Posts Tagged ‘ஏய்ப்பு’

செய்யது பீடி கம்பெனி ரெயிடுக்கும், குட்கா மோசடிக்கும் தொடர்பு உண்டா? அரசியல், சித்தாந்த, தீவிரவாத தொடர்புகள் உள்ளதா?

ஜூலை 4, 2017

செய்யது பீடி கம்பெனி ரெயிடுக்கும், குட்கா மோசடிக்கும் தொடர்பு உண்டா? அரசியல், சித்தாந்த, தீவிரவாத தொடர்புகள் உள்ளதா?

ayed gruop of companies - Bells road, Chennai

வாட் வரியேய்ப்பு நடந்துள்ளதா, அப்பணம் துபாய்க்குச் செல்கிறாதா?: இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி, செய்யது பீடி கம்பனி நெல்லூரில் விலைப்பட்டிகளைப் போட்டு, அங்கு விற்கப்பட்டது போல காட்டிவருகிறார்கள். ஆனால், உண்மையில் அவை தமிழகத்தில் தான் விற்கப்படுகின்றன. ஆனால், நேரிடையாக தமிநாட்டில் விற்கவேண்டும் என்றால், 12% வாட் கட்டி விற்கவேண்டும். இதன் மூலம் ரூ 90 கோடி வரியேப்பு செய்துள்ளனர்[1]. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் அத்தகைய தொகை சுமார் ரூ.10 கோடிகள் என்று வருமானவரித்துறை எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய கணக்கில் வராத பணம் துபாய்க்குச் சென்றுவிட்டதாக கூறுகிறது[2].  அதாவது, வரி ஏய்ப்பு செய்த பணத்தை செய்யது பீடி குழுமம் துபாயில் முதலீடு செய்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்[3].  நெல்லூற் பெயரில் பில்கள் போடுவதால், அங்கு கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றாகிறது. அங்கு விற்காமல் எப்படி கணக்கை சரிகட்டினார்கள் தெரியவில்லை. ஆனால், விவரங்கள் வெளியிடப் படவில்லை. தமிழ்நாடு தவிர, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலிங்கானா, சத்தீஸ்கர் முதலிய மாநிலங்களிலும் சோதனைகள் நடந்துள்ளன. சத்தீஸ்ரிலிருந்து வாங்கிய மூலப்பொருட்கள் விசயங்களிலும் கணக்கை மறைத்தது தெரிய வந்துள்ளது[4].

IT raid at Syed Beedi group.Puthiya thalaimurai

குட்கா தயாரிப்பு, விற்பனைக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது, பெற்றவர் விவரங்கள்: மாதவ ராவ் வீடு மற்றும் அவரது கணக்காளர் யோகேஷ்வரியின் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விசாரணையில் மாதவ ராவ் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்[5]. மேலும், தமிழகத்தில் உற்பத்தி செய்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட புகையிலைப் பொருட்களை, நாங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யவே இந்த பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்[6]. அமைச்சருக்கும், காவல்துறை ஆணையருக்கும் ராஜேந்திரன் என்பவர் மூலமாகவும், மத்திய வரித்துறை அதிகாரிகளுக்கு நந்தகுமார் என்பவர் மூலமாகவும்  லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மத்திய வரித்துறை அதிகாரிக்கு மொத்தமாக ரூ.16 லட்சம் லஞ்ச அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதோடு நின்றுவிடவில்லை. செங்குன்றத்தைச் சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கும் ரூ.30 லட்சமும், சென்னை மாநகராட்சியின் கவுன்சிலருக்கு ரு.14 லட்சமும் லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, புகையிலைப் பொருட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நடைமுறைப்படுத்தும் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் ரூ.35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வியாபாரம் எந்த தடையும் இல்லாமல் நடைபெறுவதற்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து வருமான வரித்துறை சொல்லும் தகவல் என்னவென்றால், இது கடந்த ஆண்டு நடந்த சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள், வாக்குமூலங்கள். இதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

IT raid at Syed Beedi group.Minister, IPS involved or not

அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் தொடர்பு உண்டா?: குட்கா விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.       அப்படியென்றால், குட்கா தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறதா, செய்பவர்கள் யார் போன்ற கேள்விகளும் எழுகின்றன. குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர். இந்த சோதனையில் சிக்கிய டைரி ஒன்றில் ரூ40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமானது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயர்களும் இதில் அடிபட்டன. அண்மையில் வருமான வரித்துறையிடம் இது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு பெற்றிருந்தது. இந்நிலையில்தான் குட்கா விற்பனைக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

Syed Beedi- Daily Thanthi -news 161 crores evasion

புகையிலைப் பொருட்கள் விவகாரங்களில் இரட்டை வேடம் போடும் திராவிடத்துவவாதிகள், சித்தாந்திகள், மனித உரிமை போலிகள்: மக்கள் ஆரோக்கியம் பாதிக்கும் வரையில் புகையிலைப் பொருட்கள் உபயோகிக்கப்படுகின்றன, வரியேப்பு மூலம் கள்ளப்பணம் பெருகுகிறது, அப்பணம் தீவிரவாதத்திற்கு செல்கிறது, பிறகு அவை குண்டுதயாரிப்பில் முடிந்து, அவை இங்கேயே வைத்து வெடிக்கப்படுகின்றன. இதனால், சாதாரண அப்பாவி மக்களுக்கு, இருவிதங்களிலிம் குரூரமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதனை கவனிக்க வேண்டும். மனிதத்தன்மை இருப்பவர்கள், இவ்வேலைகளில் ஈடுபட மாட்டார்க்ள். ஆனால், தமிழக்ஜத்தில் திராவிடத்துவம் பேசும் அரசியல்வாதிகள், சித்தாந்த அதிகாரிகள், முகமதியோர் இவற்றில் ஈடுபட்டிருக்கும் போது, அக்கவலை இன்னும் பெரிதாகிறது. ஆக, இவற்றை ஒரு சாதாரணமான நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. திராவிடக் கட்சிகள் நிச்சயமாக நாடகம் போட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. மது எதிர்ப்பு என்று ஆர்பாட்டம் செய்பவர்கள் ஏன் புகையிலைப் பொருட்களை எதிர்ப்பதில்லை? சினிமா, விளம்பரம் போன்றவற்றில் ஆதரவைத்தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மது குடிப்பது போன்ற புகையிலை பொருட்களை உபயோகப்படுத்துவதை, வசனம், பாடல், நடிப்பு, ஆட்டம்-பாட்டம், கூத்து என்று ஆதரித்து வருவதை காணலாம். பீடித்தொழிலைக் கூட ஆதரித்து வருகிறார்கள். மனித உரிமைகள் என்றேல்லாம் சொல்லி ஆதரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

04-07-2017

Sayed Shariat Finance limited

[1] Income Tax department source told Express that Syed Beedi, which came under the scanner of Income Tax, has allegedly evaded taxes worth `90 crore. The company evaded taxes by manufacturing and selling the product in Tamil Nadu and raising the bills in Nellore, charged officials. In Tamil Nadu, Syed Beedi has to pay 12 per cent VAT on beedi, while in Nellore, the owner need not pay taxes. “They will show that the sale has happened only in Nellore and not in Tamil Nadu, though a majority of sale happens only in Tamil Nadu,” the official said. “The tax evasion during the last four years in Chennai alone is estimated to be worth `10 crore,” the source added.     Nearly 63 premises were searched by Income Tax sleuths in Tamil Nadu, Andhra Pradesh, Karnataka, Kerala, Telangana and Chhattisgarh. The searches are continuing.

Indian Express, ‘Beedi maker evaded `90 crore in taxes, moved bucks to Dubai’, By Express News Service  |   Published: 30th June 2017 08:07 AM, Last Updated: 30th June 2017 08:07 AM

[2]  A leading beedi manufacturer in the State is under the scanner of Income Tax department for alleged unaccounted investment in Dubai and evading taxes to the tune of `90 crore.

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/jun/30/beedi-maker-evaded-90-crore-in-taxes-moved-bucks-to-dubai-1622414.html

[3] தினத்தந்தி, வருமான வரி அதிகாரிகள் சோதனையில் செய்யது பீடி குழுமம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு, ஜூன் 30, 2017, 04:30 AM.

[4] http://www.dailythanthi.com/News/TopNews/2017/06/30004423/Prede-group-tax-evasion-of-Rs-90-crore.vpf

[5] தினமணி, புகையிலைப் பொருட்கள் தடைக்குப் பின்னால் இருக்கும்பகீர்தகவல்கள் உண்மையா?, ஜூன்.28, 2017. 02.51 PM.

[6]http://www.dinamani.com/tamilnadu/2017/jun/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-2728464.html

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

மார்ச் 8, 2015

திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது – தங்கம் கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கும்தொடர்பு – சி.பி.ஐ நடவடிக்கை (2)

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi - Photo- R.M. Rajarathinam

D. Sivashankaran ADC, and S. Hema, DC dispalying gold biscuits seized in Tiruchi – Photo- R.M. Rajarathinam

சோதனை, விசாரணை முதலியவற்றிற்குப் பிறகு ஐந்து அதிகாரிகள் கைது: அங்கிருந்த ஆவணங்கள், விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்யும் முறை, வசூலிக்கும் பணம் ஆகியவை குறித்து சிபிஐ குழுவினர்  சோதனை செய்தனர். விமான பயணிகள் வெளியேறும் பகுதியில் உள்ள 10 சுங்க இலாகா கவுண்டர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த சுங்க அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று காலை 9 மணிவரை நீடித்தது. பின்னர் சுங்க அதிகாரிகளுக்கு சொந்தமான பைக், கார் போன்ற வாகனங்களில் பணம் எதுவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் சுங்க அதிகாரிகளை அழைத்து கொண்டு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க துறை அலுவலக வளாக குடியிருப்பில் உள்ளவர்களின் வீடுகளுக்கும் சென்று மதியம் வரை  சோதனை நடத்தினர்[1]. இந்த சோதனையில் முறைகேடாக பெறப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது[2]. அத்துடன் சுங்க இலாகா அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் அவர்களில் அதிகாரிகள் ஐந்து, பிரயாணி ஒன்று – நாகூர் மீரான்[3]:

  1. சிவசாமி – சூப்பிரென்டென்ட்டென்ட்
  2. ரவிகுமார் – சூப்பிரென்டென்ட்டென்ட்
  3. தினேஸ்பிரஜாபதி – இன்ஸ்பெக்டர்.
  4. சுரேஸ்குமார் – இன்ஸ்பெக்டர்.
  5. அவ்ஜித்சக்கரபர்த்தி – இன்ஸ்பெக்டர்.

சி.பி.ஐ. அதிகாரிகள். இச்சோதனையும் கைது நடவடிக்கையும் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[4].

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

Gold is then made into lengthy cylindrical rods and inserted inside the cavity of the cartridge.

பணத்தை கையாலும் போது, கையாடல் செய்கிறானா, இல்லையா?: கௌடில்யர் சொன்னது போல, “நீரில் வாழும் மீன் நீரைக்குடித்து உயிர் வாழ்கிறதா இல்லையா என்பது போல, கருவூலத்தில் இருக்கும் பாதுகாவலன் பணத்தை கையாடல் செய்கிறானா இல்லையா என்று சொல்லமுடியாது”, என்ற ரீதியில் இன்று பணத்தை கையாலும் எல்லோருமே, ஆசையில் திளைத்துதான் இருக்கின்றனர், பணத்தை கையாலும் போது, கையாடல் செய்யத்தான் செய்கிறான். அதனால் தான், வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமாகக் கொடுக்கப் படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் போதவில்லை என்று அடிக்கடி ஸ்ட்ரைக் செய்து தான் வருகிறார்கள். அதேபோல, வரித்துறைகளில் உள்ளவர்களும் நேரிடையாகவோ, மறைமுகவோ பணத்துடன் செயல்படுவதால், அவர்களுக்கும் சரியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், வரிதளர்த்தல், வரிவிலக்கு, முறைகளில் வரியேப்ப்பு ஏற்படும். அது ஊழல் ஏற்பட, வளர, அதிகமாக வாய்ப்புகள் உண்டாக்கப் படுகின்றன.

advocates-வழக்கறிஞர்கள்-

advocates-வழக்கறிஞர்கள்-

உள்ளே-வெளியே நீயாயங்கள் – அநியாயங்கள்: எப்படி 100% தங்கக்கடத்தல்காரர்களை பிடிக்க முடியவில்லையோ, அதேபோல, எல்லா ஊழல்காரர்களும் பிடிக்கப்படுவதில்லை. மாட்டிக் கொள்பவர்கள் மட்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டவர்கள், மற்றவர்கள் புனிதர்கள் என்றாகாது. வரித்துறை அலுவலகங்களில், அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் வேலைசெய்ய, பதவி / போஸ்டிங் கொடுப்பதிலேயே ஊழல் ஆரம்பிக்கிறது. இதனால், ஒழுங்காக, நியாயமாக இருக்கும் அதிகாரிகள் 30-40 வருடங்களாக, மாத சம்பளம் வாங்கிக் கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ஆனால், நேற்று வந்தவர்கள் வளமாக, வசதிகளோடு, மேலதிகாரிகளின் ஆதரவோடு இருந்து கொண்டிருப்பதை காணலாம்.  இத்தகைய நடுநிலைமயற்ற போக்கும் வேலைசெய்பவர்களின் மனநிலையை பாதிக்கிறது. யோக்கியமானவனாக இருப்பவன், ஏன் நானும் அதுமாதிரி செய்யக் கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறான். அவ்வாறு அவன் நினைக்கும் போதே, ஊழல் ஏற்படுவதில்லை, நியாயமே செத்துவிடுகிறது. சட்டங்கள் வளைக்கப்பட்டு விடுகின்றன. நியாயமானவன், அநியாயம் செய்யும் போது சமூகம் தாங்கிக் கொள்ளமுடியாது. இப்பொழுது, சமுதாயம் இக்கட்டான சூழ்நிலைகளில் தான் சென்றுகொண்டிருக்கிறது.

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

modi_cleaning-ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா

நீதி, சட்டம் அமூல் படுத்துவர்கள் நியாயவான்களா, இல்லையா?: நீதித்துறையும் ஊழலில் தான் மலிந்து கிடக்கிறது. நீதிபதிகள் அரசியல், செல்வாக்கு போன்ற காரணிகளைக் கொண்டுதான் பதவிக்கு அமர்த்தப் படுகிறார்கள். இதனால், அவர்கள் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஏனெனில் திறமை, அனுபவம், முதிர்ச்சி முதலியன, தம்மைவிட அதிகமாக இருந்தாலும், நீதிபதி ஆகாத சீனியர் அட்வகேட்டுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். அதேபோலத்தான், சி.பி.ஐ கதையும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அதனை காங்கிரஸின் கைப்பாவை என்று விமர்சிக்கப்பட்டது. இன்று ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால், பாரபட்சம் இல்லாமல் செயல்படுமா என்று தெரியாது. இப்பொழுது சித்தாந்தம் வேறு பேசப்படுகிறது, அது ஜாதி, மதம், மொழி என்ற பலவித காரணிகளுடன் சேர்ந்து நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. நீதி-சட்டம் அதற்கேற்றாற்போலத்தான் மாறிக்கொண்டும், வளைந்து கொண்டும் இருக்கும். வரியேய்ப்பு என்றால், அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக் கூடாத அளவுக்கு, சட்டங்கள் இருக்க வேண்டும். தங்கத்தைக் கடத்தவே முடியாது என்ற அளவில் இருந்தால், எப்படி தங்கத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வரமுடியும். ஹென்னா பவுடரில், சாக்கிலெட்டில், மனித உறுப்புகளில், மிஷனரி பார்ட்ஸ் என்ற வகைகளில் கொண்டு வருகிறார்கள் என்றால், அதனைக் கண்டுபிடிக்கும் திறமை வேண்டும். வேலைசெய்பவர்களிடத்தில் அந்த அறிவு, ஞானம், நேர்மை போன்ற உணர்வுகள் உள்ளவர்களால் தான் அது முடியும். இப்பொழுதுள்ள சமூக-அமைப்புகளில் உள்ள நேர்மையற்றத் தன்மைகளை மாற்றினால் தான், இந்தியாவை மாற்ற முடியும்.

நீதிமுறை அழுக்குகள்ஐந்திய சமுதாயத்தை சுத்தப்படுத்த வேண்டும்: சுத்தம் வேண்டுமானால், அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும். உடல்-மனம் இரண்டையும் சுத்தப் படுத்த வேண்டும் என்பதுப்போல, இந்தியாவை சுத்தப்படுத்த வேண்டுமானால், இந்தியர்களை சுத்தப் படுத்த வேண்டும், ஏனெனில், அவர்கள் பற்பலவிதமான அழுக்குகளோடு, நுற்றுக்கணக்கான ஆண்டுகளில் அசுத்தமாக இருந்துகொண்டிருக்கிறார்கள். முகமதியம், ஐரோப்பியம், கிருத்துவம், கம்யூனிஸம் என்ற சித்தாந்தளினால் ஏற்பட்ட கறைகளும், அழுக்குகளும் ஏராளம். சுதந்திரம் வந்தபிறகும் ஆங்கில ஆட்சிமுறையைப் பின்பற்றி வருவதால், அவர்களுடன் கூடிய அசுத்தங்களும் அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அவர்கள் ஏதோ ஆட்சிமுறையினைக் கொடுத்தார்கள் என்று பீழ்த்திக் கொண்டாலும், உள்ள ஆட்சிமுறையினைக் கெடுத்தார்கள் என்றாகியுள்ளது. அவர்கள் காலத்தில் ஆட்சியாளர்களுக்கு, இந்தியர்களுக்கு என்று இரட்டை நீதி-சட்டங்கள் இருந்தன. அதே முறைதான் இப்பொழுதும் பின்பற்றப்படுகிறது. ஆனால், சட்டங்கள் ஒன்றாக இருப்பதினால், அவைகளில் ஓட்டைகள் போடப்படுகின்றன, வளைக்கப்படுகின்றன, முடியவில்லை என்றால், மாற்றப்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 08-03-2015

[1]  தினகரன், சுங்கவரி வசூலில் முறைகேடு: திருச்சி ஏர்போர்ட்டில் சி.பி. அதிரடி சோதனை, சனிக்கிழமை, 07-03-2015: 01:21:11.

[2] http://m.thehindu.com/news/cities/Tiruchirapalli/cbi-searches-customs-wing-at-tiruchi-airport/article6968065.ece/?secid=12614

[3] Further investigations revealed that five customs officials – two superintendents Sivaswamy and Ravikumar, three inspectors Dinesh Prajapati, Suresh Kumar, Avijit Chakraborthy had been accepting bribes and not levying requisite duty for dutiable goods being brought by passengers from various countries through the airport.

http://timesofindia.indiatimes.com/city/trichy/CBI-arrests-six-including-five-customs-officials-on-graft-charges/articleshow/46489295.cms

[4] தமிழ்.ஒன்.இந்தியா, சுங்கவரியில் முறைகேடு: திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ திடீர் ரெய்டு– 6 பேர் கைது, Posted by: Mathi, Updated: Saturday, March 7, 2015, 12:23 [IST]