Archive for the ‘அப்பாவி’ Category

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (1)

ஏப்ரல் 4, 2018

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (1)

State of SC-ST crimes 2014-16- DNA graphics
எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 உருவானது: வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் ஜாதியினர் / தாழ்த்தப்பட்டவர்கள் [செட்யூல்ட் காஸ்ட்ஸ்] மற்றும் பழங்குடி மக்களுக்கு [செட்யூல்ட் டிரைப்ஸ்] எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் [the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act] கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.  பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

SC-ST Act- Bharat bandh-Tiruma protest.jpg

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகள் நடந்து வருவது: கடந்த 2016 ஆம் ஆண்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 15.4% அளவுக்கே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணகத்தின் வருடாந்திர அறிக்கை சுட்டிக்காட்டுகிறது[1]. பொதுவான பிற வழக்குகளில் 33.3% அளவுக்கு குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்த வன்கொடுமைகள் 66% அதிகரித்திருக்கின்றன. சராசரியாக 18 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்பது தற்போது 15 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்று நடந்து வருகின்றது[2].  இப்படியெல்லாம் சார்பு எண்ணங்களுடன் விளக்கங்கள் கொடுத்தாலும், குறிப்பிட்ட வழக்குகளில் எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள், அடுத்தவர் தூண்டி விட்டு, புகார் கொடுப்பது, வழக்குப் போடுவது என்ற ரீதியில் உள்ளதும் விசாரணை மற்றும் நீதிமன்ற நடப்புகளில் தெரிய வந்தன. அதனால், ஒரு நிலையில் அத்தகைய பொய் புகார்கள், வழக்குகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்த வேண்டிய அவசியமும் உணரப் பட்டது.

SC-ST Act- cases filed, charge sheeted etc

எஸ்.சி சாதிகளுக்கிடையே, எஸ்.டி எஸ்.சி சாதிகளுக்கிடையே, மற்றும் எஸ்.டி சாதிகளிடையே ஏற்படும் வன்முறைகளை எவ்வாறு தடுப்பது?; இச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்போது காவல்நிலையம் கட்டப்பஞ்சாயத்து கூடங்களாக மாறி விடுகின்றன என்ற குற்றச்சாட்டும் வைக்கப் படுகின்றது. சட்டம் என்பது பொய்த்து, சாதிய வன்மம் அங்கே கட்டவிழ்த்து விடப்படுகிறது என்று சிலர் சொல்வது ஒரு தரப்பு வாதமாகிறது. காவல்நிலையத்திலும் இரு தரப்பு சாதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதால், இந்தச் சட்டத்தை சரிவர கையாளக் கூடிய நிலை அங்கு இல்லை. மேலும் பொதுமக்களும் இந்தச் சட்டத்தை தவறான வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதமும் அத்தகையது. எனவே இதில் உள்ள  குறைபாடுகளைக் களைய வேண்டும். மிக முக்கியமாக அதிகாரிகள், இதனை நேர்மையாகக் கையாள வேண்டும் என்று பொதுவாதம் வைப்பது, சட்டத்தைப் புரிந்து கொள்வதாகாது. கிராமங்களில் வன்முறையைத் தூண்டி விடுவதில், அச்சாதிகள்சம்பந்தப் பட்டுள்ளதால் தான், அத்தகைய சமரசங்கள் ஏற்பட்டுக்கின்றன. மேலும் எஸ்.சி சாதிகளுக்கிடையே, எஸ்.டி எஸ்.சி சாதிகளுக்கிடையே, மற்றும் எஸ்.டி சாதிகளிடையே ஏற்படும் வன்முறைகளைப் பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஏனெனில், அங்கு புகார் கொடுப்பதும், புகாருக்கு உட்படுபவகளும், அதே சாதியினராக இருக்கின்றன. இதனால், நேரங்கழித்து, மற்ற சாதிகளுடன் ஏற்பட்ட மோதல்களாக மாற்றப் பட்டு, சட்டம் வளைக்கப் படுகிறது.

SC-ST Act- Justices Goel and Lalit

மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பு: மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பில், இவ்வாறு தீர்ப்பளித்தது. 2015-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 15 முதல் 16 விழுக்காடு போலி வழக்குகள் என தெரியவந்துள்ளதாகவும். எனவே அப்பாவி பொதுமக்களை மதம் அல்லது சாதியின் பெயரால் பாதிப்புக்குள்ளாக்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்[3]. சாதி ரீதியான கொடுமைகளை நீக்க கொண்டு வரப்பட்ட சட்டம் சாதியை நிலைநிறுத்த பயன்படக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது[4]. இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன் ஜாமின் வழங்கியது. எந்த கைது நடவடிக்கைக்கு முன்னரும் அடிப்படையான விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்[5].

SC-ST Act- Bharat bandh-9 killed

ஊடகங்களின் சார்பு கொண்ட திரிபு செய்திகள் வெளியிடும் தன்மை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்த்தும் வகையியில் சுப்ரீம் கோர்ட் சில திருத்தங்கள் செய்து தீர்ப்பு வழங்கியது, என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிடுவதே தவறானது. சட்டத்தை நீதிமன்றங்கள் திருத்த முடியாது, பரிந்துரை தான் செய்ய முட்யும், அரசு தான் செய்ய முடியும். 02-04-2018 அன்று, இதற்கு எதிராக நாடு முழுவதும் தலித் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின. எஸ்.சி-எஸ்.டி ஆணையம் “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனத்தின் படியும் செல்லாது என்று சுட்டிக் காட்டியப் பிறகும், அதே தோரணையில் குறிப்பிடப் படுவதும் நோக்கட் தக்கது. குறிப்பாக வட மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியில் பேருந்து, கார் உள்ளிட்டவை போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டன. குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

SC-ST Act- Bharat bandh-poice van attacked

வட மாநிலங்களில் “பாரத் பந்த்,” போலீஸார் தாக்கப் படுதல், வன்முறை முதலியன: பஞ்சாப் மாநிலத்தில் ரெயில்கள் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்து வரும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் குவாலியர், ப்ஹிந்த், மோரேனா மற்றும் சாகர் பகுதிகளில் நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் ஆறு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதே போல, உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் இருவரும், ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் நடந்த வன்முறை நிகழ்வில் ஒருவர் பலியாகியுள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் தாக்கியதில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாகவும், போலீஸ் வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையே, அனைத்து மாநிலங்களிலும் சட்டம் – ஒழுங்கு கட்டுக்குள் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது[6]. மேலும், சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது[7].

© வேதபிரகாஷ்

04-04-2018

SC-ST Act- Bharat bandh-arson, loot, violence

[1] ஆதவன் தீட்சண்யா, உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமைஆதவன் தீட்சண்யா, BY த டைம்ஸ் தமிழ், மார்ச் 23, 2018

[2] https://thetimestamil.com/2018/03/23/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/

[3] தினகரன், விசாரணையின்றி கைது செய்யக் கூடாது : தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்ற அறிவுரை, 2018-03-21@ 14:40:19

[4] On March 20, the Supreme Court had diluted the provisions of the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, ruling that government servants should not be arrested without prior sanction and private citizens too, can be arrested only after an inquiry under the law.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=386337

[6] மாலைமுரசு, எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்டம் தளர்வுகலவரங்களில் பலி எண்ணிக்கை 9 ஆனது, பதிவு: ஏப்ரல் 02, 2018 19:27; மாற்றம்: ஏப்ரல் 02, 2018 19:48

[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/02192723/1154660/7-killed-in-SC-ST-violance-and-Bharat-Bandh.vpf

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

ஏப்ரல் 24, 2013

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

பெங்களூரு வெடிகுண்டு விசாரணையில் சந்தேகிக்கும்படியாக கைது செய்யப் பட்டுள்ளவர்கள் எல்லோரும் முந்தைய “அல்-உம்மா” என்ற தீவிரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார்  எடுத்துக் காட்டுகின்றனர்[1]. ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் ஏன் மற்படியும் பழைய தொடர்புகளை வைத்திருக்கிறர்கள் என்றும் தெரியவில்லை. முன்பு போல திருநெல்வேலி-கோயம்புத்தூர்-பெங்களூரு இணைப்பும் தெரிகிறது[2]. இதனால், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலையெடுக்கின்றவா – வேறு உருவத்தில் செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் தலைதூக்கியுள்ளது[3]. தடை செய்யப்பட்ட சிமி, வஹதத்-இ-இஸ்லாமி ஹிந்த் (Wahadat-e-Islami Hind) என்ற பெயரில் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது[4]. சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது[5]. இது வெறும் சார்புடைய நிகழ்சியா உண்மையா என்பது விசாரணை முடிந்த பின்னர் தான் தெரியும்.

Eight fugitive Terrorists arrested - 2011
“குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்” என்ற தலைப்பில் எப்படி சட்டங்கள் புரட்டப்படுகின்றன என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன்[6]. முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

நாத்திகம்என்ற போர்வையில்ஆண்டவனே இல்லையென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்துகாஃபிர்களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதிஎஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

இப்பொழுது, மறுபடியும் அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவது போலிருக்கிறது. முன்பு அவர்களின் புகைப்படங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுதில்லை. தமிழக போலீஸ் இணைதளத்திலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன[7]. கீழ்கண்ட வாசகங்கள் தாம் வருகின்றன[8].

404 – File or directory not found.

The resource you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable

அமெரிக்காவில், சந்தேகிக்கப் படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளிப்படையாக பிரசுரிக்கிறார்கள். அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆனால், இங்கு அவர்களை மறைப்பது ஏன் என்று தெரியவில்லை. வெளிப்படையான விசாரணை இல்லை என்று முஸ்லீம்கள் போலீசாரையே குற்றஞ்சாட்டப்படும் போது, பழைய குற்றவாளிகள் என்று அவர்களின் புகைப்படங்கள் இருந்துவிட்டு போகலாமே?

இதுவரை கைது செய்யப் பட்டுள்ளவர்கள்: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பந்தமாக, கீழ்கண்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் செய்திகளில் வெளிவந்தவை, ஆனால், தனித்தனியாக புகைப்படங்கள் இல்லாமல், யார்-யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி உள்ளன. அவற்றிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன:

Kichan Buhari and Mohammed Sali arrested BB

கிச்சான் புகாரி (38)[9] – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான் – நெல்லை மேலப்பாளையம் – மேலப்பாளையத்தில், மாட்டுச் சந்தை நடத்தி வந்தவன், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவன் எட்டு கொலை மற்றும் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன். புழல் ஜெயிலில் தண்டனை அனுபவித்த கிச்சான் புகாரி 6 மாதத்துக்கு முன்புதான் விடுதலையானான். அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் சிறுபான்மையின நல அறக் கட்டளை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தான்.  இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று கோவை குண்டு வெடிப்பு கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவி வந்தான்.

Kichan Buhari arrested Bangalore blast 2013

சதாம் உசேன்: கிச்சான் புகாரியின் உறவினர் சதாம் உசேன், கடந்த மாதம், போத்தனூர் திருமண மண்டபத்தில் நடந்த, ரகளை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய பைக்கை, இவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

பீர் முகைதீன் (39) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்,

பஷீர் அகமது (30) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – கட்டட தளவாட பொருட்கள் புரோக்கர், சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்

பீர் முகமது – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – இவர்கள் அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – பெங்களூரில் டீ தூள் விற்பவன்-

முகமது ஷாலி – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான். இவர், “சாரிட்டபிள் டிரஸ்ட் பார் மைனாரிட்டீஸ்’ என்ற அமைப்பை சேர்ந்தவர். நாகர்கோவில் பகுதியில் சிலருடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகி எம்.ஆர்.காந்தி, 62, தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.

Mohammed Sali arrested BJP attack Nagerkoil

பஷீர் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன் – திருநெல்வேலியில் ஒரு ரியல் எஸ்டேடில் ஆபீஸ் பையனாக வேலை செய்பவன்.

ரசூல்மைதீன் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

சலீம் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

முன்பே குறிப்பிட்டபடி, இவர்களின் பெயர்கள் கூட வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் உள்ளன. ஆங்கில நாளிதழ்களில் கொடுக்கப்படும் விவரங்கள் தமிழ் நாளிதழ்களில் கொடுக்கப்படுவதில்லை. அல்லது குறைத்துப் போடுகிறார்கள்.

Bangalore blast - suspect arrested

© வேதபிரகாஷ்

24-04-2013


[4] Further, Tamil Nadu has also banned the All India Jihad Committee and Students Islamic Movement of India (SIMI). But SIMI, is regrouping under the banner of Wahadat-e-Islami Hind, Jayalalitha said.

[6] வேதபிரகாஷ், குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும், 1-6, மே.2010,

https://lawisanass.wordpress.com/2010/05/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-2/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-3/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-4/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-5/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-6/

[9] Kic­han Buhari, a prominent member of the All India Jehad Committee (AIJC) and a close associate of its founder – Ahmad Ali alias Palani Baba, People’s Democratic Party Chairman, Abdul Nasser Madani, and Kun­nangudi Hanifa of Tamil Muslim Munnetra Kazhagam (TMMK)