Archive for the ‘பொருளாதாரக் குற்றம்’ Category

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

மார்ச் 8, 2015

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi - Photo- R.M. Rajarathinam

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi – Photo- R.M. Rajarathinam

சோதனை, விசாரணை முதலியவற்றிற்குப் பிறகு ஐந்து அதிகாரிகள் கைது: அங்கிருந்த ஆவணங்கள், விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்யும் முறை, வசூலிக்கும் பணம் ஆகியவை குறித்து சிபிஐ குழுவினர்  சோதனை செய்தனர். விமான பயணிகள் வெளியேறும் பகுதியில் உள்ள 10 சுங்க இலாகா கவுண்டர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த சுங்க அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று காலை 9 மணிவரை நீடித்தது. பின்னர் சுங்க அதிகாரிகளுக்கு சொந்தமான பைக், கார் போன்ற வாகனங்களில் பணம் எதுவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் சுங்க அதிகாரிகளை அழைத்து கொண்டு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க துறை அலுவலக வளாக குடியிருப்பில் உள்ளவர்களின் வீடுகளுக்கும் சென்று மதியம் வரை  சோதனை நடத்தினர்[1]. இந்த சோதனையில் முறைகேடாக பெறப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது[2]. அத்துடன் சுங்க இலாகா அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் அவர்களில் அதிகாரிகள் ஐந்து, பிரயாணி ஒன்று – நாகூர் மீரான்[3]:

  1. சிவசாமி – சூப்பிரென்டென்ட்டென்ட்
  2. ரவிகுமார் – சூப்பிரென்டென்ட்டென்ட்
  3. தினேஸ்பிரஜாபதி – இன்ஸ்பெக்டர்.
  4. சுரேஸ்குமார் – இன்ஸ்பெக்டர்.
  5. அவ்ஜித்சக்கரபர்த்தி – இன்ஸ்பெக்டர்.

சி.பி.ஐ. அதிகாரிகள். இச்சோதனையும் கைது நடவடிக்கையும் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4].

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

பணத்தை கையாலும் போது, கையாடல் செய்கிறானா, இல்லையா?: கௌடில்யர் சொன்னது போல, “நீரில் வாழும் மீன் நீரைக்குடித்து உயிர் வாழ்கிறதா இல்லையா என்பது போல, கருவூலத்தில் இருக்கும் பாதுகாவலன் பணத்தை கையாடல் செய்கிறானா இல்லையா என்று சொல்லமுடியாது”, என்ற ரீதியில் இன்று பணத்தை கையாலும் எல்லோருமே, ஆசையில் திளைத்துதான் இருக்கின்றனர், பணத்தை கையாலும் போது, கையாடல் செய்யத்தான் செய்கிறான். அதனால் தான், வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமாகக் கொடுக்கப் படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் போதவில்லை என்று அடிக்கடி ஸ்ட்ரைக் செய்து தான் வருகிறார்கள். அதேபோல, வரித்துறைகளில் உள்ளவர்களும் நேரிடையாகவோ, மறைமுகவோ பணத்துடன் செயல்படுவதால், அவர்களுக்கும் சரியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், வரிதளர்த்தல், வரிவிலக்கு, முறைகளில் வரியேப்ப்பு ஏற்படும். அது ஊழல் ஏற்பட, வளர, அதிகமாக வாய்ப்புகள் உண்டாக்கப் படுகின்றன.

advocates-வழக்கறிஞர்கள்-

advocates-வழக்கறிஞர்கள்-

உள்ளே-வெளியே நீயாயங்கள் – அநியாயங்கள்: எப்படி 100% தங்கக்கடத்தல்காரர்களை பிடிக்க முடியவில்லையோ, அதேபோல, எல்லா ஊழல்காரர்களும் பிடிக்கப்படுவதில்லை. மாட்டிக் கொள்பவர்கள் மட்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டவர்கள், மற்றவர்கள் புனிதர்கள் என்றாகாது. வரித்துறை அலுவலகங்களில், அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் வேலைசெய்ய, பதவி / போஸ்டிங் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. இதனால், ஒழுங்காக, நியாயமாக இருக்கும் அதிகாரிகள் 30-40 வருடங்களாக, மாத சம்பளம் வாங்கிக் கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ஆனால், நேற்று வந்தவர்கள் வளமாக, வசதிகளோடு, மேலதிகாரிகளின் ஆதரவோடு இருந்து கொண்டிருப்பதை காணலாம்.  இத்தகைய நடுநிலைமயற்ற போக்கும் வேலைசெய்பவர்களின் மனநிலையை பாதிக்கிறது. யோக்கியமானவனாக இருப்பவன், ஏன் நானும் அதுமாதிரி செய்யக் கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறான். அவ்வாறு அவன் நினைக்கும் போதே, ஊழல் ஏற்படுவதில்லை, நியாயமே செத்துவிடுகிறது. சட்டங்கள் வளைக்கப்பட்டு விடுகின்றன. நியாயமானவன், அநியாயம் செய்யும் போது சமூகம் தாங்கிக் கொள்ளமுடியாது. இப்பொழுது, சமுதாயம் இக்கட்டான சூழ்நிலைகளில் தான் சென்றுகொண்டிருக்கிறது.

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

நீதி, சட்டம் அமூல் படுத்துவர்கள் நியாயவான்களா, இல்லையா?: நீதித்துறையும் ஊழலில் தான் மலிந்து கிடக்கிறது. நீதிபதிகள் அரசியல், செல்வாக்கு போன்ற காரணிகளைக் கொண்டுதான் பதவிக்கு அமர்த்தப் படுகிறார்கள். இதனால், அவர்கள் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஏனெனில் திறமை, அனுபவம், முதிர்ச்சி முதலியன, தம்மைவிட அதிகமாக இருந்தாலும், நீதிபதி ஆகாத சீனியர் அட்வகேட்டுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். அதேபோலத்தான், சி.பி.ஐ கதையும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அதனை காங்கிரஸின் கைப்பாவை என்று விமர்சிக்கப்பட்டது. இன்று ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால், பாரபட்சம் இல்லாமல் செயல்படுமா என்று தெரியாது. இப்பொழுது சித்தாந்தம் வேறு பேசப்படுகிறது, அது ஜாதி, மதம், மொழி என்ற பலவித காரணிகளுடன் சேர்ந்து நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. நீதி-சட்டம் அதற்கேற்றாற்போலத்தான் மாறிக்கொண்டும், வளைந்து கொண்டும் இருக்கும். வரியேய்ப்பு என்றால், அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக் கூடாத அளவுக்கு, சட்டங்கள் இருக்க வேண்டும். தங்கத்தைக் கடத்தவே முடியாது என்ற அளவில் இருந்தால், எப்படி தங்கத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வரமுடியும். ஹென்னா பவுடரில், சாக்கிலெட்டில், மனித உறுப்புகளில், மிஷனரி பார்ட்ஸ் என்ற வகைகளில் கொண்டு வருகிறார்கள் என்றால், அதனைக் கண்டுபிடிக்கும் திறமை வேண்டும். வேலைசெய்பவர்களிடத்தில் அந்த அறிவு, ஞானம், நேர்மை போன்ற உணர்வுகள் உள்ளவர்களால் தான் அது முடியும். இப்பொழுதுள்ள சமூக-அமைப்புகளில் உள்ள நேர்மையற்றத் தன்மைகளை மாற்றினால் தான், இந்தியாவை மாற்ற முடியும்.

நீதிமுறை அழுக்குகள்ஐந்திய சமுதாயத்தை சுத்தப்படுத்த வேண்டும்: சுத்தம் வேண்டுமானால், அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும். உடல்-மனம் இரண்டையும் சுத்தப் படுத்த வேண்டும் என்பதுப்போல, இந்தியாவை சுத்தப்படுத்த வேண்டுமானால், இந்தியர்களை சுத்தப் படுத்த வேண்டும், ஏனெனில், அவர்கள் பற்பலவிதமான அழுக்குகளோடு, நுற்றுக்கணக்கான ஆண்டுகளில் அசுத்தமாக இருந்துகொண்டிருக்கிறார்கள். முகமதியம், ஐரோப்பியம், கிருத்துவம், கம்யூனிஸம் என்ற சித்தாந்தளினால் ஏற்பட்ட கறைகளும், அழுக்குகளும் ஏராளம். சுதந்திரம் வந்தபிறகும் ஆங்கில ஆட்சிமுறையைப் பின்பற்றி வருவதால், அவர்களுடன் கூடிய அசுத்தங்களும் அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அவர்கள் ஏதோ ஆட்சிமுறையினைக் கொடுத்தார்கள் என்று பீழ்த்திக் கொண்டாலும், உள்ள ஆட்சிமுறையினைக் கெடுத்தார்கள் என்றாகியுள்ளது. அவர்கள் காலத்தில் ஆட்சியாளர்களுக்கு, இந்தியர்களுக்கு என்று இரட்டை நீதி-சட்டங்கள் இருந்தன. அதே முறைதான் இப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. ஆனால், சட்டங்கள் ஒன்றாக இருப்பதினால், அவைகளில் ஓட்டைகள் போடப்படுகின்றன, வளைக்கப்படுகின்றன, முடியவில்லை என்றால், மாற்றப்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 08-03-2015

[1]  தினகரன், சுங்கவரி வசூலில் முறைகேடு: திருச்சி ஏர்போர்ட்டில் சி.பி. அதிரடி சோதனை, சனிக்கிழமை, 07-03-2015: 01:21:11.

[2] http://m.thehindu.com/news/cities/Tiruchirapalli/cbi-searches-customs-wing-at-tiruchi-airport/article6968065.ece/?secid=12614

[3] Further investigations revealed that five customs officials – two superintendents Sivaswamy and Ravikumar, three inspectors Dinesh Prajapati, Suresh Kumar, Avijit Chakraborthy had been accepting bribes and not levying requisite duty for dutiable goods being brought by passengers from various countries through the airport.

http://timesofindia.indiatimes.com/city/trichy/CBI-arrests-six-including-five-customs-officials-on-graft-charges/articleshow/46489295.cms

[4] தமிழ்.ஒன்.இந்தியா, சுங்கவரியில் முறைகேடு: திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ திடீர் ரெய்டு– 6 பேர் கைது, Posted by: Mathi, Updated: Saturday, March 7, 2015, 12:23 [IST]

அப்துல் கரீம் தெல்கிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை – பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம்!

செப்ரெம்பர் 18, 2010

அப்துல் கரீம் தெல்கிக்கு நீதிமன்றங்கள் மாற்றி மாற்றி தீர்ப்பு வழங்குவதன் மர்மம் என்ன?

அப்துல் கரீம் தெல்கிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை – பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம்: 18-09-2010 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் படி, 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.50,000/- அபராதம் மற்றும் ரூ.10,000/- விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 16 குற்றாவாளிகளுக்கும் தலா ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அப்துல் கரீம் தெல்கிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை – சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்: சென்னையில், ரூ.33,000 கோடி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் தெல்கிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.3 கோடி அபராதமும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான அப்துல் வாகீத், பாலாஜி, ஜேக்கப் சாக்கோ ஆகிய மூவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், பீட்டர் கென்னடி என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

போலி முத்திரைத்தாள் மோசடிசென்னை சி.பி.. சிறப்பு கோர்ட் தெல்கியை விடுவித்தது: தெல்கி இத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை, 8, ஏப்ரல் 2010) நடந்தது.   விசாரனையில் போதிய ஆவணங்கள் இல்லை என்று சென்னை சிபிஐ சிறப்பு கோர்ட்  வழக்கில் இருந்து தெல்கி விடுவிக்கப்பட்டார்.

அப்துல் கரீம் தெல்கிக்கு நான்கு ஆண்டு சிறை:  கோலாபூர் (14-06-2009) : போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் அப்துல் கரீம் தெல்கி உட்பட ஏழு பேருக்கு மகாராஷ்டிர உள்ளூர் கோர்ட் நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2001ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் கோலாபூரில் போலி முத்திரைத் தாள்கள் விற்பனை செய்யப்படுவதாக, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அசோக் காவ்தேவ் போலீசில் புகார் அளித்தார். இது தொடர் பாக 20 பேர் கைது செய்யப் பட்டனர். விசாரணையில், இவர்கள் போலி முத்திரைத் தாள் மோசடியில் பிரபலமான அப்துல் கரீம் தெல்கிக்காகப் பணிபுரிந்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு கோலாபூர் மாவட்டக் கோர்ட்டில் நடந்தது. நேற்று தீர்ப்பளிக்கப் பட்டது. இதில், அப்துல் கரீம் தெல்கி உட்பட ஏழு பேருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தெலகி மீது போலி முத்திரைத்தாள் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதில் 46 வழக்குகளில் தெலகிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மட்டும் 7 வழக்குகளில் தெலகி தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.