Posts Tagged ‘தலித்’

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (2)

ஏப்ரல் 4, 2018

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (2)

SC-ST Act- Bharat bandh-3600 detained in bihar

விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது: ஒரு நிலையில், இப்போராட்டம் பிஜேபிக்கு, மோடிக்கு எதிரானதாக எடுத்துச் செல்லப்பட்டதை கவனிக்க முடிந்தது. எதிர்கட்சிகளும் அத்தகைய போக்கைக் கடைப் பிடித்தன. எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்[1].

SC-ST Act- Bharat bandh-40 cops injured

அரசிலாக்கப் படும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள்: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எஸ்.சி. எஸ்.டி. சமூக எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர். அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதினார். இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.  திங்களன்று [02-03-2018] மக்களவையில் இன்று பலத்த அமளிக்கிடையே காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்பொழுது அவருக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: “எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு முழுமையாக பட்டியல் வகுப்பினர் பக்கம்தான் இருக்கிறது,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[2].

SC-ST Act- Bharat bandh-modi down

20-03-2018 அன்று அளிக்கப் பட்ட தீர்ப்பு என்ன?: எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கடந்த மார்ச் 20-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் மீது யார்மீதும் உடனடியாக கைது நட வடிக்கை எடுக்கக் கூடாது; தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும்; அதேபோல, அரசு ஊழியர்களையும் உடனடியாக கைது செய்யக்கூடாது. உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும் உன்று உத்தரவு பிறப்பித்தது. அதாவது, அச்சட்டத்தை துர்பிரயோகம் செய்வது தடுக்கப் பட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டியது. உச்சநீதிமன்றம் 02-03-2018 அன்று, “தனது முந்தைய தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், போராடுபவர்கள் தீர்ப்பைக் கூட படித்திருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது”, என்று அறிவித்தது[3]. முன்னர் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது[4].

SC-ST Act- Bharat bandh-Muslims

தலித்போர்வையில் எதிர்கட்சியினர் மற்றவர் தூண்டிவிட்டபாரத் பந்த்: தென் மாநிலங்களில் “காவிரி பிரச்சினை” வைத்துக் கொண்டு, அரசியல் நடந்து வருகின்றது, அது கர்நாடக  தேர்தலுடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால், எஸ்.சி மற்றும் எஸ்.டி அதிகமாக இருக்கும் மாநிலங்களில் மட்டும் தான், இந்த போராட்டம் நடத்தப் பட்டு, வன்முறையில் முடிந்து, 10 பேர் பலியாகி உள்ளனர், பொது மற்றும் தனியார் சொத்துகள் நாசமாக்கப் பட்டுள்ளன. இதன் பின்னணியில் எதிர் கட்சியினர், கம்யூனிஸ்ட் வகையறாக்கள், முஸ்லிம்-கிருத்துவ ஆதரவு நிறுவனங்கள் என்று தான் உள்ளன. முன்னர் ஜிக்னேஸ் மேவானியின் பேட்டி சனி-ஞாயிறு என்று இரண்டு நாட்களிலும் ஓடியது, அதில், வன்முறை தூண்டும் வகையில் பேச்சு இருந்தது. எஸ்.சி மற்றும் எஸ்.டி நலன், உரிமைகள் என்பதை விட, மோடி எதிர்ப்பு தான் ;பிரதானமாக இருந்தது. இதே பாட்டை மற்றவரும் பாடினர்.

SC-ST Act- Bharat bandh-Communists

உச்சநீதி மன்றம் தீர்ப்பை மறுஆய்வு செய்ய மறுத்து விட்டது: வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஏ.கே கோயல் மற்றும் யுயு லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது[5]: “‘நாங்கள் அளித்த தீர்ப்பை முழுமையாக புரிந்து கொள்ளாமல், சுயநல காரணங்களுக்காக தவறான விளக்கம் கொடுத்து, திசைத் திருப்ப சிலர் எதிர்க்கின்றனர். எங்கள் உத்தரவு எஸ்.சிஎஸ்.டி மக்களுக்கு எதிரானது அல்ல. இந்த சட்டம் தனிப்பட்ட காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கம் நீதிமன்றத்திற்கு இல்லை. புகார் அளித்த உடனேயே கைது செய்யக்கூடாது என்றுதான் கூறியுள்ளோம். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கலாம். அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். எந்த ஒரு சட்டமும், அப்பாவி மக்களைப் பாதித்து விடக் கூடாது என்பதுதான் நீதிமன்றத்தின் எண்ணம்.  எனினும் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த நீதிமன்றம் தயாராக உள்ளது. இதுதொடர்பாக முறையிட்டுள்ள அனைத்து தரப்பினரும் இரண்டு நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தும்,” எனக் கூறினர்[6].

SC-ST Act- Bharat bandh-arson, violence

ஊடகங்களின் திரிபு செய்திகளும், உச்சநீதி மன்றத்தின் விளக்கமும்: ஊடகங்களும் தீர்ப்பை ஒழுங்காகப் படிக்காமல்[7], தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு மற்றும் அடுத்தவர் சொன்னதை கேட்டுக் கொண்டு, எஸ்.சி-எஸ்.டியினர் ஏன் “பாரத் பந்த்”தில் ஈடுபட்டனர், அவர்களின் பாதிப்பு என்ன, போராட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[8]. அதாவது, உண்மையான விவரங்களை, செய்தி-விசயமாக போடாமல், தூண்டும், ஆதாரமில்லாத கருத்துகளை, அரைவேக்காட்டுத் தனமான விசயங்களை செய்திகள் போல போட்டு வருகின்றனர். 89-பக்கங்கள் கொண்ட தீர்ப்பளித்த நீதிபதி கோயல் கூறியதாவது[9], “எங்களுடைய தீர்ப்பு அரசியல் நிர்ணய சாசனத்தில் உள்ளதை நடைமுறைப் படுத்துகிறது. தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைகளை நாங்கள் நான்றாகவே உணர்ந்திருக்கிறோம், தான் அவை உயர்ந்த இடத்தில் வைக்கப் பட்டுள்ளன…… இருப்பினும் அதே நேரத்தில், அப்பாவி நபர் யாரும் இதில் பொய்யான முறையில் சிக்க வைக்கப் பட்டு, விசாரணை இல்லாமல் கைது செய்யப் படுவதைத் தடுக்கிறது. நாங்கள் இச்சட்டம் அமூல் படுத்துவதைத் தடுக்கவில்லை. இந்த சட்டம் என்ன அப்பாவி மக்களை கைது செய்யப் பட வேண்டும் என்றா சொல்கிறது? ஆகவே, எங்களது தீர்ப்பு அச்சட்டத்திற்கு எதிரானது அல்ல,” என்று எடுத்துக் காட்டினார்[10].

© வேதபிரகாஷ்

04-04-2018

SC-ST Act- Bharat bandh-boys run riot

[1] தினமணி, எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்! , By IANS | Published on : 02nd April 2018 02:04 PM

[2] http://www.dinamani.com/india/2018/apr/02/centre-files-review-petition-over-scst-act-order-2892179.html

[3] ZeeTVnews, Not against SC/ST Act, those agitating may not have read judgement: Supreme Court, By Zee Media Bureau | Updated: Apr 03, 2018, 15:04 PM IST

[4] http://zeenews.india.com/india/not-against-sc/st-act-those-agitating-may-not-have-read-judgement-supreme-court-2096083.html

[5] தி.இந்து, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உத்தரவு: இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு, பி.டி.ஐ, Published : 03 Apr 2018 16:10 IST; Updated : 03 Apr 2018 16:12 IST

[6] http://tamil.thehindu.com/india/article23424976.ece

[7] India Today, Why Dalits called a Bharat Bandh? SC/ST Act and the Supreme Court ruling explained, Anusha Soni, New Delhi, April 2, 2018: UPDATED 15:40 IST

[8] https://www.indiatoday.in/india/story/why-are-dalits-protesting-sc-st-act-and-the-supreme-court-ruling-explained-1202745-2018-04-02

[9] DNA, Relief for SC/ST can’t be at cost of innocent: Supreme Court, WRITTEN BY Ritika Jain, Updated: Apr 4, 2018, 05:05 AM IST.

[10] However, Justice Goel, the author of the 89-page judgement said, the judgment fortified the Act. “Our judgment implements what is said in the Constitution. We are conscious of the rights of the underprivileged and place it at the highest pedestal… but at the same time, an innocent person cannot be falsely implicated and arrested without proper verification. We have not stopped the implementation of the Act. Does the Act mandate the arrest of innocent persons? Our judgment is not against the Act,” Justice Goel said addressing Venugopal.

http://www.dnaindia.com/india/report-relief-for-scst-can-t-be-at-cost-of-innocent-supreme-court-2600762

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (1)

ஏப்ரல் 4, 2018

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (1)

State of SC-ST crimes 2014-16- DNA graphics
எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 உருவானது: வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் ஜாதியினர் / தாழ்த்தப்பட்டவர்கள் [செட்யூல்ட் காஸ்ட்ஸ்] மற்றும் பழங்குடி மக்களுக்கு [செட்யூல்ட் டிரைப்ஸ்] எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் [the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act] கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.  பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

SC-ST Act- Bharat bandh-Tiruma protest.jpg

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகள் நடந்து வருவது: கடந்த 2016 ஆம் ஆண்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 15.4% அளவுக்கே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணகத்தின் வருடாந்திர அறிக்கை சுட்டிக்காட்டுகிறது[1]. பொதுவான பிற வழக்குகளில் 33.3% அளவுக்கு குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்த வன்கொடுமைகள் 66% அதிகரித்திருக்கின்றன. சராசரியாக 18 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்பது தற்போது 15 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்று நடந்து வருகின்றது[2].  இப்படியெல்லாம் சார்பு எண்ணங்களுடன் விளக்கங்கள் கொடுத்தாலும், குறிப்பிட்ட வழக்குகளில் எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள், அடுத்தவர் தூண்டி விட்டு, புகார் கொடுப்பது, வழக்குப் போடுவது என்ற ரீதியில் உள்ளதும் விசாரணை மற்றும் நீதிமன்ற நடப்புகளில் தெரிய வந்தன. அதனால், ஒரு நிலையில் அத்தகைய பொய் புகார்கள், வழக்குகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்த வேண்டிய அவசியமும் உணரப் பட்டது.

SC-ST Act- cases filed, charge sheeted etc

எஸ்.சி சாதிகளுக்கிடையே, எஸ்.டி எஸ்.சி சாதிகளுக்கிடையே, மற்றும் எஸ்.டி சாதிகளிடையே ஏற்படும் வன்முறைகளை எவ்வாறு தடுப்பது?; இச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்போது காவல்நிலையம் கட்டப்பஞ்சாயத்து கூடங்களாக மாறி விடுகின்றன என்ற குற்றச்சாட்டும் வைக்கப் படுகின்றது. சட்டம் என்பது பொய்த்து, சாதிய வன்மம் அங்கே கட்டவிழ்த்து விடப்படுகிறது என்று சிலர் சொல்வது ஒரு தரப்பு வாதமாகிறது. காவல்நிலையத்திலும் இரு தரப்பு சாதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதால், இந்தச் சட்டத்தை சரிவர கையாளக் கூடிய நிலை அங்கு இல்லை. மேலும் பொதுமக்களும் இந்தச் சட்டத்தை தவறான வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதமும் அத்தகையது. எனவே இதில் உள்ள  குறைபாடுகளைக் களைய வேண்டும். மிக முக்கியமாக அதிகாரிகள், இதனை நேர்மையாகக் கையாள வேண்டும் என்று பொதுவாதம் வைப்பது, சட்டத்தைப் புரிந்து கொள்வதாகாது. கிராமங்களில் வன்முறையைத் தூண்டி விடுவதில், அச்சாதிகள்சம்பந்தப் பட்டுள்ளதால் தான், அத்தகைய சமரசங்கள் ஏற்பட்டுக்கின்றன. மேலும் எஸ்.சி சாதிகளுக்கிடையே, எஸ்.டி எஸ்.சி சாதிகளுக்கிடையே, மற்றும் எஸ்.டி சாதிகளிடையே ஏற்படும் வன்முறைகளைப் பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஏனெனில், அங்கு புகார் கொடுப்பதும், புகாருக்கு உட்படுபவகளும், அதே சாதியினராக இருக்கின்றன. இதனால், நேரங்கழித்து, மற்ற சாதிகளுடன் ஏற்பட்ட மோதல்களாக மாற்றப் பட்டு, சட்டம் வளைக்கப் படுகிறது.

SC-ST Act- Justices Goel and Lalit

மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பு: மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பில், இவ்வாறு தீர்ப்பளித்தது. 2015-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 15 முதல் 16 விழுக்காடு போலி வழக்குகள் என தெரியவந்துள்ளதாகவும். எனவே அப்பாவி பொதுமக்களை மதம் அல்லது சாதியின் பெயரால் பாதிப்புக்குள்ளாக்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்[3]. சாதி ரீதியான கொடுமைகளை நீக்க கொண்டு வரப்பட்ட சட்டம் சாதியை நிலைநிறுத்த பயன்படக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது[4]. இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன் ஜாமின் வழங்கியது. எந்த கைது நடவடிக்கைக்கு முன்னரும் அடிப்படையான விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்[5].

SC-ST Act- Bharat bandh-9 killed

ஊடகங்களின் சார்பு கொண்ட திரிபு செய்திகள் வெளியிடும் தன்மை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்த்தும் வகையியில் சுப்ரீம் கோர்ட் சில திருத்தங்கள் செய்து தீர்ப்பு வழங்கியது, என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிடுவதே தவறானது. சட்டத்தை நீதிமன்றங்கள் திருத்த முடியாது, பரிந்துரை தான் செய்ய முட்யும், அரசு தான் செய்ய முடியும். 02-04-2018 அன்று, இதற்கு எதிராக நாடு முழுவதும் தலித் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின. எஸ்.சி-எஸ்.டி ஆணையம் “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனத்தின் படியும் செல்லாது என்று சுட்டிக் காட்டியப் பிறகும், அதே தோரணையில் குறிப்பிடப் படுவதும் நோக்கட் தக்கது. குறிப்பாக வட மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியில் பேருந்து, கார் உள்ளிட்டவை போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டன. குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

SC-ST Act- Bharat bandh-poice van attacked

வட மாநிலங்களில் “பாரத் பந்த்,” போலீஸார் தாக்கப் படுதல், வன்முறை முதலியன: பஞ்சாப் மாநிலத்தில் ரெயில்கள் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்து வரும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் குவாலியர், ப்ஹிந்த், மோரேனா மற்றும் சாகர் பகுதிகளில் நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் ஆறு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதே போல, உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் இருவரும், ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் நடந்த வன்முறை நிகழ்வில் ஒருவர் பலியாகியுள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் தாக்கியதில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாகவும், போலீஸ் வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையே, அனைத்து மாநிலங்களிலும் சட்டம் – ஒழுங்கு கட்டுக்குள் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது[6]. மேலும், சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது[7].

© வேதபிரகாஷ்

04-04-2018

SC-ST Act- Bharat bandh-arson, loot, violence

[1] ஆதவன் தீட்சண்யா, உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமைஆதவன் தீட்சண்யா, BY த டைம்ஸ் தமிழ், மார்ச் 23, 2018

[2] https://thetimestamil.com/2018/03/23/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/

[3] தினகரன், விசாரணையின்றி கைது செய்யக் கூடாது : தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்ற அறிவுரை, 2018-03-21@ 14:40:19

[4] On March 20, the Supreme Court had diluted the provisions of the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, ruling that government servants should not be arrested without prior sanction and private citizens too, can be arrested only after an inquiry under the law.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=386337

[6] மாலைமுரசு, எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்டம் தளர்வுகலவரங்களில் பலி எண்ணிக்கை 9 ஆனது, பதிவு: ஏப்ரல் 02, 2018 19:27; மாற்றம்: ஏப்ரல் 02, 2018 19:48

[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/02192723/1154660/7-killed-in-SC-ST-violance-and-Bharat-Bandh.vpf

அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் சட்ட மாணவர்கள் அடித்துக் கொண்ட தீர்ப்பில் சட்டத்தை மீறியவர்களுக்கு சிறை தண்டனை, தண்டம்!

ஜனவரி 30, 2016

அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் சட்ட மாணவர்கள் அடித்துக் கொண்ட தீர்ப்பில் சட்டத்தை மீறியவர்களுக்கு சிறை தண்டனை, தண்டம்!

சட்டக் கல்லூரி மோதல் வழக்கு தீர்ப்பு 2016

அடிதடியில் பெரும் பரபரப்பு, வழக்குகள் பதிவு: இதில், அய்யாத்துரை, பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் ஒரு அணியாகவும், சித்திரைசெல்வன், மணிமாறன் உள்பட பலரும் ஒரு அணியாகவும் பிரிந்து ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர்[1]. இதில், பாரதிகண்ணன் என்ற மாணவனை, கல்லூரி வாசலில் வைத்து மாணவர்கள் சிலர் தாக்கிய வீடியோ காட்சி தொலைக்காட்சியில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து எஸ்பிளனேடு போலீசார் இரு வழக்குகளை பதிவு செய்தனர். அதாவது, மாணவன் அய்யாத்துரை கொடுத்த புகாரின் அடிப்படையில், சித்திரைச்செல்வன், மணிமாறன், ரவீந்திரன், குபேந்திரன் உள்பட 41 பேர் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர், விசாரணை நடத்திய போலீசார் 43 பேரை கைது செய்தனர்[2]. ஆனால், ஜாதி பிரச்சினை என்பதினால், அப்படியே கிடப்பில் போட்டு வைத்தனர். இதனால் உச்சநீதி மன்றம் அணுகப்பட்டது. கே. சரவணன் கருப்பசாமி மற்றும் இன்னொருவர் பெருமாள் என்பவர், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று 2000ல் வழக்குத் தொடர்ந்தார்[3]. ஆனால் தேவையில்லை என்று தள்ளுபடி செய்து விட்டது[4].

சட்டக் கல்லூரி மோதல் வழக்கு தீர்ப்பு 2016.2

பி.2 எஸ்பலனேட் [B2 Esplanade Police Station] போலீஸ் ஷ்டேசனில் கீழ்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன:

  1. அய்யாதுரைஎன்பவர்கொடுத்தபுகாரின்படி [Crime No. 1371/2008 of B2 Esplanade Police Station under Sections 147, 148, 341, 324, 307 & 506 (ii) IPC] சித்திரைச்செல்வன்மற்றும் 40 மாணவர்களுக்குஎதிராகவழக்குப்பதிவுசெய்யப்பட்டது. 23 பேர்கைதுசெய்யப்பட்டனர், சிலர்சரண்அடைந்தனர். பிறகுபெயிலில்விடப்பட்டனர்.
  1. இதேபோல, சித்திரைச்செல்வன்கொடுத்தபுகாரின்மீது [Crime No. 1372/2008against two students in B2 Esplanade Police Station under Sections 341, 324 and 506 (ii) IPC and the same was subsequently altered into Sections 341, 324, 307 and 506 (ii) IPC.]. இதில்இரண்டுபேர்கைதுசெய்யப்பட்டு, பிறகு 12-01-2009 அன்றுபெயிலில்விடப்பட்டனர்.
  1. 13-11-2008 அன்றுகல்லூரிமுதல்வரின்அறைக்குள்சென்றுபொருட்களைசேதப்படுத்தியதற்காக [Crime No.1374/2008 under Sections 147, 148 IPC and Section 3(1) of Tamilnadu Property (Prevention of Damage and Loss) Act, 1992] ஒருவழக்குப்பதிவுசெய்யப்பட்டது. இதில்கைதுசெய்யப்பட்ட 14 பேர் 23-11-2008 அன்றுநீதிமன்றஆணைப்படிவிடுவிகப்பட்டனர்.

சட்டக் கல்லூரி மோதல் வழக்கு -ஆம்ச்ட்ராங் கைது, விடுதலை

போலீஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது: இதில் Crime No. 1371/2008 குற்றப்பத்திரிக்கை எட்டாவது மெட்ரோபோலிடின் மேஜிஸ்ட்ரேட் [VIIth Metropolitan Magistrate, George Town] முன்பாக 10-03-2011 அன்று தாக்கல் செய்யப்பட்டது. சில திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுடன் மறுபடியும் 19-05-2011 அன்று தாக்கல் செய்யப்பட, Case No.29/2011 எண்ணிட்ட கோப்பில் 09-09-2014 அன்று விசாரணை வைக்கப்பட்டது. மேலும், முன்னதாக 12-11-2008 அன்று,

(1) திரு. கே.கே. ஶ்ரீதேவ், கல்லூரி முதல்வர் [ Mr. K.K. Sridev, Principal of the Law College]

(2) திரு கே. நாராயணமூர்த்தி, உதவி போலீஸ் கமிஷனர் [Mr. K. Narayanamoorthy, Assistant Commissioner of Police of the Jurisdiction Range]

(3) திரு. எம். சேகர் பாபு, இன்ஸ்பெக்டர், பி.2 எஸ்பலனேட் [Mr.M. Sekar Babu, Inspector of Police of B2 Esplanade Police Station] முதலியோர், வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

அதே போல நான்கு உதவி-இன்ஸ்பெக்டர்களும் இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். நீதிபதி பி. சன்முகம் தலைமையில் நடந்த விசாரணை கமிஷன் அறிக்கைப்படி, இம்மூவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் துறை விசாரணை நிலுவையில் உள்ளது. முக்கியமாக குற்றஞ்சாட்டப்பட்ட கே. ஆம்ஸ்ட்ராங், வக்கீல் மற்றும் வேட்பாளராக இருந்த கைது செய்யப்படவில்லை. இது 08-02-2011 அன்று தான் தெரியவந்தது. 01-05-2011 அன்று கைது செய்யப்பட்டாலும், 04-05-2011 அன்று பெயிலில் விடப்பட்டார். இதே போல மற்றவர்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றன.

சட்டக் கல்லூரி மோதல் ஆம்ஸ்ட்ராங் கைது 2008

உச்சநீதி மன்றம், அக்டோபர் 2015ல், ஆறுமாதங்களில் முடிக்குமாறு ஆணையிட்டது: இந்த வழக்கு மற்றும் விசாரணை இழுத்தடிக்கப்படும் நிலை இருந்ததால், உச்சநீதி மன்றம், அக்டோபர் 2015ல், ஆறுமாதங்களில் முடிக்குமாறு ஆணையிட்டது[5]. நீதிபதி கோமதிநாயகம் இந்த வழக்கில் வக்கீல் ரஜினிகாந்த் முதல் குற்றவாளியாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அமைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவரும், சட்டக்கல்லூரி மாணவர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தும் விதமாக தூண்டி விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.  அதேபோல சித்திரைசெல்வன் கொடுத்த புகாரின் பேரில், பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளும் சென்னை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள 17-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கோமதிநாயகம் நேற்று பிற்பகலில் தீர்ப்பு அளித்தார்[6].

சட்டக் கல்லூரி மோதல் ஆம்ஸ்ட்ராங் 2008

ஆம்ஸ்ட்ராங், ரஜினிகாந்த் விடுதலை: அந்த தீர்ப்பில் நீதிபதி [the XVII Additional Sessions judge Gomathi Nayagam ] கூறியிருப்பதாவது:- பாரதிகண்ணன் உள்ளிட்ட 3 பேரை தாக்கிய வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட ரஜினிகாந்த், ஆம்ஸ்ட்ராங் உள்பட 22 பேரை விடுதலை செய்கிறேன்[7]. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சித்திரைச் செல்வன் உள்பட 19 பேர் மீதான 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன[8]. இவர்களுக்கு, சட்டவிரோதமாக கூடிய குற்றத்துக்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்தியதற்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்[9]. இந்த சிறை தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும்.

நீதிமுறை அழுக்குகள்

அப்பீலுக்காக தண்டனை நிறுத்தி வைப்பு: அதேபோல சித்திரைசெல்வனை தாக்கிய வழக்கில், பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக இவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார்[10]. இந்த தீர்ப்பை எதிர்த்து 21 பேரும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக இந்த தண்டனையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 21 பேரும் சொந்த ஜாமீன் உத்தரவாதம் வழங்கி வீடு திரும்பினார்கள்[11]. 41 மாணவர்களின் சார்பாக வாதாடிய எஸ். சத்தியசந்திரன் மற்றும் சி. விஜயகுமார் கூறியதாவது[12], “அத்தகைய வன்முறையை மாணவர்கள் செய்திருக்க முடியாது. வெளியாட்களின் மூலம் தான் நடந்தேறியுள்ளது. இதனால், நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம்”.

© வேதபிரகாஷ்

30-01-2016

[1] http://www.maalaimalar.com/2016/01/28165443/21-people-gets-three-year-jail.html

[2] மாலைமலர், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 21 பேருக்கு சிறைத்தண்டனை, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஜனவரி 28, 4:54 PM IST.

[3] Writ petition (Civil) no.400 of 2010 filed by K. Saravanan Karuppasamy & Anr vs. State of Tamilnadu & ors.

http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=41917

[4] http://www.livelaw.in/supreme-court-says-cbi-enquiry-chennai-law-college-case/

[5] The trial in the investigation was prolonged to such an extent that the Supreme Court in October 2015, directed the Madras High Court to complete the trial within six months.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Seven-Years-After-21-Lawless-Students-Get-3-year-Jail-Term/2016/01/29/article3250533.ece

[6] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு: 21 பேருக்கு 3 ஆண்டு சிறை– 22 பேர் விடுவிப்பு, Posted by: Jayachitra, Updated: Thursday, January 28, 2016, 17:28 [IST].

[7] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=159672

[8] தினமணி, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: 21 பேருக்கு சிறைத் தண்டனை, By dn, சென்னை, First Published : 28 January 2016 04:25 PM IST.

[9] தினத்தந்தி, 2008-ம் ஆண்டு நடந்த மோதல் சம்பவம்: சட்டக்கல்லூரி மாணவர்கள் 21 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, மாற்றம் செய்த நாள்:வெள்ளி, ஜனவரி 29,2016, 2:15 AM IST; பதிவு செய்த நாள்:வெள்ளி, ஜனவரி 29,2016, 2:12 AM IST.

[10]http://www.dinamani.com/tamilnadu/2016/01/28/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/article3249403.ece

[11] http://www.dailythanthi.com/News/State/2016/01/29021231/Chennai-Law-College-Student-group-clash-in-2008-Court.vpf

[12] Advocates S Satyachandran and C Vijaykumar, who represented a group of 41 students, of whom the judge convicted17, said they would appeal in the high court.Speaking to reporters after the verdict, they said “outsiders” caused the clash and it was not possible for students to unleash such severe violence themselves. The authorities released the convicts on bail in the evening.

http://timesofindia.indiatimes.com/city/chennai/21-ex-law-college-students-get-3-years-jail-for-bloody-08-clash/articleshow/50765143.cms

சென்னை சட்டக் கல்லூரி, 1990ல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியாகி, 1997ல் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆனதும், சட்டக்கல்லூரி மாணர்கள் அடித்துக் கொண்டதும், 2016ல் வந்துள்ள தீர்ப்பும்!

ஜனவரி 30, 2016

சென்னை சட்டக் கல்லூரி, 1990ல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியாகி, 1997ல் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆனதும், சட்டக்கல்லூரி மாணர்கள் அடித்துக் கொண்டதும், 2016ல் வந்துள்ள தீர்ப்பும்!

Ambedkar college - 2008 knife-wielding law srudents

Ambedkar college – 2008 knife-wielding law srudents

திராவிட அரசியல் சித்தாந்தத்தில் அம்பேத்கர் இருந்ததில்லை: தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாணவர்களை 1960களில் “இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில்” ஈடுபடுத்தின.  அரசியல்வாதிகள் “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” போன்ற வாசகங்களினால், வடவிந்தியர்களின் மீது வெறுப்பு, காழ்ப்பு மற்றும் துவேசங்களை உண்டாக்கினர். இதற்கு சரித்திர ஆதரம் இல்லாத “ஆரிய-திராவிட” இனவாதங்களை துணைக்கொண்டனர். திராவிடப் பாரம்பரியம், விக்கிரங்களை எதிர்த்தாலும், தலைவர்களுக்கு சிலைகள் வைக்கும் பழக்கத்தை உண்டாக்கியது. இதனால், அத்தகைய சிலைவைக்கும் போக்கும் ஜாதியத்தில் முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அம்பேத்கர் என்றுமே திராவிட அரசியலில் இருந்ததில்லை. பெரியார் தான் முக்கிய இடத்தில் இருந்தார்[1]. மேலும், பெரியார் மற்றும் அம்பேத்கர் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளால் திராவிட சித்தாந்திகள் மற்றும் பெரியாரிஸவாதிகள் அம்பேத்கரை ஒதுக்கியே வைத்தனர். 1940ல் ஜின்னா-பெரியார்-அம்பேத்கர் சந்திப்பிற்குப் பிறகு, மூவரிடையே பெருத்த வேறுபாடுகள் ஏற்பட்டன. ஜின்னா இஸ்லாமிய மதவாதம் மூலம் பாகிஸ்தான் அடைய செயல்பட ஆரம்பித்தார்[2]. பெரியாருக்கு “திராவிடஸ்தான்” விசயத்தில் உதவ மறுத்தார்[3]. அம்பேத்கர் ஆங்கிலேய அரசில் பதவி வகித்தார். ஆனால், பெரியார் ஓரங்கட்டப்பட்டார். 1950ல் பெரியார் பௌத்தத்தைத் தழுவும் விசயத்திலும் அம்பேத்கருக்கு உடன்பாடில்லை. அம்பேத்கருக்கு “ஆரிய-திராவிட” இனவாதங்களில் நமிக்கையில்லை, குறிப்பாக இனசித்தந்தத்தை மறுத்தார்.  இதனால், திராவிட சித்தாந்த்தில் அம்பேத்கர் இருக்கவில்லை.

சட்டக்கல்லூரி மாணவிகள் அடித்துக் கொண்டது

சட்டக்கல்லூரி மாணவிகள் அடித்துக் கொண்டது – நவம்பர் 2008

1990களிலிருந்து அம்பேத்கர் சிலை, சின்னம் முதலியவை தமிழகத்தில் நுழைந்தது: 1990களில் அம்பேத்கர், ஒரு சின்னம் போன்று உபயோகப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுதும், அம்பேதகர் சிலைகள் பிரச்சினையை உண்டாக்கும் என்று தான் கருதப்பட்டது. திராவிட சித்தாந்தத்தில் அம்பேத்கர் இருந்ததில்லை. அதனால், அம்பேத்கர் சிலை என்பது, தலித் மற்றும் தலித்-அல்லாதவர்களிடையே உள்ள பிரச்சினையாக, அடையாளமாக இருக்கும் என்று கருதப்பட்டது என்று ராஜாங்கம்[4] போன்றோர் எடுத்துக் காட்டினர். மண்டல் கமிஷன் 1979ல் ஜனதா ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டாலும், ஆகஸ்ட்.7, 1990 அன்று வி.பி.சிங் ஆட்சியில் அது அறிக்கையைக் கொடுத்தது. பிறகு, 1992ல் மண்டல் தீர்ப்பு [Indira Sawhaney v. Union of India] வெளியானது. முதன் முதலாக “அம்பேத்கர் ஜெயந்தி” என்று அரசு ஏப்ரல்.14க்கு விடுமுறை அறிவித்தது. முன்னர் அத்தகைய வழக்கம் இல்லை. இதனால், ஜாதியத்திற்கு நாடு முழுவதும் ஊக்கம் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில், அம்பேத்கர் சிலைகளை வைத்து ஜாதீய அரசியல் ஆரம்பிக்கப்பட்டது. இதனால், தேவர் சிலை வைத்து அரசியலை ஆரம்பித்தனர். 1971லேயே அவரது சமாதி அரசு நினைவகமாக மாற்றப்பட்டது. 1980ல் சட்டசபையில் தேவர் சிலை வைக்கப்பட்டது. 1984ல் “பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம்முண்டாக்கப்பட்டது. முன்னர் அத்தகைய வழக்கம் தமிழக்கத்தில் இல்லை. இந்நிலையில் சில கட்சிகள் அம்பேத்கரை சின்னமாக உபயோகிக்க ஆரம்பித்தன.

தேவர் - அம்பேத்கர்

சென்னை சட்டக் கல்லூரி, 1990ல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியாகி, 1997ல் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆனது: 1990ல், அம்பேத்கர் நுற்றாண்டு விழா தருவாயில் “மெட்ராஸ் லா காலேஜ்”, “அம்பேத்கர் சட்டக் கல்லூரி” என்று பெயர் மாற்றப்பட்டது. சென்னைப்பல்கலைக்கழத்தின் கீழிருந்த இது, 1997ல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. ஆன்னால், இது ஜாதிய நோக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மாநில போக்குவரத்துத் துறைகளுக்கு பெயர் வைக்கப்பட்ட போக்கும் அவ்வாறே மாறி, ஒருநிலையில் கைவிடப்பட்டது. மாவட்டங்களுக்கு ஜாதிய தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன. ஆனால், ஜாதிய சங்கங்கள் முதலியன இயங்கிக் கொண்டுதான் இருந்தன. நீதிமன்ற வளாகத்திலேயே, வழக்கறிஞர்கள் சங்கங்கள் கட்சிவாரியாகத்தான் இருந்தன, இருந்து வருகின்றன. ஆகவே, அம்பேத்கர் பெயரில் சங்கம் ஆரம்ப்க்கும் பொழுது அது ஜாதிரீதியில் தான் இருக்கிறது. ஆக, சட்டக் கல்லூரி மாணவர்கள் இத்தகைய அரசியல் மற்றும் ஜாதி அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, ஆதரவாக செயல்படும் போது, பிளவுபடுகின்றனர். 2000களில் சித்தாந்த ரீதியிலான மாணவர் சங்கங்கள், ஜாதிய ரீதியிலும் செயல்பட ஆரம்பித்தன. ஆனால், “அம்பேத்கர்” சங்கம் வரும் போது, அது எஸ்.சி மற்றும் எஸ்.சி-அல்லாதோர் பிரச்சினையாகத்தான் மாறுகின்றன. அதனை, “தலித்” மற்றும் “தலித்”-அல்லாதோர் பிரச்சினை என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

lawcollege2

2008 தேவர் ஜெயந்தி போஸ்டர் சமாசாரம் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தது: டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களிடையே கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக பதிவான 2 வழக்குகளில் 21 மாணவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது[5]. தாக்குதல் சம்பவம் சற்று விரிவாக… ”பல வருடங்களாகவே சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சாதி பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் விடுதியில் தங்கிப்படித்த மாணவர்களுக்கும், டேஸ்காலர் மாணவர்களுக்கும் தொடர்ந்து சண்டைகள் இருந்தது. அடுத்து தலித் மற்றும் தலித் அல்லாத் மாணவர்களுக்கும் பிரச்னை இருந்து வந்தது[6]. இந்நிலையில் அப்போது சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த மாணவரான பாரதிகண்ணன் தலைமையிலான ஆறுமுகம், பேச்சுமுத்து அய்யாதுரை உள்ளிட்ட மாணவர்கள் ‘முக்குலத்தோர் மாணவர் பேரவை’ என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார்கள். இவர்கள் தேவர் ஜெயந்திக்காக அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கையில் கல்லூரியின் பெயரான  டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எனும் பெயரை போடாமல் சட்டக்கல்லூரி என மட்டும் போட்டதுடன், சிங்கங்களே, ஒன்று சேருங்கள்’ என போஸ்டர் ஒட்டினார்கள். இதுதான் பிரச்னைக்கு வித்திட்டது.

சட்டக் கல்லூரி அடித்துக் கொள்வது 2008

12-11-2008 அன்று மாணவர்கள் மோதல், அடிதடி: இதுதொடர்பாக இரு தரப்பு மாணவர்களும் அடிக்கடி மோதிக்கொண்டனர்[7].  இந்த நிலையில், 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி மாலை கல்லூரியில் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்தபோது மாணவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது[8].  சம்பவத்தன்று பாரதிகண்ணன் தலைமையினான மாணவர்கள் கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் சட்டக்கல்லூரியில் நுழைந்தனர். அதில் பாரதிகண்ணன்  கத்தியோடு பாய, சித்திரைச்செல்வன் என்கிற மாணவரின் காது கிழிந்தது. அடுத்து சித்திரச்செல்வன் தரப்பு, உருட்டுகட்டை, குண்டாந்தடிகளால் பாரதிகண்ணன், அய்யாதுரை, ஆறுமுகம் உள்ளிட்டோரை வெறித்தனமாகப் புரட்டியெடுத்தார்கள்.  இந்த தாக்குதலில் இருதரப்பு மாணவர்களும் காயமடைய, சென்னை அரசு மருத்துவமனையில் பாரதிகண்ணன், அய்யாதுரை, ஆறுமுகம் மற்றும் சித்திரைச்செல்வன் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.  இதன்பிறகு தாக்குதலுக்கு காரணமான மாணவர்கள் ஒரு மாதம் சிறையில் இருந்தார்கள். இந்த தாக்குதல் அப்போது தமிழகத்தையே அதிர வைத்தது. தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளியாக பதற்றத்தில் உறைந்துபோனார்கள் மக்கள்[9].

 சட்டக் கல்லூரி கத்தி-கொம்புகளுடன் அடித்துக் கொள்வது 2008

© வேதபிரகாஷ்

30-01-2016

[1] Ambedkar was never an integral part of the Dravidian rhetoric of anti-Brahmanism or egalitarianism. Periyar [E.V. Ramasamy] was put at the centre, and Ambedkar, where he featured at all, was relegated to the position of a leader of Dalits who fought for the rights of the Scheduled Castes. There were no clear-sighted attempts by political parties and social movements in the State to explicate the fact that Ambedkar’s contribution to non-Dalits was phenomenal. The political parties which thrive on concepts of social justice and democracy have failed to give proper recognition to Ambedkar and his ideology in their rhetoric or interventions despite the fact that Tamil Nadu is a State that has more reservation benefits for the intermediate castes than any other. http://www.frontline.in/static/html/fl2919/stories/20121005291913600.htm

  1. Karthikeyan and H. Gorringe, Resuing Ambedkar, Frontline, Volume 29 – Issue 19 :: Sep. 22-Oct. 05, 2012. http://www.frontline.in/static/html/fl2919/stories/20121005291913600.htm

[2] K. V. Ramakrishna Rao, The Historic Meeting of Ambedkar, Jinnah and Periyar, a paper presented during the 21st session of SIHC and published in the proceedings, School of Historical Studies, Madurai Kamaraj University, Maudrai, 2002, pp.128-136.

[3] https://ambedkarstudies.wordpress.com/2015/04/22/why-jinnah-evr-and-ambedkar-met-at-bombay-in-1940-against-congress/

[4] This failure by the Dravidian parties to take Ambedkar along with them is one of the key reasons why certain intermediate castes see him and his statues as caste-based challenges to the supremacy of their own leaders and icons. The proliferation of Ambedkar statues post-1990 is perceived as a threat which has often become the starting point for contests over public space. His absence from the language of Dravidianism, Rajangam notes, reinforces his image as the symbol of the conflict between Dalits and non-Dalits.

Rajangam, S. 2011. “Rise of Dalit Movements and the Reaction of Dravidian Parties” in K. Satyanarayana and S. Tharu (Eds) No Alphabet in Sight: New Dalit.

[5] நக்கீரன், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில்  21 பேருக்கு சிறை – 22 பேர் விடுவிப்பு, பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (17:30 IST) ; மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (17:30 IST).

[6] http://www.vikatan.com/news/tamilnadu/58255-madras-law-college-students-clash.art

[7] விகடன், தமிழகத்தை உலுக்கிய ‘2008 நவம்பர் 12’, Posted Date : 10:45 (29/01/2016).

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/law-college-clash-21-gets-3-year-sentence-245493.html

[9] சி.ஆனந்தகுமார், தமிழகத்தை உலுக்கிய ‘2008 நவம்பர் 12’, விகடன், Posted Date : 10:45 (29/01/2016).

சட்டத்தை / அம்பேத்காரை மதிக்காத கருணாநிதி!

ஏப்ரல் 4, 2010

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து தருக – பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 2, 2010, 17:54[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/04/02/give-sc-status-convert-christians.html

அம்பேத்காருடைய சட்டத்தை ஓட்டைப்;போட முயலும் கருணாநிதி: ambeethkaarசென்னை: கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்களுக்கும், தலித் அந்தஸ்து தரப்பட வேண்டும். இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.ன்இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடித்த்தில் கூறியுள்ளதாவது:

சரத்து 25 ன் படி “இந்து” என்பதில் ஜைன, புத்த, சீக்கியர் அடங்கும் என்பதனை மதிக்காத கருணாநிதி: தொடக்கத்தில், அரசியல் சட்டத்தின் (தாழ்த்தப்பட்டோர்) 3வது பாராவில், இந்து மதத்திலிருந்து வேறு மாத்த்திற்கு மாறிய எந்த தலித் வகுப்பைச் சேர்ந்தவரும், அதே தலித் வகுப்பினராக கருதப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த்து. பின்னர் அதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, சீக்கிய, புத்த மதத்தைச் சேர்ந்த தலித்கள், தலித்களாக அந்தஸ்து அளிக்கப்பட்டனர்.

கருணாநிதி அம்பேத்கரையும் மிஞ்சப் போகிறாறாம்! ஆனால் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள், எந்த மத்த்தைச் சேர்ந்தவர்கலாக இருந்தாலும் ஒரே மாதிரியாக கருதப்பட வேண்டும். ஒரே மாதிரியாக அவர்களுக்கு எஸ்.சி என்ற அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கருதுகிறது. இதுதான் அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானதாகவும் இருக்கும்.

அரசியல் நிர்ணயச் சட்டம் என்ன, மன்மோஹன் சிங்கைக் கேட்டா நடக்கிறது? எனவே இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக தலையிட வேண்டும். மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் எஸ்.சி. அந்தஸ்து கிடைக்க வழி செய்ய வேண்டும். இதற்குத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்க எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.