Archive for the ‘கள்ளச்சாராயம்’ Category

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

மே 3, 2012

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

நல்லவர்களாக, தூயவர்களாக, புனிதர்களாக இருந்தால் எம்.பி.க்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஊடகக்காரர்கள் ஒரு மொழியிலிருந்து, மற்ற மொழிக்கு மாற்றம் செய்யும் போது, அம்மொழிக்கே உரித்தான சில சொல்லாற்றங்கள், வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றிலிருந்து பெறப்படும் அர்த்தங்கள், அம்மொழியின் தன்மையில் எடுத்துக் கொள்ளவில்லையென்றால், அல்லது சாதாரணமாக மொழிபெயர்த்தால், சரியான பொருள் கிடைக்காது. இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்க்கும்போது அவ்வாறுதான் ஏற்படுகிறது. वे इनसान की शक्ल में शैतान हैं। “மனித உருவில் உள்ள சாத்தான்களின் வடிவங்கள்” அல்லது சைத்தான் மனித உருவில் உள்ளன என்று மொழிபெயத்தால், உண்மையிலேயே எம்.பிக்கள் “சைத்தான்” என்று சொல்லப்படவில்லை. அம்மொழிப்பிரயோகத்தில் அவர்கள் அத்தகைய கெட்டவர்கள் என்றுதான் பொருள்வரும். இந்தியிலேயே, இரு நாளிதழ்கள் அச்செய்தியை இருவிதமாக வெளியிட்டிருப்பதை கீழே காணலாம்:

क्या बोले थे बाबा[1]छत्तीसगढ़ के दुर्ग से मंगलवार को अपनी यात्रा शुरू करते हुए रामदेव ने कहा था कि सांसदों में अच्छे लोग भी हैं और वह उनका सम्मान करते हैं। लेकिन वहां डकैत, हत्यारे और जाहिल भी हैं। वे वह लोग हैं, जिन्हें किसानों, मजदूरों और देश की लोगों की कोई चिंता नहीं है। वे सिर्फ पैसे के गुलाम हैं। वे इनसान की शक्ल में शैतान हैं। जिन्हें उस पद के लिए चुना गया है, जिसके कि वे काबिल ही नहीं हैं। हमें संसद को बचाना है। हमें भ्रष्ट लोगों को हटाना है। संसद में लुटेरे, हत्यारे व जाहिल बैठे हैं[2]। सत्ता की कुर्सी पर इंसान की शक्ल में हैवान हैं। हमने उन्हें कुर्सी पर बैठाया है। लेकिन वो सत्ता चलाने की पात्रता नहीं रखते। वे लोग किसानों और मजदूरों से हमदर्दी नहीं रखते। वे देश इसलिए चला रहे, क्योंकि हमने ऐसा ही सिस्टम बनाया है। हमने मान लिया है कि 543 रोगी हिंदुस्तान चलाएंगे[3]। हालांकि उनमें कुछ अच्छे भी हैं। हमें संसद को बचाना होगा।

பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று எம்.பி.க்களை பாபா ராம்தேவ் சரமாரி தாக்கி உள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்[4].எம்.பி.க்களை திருடர்கள், கொலைகாரர்கள் என்று யோக குரு ராம்தேவ் விமர்சித்துள்ளதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் புதன்கிழமை (02-05-2012) கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேவையற்று வெளிப்படும் ரோஷம்: ராம்தேவின் பேச்சுக்கு மக்களவைத் தலைவர் மீராகுமார், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அரசியல் சாசன சட்டமே மேலானது. அது நாடாளுமன்றத்துக்கு என்று தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. அதை நாம் முதலில் கட்டிக்காக்க வேண்டும்’ என்று மீரா குமார் தெரிவித்தார்.  “நாடாளுமன்றத்தையும், சட்டம் இயற்றுபவர்களையும் விமர்சிப்பது சாதாரணமாகிவிட்டது. யார் அதிகமாக அவமதிக்கிறார்களோ அவர் பெரிய ஹீரோ ஆகிறார். இது முற்றிலும் தவறு. ஜனநாயக நிறுவனங்களை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரிதான்’ என்றார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இது போன்ற கருத்துகளை ராம்தேவிடமிருந்து தாம் எதிர்பார்க்கவில்லை. 144 சட்டம் அமூலில் இருக்கும் போது மின்சாரம் இல்லை என்று போரடினால் நானும் சட்டப்படி “கிரிமினல்” ஆகிவிடுவேன்[5], என்று பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.

உரிமை மீறல் நோட்டீஸ்: “”எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். “பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவோரால் நாடாளுமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அவர்கள் (ராம்தேவ் பெயரைக் குறிப்பிடவில்லை) மீது நாடாளுமன்ற உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நோட்டீûஸக் கொடுத்துள்ளேன்” என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர் சைலேந்திர குமார் தெரிவித்தார்[6]. இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “ராம்தேவின் பேச்சால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமுதாயத்தில் கெடுகிறது. அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ, உறுப்பினர்களின் உரிமை மீறல் நோட்டீஸ் அனைத்தும் மக்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. அவர் முடிவு எடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

எம்.பி.க்கள் மீது ராம்தேவ் தாக்கு: முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராம்தேவ், “எம்.பி.க்கள் எதிலும் அக்கறையில்லாதவர்கள். விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நாட்டு மக்களையும் நேசிக்காதவர்கள்‘ என்று கடுமையாக குற்றம்சாட்டினார்[7].

அவர்கள் பணத்துக்கு அடிமைகளாகவும், நண்பர்களாகவும் உள்ளனர். நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மனித உருவில் வாழும் பிசாசுகள். அவர்களுக்கு தகுதி கிடையாது.  நாடாளுமன்றத்தில் நல்லவர்களும் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களில் கல்வியறிவற்றவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் உள்ளனர். எனவே நாம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல்வாதிகளை நீக்க வேண்டும்’ என்று கடுமையாக பேசினார் ராம்தேவ். Addressing the media while launching his month-long yatra in Chhattisgarh’s Durg on Tuesday, Baba Ramdev said there were good people among the parliamentarians and he respected them[8]. “But there are dacoits, murderers, illiterates among them[9]. We have to save Parliament. We have to remove corrupt people.” He accused the MPs of not caring for farmers and labourers. “They are friends and slaves of money. They are illiterate, dacoits and murderers. They are devils in the form of humans, who we have elected to those posts. They are not worth it,” he said.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும், அவரது குழுவினரும் எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில் ராம்தேவும் எம்.பி.க்களை கடுமையாக குறைகூறி பேசியுள்ளார்.

ராம்தேவ் ஒரு மென்டல் கேஸ்: லாலு தாக்கு[10]: யோகாகுரு பாபா ராம்தேவ் பைத்தியக்காரர் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்[11]. சத்திஸ்கரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யோகாகுரு பாபா ராம்தேவ், எம்.பி.,க்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் கேட்டபோது, ராம்தேவின் பேச்சு பயனற்றது. இது போன்று பேசுபவர்களும் பயனற்றவர்கள். ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.

ராம்தேவ் கூறியது சரிதான்: அன்னா ஹசாரே[12]எம்.பி.க்கள் குறித்து ராம்தேவ் பேசியதில் தவறில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.நேற்று முன்தினம், சத்தீஸ்கரில் ராம்தேவ் கூறுகையில், “தற்போதுள்ள எம்.பி.,க் களில் சில நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். அதே நேரத்தில், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், படிப்பறிவற்றவர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, பார்லிமென்டை காக்க வேண்டும் என்றார். இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: ராம்தேவ் கூறியதில் எந்தவிதத்திலும் தவறில்லை. அவர் கூறிவது தவறு என்றால், இன்று ஏராளமான எம்.பி.க்களுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.  இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் கொடுக்கும் போது , மக்கள் ஏன்? நெருக்கடி கொடுக்கக்கூடாது. கட்சிகளுக்கு தேவை ஓட்டு. ஆனால் வேட்பாளர்களாக கிரிமினல்களை ஏன நிறுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் தேர்தலில் நின்றால் ஜனநாயகத்தின் கோயில் என்னவாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் 150ற்கும் மேலான கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்கள்[13]: 543 எம்.பி.க்களில் 150 பேர்களுக்கு மேல் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் என்று ஏற்கெனவே பல அறிக்கைகள், செய்திகள், விவரங்கள் வந்துள்ளன[14]. அவர்கள் ஒன்றும் வெட்கப்பட்டு தேர்தலில் நிற்காமல் இல்லை, தோல்வியும் அடையவில்லை, பாராளுமன்றத்தில் உட்காரவும் இல்லை ……………………என்றெல்லாம் இல்லை.

“Of these 150 MPs, 72 have serious charges against them. The maximum criminal charges are against Congress MP from Porbandar in Gujarat Vitthalbhai Hansrajbhai Radadiya. He has a total of 16 cases out of which five cases are of serious nature,” the analysis revealed.”Bharatiya Janata Party (BJP) has maximum number of MPs having criminal cases with 42 MPs, of which 17 have serious criminal cases against them. It is closely followed by Congress with 41 MPs having criminal cases against them. Twelve Congress MPs have serious charges against them,” the study said. அந்த 150ல், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அதிக அளவில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 72 மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் இதைப் பற்றி கவலைப் படவில்லை.பி.ஜே.பியில் 42 எம்.பி.க்கள், காங்கிரஸில் 41 என்று உள்ளனர். அதனால்தான், இரு கட்சிக்காரர்களுக்கும் கோபம் வருகிறது போலும். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், இவர்களை ஏன் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க்கவைத்தன?

“டாப்-10” என்று கிரிமினல் எம்.பி.க்கள் பட்டியலே கொடுக்கப் பட்டது. அப்பொழுதும், யாருக்கும் பொத்துக் கொண்டு வரவில்லை. அதில் லல்லுவும் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் தான் பாபா ராம்தேவை “மென்டல்” என்று “கமன்ட்” வேறு அடிக்கிறார்.

 Here is a list of top ten MPs with a criminal background, compiled by the National Election Watch[15].

Name: Kameshwar Baitha (56)
Constituency represented: Palamau, Jharkhand
Party: Jharkhand Mukti Morcha
Criminal background: Accused in 35 cases and has 50 serious charges against him under the IPC
Convicted: NeverName: Jagadish Sharma, (58)
Constituency represented: Jahanabad, Bihar
Party: Janata Dal-United
Criminal background: Accused in 6 cases and has 17 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Bal Kumar Patel (48)
Constituency represented: Mirzapur, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 13 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Prabhatsinh Pratapsinh Chauvan (67)
Constituency represented: Panchamahal, Gujarat
Party: Bharatiya Janata Party
Criminal background: Accused in 3 cases and has 10 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kapil Muni Karwariya (42)
Constituency represented: Phulpur, Uttar Pradesh
Party: Bahujan Samaj Party
Criminal background: Accused in 4 cases and has 8 serious charges against him under the IPC
Convicted: Never

Name: P Karunakaran (64)
Constituency represented: Kasargod, Kerala
Party: Communist Party of India-Marxist
Criminal background: Accused in 12 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kunvarji Mohanbhai Bavaliya (54)
Constituency represented: Rajkot, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 2 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Vittalbhai Hansrajbhai Radadiya (51)
Constituency represented: Porbandar, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 16 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Ramkishun (49)
Constituency represented: Chandauli, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Lalu Prasad Yadav (60)
Constituency represented: Saran, Bihar
Party: Rashtriya Janata Dal
Criminal background: Accused in 7 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

நாட்டை ஆள்பவர்களுக்கு தகுதி, யோக்கியதை, தார்மீக பொறுப்பு முதலியவை வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. அதனை அவ்வாறு கூறுவதே தவறாகும். இப்படி கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, ஊழல், லஞ்சம் என்று பல குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகி, பைளில் வெளிவந்து, பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அரசு செலவில் உலா வந்தால் அது மக்களுக்கு அசிங்கம் இல்லையா? ஒரு லட்சம் வாங்கிய பங்காரு லட்சுமணன் ஜெயிலில் என்றால், 1,73,000 கோடிகள் சுருட்டியவர்கள் எப்படி வெளியில் இருக்கிறார்கள்? பிணையில் வெளிவந்து பாராளுமன்ரத்திலும் உட்கார்ந்து கொள்கிறார்கள்?இதனை எடுத்துக் காட்டும் போது, அவர்கள் கோபம் அடைகிறார்கள், சட்டப்படி, உரிமை மீறல் என்று நடவடிக்கை எடுப்போம் என்றால், சட்டப்படி அந்த 150 எம்,பிக்களையும் வீடிற்கு அனுப்ப வேண்டியது தானே? எம்.பி பதவியை பறிக்கவேண்டியது தானே? மந்திரியாக உள்ளவர்களின் பதவியையும் பறிக்க வேண்டியதுதானே? ஆனால், காங்கிரஸ் அல்லது மேலிடம் சோனியா மெய்னோ அவ்வாறு செய்யவில்லையே? தாமஸ் கதையை அதற்குள் மறந்து விட்டார்கள் போல!

வழக்கு முடிந்து, தான் குற்றவாளி இல்லை என்ற பிறகு பதவிக்கு வருவது தானே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஜே.பி ஆட்சி மூன்று மாநிலங்களில் கலைக்கப் பட்டது. ஆனால், தவறில்லை என்று தீர்ப்பு வந்தபோது, அது மறுபடியும் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. அந்த இளைஞர் ராகுல் ஏன் இதைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்வதில்லை? ஒருவேளை தனது அப்பாவே ஊழல் பேர்வழி என்ற பிரச்சினை உள்ளது என்று அமைதியாக உள்ளாரா? இல்லை பிரியங்கா அல்லது வதேராவை வைத்து மோட்டார் பைக்கில் ஊர்வலம் வரச் சொல்லலாமே? பாபா ராம்தேவின் உருவ பொம்மையை எரிப்பவர்கள், அந்த 150 எம்.பிக்களின் உருவ பொம்மைகளை எரிப்பார்களா அல்லது பாலாபிஷேகம் செய்வார்களா?

ஹவாலா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட எ,.கே.அத்வானி ராஜினாமா செய்து, காத்திருந்து, வழக்கு முடிந்து, தான் நிரபராதி என்று முடிவானப் பிறகுதான் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதேபோல மற்றவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை?

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று பாரம்பரியம் இருக்கும் போது, மக்கள் இனிமேல் அத்தகைய ஆட்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. முதலில் அந்தந்த கட்சிகள் அவர்களை தேர்தலில் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் தேர்தல் கமிஷன் அவர்களை நிறுத்தவேண்டும். தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போதே அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படவேண்டும். அப்பொழுது தான், இந்நிலை மாறும். இவ்வாறு சொல்வதே தவறு என்று பாராளுமன்றம் எப்படி சொல்ல முடியும்? அங்கிருக்கும் 150 பேர்கள் எப்படி தமக்கு எதிராக தாமே பேசுவார்கள் அல்லது தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள்? விவாதம் வரும் போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மற்றவர்கள் பேசுவதை கேட்பார்கள் அல்லது தாமே பேச முன்வருவார்கள்?

அது எப்படி சட்டப்படி செல்லுபடியாகும்? இதெல்லாம் அங்குள்ள மெத்தப் படித்த எம்.பிக்களுக்கு, ஐந்து / ஆறு முறை என்று எம்.பிக்களாக இருப்பவர்களுக்கு, சட்டம் படித்த மாமேதைகளுக்கு, லட்சங்களில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்-எம்,பிக்களுக்கு தெரியாமலா இருக்கும்?

வேதபிரகாஷ்

02-05-2012


ரிஷிவந்தியம் கோவில் அருகே போலீஸ் ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை!

ஜூன் 22, 2010

ரிஷிவந்தியம் கோவில் அருகே போலீஸ் ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=24334

கூட்டம் வரும் இடத்தில் சாராயத்தை / மதுவை விற்க்கவேண்டும்: செம்மொழி மாநாட்டிற்காக, எல்லோருக்கும் மது / சாராயம் கிடைக்கவேண்டும் என சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கூட்டம் வந்தால் சரக்கு  நன்றாக விற்க்கும், என அரசிற்கு தெரிந்திருக்கிறது. அதே மதிரித்தான் போலும், இங்கும் கோவில் அருகில் சாராயம் விற்றால் இரட்டை லாபம், சரக்கு நன்றாக விற்க்கும், நாத்திகமும் நன்றாக வளரும். இதற்கு எந்த பகலவன் வந்தாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!

குடித்து கோவில் மண்டபத்தில் கலாட்டா: விழுப்புரம் (21-06-2010): ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு அருகில் போலீசாரின் அமோக ஆதரவுடன் கள்ளச்சாராயம் கனஜோராக விற்பனையாகிறது. இதனால் கோவிலின் புனிதம் பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ரிஷிவந்தியத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் 24 மணி நேரமும் கள்ளச்சாராய விற்பனை கனஜோராக நடக்கிறது. டாஸ்மாக் கடையில் விற்கப்படும் சரக்குகளை விட கள்ளச்சாராய பாக் கெட்டுக்கள் குறைந்த விலைக்கு விற்கப் படுவதால் ஏழை குடிமகன்கள் இதை நாடி செல்கின்றனர்.மாலை நேரத்தில் படுபிசியாக இங்கு விற்கப்படும் சாராய பாக்கெட்டுகளை குடிமகன்கள் வாங்கிவந்து கோவில் முன்புறமுள்ள மண்டபம் அருகில் குடித்துவிட்டு காலி பாக்கெட்டுகளை போட்டுவிடுகின்றனர். போதை அதிகமாகும் சிலர் கோவில் முன்புறமுள்ள மண்டபத்தில் படுத்து இரவு முழுவதும் ஆபாச வார்த்தைகளால் தன் னிலை மறந்து திட்டிக்கொண்டிருப்பதால் கோவிலின் புனிதம் கெடுகிறது. இதனால் காலையில் துப்புரவு பணியாளர்கள் காலி சாராய பாக்கெட்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடவேண் டிய அவலம் நீடிக்கிறது. தங்களுக்கு கிடைக்க வேண்டியது வியாபாரிகளிடமிருந்து “மாமூலாக’ தடையின்றி வந்துவிடுவாதால் ரிஷிவந்தியம் போலீசார் கள்ளச் சாராயத்தை தடுக்க எவ் வித முயற்சியும் எடுப்பதில்லை.ரிஷிவந்தியம் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் கள்ளச்சாராயம் விற்க வியாபாரிகளுக்கு போலீசார் முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

மாவட்ட எஸ்.பி., பகலவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரிஷிவந்தியம் பஸ்நிறுத்தம் அருகே ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது குறித்து தினமலரில் கடந்த மாதம் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து சிலநாட்கள் கெடுபிடி செய்த போலீசார் பின்னர் கள்ளச் சாராய விற்பனையை கண்டுகொள்ளவில்லை.நூற்றாண்டு பெருமை வாய்ந்த கோவில் புனிதத்தை கெடுக்கும் நோக்கில் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்கப்படுவதும். அதற்கு போலீசார் உடந்தையாக இருப்பதும் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள் ளது. மாவட்ட எஸ்.பி., பகலவன் நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் சில தீர்ப்புகளும் இவ்வாறு இருப்பது மகிழ்ச்சியாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது.

ஆனால், சட்டங்களை அமூல்படுத்துவதில், மறுபடியும் அரசு எந்திரங்கள்தாம் இயங்க வேண்டியதாக உள்ளது.

முன்பு அருண்ஷோரி எடுத்துக் காட்டியபடி, எத்தனையோ உச்சநீதி மன்ற தீர்ப்புகள் நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் போட்டுவைத்துள்ளனர், ஆட்சியாளர்க்ள்.

ஒகேனக்கல்லில் மதுபான கடை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=24092

சென்னை : ஒகேனக்கல் அருவி செல்லும் வழியில் உள்ள மதுபான கடையை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல்லில் முதலைப்பண்ணை அருகில் உள்ள மதுபான கடையினால், பொது மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது என்றும், எனவே அந்த கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரி, சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: மதுபான கடையின் பின்புறம் அங்கன்வாடி உள்ளது. அந்த மையத்துக்கு குழந்தைகள் வருவர். இவ்வழக்கின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளுக்கு முரணாக இந்த மதுபான கடை அமைந்துள்ளது. இந்தக் கடையை, யாரும் ஆட்சேபிக்காத பகுதிக்கு மாற்றுவது தான் சரியாக இருக்கும். எனவே, எட்டு வாரங்களுக்குள் இந்த மதுபான கடையை வேறு இடத்துக்கு “டாஸ்மாக்’ நிர்வாகம் மாற்ற வேண்டும். கோர்ட் உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கு அருகிலுள்ள மதுக்கடையும் அகற்ற உத்தரவு: சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள மதுபான கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மதுபான கடை அமைந்துள்ள தெருவின் ஓரத்தில் மகளிர் பள்ளி உள்ளது என்றும், கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி சந்துரு உத்தரவிட்டார்.