Posts Tagged ‘வன்முறை’

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (1)

ஏப்ரல் 4, 2018

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (1)

State of SC-ST crimes 2014-16- DNA graphics
எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 உருவானது: வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் ஜாதியினர் / தாழ்த்தப்பட்டவர்கள் [செட்யூல்ட் காஸ்ட்ஸ்] மற்றும் பழங்குடி மக்களுக்கு [செட்யூல்ட் டிரைப்ஸ்] எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் [the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act] கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.  பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

SC-ST Act- Bharat bandh-Tiruma protest.jpg

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகள் நடந்து வருவது: கடந்த 2016 ஆம் ஆண்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 15.4% அளவுக்கே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணகத்தின் வருடாந்திர அறிக்கை சுட்டிக்காட்டுகிறது[1]. பொதுவான பிற வழக்குகளில் 33.3% அளவுக்கு குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்த வன்கொடுமைகள் 66% அதிகரித்திருக்கின்றன. சராசரியாக 18 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்பது தற்போது 15 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்று நடந்து வருகின்றது[2].  இப்படியெல்லாம் சார்பு எண்ணங்களுடன் விளக்கங்கள் கொடுத்தாலும், குறிப்பிட்ட வழக்குகளில் எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள், அடுத்தவர் தூண்டி விட்டு, புகார் கொடுப்பது, வழக்குப் போடுவது என்ற ரீதியில் உள்ளதும் விசாரணை மற்றும் நீதிமன்ற நடப்புகளில் தெரிய வந்தன. அதனால், ஒரு நிலையில் அத்தகைய பொய் புகார்கள், வழக்குகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்த வேண்டிய அவசியமும் உணரப் பட்டது.

SC-ST Act- cases filed, charge sheeted etc

எஸ்.சி சாதிகளுக்கிடையே, எஸ்.டி எஸ்.சி சாதிகளுக்கிடையே, மற்றும் எஸ்.டி சாதிகளிடையே ஏற்படும் வன்முறைகளை எவ்வாறு தடுப்பது?; இச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்போது காவல்நிலையம் கட்டப்பஞ்சாயத்து கூடங்களாக மாறி விடுகின்றன என்ற குற்றச்சாட்டும் வைக்கப் படுகின்றது. சட்டம் என்பது பொய்த்து, சாதிய வன்மம் அங்கே கட்டவிழ்த்து விடப்படுகிறது என்று சிலர் சொல்வது ஒரு தரப்பு வாதமாகிறது. காவல்நிலையத்திலும் இரு தரப்பு சாதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதால், இந்தச் சட்டத்தை சரிவர கையாளக் கூடிய நிலை அங்கு இல்லை. மேலும் பொதுமக்களும் இந்தச் சட்டத்தை தவறான வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதமும் அத்தகையது. எனவே இதில் உள்ள  குறைபாடுகளைக் களைய வேண்டும். மிக முக்கியமாக அதிகாரிகள், இதனை நேர்மையாகக் கையாள வேண்டும் என்று பொதுவாதம் வைப்பது, சட்டத்தைப் புரிந்து கொள்வதாகாது. கிராமங்களில் வன்முறையைத் தூண்டி விடுவதில், அச்சாதிகள்சம்பந்தப் பட்டுள்ளதால் தான், அத்தகைய சமரசங்கள் ஏற்பட்டுக்கின்றன. மேலும் எஸ்.சி சாதிகளுக்கிடையே, எஸ்.டி எஸ்.சி சாதிகளுக்கிடையே, மற்றும் எஸ்.டி சாதிகளிடையே ஏற்படும் வன்முறைகளைப் பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஏனெனில், அங்கு புகார் கொடுப்பதும், புகாருக்கு உட்படுபவகளும், அதே சாதியினராக இருக்கின்றன. இதனால், நேரங்கழித்து, மற்ற சாதிகளுடன் ஏற்பட்ட மோதல்களாக மாற்றப் பட்டு, சட்டம் வளைக்கப் படுகிறது.

SC-ST Act- Justices Goel and Lalit

மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பு: மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பில், இவ்வாறு தீர்ப்பளித்தது. 2015-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 15 முதல் 16 விழுக்காடு போலி வழக்குகள் என தெரியவந்துள்ளதாகவும். எனவே அப்பாவி பொதுமக்களை மதம் அல்லது சாதியின் பெயரால் பாதிப்புக்குள்ளாக்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்[3]. சாதி ரீதியான கொடுமைகளை நீக்க கொண்டு வரப்பட்ட சட்டம் சாதியை நிலைநிறுத்த பயன்படக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது[4]. இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன் ஜாமின் வழங்கியது. எந்த கைது நடவடிக்கைக்கு முன்னரும் அடிப்படையான விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்[5].

SC-ST Act- Bharat bandh-9 killed

ஊடகங்களின் சார்பு கொண்ட திரிபு செய்திகள் வெளியிடும் தன்மை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்த்தும் வகையியில் சுப்ரீம் கோர்ட் சில திருத்தங்கள் செய்து தீர்ப்பு வழங்கியது, என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிடுவதே தவறானது. சட்டத்தை நீதிமன்றங்கள் திருத்த முடியாது, பரிந்துரை தான் செய்ய முட்யும், அரசு தான் செய்ய முடியும். 02-04-2018 அன்று, இதற்கு எதிராக நாடு முழுவதும் தலித் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின. எஸ்.சி-எஸ்.டி ஆணையம் “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனத்தின் படியும் செல்லாது என்று சுட்டிக் காட்டியப் பிறகும், அதே தோரணையில் குறிப்பிடப் படுவதும் நோக்கட் தக்கது. குறிப்பாக வட மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியில் பேருந்து, கார் உள்ளிட்டவை போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டன. குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

SC-ST Act- Bharat bandh-poice van attacked

வட மாநிலங்களில் “பாரத் பந்த்,” போலீஸார் தாக்கப் படுதல், வன்முறை முதலியன: பஞ்சாப் மாநிலத்தில் ரெயில்கள் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்து வரும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் குவாலியர், ப்ஹிந்த், மோரேனா மற்றும் சாகர் பகுதிகளில் நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் ஆறு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதே போல, உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் இருவரும், ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் நடந்த வன்முறை நிகழ்வில் ஒருவர் பலியாகியுள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் தாக்கியதில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாகவும், போலீஸ் வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையே, அனைத்து மாநிலங்களிலும் சட்டம் – ஒழுங்கு கட்டுக்குள் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது[6]. மேலும், சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது[7].

© வேதபிரகாஷ்

04-04-2018

SC-ST Act- Bharat bandh-arson, loot, violence

[1] ஆதவன் தீட்சண்யா, உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமைஆதவன் தீட்சண்யா, BY த டைம்ஸ் தமிழ், மார்ச் 23, 2018

[2] https://thetimestamil.com/2018/03/23/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/

[3] தினகரன், விசாரணையின்றி கைது செய்யக் கூடாது : தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்ற அறிவுரை, 2018-03-21@ 14:40:19

[4] On March 20, the Supreme Court had diluted the provisions of the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, ruling that government servants should not be arrested without prior sanction and private citizens too, can be arrested only after an inquiry under the law.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=386337

[6] மாலைமுரசு, எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்டம் தளர்வுகலவரங்களில் பலி எண்ணிக்கை 9 ஆனது, பதிவு: ஏப்ரல் 02, 2018 19:27; மாற்றம்: ஏப்ரல் 02, 2018 19:48

[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/02192723/1154660/7-killed-in-SC-ST-violance-and-Bharat-Bandh.vpf