுக்குகள்ஐந்திய சமுதாயத்தை சுத்தப்படுத்த வேண்டும்: சுத்தம் வேண்டுமானால், அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும். உடல்-மனம் இரண்டையும் சுத்தப் படுத்த வேண்டும் என்பதுப்போல, இந்தியாவை சுத்தப்படுத்த வேண்டுமானால், இந்தியர்களை சுத்தப் படுத்த வேண்டும், ஏனெனில், அவர்கள் பற்பலவிதமான அழுக்குகளோடு, நுற்றுக்கணக்கான ஆண்டுகளில் அசுத்தமாக இருந்துகொண்டிருக்கிறார்கள். முகமதியம், ஐரோப்பியம், கிருத்துவம், கம்யூனிஸம் என்ற சித்தாந்தளினால் ஏற்பட்ட கறைகளும், அழுக்குகளும் ஏராளம். சுதந்திரம் வந்தபிறகும் ஆங்கில ஆட்சிமுறையைப் பின்பற்றி வருவதால், அவர்களுடன் கூடிய அசுத்தங்களும் அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அவர்கள் ஏதோ ஆட்சிமுறையினைக் கொடுத்தார்கள் என்று பீழ்த்திக் கொண்டாலும், உள்ள ஆட்சிமுறையினைக் கெடுத்தார்கள் என்றாகியுள்ளது. அவர்கள் காலத்தில் ஆட்சியாளர்களுக்கு, இந்தியர்களுக்கு என்று இரட்டை நீதி-சட்டங்கள் இருந்தன. அதே முறைதான் இப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. ஆனால், சட்டங்கள் ஒன்றாக இருப்பதினால், அவைகளில் ஓட்டைகள் போடப்படுகின்றன, வளைக்கப்படுகின்றன, முடியவில்லை என்றால், மாற்றப்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 08-03-2015

[1]  தினகரன், சுங்கவரி வசூலில் முறைகேடு: திருச்சி ஏர்போர்ட்டில் சி.பி. அதிரடி சோதனை, சனிக்கிழமை, 07-03-2015: 01:21:11.

[2] http://m.thehindu.com/news/cities/Tiruchirapalli/cbi-searches-customs-wing-at-tiruchi-airport/article6968065.ece/?secid=12614

[3] Further investigations revealed that five customs officials – two superintendents Sivaswamy and Ravikumar, three inspectors Dinesh Prajapati, Suresh Kumar, Avijit Chakraborthy had been accepting bribes and not levying requisite duty for dutiable goods being brought by passengers from various countries through the airport.

http://timesofindia.indiatimes.com/city/trichy/CBI-arrests-six-including-five-customs-officials-on-graft-charges/articleshow/46489295.cms

[4] தமிழ்.ஒன்.இந்தியா, சுங்கவரியில் முறைகேடு: திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ திடீர் ரெய்டு– 6 பேர் கைது, Posted by: Mathi, Updated: Saturday, March 7, 2015, 12:23 [IST]

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (1)

மார்ச் 8, 2015

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (1)

திருச்சி தங்கம் கடத்தல்

திருச்சி தங்கம் கடத்தல்

தங்க இறக்குமதி கட்டுப்பாடும், கடத்தலும்: என்.ஆர்.ஐ.தகுதியுள்ளவர்கள் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை, ஒரு கிலோ தங்கம், சுங்கவரி செல்லுத்தி விட்டு, கொண்டு வரலாம், என்ற சலுகை அமூலுக்கு கொண்டுவந்ததிலிருந்து, வரி கட்டாமல், தங்கத்தை எப்படி உள்ளே கொண்டு வருவது என்பது பற்றியும், கடத்தல்காரர்கள் தங்களது திட்டங்களை மாற்றிக் கொண்டார்கள்[1]. நிதி-இணையமைச்சர் தங்க இறக்குமதியில் முறைகள் தளர்த்தப்படும் என்றாலும், கடத்தல்காரர்கள் மாறுவதாக இல்லை[2]. இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு சுங்கவரி விதித்தபோது, நகை உற்பத்தியாளர்கள், வெளிப்படையாக தங்ககடத்தல் அதிகமாகும் என்று எச்சரித்ததை நினைவு கொள்ளவேண்டும். அதாவது, வரியேய்ப்பு செய்ய விரும்புவது அவர்கள் தாம். ஏனெனில், கடத்தல் தங்கத்தை சாதாரண குடிமகன் உபயோகிக்க முடியாது. ஜுவல்லரி கடைக்காரர்கள் தாம் உபயோகிப்பார்கள், இதனால், அவர்கள் கடத்தலை ஊக்குவித்தார்கள். இந்தியாவில் தங்கத்தின் தேவை இருந்து கொண்டே இருப்பதால், கடத்தல்காரர்களுக்கு, அவ்வேலை விருப்பமாகத்தான் இருந்து வருகிறது. மேலும், சுங்கத்துறை அதிகாரிகள் சிலரே உடந்தையாக இருந்து வருவதால், பிடிபடும் உதாரணங்களைத் தவிர தப்பித்துச் செல்லும் உதாரணங்கள், தெரியாமலே இருந்து வருகின்றன.

திருச்சி தங்கக் கடத்தல் தினகரன்

திருச்சி தங்கக் கடத்தல் தினகரன்

தங்கக்கடத்தலும், வரி ஏய்ப்பும்: திருச்சி விமான நிலையத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (06-03-2015) சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்[3]. இம்முறைகேடு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. திருச்சியில் செயல்பட்டு வரும் சர்வதேச விமானநிலையத்திற்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த விமான நிலையம் வழியாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தங்கம் உள்பட அனைத்து பொருட்களுக்கும் சுங்க வரி செலுத்தி அதன் பின்னர் பொருட்களை எடுத்து உரியவர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்பது எல்லொருக்கும் தெரிந்த விதிமுறை. ஆனால் சமீப காலமாக சுங்கவரியை முறையாக பயணிகளிடம் வசூல் செய்யாமல் விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

திருச்சி தங்கம் கடத்தை கைது

திருச்சி தங்கம் கடத்தை கைது

சி.பி.ஐ 10 நாட்களாக கண்காணித்து வந்தது: திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கொண்டு வரும் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு குறிப்பிட்ட விலைகளுக்கு மேல் சுங்கவரி செலுத்த வேண்டும். ரூ.1 லட்சம் மதிப்பிற்கு தங்க கட்டிகள் கொண்டு வந்தால் சுங்க வரியாக அரசுக்கு ரூ.36,500/- வரி செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு வரிகளை விதிக்காமலும், குறைந்த வரியை விதித்தும் கடத்தலுக்கு திருச்சி விமான நிலைய சுங்க துறை அதிகாரிகள் துணை போவதாகவும், இதற்காக கடத்தல் கும்பலிடம் பெரும் தொகையை பெற்றுக் கொள்வதாகவும் சி.பி.ஐ. போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து கடந்த 10 நாட்களாக சி.பி.ஐ. போலீசார் மாறுவேடத்தில் திருச்சி விமான நிலையத்ததில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்[5]. விமான நிலையத்தில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொண்டு வரும் பயணிகளிடம் அதற்குரிய சுங்கவரி செலுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரித்தனர். அப்போது பல பயணிகள் அபராதத்திற்கு பதில் அதிகாரிகள் பணத்தை கையூட்டாக பெற்று கொண்டதை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கூறினர். இதை தொடர்ந்து சுங்க வரி வசூலில் ஊழல் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்தனர்[6].

six months 27 kgs gold smuggled through Trichy airport

six months 27 kgs gold smuggled through Trichy airport

திருச்சி  விமானநிலையம் வழியாக தங்கக்கடத்தல் தொடர்ச்சியாக இருந்தது: குறிப்பாக கடந்த சில மாதங்களாக திருச்சி விமானநிலையம் வழியாக தங்கக் கடத்தல் அதிகமாகியுள்ளதால் இந்த ரெயிட் அவசியமாகிறது என்கின்றனர். தங்கம் பிடிபட்டாலும், தங்கம் கடத்தியவர்கள் கையும்-களவுமாக பிடிபட்டாலும், பலர் சிக்காமல் சிக்கியுள்ளனர் என்று தெர்ய வருகிறது. இதற்கு காரணம், அங்கு சோதனையில் உள்ள சுங்க அதிகாரிகள் மற்றும் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்று கூறப்படுகிறது[7]. கடந்த மாதம் 17ம் தேதி “குருவிகள்” கொண்டுவந்த தங்கதத்தை பிடித்தனர்[8]. ஜனவரியில் மதுரையை சேர்ந்த ஜமீனா பேகம், ஜபருன்னிசா மற்றும்,  சிவகங்கையை சேர்ந்த ரசியா பேகம், மெகர்பானு, மதுரை ஆயிசா பேகம், இளையாங்குடி அமீதா பேகம் 2.5கிலோ பிடிபட்டது[9]. அப்போது திருச்சி தெப்பக்குளத்தை சேர்ந்த இப்ராம்ஷா என்பவர் ஸ்பீக்கர் பாக்சில் மறைத்து வைத்திருந்த 173 கிராம் தங்கம், சென்னை திருவல்லிக்கேணி ரகீம் பியானோவில் கடத்தி வந்த 323 கிராம் தங்கம், திண்டுக்கல் கனி பவுடர் டப்பாவில் கடத்திய 237 கிராம் தங்கம்,  சென்னை எல்லீஸ் ரோட்டை சேர்ந்த  முகமது என்பவர் டிவி சர்க்யூட் போர்டில் வைத்து கொண்டு வந்த 201 கிராம் தங்கம் என மொத்தம் யி25.50 லட்சம் மதிப்புள்ள 934 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானத்தில் பயணிகளை சோதனையிட்டனர். அப்போது பயணி அபுபக்கர் என்பவர், தலா 40 கிராம் வீதம் 200 கிராம் தங்கத்தை 5 கரண்டிகளின் கைப்பிடிக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. நான்கு பேர் [ H.Ibrahim Shah, Mahboob Ali, Naseeruddin and I.Sabar Lal] பிரின்டிங் கேட்ரிஜில் ஒளித்து வைத்த 2.46 கிலோ தங்கம் நவம்பர் 2024ல் சிக்கியது[10]. இதெல்லாம் சஜமாக நடந்து வரும் விவாகரங்கள் என்று தெரிகிறது.

Tamil_Daily_News_Dinakaran

Tamil_Daily_News_Dinakaran

சி.பி.ஐ சோதனைக்கு வெள்ளிக்கிழமை விடியற்காலை வந்தது: சென்னையில் இருந்து இதையடுத்து 06-02-2015 அன்று அதிகாலை 1.30 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரி லாசர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள சுங்க இலாகா அதிகாரிகள் அலுவலகம் முழுவதையும் அங்குலம், அங்குலமாக சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்[11]. நள்ளிரவு முதல் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர்.  திருச்சி விமான நிலையத்துக்கு வெளி நாடுகளில் இருந்து டிவி கொண்டு வரும் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் குறைந்த அளவு வரி வசூலித்து விட்டு, வெளியே சென்று அவர்களிடம் லஞ்சம் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தது.  இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணியளவில் சிபிஐ ஊழல் தடுப்பு சென்னை பிரிவு டிஎஸ்பி லாசரஸ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக திருச்சி விமான நிலைய சுங்கதுறை அலுவலகம் சென்றனர். அப்போது அங்கு உதவி கமிஷனர் ரவி தலைமையில் 12 அதிகாரிகள் பணியில் இருந்தனர்[12]. இதில்  வெளிநாடுகளிலிருந்து பயணிகள் கொண்டு வந்த  30 இன்ச் அளவுள்ள 30 எல்இடி டிவிக்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் இந்த அளவுள்ள டிவிக்களுக்கு தலா ரூ. 12,000/- வசூலிக்க வேண்டும். ஆனால் இவர்கள்  ரூ.8,000/- மட்டுமே வசூலித்துள்ளதால், இதில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. மேலும் பணம் கட்டாமல் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 5 எல்இடி டிவிக்கள் மற்றும் செல்போன்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்[13].

வேதபிரகாஷ்

© 08-03-2015

[1] Indian gold smugglers, locked in a cat-and-mouse game with customs officials,  are always searching for new ways to hide the precious yellow metal and get it into the country without being detected. Among their latest innovations: Mixing gold dust with henna powder or encasing it in chocolate.

http://blogs.wsj.com/indiarealtime/2014/08/13/indias-gold-smugglers-innovate-to-evade-customs/

[2] http://archive.financialexpress.com/news/gold-import-duty-commerce-minister-nirmala-sitharaman-for-easing-of-restrictions/1278491

[3] http://www.nellaionlinenews.com/thamilagam/bribe-complaints-cbi-raids-in-trichy-airport.html

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/eight-member-cbi-team-interrogates-custom-officials-222276.html

[5] மாலைமலர், திருச்சி விமான நிலையத்தில் சி.பி.. சோதனை: லஞ்சம் வாங்கிய 5 அதிகாரிகள் கைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 07, 12:38 PM IST

[6] http://www.maalaimalar.com/2015/03/07123847/Trichy-airport-CBI-search-5-of.html

[7] The raid was necessitated after several complaints over the rise in number of gold smuggling through Trichy Airport in the past few months. Sources said even though customs officials caught some gold smugglers red-handed and seized consignments from them, some of the officials allegedly left many smugglers unchecked because of their alleged involvement.

http://timesofindia.indiatimes.com/city/trichy/Eight-member-CBI-team-interrogates-custom-officials/articleshow/46482187.cms

[8]  Immigration authorities arrested four passengers, who arrived at the Trichy International Airport in different flights, for allegedly trying to smuggle gold by hiding it in their rectums on Monday (16-02-2015). The arrested have been admitted at the government hospital here to undergo ‘banana treatment’, they expect to recover around 1,000g of gold from the arrested passengers. Authorities seized 540g of gold from Kethiswari, 48, one of the arrested passengers. She was scanned completely and sent to hospital to recover the gold. The recovered gold was estimated to be worth Rs 16 lakh. An immigration official said in most cases people who are ignorant and ‘kuruvis’ indulge in such crimes to earn Rs 10,000- 15,000 per trip.

http://timesofindia.indiatimes.com/city/trichy/540g-gold-seized-from-flier-at-airport/articleshow/46268316.cms

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127696

[10] http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/smuggled-gold-rods-seized-in-tiruchi/article6629553.ece

[11] Times o India, Eight-member CBI team interrogates custom officials, TNN | Mar 7, 2015, 09.43 AM IST

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=135044

[13] http://www.kollytalk.com/national/cbi-officials-raid-customs-collection-counter-trichy-airport-233286.html