Archive for the ‘அத்து மீறல்’ Category

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

திசெம்பர் 27, 2021

நீதிமன்றம், நீதிபதி, தீர்ப்புகள், வழக்கறிஞர்கள் நீதி, நேர்மை, நியாயம் போற்றுபவர்களாக, காப்பவர்களாக மற்றும் பேணுபவர்களாக இருக்க வேண்டும்

கொரோனா காலமும், காணோலி விசாரணையும், நீதிமன்றங்களும்: காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2021 கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியபோது முதலில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே, ஊரடங்கில் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நீதிமன்றங்கள் தொடங்கி பள்ளிகள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அந்த சமயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஏராளமாக இருந்தால், விரைந்து முடிக்க காணொளி காட்சி முறை கொண்டு வந்தாக வேண்டிய சூழல் இருந்தது[2].

கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை: கொரோனா தொற்று ஆரம்பித்த சமயத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடியாகவும் விசாரணை நடைபெறுகிறது, அதே நேரத்தில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக காணொளி காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது. அனைத்து வழக்கு விசாரணையும் இப்படியே நடந்து வருகிறது. சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சக வழக்கறிஞர்கள் மட்டுமின்றி நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சகா வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியது.

செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்: இந்த விவகாரம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்[3]. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வீடியோ காட்சிகளை வழக்கறிஞர்கள் மட்டுமில்லாமல் உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், எனவே வழக்கு விசாரணையில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[4]. நிச்சயமாக, அந்த வீடியோ பார்த்தவர்கள், அந்த வக்கீலின், அட்வகேட்டின், வழக்கறிஞரின் நடவடிக்கை தலைகுனிய வைக்கும். மேலும், அந்த பெண் ஏன் அவ்வாறு அத்தகைய கேவலமான செயலுக்கு உட்படுத்தப் பட்டாள் என்றும் தெரியவில்லை. கருப்பு நிற அங்கி முதலியவற்றைப் பார்க்கும் போது, அப்பெண்ணும் ஒரு வழக்கறிஞரா, ஜூனியரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஒருவேளை, பெண்ணின் அடையாளம் தெரியக் கூடாது என்ற ரீதியில், அவை தெரிவிக்கப் படவில்லை போலும்.

தானாகவே, சொந்தமாகவே, கேட்காமலே (suo moto) வழக்காக எடுத்துக் கொண்டது: இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்[5]. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.டி. சந்தான கிருஷ்ணன் “மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் விர்ச்சுவல் மீட்டிங்கில் கலந்துகொள்ளும் போது அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக” அவரை சஸ்பெண்ட் செய்தது[6]. மிகவும் மன வருத்தம் அளிப்பதாக இருக்கிறது[7], இது போன்ற சம்பவங்களைக் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது எனத் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்[8]. சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்[9]. இதனை சூ மோட்டோ வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்[10].

வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது: நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது[11]. முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின் போது, இந்த சம்பவத்தை குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ், “இந்த சம்பவம் மிகப் பெரிய அசிங்கம்” என்றும் “பதவியை ராஜினாமா செய்து விடலாமா?” என்று யோசித்ததாகவும் வேதனை தெரிவித்தார்[12]. நிச்சயமாக, அந்த நீதிபதி அந்த அளவுக்கு வருத்தமடைந்திருப்பது தெரிகிறது. நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் காக்கக் கூடிய அத்தொழிலை செய்பவர்கள், இவ்வாறு ஈடுபட்டது, மிகக் கேவலமாகும். ஏற்கெனவே வக்கீல்களைப் பற்றி பலவிதமான செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் எப்படி வழக்கறிஞர்கள் ஆனார்கள் என்ற திகைப்பும் ஏற்படுகின்றன. அந்நிலையில், வீடியோவில் சிக்கிக் கொண்ட அந்த “பலான / செக்ஸ் வழக்கறிஞர்” அத்தொழிலுக்கு அவமானம் தான்.

நீதி, நேர்மை, நியாயம் காக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் இத்தகைய குற்றங்கள் ஏன் தொடர்ந்து நடந்து வருகின்றன, நீதி, நேர்மை, நியாயம்….போன்றவை ஏன் மதிக்கப் படுவதில்லை, மாறாக ஏளனப் படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக சினிமா, டிவி சீரியல்களில் இவை கிள்ளுக்கீறையாக மதிக்கப் படுகின்றன. நகைச்சுவை போர்வையில் ஆபாசப் படுத்தப் படுகின்றன. அதுபோலவே, அத்துறையைச் சேர்ந்தவர்களும் இழிவு படுத்தப் படுகின்றனர். சமீபகாலங்களில் நீதிபதிகளின் தீர்ப்புகளும், நீதிபதிகளும் விமர்சிக்கப் படுகின்றனர். நிச்சயமாக, நீதிபதி நியமனங்களில் அரசியல், ஜாதி, மதம் போன்ற காரணிகள் செயல்படுகின்றன. ஏனெனில், அவ்விதமாக நியமனங்கள் நடக்கின்றன. நீதிமன்றங்களிலும் கட்சிக்கு ஒரு சங்கம் செயல்பட்டு வருகின்றது. அதுபோல, ஜாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன. பிறகு பாரபட்சம், ஒருதலைப்பட்சம், பாகுபாடு, வித்தியாசம், வேறுபாடு, அரசியல் அழுத்தம் போன்றவையும் இருக்கத்தான் செய்யும். அவற்றையும் மீறி தீர்ப்புகள் கொடுக்கப் படவேண்டும். ஆகவே, நிச்சயமாக அத்தொழிலில் இருப்பவர்கள் சுத்தமாகவும், நேர்மையாகவும், யோக்கியமானவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயம், அவசியம் மற்றும் அத்தியாவசியம் உள்ளது. அப்பொழுது தான், அவர்கள் சட்டமீறல்கள் செய்யாமலும், குற்றங்களில் ஈடுபடாமலும் இருக்க முடியும்.

© வேதபிரகாஷ்

27-12-2021


[1] ஏ.பிபி.லைஃப், நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்: வழக்கறிஞர் சஸ்பெண்ட்சிபிசிஐடி வழக்கு பதிவு!, By: ABP NADU | Updated : 22 Dec 2021 11:34 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/chennai/cb-cid-to-probe-lawyer-s-act-on-camera-31615

[3] NEWS18 TAMIL, மிகப்பெரிய அசிங்கம்.. ராஜினாமா செய்ய நினைத்தேன்உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை, First published: December 23, 2021, 22:40 IS; LAST UPDATED : DECEMBER 23, 2021, 22:40 IST.

https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/singar-manikka-vinayagam-passed-away-mur-649589.html

[5] புதியத்தலைமுறை, வழக்கறிஞரின் ஒழுங்கீனத்தால் பதவியை ராஜினாமா செய்ய நினைத்தேன்நீதிபதி வேதனை, kaleelrahman, தமிழ்நாடு, Published :23,Dec 2021 03:38 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/125450/Attorneys-Disorder-Thought-to-resign-Judge-tormented

[7] இடிவி.பாரத், வழக்கறிஞரின் செயலால் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினேன்நீதிபதி வேதனை, Published on: Dec 23, 2021, 2:56 PM IST.

[8]  https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/advocate-misbehave-on-video-conference-mhc-judge-has-upset/tamil-nadu20211223145626901

[9] தமிழ்.ஒன்.இந்தியா, கேமரா ஆனில் இருப்பது தெரியாமல்.. பெண்ணிடம் தவறாக நடந்த வக்கீல்.. வாழ்நாள் தடை போட்ட சென்னை ஐகோர்ட், By Vigneshkumar, Updated: Tuesday, December 21, 2021, 20:27 [IST].

[10] https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-ordered-to-ban-a-lawyer-who-misbehaved-with-woman-during-a-video-trial-442879.html

[11] தினத்தந்தி, ஆன்லைன் விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞர்..!, பதிவு : டிசம்பர் 23, 2021, 10:06 PM

[12] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/12/23220640/2978084/Lawyer-who-conducted-irregular-in-online-trial.vpf.vpf

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற வழக்காடுகளும், ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகளும், அரசியலாகப் படும் வழக்குகள்: நீதிபதி எப்படி வழக்குகள் பற்றிய கருத்தை பொது இடத்தில் தெரிவிக்க முடியும்? (1)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற வழக்காடுகளும், ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகளும், அரசியலாகப் படும் வழக்குகள்: நீதிபதி எப்படி வழக்குகள் பற்றிய கருத்தை பொது இடத்தில் தெரிவிக்க முடியும்? (1)

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நீதிமன்றங்களில் தீர்மானிக்கும் விவகாரங்கள் அல்ல: மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப் படுகின்ற, விசாரணைக்கு ஏற்று நடத்தப் படுகின்ற, அவற்றைப் பற்றி செய்திகளாக வரும் விவரங்கள் முதலியவற்றை வைத்துப் பார்த்து, படித்து, உன்னிப்பாக கவனிக்கும் போது, அகழாய்வு மற்றும் கல்வெட்டுகள் பற்றிய வழக்குகள் எல்லாம், தமிழ்-சமஸ்கிருதம், திராவிடன்-ஆரியன், தெற்கு-வடக்கு, தமிழ்-தமிழ் அல்லாதது என்று பிரிவினைவாதங்கள் அடிப்படையில் உள்ளதை கவனிக்க நேரிடுகிறது. ஏற்கெனவே கீழடி வழக்குகளில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட தன்னுடை வேலை விவகாரம், இடமாற்றம், அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தது, தாமதம் செய்தது, போன்ற விவகாரங்களில் அரசியலை நுழைத்து, மற்றவர்கள் விளம்பரம் பெற்றது தெரிகிறது. ஏனெனில், ஒரு மத்திய அரசு அதிகாரி / ஊழியர் என்ற நிலையில், அவர் இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு கட்டுப் பட்டவராக இருந்தார் / இருக்கிறார். இப்பொழுது, அவர் விவகாரம் அமைதியாகி விட்டது. வெங்கடேசன், கம்யூனிஸ்ட் எம்.பி அவரை வைத்து, நன்றாகவே அரசியல் செய்திருப்பது தெரிந்தது. இப்பொழுது, தேவையே இல்லாமல், அடிப்படை விவரங்களைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், கல்வெட்டுகள் பற்றி வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு நடப்பது, வேடிக்கையாக உள்ளது.

ஜூலை 21 மற்றும் 22, 2018 (சனி, ஞாயிறு) திருவண்ணாமலையில் நடந்த கருத்தரங்கு:  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், தொல்லியல் கழகமும் இணைந்து நேற்று திருவண்ணாமலையில் கருத்தரங்கு மற்றும் ‘ஆவணம்-29’ இதழ் வெளியிட்டு விழாவை நடத்தின. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற முன்னாள் செயலர் த.பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது: “தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோருக்கும் நமது மாநிலத்தின் பெருமைகள் தெரியாது. தமிழ் மிகவும் பழமையான மொழி என்று கூறும்போது முதலில் யாரும் நம்பவில்லை. ஈரோடு மாவட்டம், கொடுமணல் பகுதியில் கிடைத்த கல்வெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள், எந்த காலத்தை சேர்ந்தது என்று அமெரிக்காவிற்கு ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்டது”. பீடா அனேலிடிகல் சோதனையைக் குறிப்பிடுகின்றார் என்றூ தெரிகிறது, ஆனால், மற்ற மாதிரிகளின் தேதிகள் என்னவாயிற்று என்று கேட்காதது வியப்பாக இருக்கிறது.

நீதிபதி கிருபாகரன்கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன (10-10-2020)[1]: நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் தொடர்ந்து பேசியதாவது: “அந்த ஆய்வில் இந்த எழுத்துகள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சுமார் 350 முதல் 375 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என்று கண்டறியப்பட்டது[2]. அதன்பிறகு தான் தமிழ் மிகவும் தொன்மையான மொழி, செம்மொழி என்று கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பழமையான விஷயங்கள் புதைந்துகிடக்கின்றன. மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன[3]. அதில் தமிழர்களின் பண்பாடுகள் மறைந்துள்ளது[4]. மாவட்டத்தில் பழமையான கோவில்கள், கல்வெட்டுகள், சிலைகள் உள்ளன. அதனை பார்த்து அதன் வரலாற்றை தங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். சிலர் நமது மாநிலத்தை விட்டு,விட்டு வெளிமாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் சென்று பழமையான வரலாற்று சின்னங்களை பார்வையிட்டு வருகின்றனர். தஞ்சை பெரிய கோவில் போன்று பல்வேறு வரலாற்று சின்னங்கள் ஏராளமானவை உள்ளன. இவற்றினால் முந்தைய காலத்தில் கட்டிட கலை வியக்கவைக்கும் வகையில் உள்ளது”. இங்கு, இவர், “மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன. அதில் தமிழர்களின் பண்பாடுகள் மறைந்துள்ளது,” என்று குறிப்பிடுவது, இவர் ஏற்கெனவே அத்தகைய எண்ணத்தை மனத்தில் உருவாக்கி வைத்து விட்டார் என்று தெரிகிறது. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி, இவ்வாறு கருத்தைத் தெரிவிக்கலாமா என்பது கேள்விக்குறியாகிறது.

அரசியல் ரீதியில் நடக்கும் அகழாய்வு பணிகள், ஆராய்ச்சிகள், ஆதாரங்கள் நிலைமாறும் நிலைகள்: இவ்வாறு அரசியல் செய்து வரும் நிலையில், கொரோனா காரணத்தால் ஊரடங்கு அமூலில் இருக்கும் போது, காமராஜ், ஆனந்தராஜ் என்று சிலர், மதுரை நீதிமன்றத்தில், வழக்குகள் தொடுப்பது[5], அவற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது, நடத்துவது, அவற்றைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் போடுவது வாடிக்கையாகி விட்டது ஏதோ இவர்கள் சொல்லித் தான், அகழாய்வு மற்றும் வினினிஆன ரீதியில் ஆராய்ச்சி எல்லாம் நடக்கின்றன என்பது போன்ற தோற்றத்தையும் உருவாக்கி வருகின்றனர். உண்மையில், அரசியல்வாதிகள் தான் அங்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் சிலர் பொழுது போக்கவும் வந்து செல்கிறார்கள். இதனால், அங்கிருக்கும் அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் என்று எல்லாமே நிலைமாறிப் போகின்றன. வருபவர்கள், தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துச் செல்கின்றனர். அமைச்சர் முதல் எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் வருபவர்களும், ஏதோ நினைவுப் பொருளாக கொடுக்கப் படுகின்றன, அவர்களும் எடுத்துச் செல்கின்றன. பலமுறை மழை பெய்திருக்கிறது. இதனால், அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் எல்லாம் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

அக்டோபர் 10, 2020 – நீதிபதி கிருபாகரன் கீழடிக்கு வந்து பார்த்தார்[6]: அக்டோபர் 2020ல் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி கிருபாகரனே, கீழடிக்கு வந்து பார்த்தார், மற்றும் அங்குள்ள அகழாய்வு பணிகளை பார்வையிட்டார், களபணியாளரளுடன் உரையாடினார் என்று செய்திகள் உள்ளன. சிவகங்கையின் கலெக்டர் ஜே.ஜெயகாந்தன் உடனிருந்து, ஏழாம்கட்ட பணிகள் நடந்து வருவதைப் பற்றி விளக்கினார்[7]. அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் காண்பித்து, அங்கு கண்டுபிடித்த பொருட்கள் குறித்து நீதிபதி கிருபாகரனுக்கு விளக்கம் அளித்தார். இதைதொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய ஊர்களுக்கும் சென்று அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டதுடன், அங்கு கிடைத்த பொருட்களையும் பார்த்து, அதுகுறித்து கேட்டறிந்தார்[8]. ஒவ்வொரு அகழாய்வு எந்த மாதத்தில் தொடங்கி, எந்த மாதத்தில் நிறைவு பெறும், தொடர்ச்சியாக அகழாய்வு நடத்தாதது ஏன், அதற்கான அனுமதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார்[9]. அப்படி என்றால், நிச்சயமாக, நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய விசாரணையை அங்கு செய்துள்ளார் என்றாகியது. தேவை என்றால், அந்த அதிகாரிகளை நேரிடையாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணை செய்திருக்கலாம்.

10-10-2010 – நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் அங்கு வந்து பார்த்தார்: கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறைகிணறையும், பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணியையும் நீதிபதி கிருபாகரன் பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு காட்சிப் படுத்தப் பட்டுள்ள அகழாய்வுப் பொருட்களைக் கண்டு, நீதிபதி மிக்க ஆர்வத்துடன்-ஆசையுடன் பார்த்து மகிழ்ந்தார். மதியம் நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் அங்கு வந்து பார்த்தார். அதற்கு அடுத்து சற்று நேரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதனும் கீழடி, கொந்தகைக்கு வந்து அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டார். அவருக்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவரை கலெக்டர் ஜெயகாந்தன் வரவேற்றார். குறிப்பிட்ட வழக்குகள் அம்பந்தப் பட்ட இடங்களுக்கு நீதிபதிகள் சென்று பார்ப்பது என்பது சாதாரண விசயமாகத் தெரியவில்லை. ஆனானப் பட்ட ராமஜென்பபூமி வழக்குகளில் கூட எந்த நீதிபதியும் சென்று பார்த்தார், விசாரித்தார், அங்கிருப்பவர்களிடம் பேசினார் என்றெல்லாம் செய்திகள் வரவில்லை. ஆனால், தமிழக அகழாய்வு விவகாரங்களில் அத்தகைய செய்திகள் வந்துள்ளன. இவையெல்லாம் ஆச்சரியமாகத் தான் உள்ளன.  மேலும் ஜூலை 21, 2018ல் பேசியுள்ளது கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] தினத்தந்தி, கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றனசென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு, பதிவு: ஜூலை 22,  2018 03:15 AM.

[2] https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/22025753/Keezhadi-excavator-details-are-hiddenMadras-High-Court.vpf

[3] தினகரன், கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்களை மறைக்க முற்படுகிறார்கள்: நீதிபதி கிருபாகரன் பேச்சு, 2018-07-21@ 13:09:57.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421871

[5] Madras High Court – S.Kamaraj @ Muthalankurichi … vs Union Of India on 21 December, 2020;                           BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT- DATED : 21.12.2020; CORAM;  THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN; AND THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI; W.P.(MD)No.21577 of 2019; S.Kamaraj @ Muthalankurichi Kamarj  … Petitioner  Vs. 1.Union of India and others.

The Writ Petition has been filed to direct the respondent No.3  to grant permission to the Respondent No.5 for carrying out further Archaeological Excavations and Scientific Research in Athichanallur, Keeladi, and Kodumanal Archaeological Sites and to direct the  respondent No.3 to grant permission to the Respondent No.5 for carrying out the Archaeological Excavations and Scientific Research in the Archaeological Sites along with the Tamiraparani River, and Sivakalai and Konthagai in accordance with law.

[6] The Hindu, High Court Judges visit Keeladi, STAFF REPORTERMADURAI, OCTOBER 10, 2020

21:19 IST; UPDATED: OCTOBER 11, 2020 04:39 IST.

[7] Madras High Court Judge Justice N. Kirubakaran on Saturday visited the archaeological site in Keeladi, near Madurai.

In his personal visit, the judge interacted with the officials of the Tamil Nadu State Department of Archaeology and Sivaganga Collector J. Jayakanthan on the progress made in the sixth phase of the archaeological excavations.

The judge was enamoured by the findings that were on display at the site. Spending close to an hour at the site, the judge also enquired the officials of the State Archaeological Department on the progress made on the excavations in other sites.

A Division Bench headed by Justice N. Kirubakaran is hearing a batch of public interest litigation petitions with regard to archaeological excavations being carried out across Tamil Nadu. The judge has sought a response on the excavations.

In the afternoon, Justice S. Vaidyanathan of the Madras High Court, in a personal visit, also interacted with the officials at the site.

https://www.thehindu.com/news/cities/Madurai/high-court-judges-visit-keeladi/article32822715.ece

[8] தினத்தந்தி, கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் பார்வையிட்டனர், பதிவு: அக்டோபர் 11,  2020 03:45 AM மாற்றம்: அக்டோபர் 11,  2020 07:47 AM.

[9] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/11074713/Below-is-the-location-of-the-excavation-Judges-of.vpf

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (2)

ஏப்ரல் 4, 2018

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (2)

SC-ST Act- Bharat bandh-3600 detained in bihar

விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது: ஒரு நிலையில், இப்போராட்டம் பிஜேபிக்கு, மோடிக்கு எதிரானதாக எடுத்துச் செல்லப்பட்டதை கவனிக்க முடிந்தது. எதிர்கட்சிகளும் அத்தகைய போக்கைக் கடைப் பிடித்தன. எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்[1].

SC-ST Act- Bharat bandh-40 cops injured

அரசிலாக்கப் படும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள்: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எஸ்.சி. எஸ்.டி. சமூக எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர். அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதினார். இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.  திங்களன்று [02-03-2018] மக்களவையில் இன்று பலத்த அமளிக்கிடையே காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்பொழுது அவருக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: “எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு முழுமையாக பட்டியல் வகுப்பினர் பக்கம்தான் இருக்கிறது,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[2].

SC-ST Act- Bharat bandh-modi down

20-03-2018 அன்று அளிக்கப் பட்ட தீர்ப்பு என்ன?: எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கடந்த மார்ச் 20-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள் மீது யார்மீதும் உடனடியாக கைது நட வடிக்கை எடுக்கக் கூடாது; தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும்; அதேபோல, அரசு ஊழியர்களையும் உடனடியாக கைது செய்யக்கூடாது. உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும் உன்று உத்தரவு பிறப்பித்தது. அதாவது, அச்சட்டத்தை துர்பிரயோகம் செய்வது தடுக்கப் பட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டியது. உச்சநீதிமன்றம் 02-03-2018 அன்று, “தனது முந்தைய தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், போராடுபவர்கள் தீர்ப்பைக் கூட படித்திருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது”, என்று அறிவித்தது[3]. முன்னர் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது[4].

SC-ST Act- Bharat bandh-Muslims

தலித்போர்வையில் எதிர்கட்சியினர் மற்றவர் தூண்டிவிட்டபாரத் பந்த்: தென் மாநிலங்களில் “காவிரி பிரச்சினை” வைத்துக் கொண்டு, அரசியல் நடந்து வருகின்றது, அது கர்நாடக  தேர்தலுடன் இணைக்கப் பட்டு விட்டது. ஆனால், எஸ்.சி மற்றும் எஸ்.டி அதிகமாக இருக்கும் மாநிலங்களில் மட்டும் தான், இந்த போராட்டம் நடத்தப் பட்டு, வன்முறையில் முடிந்து, 10 பேர் பலியாகி உள்ளனர், பொது மற்றும் தனியார் சொத்துகள் நாசமாக்கப் பட்டுள்ளன. இதன் பின்னணியில் எதிர் கட்சியினர், கம்யூனிஸ்ட் வகையறாக்கள், முஸ்லிம்-கிருத்துவ ஆதரவு நிறுவனங்கள் என்று தான் உள்ளன. முன்னர் ஜிக்னேஸ் மேவானியின் பேட்டி சனி-ஞாயிறு என்று இரண்டு நாட்களிலும் ஓடியது, அதில், வன்முறை தூண்டும் வகையில் பேச்சு இருந்தது. எஸ்.சி மற்றும் எஸ்.டி நலன், உரிமைகள் என்பதை விட, மோடி எதிர்ப்பு தான் ;பிரதானமாக இருந்தது. இதே பாட்டை மற்றவரும் பாடினர்.

SC-ST Act- Bharat bandh-Communists

உச்சநீதி மன்றம் தீர்ப்பை மறுஆய்வு செய்ய மறுத்து விட்டது: வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஏ.கே கோயல் மற்றும் யுயு லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது[5]: “‘நாங்கள் அளித்த தீர்ப்பை முழுமையாக புரிந்து கொள்ளாமல், சுயநல காரணங்களுக்காக தவறான விளக்கம் கொடுத்து, திசைத் திருப்ப சிலர் எதிர்க்கின்றனர். எங்கள் உத்தரவு எஸ்.சிஎஸ்.டி மக்களுக்கு எதிரானது அல்ல. இந்த சட்டம் தனிப்பட்ட காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கம் நீதிமன்றத்திற்கு இல்லை. புகார் அளித்த உடனேயே கைது செய்யக்கூடாது என்றுதான் கூறியுள்ளோம். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கலாம். அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். எந்த ஒரு சட்டமும், அப்பாவி மக்களைப் பாதித்து விடக் கூடாது என்பதுதான் நீதிமன்றத்தின் எண்ணம்.  எனினும் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த நீதிமன்றம் தயாராக உள்ளது. இதுதொடர்பாக முறையிட்டுள்ள அனைத்து தரப்பினரும் இரண்டு நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தும்,” எனக் கூறினர்[6].

SC-ST Act- Bharat bandh-arson, violence

ஊடகங்களின் திரிபு செய்திகளும், உச்சநீதி மன்றத்தின் விளக்கமும்: ஊடகங்களும் தீர்ப்பை ஒழுங்காகப் படிக்காமல்[7], தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு மற்றும் அடுத்தவர் சொன்னதை கேட்டுக் கொண்டு, எஸ்.சி-எஸ்.டியினர் ஏன் “பாரத் பந்த்”தில் ஈடுபட்டனர், அவர்களின் பாதிப்பு என்ன, போராட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[8]. அதாவது, உண்மையான விவரங்களை, செய்தி-விசயமாக போடாமல், தூண்டும், ஆதாரமில்லாத கருத்துகளை, அரைவேக்காட்டுத் தனமான விசயங்களை செய்திகள் போல போட்டு வருகின்றனர். 89-பக்கங்கள் கொண்ட தீர்ப்பளித்த நீதிபதி கோயல் கூறியதாவது[9], “எங்களுடைய தீர்ப்பு அரசியல் நிர்ணய சாசனத்தில் உள்ளதை நடைமுறைப் படுத்துகிறது. தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைகளை நாங்கள் நான்றாகவே உணர்ந்திருக்கிறோம், தான் அவை உயர்ந்த இடத்தில் வைக்கப் பட்டுள்ளன…… இருப்பினும் அதே நேரத்தில், அப்பாவி நபர் யாரும் இதில் பொய்யான முறையில் சிக்க வைக்கப் பட்டு, விசாரணை இல்லாமல் கைது செய்யப் படுவதைத் தடுக்கிறது. நாங்கள் இச்சட்டம் அமூல் படுத்துவதைத் தடுக்கவில்லை. இந்த சட்டம் என்ன அப்பாவி மக்களை கைது செய்யப் பட வேண்டும் என்றா சொல்கிறது? ஆகவே, எங்களது தீர்ப்பு அச்சட்டத்திற்கு எதிரானது அல்ல,” என்று எடுத்துக் காட்டினார்[10].

© வேதபிரகாஷ்

04-04-2018

SC-ST Act- Bharat bandh-boys run riot

[1] தினமணி, எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்! , By IANS | Published on : 02nd April 2018 02:04 PM

[2] http://www.dinamani.com/india/2018/apr/02/centre-files-review-petition-over-scst-act-order-2892179.html

[3] ZeeTVnews, Not against SC/ST Act, those agitating may not have read judgement: Supreme Court, By Zee Media Bureau | Updated: Apr 03, 2018, 15:04 PM IST

[4] http://zeenews.india.com/india/not-against-sc/st-act-those-agitating-may-not-have-read-judgement-supreme-court-2096083.html

[5] தி.இந்து, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உத்தரவு: இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு, பி.டி.ஐ, Published : 03 Apr 2018 16:10 IST; Updated : 03 Apr 2018 16:12 IST

[6] http://tamil.thehindu.com/india/article23424976.ece

[7] India Today, Why Dalits called a Bharat Bandh? SC/ST Act and the Supreme Court ruling explained, Anusha Soni, New Delhi, April 2, 2018: UPDATED 15:40 IST

[8] https://www.indiatoday.in/india/story/why-are-dalits-protesting-sc-st-act-and-the-supreme-court-ruling-explained-1202745-2018-04-02

[9] DNA, Relief for SC/ST can’t be at cost of innocent: Supreme Court, WRITTEN BY Ritika Jain, Updated: Apr 4, 2018, 05:05 AM IST.

[10] However, Justice Goel, the author of the 89-page judgement said, the judgment fortified the Act. “Our judgment implements what is said in the Constitution. We are conscious of the rights of the underprivileged and place it at the highest pedestal… but at the same time, an innocent person cannot be falsely implicated and arrested without proper verification. We have not stopped the implementation of the Act. Does the Act mandate the arrest of innocent persons? Our judgment is not against the Act,” Justice Goel said addressing Venugopal.

http://www.dnaindia.com/india/report-relief-for-scst-can-t-be-at-cost-of-innocent-supreme-court-2600762

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (1)

ஏப்ரல் 4, 2018

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 மற்றும் 20-03-2018 உச்சநீதி மன்ற தீர்ப்பும் (1)

State of SC-ST crimes 2014-16- DNA graphics
எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டம், 1989 உருவானது: வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் ஜாதியினர் / தாழ்த்தப்பட்டவர்கள் [செட்யூல்ட் காஸ்ட்ஸ்] மற்றும் பழங்குடி மக்களுக்கு [செட்யூல்ட் டிரைப்ஸ்] எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் [the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act] கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.  பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

SC-ST Act- Bharat bandh-Tiruma protest.jpg

எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகள் நடந்து வருவது: கடந்த 2016 ஆம் ஆண்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 15.4% அளவுக்கே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணகத்தின் வருடாந்திர அறிக்கை சுட்டிக்காட்டுகிறது[1]. பொதுவான பிற வழக்குகளில் 33.3% அளவுக்கு குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்த வன்கொடுமைகள் 66% அதிகரித்திருக்கின்றன. சராசரியாக 18 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்பது தற்போது 15 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்று நடந்து வருகின்றது[2].  இப்படியெல்லாம் சார்பு எண்ணங்களுடன் விளக்கங்கள் கொடுத்தாலும், குறிப்பிட்ட வழக்குகளில் எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள், அடுத்தவர் தூண்டி விட்டு, புகார் கொடுப்பது, வழக்குப் போடுவது என்ற ரீதியில் உள்ளதும் விசாரணை மற்றும் நீதிமன்ற நடப்புகளில் தெரிய வந்தன. அதனால், ஒரு நிலையில் அத்தகைய பொய் புகார்கள், வழக்குகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்த வேண்டிய அவசியமும் உணரப் பட்டது.

SC-ST Act- cases filed, charge sheeted etc

எஸ்.சி சாதிகளுக்கிடையே, எஸ்.டி எஸ்.சி சாதிகளுக்கிடையே, மற்றும் எஸ்.டி சாதிகளிடையே ஏற்படும் வன்முறைகளை எவ்வாறு தடுப்பது?; இச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்போது காவல்நிலையம் கட்டப்பஞ்சாயத்து கூடங்களாக மாறி விடுகின்றன என்ற குற்றச்சாட்டும் வைக்கப் படுகின்றது. சட்டம் என்பது பொய்த்து, சாதிய வன்மம் அங்கே கட்டவிழ்த்து விடப்படுகிறது என்று சிலர் சொல்வது ஒரு தரப்பு வாதமாகிறது. காவல்நிலையத்திலும் இரு தரப்பு சாதியைச் சேர்ந்தவர்கள் இருப்பதால், இந்தச் சட்டத்தை சரிவர கையாளக் கூடிய நிலை அங்கு இல்லை. மேலும் பொதுமக்களும் இந்தச் சட்டத்தை தவறான வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதமும் அத்தகையது. எனவே இதில் உள்ள  குறைபாடுகளைக் களைய வேண்டும். மிக முக்கியமாக அதிகாரிகள், இதனை நேர்மையாகக் கையாள வேண்டும் என்று பொதுவாதம் வைப்பது, சட்டத்தைப் புரிந்து கொள்வதாகாது. கிராமங்களில் வன்முறையைத் தூண்டி விடுவதில், அச்சாதிகள்சம்பந்தப் பட்டுள்ளதால் தான், அத்தகைய சமரசங்கள் ஏற்பட்டுக்கின்றன. மேலும் எஸ்.சி சாதிகளுக்கிடையே, எஸ்.டி எஸ்.சி சாதிகளுக்கிடையே, மற்றும் எஸ்.டி சாதிகளிடையே ஏற்படும் வன்முறைகளைப் பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஏனெனில், அங்கு புகார் கொடுப்பதும், புகாருக்கு உட்படுபவகளும், அதே சாதியினராக இருக்கின்றன. இதனால், நேரங்கழித்து, மற்ற சாதிகளுடன் ஏற்பட்ட மோதல்களாக மாற்றப் பட்டு, சட்டம் வளைக்கப் படுகிறது.

SC-ST Act- Justices Goel and Lalit

மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பு: மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பில், இவ்வாறு தீர்ப்பளித்தது. 2015-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 15 முதல் 16 விழுக்காடு போலி வழக்குகள் என தெரியவந்துள்ளதாகவும். எனவே அப்பாவி பொதுமக்களை மதம் அல்லது சாதியின் பெயரால் பாதிப்புக்குள்ளாக்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்[3]. சாதி ரீதியான கொடுமைகளை நீக்க கொண்டு வரப்பட்ட சட்டம் சாதியை நிலைநிறுத்த பயன்படக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது[4]. இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன் ஜாமின் வழங்கியது. எந்த கைது நடவடிக்கைக்கு முன்னரும் அடிப்படையான விசாரணை நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்[5].

SC-ST Act- Bharat bandh-9 killed

ஊடகங்களின் சார்பு கொண்ட திரிபு செய்திகள் வெளியிடும் தன்மை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்த்தும் வகையியில் சுப்ரீம் கோர்ட் சில திருத்தங்கள் செய்து தீர்ப்பு வழங்கியது, என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிடுவதே தவறானது. சட்டத்தை நீதிமன்றங்கள் திருத்த முடியாது, பரிந்துரை தான் செய்ய முட்யும், அரசு தான் செய்ய முடியும். 02-04-2018 அன்று, இதற்கு எதிராக நாடு முழுவதும் தலித் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின. எஸ்.சி-எஸ்.டி ஆணையம் “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனத்தின் படியும் செல்லாது என்று சுட்டிக் காட்டியப் பிறகும், அதே தோரணையில் குறிப்பிடப் படுவதும் நோக்கட் தக்கது. குறிப்பாக வட மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியில் பேருந்து, கார் உள்ளிட்டவை போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டன. குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

SC-ST Act- Bharat bandh-poice van attacked

வட மாநிலங்களில் “பாரத் பந்த்,” போலீஸார் தாக்கப் படுதல், வன்முறை முதலியன: பஞ்சாப் மாநிலத்தில் ரெயில்கள் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்து வரும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் குவாலியர், ப்ஹிந்த், மோரேனா மற்றும் சாகர் பகுதிகளில் நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் ஆறு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதே போல, உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் இருவரும், ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் நடந்த வன்முறை நிகழ்வில் ஒருவர் பலியாகியுள்ளதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் தாக்கியதில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாகவும், போலீஸ் வாகனங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையே, அனைத்து மாநிலங்களிலும் சட்டம் – ஒழுங்கு கட்டுக்குள் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது[6]. மேலும், சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது[7].

© வேதபிரகாஷ்

04-04-2018

SC-ST Act- Bharat bandh-arson, loot, violence

[1] ஆதவன் தீட்சண்யா, உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமைஆதவன் தீட்சண்யா, BY த டைம்ஸ் தமிழ், மார்ச் 23, 2018

[2] https://thetimestamil.com/2018/03/23/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/

[3] தினகரன், விசாரணையின்றி கைது செய்யக் கூடாது : தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்ற அறிவுரை, 2018-03-21@ 14:40:19

[4] On March 20, the Supreme Court had diluted the provisions of the Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, ruling that government servants should not be arrested without prior sanction and private citizens too, can be arrested only after an inquiry under the law.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=386337

[6] மாலைமுரசு, எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்டம் தளர்வுகலவரங்களில் பலி எண்ணிக்கை 9 ஆனது, பதிவு: ஏப்ரல் 02, 2018 19:27; மாற்றம்: ஏப்ரல் 02, 2018 19:48

[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/02192723/1154660/7-killed-in-SC-ST-violance-and-Bharat-Bandh.vpf

செய்யது பீடி வருமான வரியேய்ப்பில் ஈடுபட்டுள்ளதா – பீடி விற்பதில் மோசடி நடந்துள்ளதா – ரூ 160 கோடி வரியேய்ப்பு எப்படி நடந்தது?

ஜூலை 4, 2017

செய்யது பீடி வருமான வரியேய்ப்பில் ஈடுபட்டுள்ளதா – பீடி விற்பதில் மோசடி நடந்துள்ளதா – ரூ 160 கோடி வரியேய்ப்பு எப்படி நடந்தது?

Syed Group of Companies-with websites

பீடியிலிருந்து வளர்ந்த சாம்ராஜ்யம்: இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, செய்யது பீடி கம்பனி டி.ஈ. செய்யது ராவுத்தர் [T E Seyadu Raowther] என்பவரால் 60 வருடங்களுக்கு முன்னர் குடும்பத் தொழிலாக ஆரம்பிக்கப் பட்டது[1]. நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செய்யது பீடி நிறுவனத்திற்கு மதுரை, சென்னை போன்ற இடங்களில் அலுவலகங்கள் உள்ளன[2].

  1. செய்யது பீடி கிளை அலுவலகங்கள் [Seyadu Beedi Company, branch offices on Bells Road, Kilpauk]
  2. செய்யது ஷரீயத் பைனான்ஸ், கிளை அலுவலகங்கள் [Seyadu Shariat Finance, branch offices on Bells Road, Kilpauk]
  3. செய்யது ஹோம் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், கிளை அலுவலகங்கள் [Seyadu Home Industries Limited, branch offices on Bells Road, Kilpauk]
  4. செய்யது டிரேடிங் கம்பனி, கிளை அலுவலகங்கள் [Seyadu Trading Company branch offices on Bells Road, Kilpauk].
  5. யூசுப் மீரான், கம்பெனி சொந்தக்காரர்களில் ஒருவர் [The house of Yousuf Meeran, one of the owners, at Madrasapattinam apartments in R A Puram].
  6. செய்யது பீடி கிளை அலுவலகங்கள், கோயம்புத்தூர் [Seyadu Beedi Company at two places in Coimbatore city].

இது தவிர கீழ்கண்ட நிறுவனங்களும் அவர்களுக்கு சொந்தமாக இருக்கின்றன:

  1. செய்யது காட்டன் மில்ஸ் லிமெடட் [Seyad Cotton Mills Ltd],
  2. செய்யது ஸ்பின்னிங் மில்ஸ் [Seyad Spinning Mills],
  3. செய்யது பள்ளி [Seyadu Residential School],
  4. ஃபே வாக் பேஷன் [Faywalk Fashion]
  5. செய்யது ஹோம் பப்ளிகேஷன்ஸ் [Syed Home Publishers].
  6. செய்யது வின்ட் பம் [Seyad Wind Farm]

இக்குழுமத்தினர் பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது, மற்ற தொழில்களிலும் தமது முதலீடுகள், தொடர்புகள் வைத்துக் கொண்டுள்ளனர்.

Syed Group of Companies

கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது, வரியேய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது: செய்யது பீடி நிறுவனம் முறையாக வரிசெலுத்தவில்லை என்று கூறி கடந்த வாரம் ஜூன் 28-29 தேதிகளில் 20-17 நெல்லை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் 40 இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்தது. தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 63 இடங்களில் சோதனை நடைபெற்றது[3]. கடந்த ஜூன் 28ம் தேதி நெல்லை, சென்னை பெல்ஸ் சாலையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ5.74 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது[4]. மேலும் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் துபாயில் முதலீடு செய்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்[5]. வருமான வரிச் சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[6]. 63 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 5 கோடியே 74 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. பறிமுதல் செய்த ஆவணங்களை மதிப்பீடு செய்த போது, அதில் கணக்கில் காட்டாத பீடி விற்பனையின் மூலம் 46 கோடியே 10 லட்சம் ரூபாயும், செலவு செய்ததாக ஆவணங்கள் தயார் செய்து 49 கோடியே 50 லட்சம் ரூபாயும் செய்யது நிறுவன குழுமம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது[8]. கணக்கில் காட்டப்படாத நூல் மற்றும் கழிவு பருத்தி மூலம் 8 கோடியே 10 லட்சம் ரூபாயும், ஊழியர்கள் பெயரில் 13 கோடி ரூபாயும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் மூலம் 44 கோடியே 86 லட்சம் ரூபாயும் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Syed Beedi- Times of India -news rores evasion

வருமானவரித்துறை வழக்கம் போல தனது கடமையை செய்கிறது: வரி ஏய்ப்பு செய்ததற்கான தகவல்கள் கொண்ட, காட்டிக் கொடுக்கின்ற தன்மையுள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் வருமான வரித்துறை வட்டாரத்தில் தகவல் வெளியானது. ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி முடிந்த பின்னரே, வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை எவ்வளவு? என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[9]. இந்த வரி ஏய்ப்பு குறித்து உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும், உரிய விளக்கம் அளிக்கப்படாத வகையில் வருமானவரித்துறையுடன், அமலாக்கப்பிரிவு சார்பிலும் நடவடிக்கை பாயலாம் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்[10]. இருப்பினும், ஊடகங்கள், எதிர்த்தும்-ஆதரித்தும் போன்ற நிலைகளில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசியல் கலப்பு கவலைப்பட வைப்பதாக உள்ளது.

Syed Beedi- DT next -News rores evasion

குட்கா ஊழல் என்ற பேச்சு / புகார் வந்தவுடன் இந்த ரெயிடு நடப்பது: 27-06-2017 அன்று “குட்கா மோசடி ஊழல்” பற்றிய பேச்சு, புகார் வெளிவந்த அடுத்த நாள் 28-06-2017 (புதன்கிழமை) இந்த சோதனை தொடங்கியது[11]. மாநிலம் முழுவதும், தடை செய்யப்பட்ட வாய் சுத்தகரிப்பு புகையிலையை [freshener across] அனுமதி இல்லாமல் விற்றதாகவும் புகார் உள்ளது. இருப்பினும், இந்த ரெயிடுகள் அதற்கு சம்பந்தப்பட்டதா அல்லது பொதுவாக வருமான வரியேப்பு விசயமாக நடத்தப் பட்டதா என்று தெரியவில்லை. முந்தைய சோதனையில் கிடைத்த சில ஆவணங்களில் சில மந்திரிகள் மற்றும் அதிகாரிகளின் விலாசங்கள் காணப்பட்டதாகவும், தங்களது குட்கா வியாபாரம் நடைபெற பணம் கொடுத்த விவரங்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டது[12]. அதனால், வருமான வரித்துறை, மாநில அரசை, அவ்விவகாரத்தை புலன் விசாரணைக்குட்படுத்த கேட்டுக் கொண்டது. ஆனால், அரசு எந்த நடவடிக்கையயும் எடுக்கவில்லை.

Syed Beedi- box

ஹக்கானி குழுமம்போலசெய்யது குழுமம்செயல்படுகிறதா?: வளைகுடா நாடுகளில் “ஹக்கானி குழுமம்” பலவிதங்களில் வரும் பணத்தை தீவிரவாதத்திற்கு உதவ பட்டுவாடா செய்யப் பட்டு வருகிறது. பணம் இல்லாமல், இக்கால நவீன திவீரவாத செயல்களை செய்ய முடியாது. வரியேய்ப்பு   மூலம் சம்பாதிப்பதை ஹவாலா பணப்பட்டுவாடாவுக்குக் கொடுக்கிறார்கள். அத்தொகைக்கு மாற்றாக வெளிநாட்டிலிருந்து தங்கமாக குருவிகள் மூலம் கடத்திவருகிறார்கள். அதனை உள்ளூர் நகை உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் இதில் வரும் அதிக லாபத்தில் நாற்பதிலொரு பங்கை மார்க்கக் கடமையாக ஐஎஸ்சுக்கு ஆள்சேர்க்கும் வஹாபி தீவீரவாதிகளுக்கும் மதமாற்றப் பிரச்சாரங்களுக்கும் நன்கொடையாக தாராளமாகக் கொடுத்து வருகிறார்கள். அவ்வாறு ஒருவேளை, இக்குழுமமும் செயல்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

04-07-2017

IT raid at Syed Beedi group

[1] Dtnext (Daily Thanthi), IT raid on 40 premises of popular beedi company, Published: Jun 29,201705:30 AM.

[2] http://www.dtnext.in/News/TamilNadu/2017/06/29021821/1037420/IT-raid-on-40-premises-of-popular-beedi-company.vpf

[3] தினமலர், செய்யது பீடி நிறுவன ரெய்டில் ரூ.3 கோடி சிக்கியது, பதிவுசெய்த நாள். ஜூன் 29, 2017, 09:09.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1801230

[5] தமிழ்.ஒன்.இந்தியா, செய்யது பீடி நிறுவனம் ரூ161 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது: .டி., தகவல், Posted By: Karthikeyan, Published: Monday, July 3, 2017, 18:23 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/it-seized-rs-5-74-crore-house-offices-syed-beedi-company-chennai-288347.html

[7] பாலிமர் நியூஸ், செய்யது பீடி நிறுவன குழுமம் ரூ.161.56 கோடி வரி ஏய்ப்பு, 03-ஜூலை-2017 19:00.

[8]https://www.polimernews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/

[9] தினத்தந்தி, செய்யது பீடி நிறுவனம் ரூ.161 கோடி வரி ஏய்ப்பு; வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல், ஜூலை 04, 2017, 02:33 AM

[10] http://www.dailythanthi.com/News/State/2017/07/04023315/Peddys-Rs-161-crore-tax-evasion-Revenue-Department.vpf

[11] The raids come a day after a section of media claimed to have accessed IT documents that linked some ruling party leaders and top officials with a mega ‘gutka’ scam. They allegedly facilitated sale of the banned mouth freshener across the state. But it’s not clear whether the raids at some 40 premises of the beedi manufacturer located in Chennai, Madurai and Tirunelveli are related to the ‘gutka’ scam. There are allegations of tax evasion against the company and the raids could be related to that.

Hindusthan Times, IT raids Tamil Nadu’s top beedi manufacturing company, KV Lakshmana, Chennai , Updated: Jun 28, 2017 13:15 IST

[12] The IT had claimed to have unearthed some documents during previous raids at the residences of some ministers and officials that contained some entries relating to payments made to them by ‘gutka’ companies to facilitate their business. The IT department also asked the state government last year to investigate the matter. However, the state government has not initiated any action so far on the gutka-gate allegations.

http://www.hindustantimes.com/india-news/it-raids-tamil-nadu-s-top-beedi-manufacturing-company/story-T5J0bySpNmECjJwSco2dXK.html

மகளிர் விடுதியில் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நான்கு போலீஸார் பணி நீக்கம்- சட்டத்தை மீறுபவர்களுக்கு ஒரு பாடம்!

நவம்பர் 6, 2016

மகளிர் விடுதியில் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நான்கு போலீஸார் பணி நீக்கம்சட்டத்தை மீறுபவர்களுக்கு ஒரு பாடம்!

அரசியல், அதிகாரம்பணபலம் முதலிய அழுத்தங்களில் வேலை செய்து வரும் போலீஸ்காரர்கள்: வேலியே பயிரை மேய்க்கும் போக்கு சட்டம் அமூல் படுத்துபவர்களிடம் இருந்தால், பாதிப்பு அதிகமாகவே இருக்கும். சமிப காலங்களில் தார்மீக உணர்வுகளுக்கு, எண்ணங்களுக்கு, நம்பிக்கைகளுக்கு, அவற்றைச் சார்ந்த (கடந்த 60 ஆண்டுகளாக) நடவடிக்கைக்களுக்கு எதிராக வெவேறு வகையான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. இதனால், நியாயம் தர்மம், சட்டம், ஒழுங்கு என்று யாராவது பேசினாலே கிண்டலுக்கு, நக்கலுக்கு, ஏளனத்திற்குட்படுகிறார்கள். ஊடகங்கள், சினிமாக்கள், கதைகள், ஜோக்குகள் முதலியவையெல்லாம் அந்த ரீதியிலேயே இருந்து வருகின்றன. போலீஸ் துறை, போலீஸ்காரர்கள் முதலியோரும் அத்தகைய எதிர்மறை விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறார்கள். போதாகுறைக்கு, அரசியல் தலையீடு, அவர்களின் தேர்ந்தெடுப்பு, இடம் மாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் அதிகமாகவே உள்ளன. குற்றவாளிகளின் தொடர்புகள், அரசியல் பிணைப்புகள், அதிகாரம்-பணம் கூட்டு முதலியனவும் அவர்களை திக்குமுக்காட வைக்கின்றன. அந்நிலையில் தான் அவர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்நிலையில், சிலர் வரம்புகளை மீறுகிறார்கள்.

பிப்ரவரி 3, 2013 அன்று மகளிர் விடுதியில் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த போலீஸார்: சென்னை விருகம்பாக்கம் அபிராமி நகரில் முதியோர்களை பராமரிக்கும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உள்ளே பெண்கள் தங்கும் விடுதியும் உள்ளது[1]. அதில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர்[2]. இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி இரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்வா, தலைமை காவலர் ராஜா, காவலர் குமரேசன், காவலர் குமரன் ஆகியோர் குடிபோதையில் பெண்கள் விடுதிக்குள் சென்றனர்[3]. பின்னர் நான்கு பேரும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரிக்க நாங்கள் வந்துள்ளோம் என்று கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்[4]. மேலும், விடுதியில் தங்கியிருந்த இரண்டு இளம்பெண்களை தனியாக அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து, நிர்வாணப்படுத்தி சில்மிஷங்கள் செய்தனர்[5]. பின்னர் கொடூரமாக அவர்களை தாக்கியுள்ளனர்[6]. அந்த விடுதியில் துணை நடிகை ஒருவரும் தங்கி இருந்தார். அவரையும் மிரட்டி சில்மிஷம் செய்துள்ளனர். அப்போது, அந்த துணை நடிகை எனக்கு மாதவிலக்கு என்று கூறி உள்ளார்[7]. அப்போது, குடிபோதையில் இருந்த நான்கு பேரும் அவரை விடாமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்[8]. இதனால் பாதிக்கப்பட்ட துணை நடிகை அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

பிப்ரவரி 3, 2013ல் நடந்ததுபிப்ரவரி 4, 2013 அன்று புகார் கொடுக்கப்பட்டது: சென்னை, விருகம்பாக்கம் கம்பர் தெருவில் துணை நடிகைகளை தினசரி சம்பள அடிப்படையில், சினிமா படப்பிடிப்புக்கு அனுப்பி வைக்கும் ஏஜென்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஜோஸ்வா, ஏட்டுகளாக பணியாற்றும் குமரேசன், குமரன் மற்றும் போலீஸ்காரர் ராஜா ஆகியோர் எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த துணை நடிகைகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். மாமூல் கேட்கிறார்கள். ஆசைக்கு இணங்காவிட்டால் விபசார வழக்கில் ஜெயிலில் தள்ளிவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,” இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், விடுதியில் தங்கியிருந்த கீதா, ஜெயலட்சுமி ஆகியோர், அண்ணா நகரில் உள்ள, இந்திரா பெண்கள் முன்மாதிரி கல்வியாளர் சங்கத்தில் முறையிட்டனர். அந்த சங்கம் சார்பில், கலைவாணி என்பவர், போலீஸ் கமிஷனர் மற்றும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முதல்கட்ட நடவடிக்கையில் இருவர் பணிநீக்கம்: இந்த புகார் மனு கமிஷனர் உள்பட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து அப்போது வடபழனியில் உதவி கமிஷனராக இருந்த சுப்புராஜன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. குழுவின் விசாரணையில், நான்கு பேரும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. விசாரணையில் புகார் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையென தெரியவந்தது. முதல்கட்டமாக ஏட்டு குமரேசன், போலீஸ்காரர் ராஜா ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டது.  சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்வா, ஏட்டு குமரன் ஆகியோர் மீது தொடர்ந்து விசாரணை நடந்துவந்தது[9]. தற்போது ஜோஸ்வா குரோம்பேட்டை போக்குவரத்து போலீசில் சப்-இன்ஸ்பெக்டராகவும், ஏட்டு குமரன் எம்.ஜி.நகர் போலீசில் குற்றப்பிரிவு ஏட்டாகவும் பணியாற்றி வந்தனர்[10].

நவம்பர்.2, 2016 புதன்கிழமை பதவி நீக்கம் ஆணைநிரந்தர பணிநீக்கம்[11]: இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இவர்கள் மீதும் இலாகாப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருவரையும் நிரந்தர பணிநீக்கம் செய்து சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. (பொறுப்பு) டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார்[12]. இந்த சம்பவம் போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், இதனை படிப்பினையாகத்தான் அவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். இதே நேரத்தில், மின்வாரிய ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்ட விசயத்திலும் நான்கு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “லஞ்ச எதிர்ப்பு விழுப்புணர்வு வாரம்” அக்டோபர் 31 முதல் நவம்பர் 5 2016 வரை கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. அந்நிலையில் இவை நடப்பது நல்லதே என்றும் நினைத்துக் கொள்ளலாம். ஊழல் என்பது லஞ்சம் வாங்குவதில் மட்டுமல்ல, எத்தகைய ஒழுக்கக்கேடு, சட்டமீறல், சமுதாய விரோத செயல் முதலியவற்றிலும் உள்ளது. மனத்தூய்மை இல்லையென்றால், அக்குணம் வராது. மனத்தூய்மை வேண்டுமானால், நல்ல சிந்தனைகள், நல்லெண்ணங்கள் முதலியவை உண்டாகும் வகையில் இருக்க வேண்டும். அது சமுதாயத்தில் எல்லோருக்குமே தேவைப்படுகிறது.

© வேதபிரகாஷ்

06-11-2016

[1] தினகரன், விடுதியில் துணை நடிகை மானபங்கம்; போலீஸ் சப்இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் டிஸ்மிஸ் : போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு, Date: 2016-11-04@ 00:51:19.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=256452

[3] தமிழ்.வெப்துனியா, துணை நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : சப்இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி நீக்கம், Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2016 (13:35 IST).

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/sex-torture-to-co-actress-chennai-police-terminated-116110400012_1.html

[5] தினமலர், பெண்கள் விடுதியில் சித்ரவதை: எஸ்.., உட்பட 2 பேர்டிஸ்மிஸ், பதிவு செய்த நாள்: நவம்பர் 04, 2016: 01.13.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1641368

[7] தமிழ்.இந்து, போதையில் மகளிர் விடுதியில் நுழைந்து பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட உதவி ஆய்வாளர், காவலர் பணிநீக்கம்: சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவு, Published: November 4, 2016 09:14 ISTUpdated: November 4, 2016 09:15 IST

[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9304143.ece?homepage=true&theme=true

[9] Times of India, Sexual assault in women’s hostel: Two cops sacked, TNN | Updated: Nov 4, 2016, 03.37 AM IST.

[10] http://timesofindia.indiatimes.com/city/chennai/Sexual-assault-in-womens-hostel-Two-cops-sacked/articleshow/55235199.cms

[11] தினத்தந்தி, சென்னையில் துணை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: சப்இன்ஸ்பெக்டர், ஏட்டு பணிநீக்கம், பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 12:20 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:45 AM IST.

[12] http://www.dailythanthi.com/News/State/2016/11/04002032/SubInspector-head-constable-dismissal.vpf