எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (2)
விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது: ஒரு நிலையில், இப்போராட்டம் பிஜேபிக்கு, மோடிக்கு எதிரானதாக எடுத்துச் செல்லப்பட்டதை கவனிக்க முடிந்தது. எதிர்கட்சிகளும் அத்தகைய போக்கைக் கடைப் பிடித்தன. எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்[1].
அரசிலாக்கப் படும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள்: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எஸ்.சி. எஸ்.டி. சமூக எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர். அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதினார். இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். திங்களன்று [02-03-2018] மக்களவையில் இன்று பலத்த அமளிக்கிடையே காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்பொழுது அவருக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: “எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு முழுமையாக பட்டியல் வகுப்பினர் பக்கம்தான் இருக்கிறது,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[2].
20-03-2018 அன்று அளிக்கப் பட்ட தீர்ப்பு என்ன?: எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கடந்த மார்ச் 20-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் மீது யார்மீதும் உடனடியாக கைது நட வடிக்கை எடுக்கக் கூடாது; தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும்; அதேபோல, அரசு ஊழியர்களையும் உடனடியாக கைது செய்யக்கூடாது. உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும் உன்று உத்தரவு பிறப்பித்தது. அதாவது, அச்சட்டத்தை துர்பிரயோகம் செய்வது தடுக்கப் பட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டியது. உச்சநீதிமன்றம் 02-03-2018 அன்று, “தனது முந்தைய தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், போராடுபவர்கள் தீர்ப்பைக் கூட படித்திருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது”, என்று அறிவித்தது[3]. முன்னர் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது[4].
“தலித்” போர்வையில் எதிர்கட்சியினர் மற்றவர் தூண்டிவிட்ட “பாரத் பந்த்”: தென் மாநிலங்களில் “காவிரி பிரச்சினை” வைத்துக் கொண்டு, அரசியல் நடந்து வருகின்றது, அது கர்நாடக தேர்தலுடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால், எஸ்.சி மற்றும் எஸ்.டி அதிகமாக இருக்கும் மாநிலங்களில் மட்டும் தான், இந்த போராட்டம் நடத்தப் பட்டு, வன்முறையில் முடிந்து, 10 பேர் பலியாகி உள்ளனர், பொது மற்றும் தனியார் சொத்துகள் நாசமாக்கப் பட்டுள்ளன. இதன் பின்னணியில் எதிர் கட்சியினர், கம்யூனிஸ்ட் வகையறாக்கள், முஸ்லிம்-கிருத்துவ ஆதரவு நிறுவனங்கள் என்று தான் உள்ளன. முன்னர் ஜிக்னேஸ் மேவானியின் பேட்டி சனி-ஞாயிறு என்று இரண்டு நாட்களிலும் ஓடியது, அதில், வன்முறை தூண்டும் வகையில் பேச்சு இருந்தது. எஸ்.சி மற்றும் எஸ்.டி நலன், உரிமைகள் என்பதை விட, மோடி எதிர்ப்பு தான் ;பிரதானமாக இருந்தது. இதே பாட்டை மற்றவரும் பாடினர்.
உச்சநீதி மன்றம் தீர்ப்பை மறு–ஆய்வு செய்ய மறுத்து விட்டது: வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஏ.கே கோயல் மற்றும் யுயு லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது[5]: “‘நாங்கள் அளித்த தீர்ப்பை முழுமையாக புரிந்து கொள்ளாமல், சுயநல காரணங்களுக்காக தவறான விளக்கம் கொடுத்து, திசைத் திருப்ப சிலர் எதிர்க்கின்றனர். எங்கள் உத்தரவு எஸ்.சி–எஸ்.டி மக்களுக்கு எதிரானது அல்ல. இந்த சட்டம் தனிப்பட்ட காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கம் நீதிமன்றத்திற்கு இல்லை. புகார் அளித்த உடனேயே கைது செய்யக்கூடாது என்றுதான் கூறியுள்ளோம். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கலாம். அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். எந்த ஒரு சட்டமும், அப்பாவி மக்களைப் பாதித்து விடக் கூடாது என்பதுதான் நீதிமன்றத்தின் எண்ணம். எனினும் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த நீதிமன்றம் தயாராக உள்ளது. இதுதொடர்பாக முறையிட்டுள்ள அனைத்து தரப்பினரும் இரண்டு நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தும்,” எனக் கூறினர்[6].
ஊடகங்களின் திரிபு செய்திகளும், உச்சநீதி மன்றத்தின் விளக்கமும்: ஊடகங்களும் தீர்ப்பை ஒழுங்காகப் படிக்காமல்[7], தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு மற்றும் அடுத்தவர் சொன்னதை கேட்டுக் கொண்டு, எஸ்.சி-எஸ்.டியினர் ஏன் “பாரத் பந்த்”தில் ஈடுபட்டனர், அவர்களின் பாதிப்பு என்ன, போராட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[8]. அதாவது, உண்மையான விவரங்களை, செய்தி-விசயமாக போடாமல், தூண்டும், ஆதாரமில்லாத கருத்துகளை, அரைவேக்காட்டுத் தனமான விசயங்களை செய்திகள் போல போட்டு வருகின்றனர். 89-பக்கங்கள் கொண்ட தீர்ப்பளித்த நீதிபதி கோயல் கூறியதாவது[9], “எங்களுடைய தீர்ப்பு அரசியல் நிர்ணய சாசனத்தில் உள்ளதை நடைமுறைப் படுத்துகிறது. தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைகளை நாங்கள் நான்றாகவே உணர்ந்திருக்கிறோம், தான் அவை உயர்ந்த இடத்தில் வைக்கப் பட்டுள்ளன…… இருப்பினும் அதே நேரத்தில், அப்பாவி நபர் யாரும் இதில் பொய்யான முறையில் சிக்க வைக்கப் பட்டு, விசாரணை இல்லாமல் கைது செய்யப் படுவதைத் தடுக்கிறது. நாங்கள் இச்சட்டம் அமூல் படுத்துவதைத் தடுக்கவில்லை. இந்த சட்டம் என்ன அப்பாவி மக்களை கைது செய்யப் பட வேண்டும் என்றா சொல்கிறது? ஆகவே, எங்களது தீர்ப்பு அச்சட்டத்திற்கு எதிரானது அல்ல,” என்று எடுத்துக் காட்டினார்[10].
© வேதபிரகாஷ்
04-04-2018
[1] தினமணி, எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்! , By IANS | Published on : 02nd April 2018 02:04 PM
[2] http://www.dinamani.com/india/2018/apr/02/centre-files-review-petition-over-scst-act-order-2892179.html
[3] ZeeTVnews, Not against SC/ST Act, those agitating may not have read judgement: Supreme Court, By Zee Media Bureau | Updated: Apr 03, 2018, 15:04 PM IST
[4] http://zeenews.india.com/india/not-against-sc/st-act-those-agitating-may-not-have-read-judgement-supreme-court-2096083.html
[5] தி.இந்து, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உத்தரவு: இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு, பி.டி.ஐ, Published : 03 Apr 2018 16:10 IST; Updated : 03 Apr 2018 16:12 IST
[6] http://tamil.thehindu.com/india/article23424976.ece
[7] India Today, Why Dalits called a Bharat Bandh? SC/ST Act and the Supreme Court ruling explained, Anusha Soni, New Delhi, April 2, 2018: UPDATED 15:40 IST
[8] https://www.indiatoday.in/india/story/why-are-dalits-protesting-sc-st-act-and-the-supreme-court-ruling-explained-1202745-2018-04-02
[9] DNA, Relief for SC/ST can’t be at cost of innocent: Supreme Court, WRITTEN BY Ritika Jain, Updated: Apr 4, 2018, 05:05 AM IST.
[10] However, Justice Goel, the author of the 89-page judgement said, the judgment fortified the Act. “Our judgment implements what is said in the Constitution. We are conscious of the rights of the underprivileged and place it at the highest pedestal… but at the same time, an innocent person cannot be falsely implicated and arrested without proper verification. We have not stopped the implementation of the Act. Does the Act mandate the arrest of innocent persons? Our judgment is not against the Act,” Justice Goel said addressing Venugopal.