Posts Tagged ‘மறைத்து வைத்தல்’

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

அகழாய்வு பற்றி நிறைய வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்திய தொல்துறை கட்டிடங்கள், சிற்பங்கள், கோவில்கள் போன்றவை, தூரமான இடங்களில் தனியாக, பாதுகாப்பு இன்றி இருப்பது தெரிந்த விசயமே.
இவர் சென்று பார்க்கும் போது கூட அந்நிலையை அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட அதிகாரிகள், ஆய்வாளர்கள் தான், எப்பொழுதும் குழிகள் அருகிலேயே இருக்கின்றனர்.

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நடக்கின்ற வழக்குகள்தீர்ப்புகள், தொடரும் முறைகள்: தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பற்றி எழுத்தாளர் எஸ்.காமராஜ்[1], மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்[2]. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்தது[3]. இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் முன்பு 10-08-2021 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் அவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான திராவிடன் கிளை அலுவலகம் சென்னையில் அமைக்கப்பட்டது: மத்திய அரசுத்தரப்பில், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டது[4]. 4 தமிழ் கல்வெட்டியலாளர்களும் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது[5]. “சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில் 1 சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகளின், இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்த கேள்விக்கு, மொத்தமாக –

  • 86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டிருப்பதாகவும்,
  • அவற்றில் 27,000 தமிழ் கல்வெட்டுக்கள்,
  • 25,756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை
  • 12,000 கல்வெட்டுக்கள் பெர்ஷியன் மற்றும் அராபிக் மொழிக்கானவை,
  • 9,400 கல்வெட்டுக்கள் கன்னட மொழிக்கானவை,
  • 7300 கல்வெட்டுக்கள் தெலுங்கு மொழிக்கானவை,
  • 225 கல்வெட்டுக்கள் மலையாள மொழிக்கானவை என பதிலளிக்கப்பட்டது.

இதிலிருந்தே, தமிழில் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்பது பொய்யாகிறது. 27,000 தமிழ் எனும் போது, 57,000 தமிழ் அல்லாதது என்றாகிறது. எனவே, இத்தகைய வாதம், வழக்கு, செய்திகள் எல்லாமே பொய் என்றாகிறது.

அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை?: அதற்கு நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. அப்படியாயினும் அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்[6]. தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[7]. அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[8]. அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? என கேள்வி எழுப்பினர்[9]. நீதிபதிகள் இவ்வாறு கேட்டனரா அல்லது செய்திகள் அவ்வாறு வந்துள்ளனவா என்று தெரியவில்லை. இருப்பினும், இத்தகைய கேள்விகள் கேட்டுள்ளதும், விசித்திரமாக உள்ளது. ஏனெனில், நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்கும் முன்பே, அவற்றைப் பற்றி நன்றாகப் படித்து கொண்டு வந்து, வாதாடும், வக்கீல்களை குறுக்கு விசாரணை செய்யும் அளவுக்கு இருபார்கள், இருக்கிறாற்கள். மாறாக, இவ்வாறு, கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது, திகைப்பாக இருக்கிறது.

மைசூருவில் வைத்தது ஏன்?: அதற்கு நீதிபதிகள், “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது. நாடு முழுவதும் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. அந்த கல்வெட்டுகளை மைசூருவில் ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுக்களை வைக்க நடவடிக்கை எடுக்கலாமே? 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கு என கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? அதை திராவிட மொழி கல்வெட்டுகள் என கூறுவது ஏன்?,” எனவும் கேள்வி எழுப்பினர்[10]. அதற்கு மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “இது அரசின் கொள்கை முடிவு’’ என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இருப்பினும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும்” என்றனர்[11].

விளக்கம் அளிக்க உத்தரவுவிரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்: மேலும், தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எதற்கானவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்[12]. இதுகுறித்து தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை இன்றை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்[13].  “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது,” என்று நீதிபதிகள் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே அரசின் ஆவணங்கள் எல்லாம் வெளிப்படையாக உள்ளன. அவற்றையெல்லாம் கனம் நீதிபதிகள் படித்திருப்பார்கள். அந்நிலையில், இத்தகைய கேள்விகள் எழுப்பப் படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அரசியல் ஆதரவு நியமன நீதிபதிகள் அவ்வாறு சித்தாந்த ரீதியில் சார்புடையவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] WP(MD) 1174/2021; KAMARAJ MUTHALAKURICHI KAMARAJ.S VS THE UNION OF INDIA AND 4 OTHERS; M/S.ALAGUMANI.RRAMESHKUMAR. S 8486484817; M/S. VICTORIA GOWRI.L. ASGIMEMO OF APP FILED FOR R1 andAMP; R2 COUNTER AFFIDAVIT-USR-9534/21 FOR R 1 2 4 and AMP; 5 AGP TAKES NOTICE FOR R3, in the COURT NO. 1 before The Honourable Mr Justice N. KIRUBAKARAN and The Honourable Mr Justice M.DURAISWAMY

[2] தினத்தந்தி, 60 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு என கூறுவது ஏன்? மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி, பதிவு: ஆகஸ்ட் 10,  2021 04:35 AM.

[3] https://www.dailythanthi.com/News/State/2021/08/10043535/Why-is-it-said-that-60000-Tamil-inscriptions-are-Dravidian.vpf

[4] புதியதலைமுறை, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? – நீதிபதிகள், தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 04:04 PM.

[5] https://www.puthiyathalaimurai.com/newsview/112414/What-is-the-need-to-appoint-an-inscription-scholor-for-Sanskrit-language-in-Tamil-Nadu—-Judges

[6] புதியதலைமுறை, அதிக கல்வெட்டுகள் உள்ள தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :10,Aug 2021 05:41 PM

[7] https://www.puthiyathalaimurai.com/newsview/112628/actor-Vijay-Antony-Next-is-Mazhai-Pidikatha-Manidhan-Directed-by-Vijay-Milton.html

[8] புதியதலைமுறை, தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழிக்கானவை என அடையாளப்படுத்துவது ஏன்? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 03:55 PM

[9] https://www.puthiyathalaimurai.com/newsview/112412/Why-identify-60-000-Tamil-inscriptions-as-Dravidian—-Judges

[10] பாலிமர்.செய்தி, தமிழ்க் கல்வெட்டுகளை ஏன் மைசூரில் வைத்திருக்க வேண்டும்? – நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி, August 09, 2021 06:02:59 PM.

[11] https://www.polimernews.com/dnews/152481

[12] தமிழ்.ஒன்.இந்தியா, அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் இல்லை?.மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி!, By Rayar A Updated: Wednesday, August 11, 2021, 7:30 [IST]

[13] https://tamil.oneindia.com/news/chennai/why-is-the-tamil-language-with-so-many-inscriptions-not-important-tn-hc-to-centre-429576.html

பாதிரியார்கள் பத்திரிக்கையாளர்களை தாக்கினர்!

செப்ரெம்பர் 16, 2010

பாதிரியார்கள் பத்திரிக்கையாளர்களை தாக்கினர்!

ஆட்களை ஒளித்து வைக்கும், பிடித்துவைக்கும் பிஷப்: சாந்தோம் பிஷப்புகள் என்றாலே கோர்ட், வழக்கு, மோசடி, அடிதடி என்பதெல்லாம் சகஜம் போல இருக்கிறது. முன்பு, அருளாப்பாவைப் போலவே இந்த சின்னப்பாவும், தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்குவது வேடிக்கையாக உள்ளது, முன்பு, ஊட்டி பலான பாதிரி செக்ஸ் விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்க சபை புகார் கூறியது. அதுமட்டுமல்ல, அந்த பிஷப்பையே ஒளித்தவைத்ததாக புகார் கூறப்பட்டது. ஆக இப்படியெல்லாம், ஆட்களை ஒளித்து வைப்பது, பிடித்து வைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம், பிஷப்புகளுக்கு வாடிக்கையாகி விட்டன போலும்.

பிஷப்புக்கும் ஆசிரியைக்கும் சண்டை: மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சாட்சியாக சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது[1].

Mediamen-detained-attacked-by-Church

Mediamen-detained-attacked-by-Church

சின்னப்பா பிஷப்புக்கு கோர்ட் சம்மன்: கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டதும், சின்னப்பாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பேராயர் வழக்கு தொடர்ந்தார். சம்மன் அனுப்பியதற்கு தடை விதித்த ஐகோர்ட், வக்கீல்கள் குழு அமைத்து பேராயரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பரிந்துரைத்தது. வக்கீல் ஜான் தலைமையில் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. வக்கீல்கள் குழு நேற்று காலை சாந்தோம் சர்ச் வளாகத்தில் உள்ள பேராயர் வீட்டுக்குச் சென்றது. இதையறிந்துதான், டைம்ஸ்-நௌ டிவிக்காரர்கள் அங்கு வந்தனர்.

Dinamalar-16.Sep.2010

Dinamalar-16.Sep.2010

உள்ளூர் ஊடகங்கள் மறக்கும் டில்லி செனல்காரர்கள் வந்தனராம்: முன்பே எடுத்துக் காட்டியுள்ளபடி, உள்ளூர் உடகக்காரர்கள் பெரும்பாலோர் கிருத்துவர்கள் அல்லது கிருத்துவ சார்புடையவர்கள், ஏனெனில், அவர்களுக்கு “கவர்கள்” முதல் எல்லாமே வாடிக்கையாகக் கொடுக்கப் பட்டுக் கவனிக்கப் படுகிறார்கள். ஆகையால், அவர்கள் இதைப் பற்றி கவலைப் படுதில்லை போலும். இந்நிலையில், இதை படம் எடுக்க தனியார் “டிவி’ நிறுவனத்தினர் உள்ளே நுழைந்தனர்.

பாதிரியாளர்கள் தாக்கு, சிறைபிடிப்பு: “டைம்ஸ் நெள” தொலைக்காட்சியின் செய்தியாளர் விக்ரம் கோபிநாத் மற்றும் கேமராமேன் மணிஷ் தணானி ஆகியோர் செய்தி சேகரிப்பதற்காக சாந்தோம் பேராயர் இல்லத்திற்கு இன்று காலை சென்றனர். அப்போது, அங்கிருந்த இரு பாதிரியார்களும் அலுவலக ஊழியர்களும் அவர்களை தாக்கினர். மேலும், அவர்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்துக்கொண்டனர்[2]. இன்னொரு செய்தியின்படி, சின்னப்பாவே பிடித்துவைத்தர் என்றுள்ளது: “சென்னையில் சாந்தோமில் உள்ள சர்ச் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ஒருவரை சாந்தோம் சர்ச் பிஷப் சின்னப்பா உள்ளிட்ட பாதிரியார்கள் பிஷ்ப் ஹவுசில் அடைத்து வைத்துத் தாக்கினர்[3].

சாலை மறியல் அடுத்து பத்திரிக்கையாளர்கள் விடுதலை: இதையடுத்து, தகவல் கேள்விபட்டு அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டனர். பின்னர் சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் தலைமையிலான போலீஸார் மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலையீட்டின் பேரில் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு அடைத்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தாக்கப் பட்டவர்கள், தாக்கிய பாதிரிகளை போலீஸரிடம் அடையாளங்காட்டினர்: இதையடுத்து மறியலை கைவிட்ட பத்திரிக்கையாளர்கள், தாக்குதல் நடத்திய பாதிரியாரை போலீசாருக்கு அடையாளம் காட்டினர்.    போலீசார் பாதிரியாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.    இந்த சம்பவத்தினால் சாந்தோம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோ மீட்டருக்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சின்னப்பா மன்னிப்பு கேட்டார்: வேறு வழியில்லாமல், சின்னப்பா வெளியே வந்து, நிலைமையை பார்த்தார். மேலும், இச்சம்பவத்திற்காக பேராயர் சின்னப்பா பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார்.


[1] தினமலர், டிவிகுழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல், பதிவு செய்த நாள்: செப்டம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=85561

[2] http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=73219434-2107-4564-a1ad-76a3fd10d362&CATEGORYNAME=TCHN

[3] http://www.thenaali.com/newsinner.php?id=1374