Posts Tagged ‘மதுரை’

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற வழக்காடுகளும், ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகளும், அரசியலாகப் படும் வழக்குகள்: நீதிபதி எப்படி வழக்குகள் பற்றிய கருத்தை பொது இடத்தில் தெரிவிக்க முடியும்? (1)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற வழக்காடுகளும், ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகளும், அரசியலாகப் படும் வழக்குகள்: நீதிபதி எப்படி வழக்குகள் பற்றிய கருத்தை பொது இடத்தில் தெரிவிக்க முடியும்? (1)

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நீதிமன்றங்களில் தீர்மானிக்கும் விவகாரங்கள் அல்ல: மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப் படுகின்ற, விசாரணைக்கு ஏற்று நடத்தப் படுகின்ற, அவற்றைப் பற்றி செய்திகளாக வரும் விவரங்கள் முதலியவற்றை வைத்துப் பார்த்து, படித்து, உன்னிப்பாக கவனிக்கும் போது, அகழாய்வு மற்றும் கல்வெட்டுகள் பற்றிய வழக்குகள் எல்லாம், தமிழ்-சமஸ்கிருதம், திராவிடன்-ஆரியன், தெற்கு-வடக்கு, தமிழ்-தமிழ் அல்லாதது என்று பிரிவினைவாதங்கள் அடிப்படையில் உள்ளதை கவனிக்க நேரிடுகிறது. ஏற்கெனவே கீழடி வழக்குகளில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட தன்னுடை வேலை விவகாரம், இடமாற்றம், அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தது, தாமதம் செய்தது, போன்ற விவகாரங்களில் அரசியலை நுழைத்து, மற்றவர்கள் விளம்பரம் பெற்றது தெரிகிறது. ஏனெனில், ஒரு மத்திய அரசு அதிகாரி / ஊழியர் என்ற நிலையில், அவர் இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு கட்டுப் பட்டவராக இருந்தார் / இருக்கிறார். இப்பொழுது, அவர் விவகாரம் அமைதியாகி விட்டது. வெங்கடேசன், கம்யூனிஸ்ட் எம்.பி அவரை வைத்து, நன்றாகவே அரசியல் செய்திருப்பது தெரிந்தது. இப்பொழுது, தேவையே இல்லாமல், அடிப்படை விவரங்களைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், கல்வெட்டுகள் பற்றி வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு நடப்பது, வேடிக்கையாக உள்ளது.

ஜூலை 21 மற்றும் 22, 2018 (சனி, ஞாயிறு) திருவண்ணாமலையில் நடந்த கருத்தரங்கு:  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், தொல்லியல் கழகமும் இணைந்து நேற்று திருவண்ணாமலையில் கருத்தரங்கு மற்றும் ‘ஆவணம்-29’ இதழ் வெளியிட்டு விழாவை நடத்தின. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற முன்னாள் செயலர் த.பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது: “தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோருக்கும் நமது மாநிலத்தின் பெருமைகள் தெரியாது. தமிழ் மிகவும் பழமையான மொழி என்று கூறும்போது முதலில் யாரும் நம்பவில்லை. ஈரோடு மாவட்டம், கொடுமணல் பகுதியில் கிடைத்த கல்வெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள், எந்த காலத்தை சேர்ந்தது என்று அமெரிக்காவிற்கு ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்டது”. பீடா அனேலிடிகல் சோதனையைக் குறிப்பிடுகின்றார் என்றூ தெரிகிறது, ஆனால், மற்ற மாதிரிகளின் தேதிகள் என்னவாயிற்று என்று கேட்காதது வியப்பாக இருக்கிறது.

நீதிபதி கிருபாகரன்கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன (10-10-2020)[1]: நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் தொடர்ந்து பேசியதாவது: “அந்த ஆய்வில் இந்த எழுத்துகள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சுமார் 350 முதல் 375 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என்று கண்டறியப்பட்டது[2]. அதன்பிறகு தான் தமிழ் மிகவும் தொன்மையான மொழி, செம்மொழி என்று கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பழமையான விஷயங்கள் புதைந்துகிடக்கின்றன. மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன[3]. அதில் தமிழர்களின் பண்பாடுகள் மறைந்துள்ளது[4]. மாவட்டத்தில் பழமையான கோவில்கள், கல்வெட்டுகள், சிலைகள் உள்ளன. அதனை பார்த்து அதன் வரலாற்றை தங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். சிலர் நமது மாநிலத்தை விட்டு,விட்டு வெளிமாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் சென்று பழமையான வரலாற்று சின்னங்களை பார்வையிட்டு வருகின்றனர். தஞ்சை பெரிய கோவில் போன்று பல்வேறு வரலாற்று சின்னங்கள் ஏராளமானவை உள்ளன. இவற்றினால் முந்தைய காலத்தில் கட்டிட கலை வியக்கவைக்கும் வகையில் உள்ளது”. இங்கு, இவர், “மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன. அதில் தமிழர்களின் பண்பாடுகள் மறைந்துள்ளது,” என்று குறிப்பிடுவது, இவர் ஏற்கெனவே அத்தகைய எண்ணத்தை மனத்தில் உருவாக்கி வைத்து விட்டார் என்று தெரிகிறது. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி, இவ்வாறு கருத்தைத் தெரிவிக்கலாமா என்பது கேள்விக்குறியாகிறது.

அரசியல் ரீதியில் நடக்கும் அகழாய்வு பணிகள், ஆராய்ச்சிகள், ஆதாரங்கள் நிலைமாறும் நிலைகள்: இவ்வாறு அரசியல் செய்து வரும் நிலையில், கொரோனா காரணத்தால் ஊரடங்கு அமூலில் இருக்கும் போது, காமராஜ், ஆனந்தராஜ் என்று சிலர், மதுரை நீதிமன்றத்தில், வழக்குகள் தொடுப்பது[5], அவற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது, நடத்துவது, அவற்றைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் போடுவது வாடிக்கையாகி விட்டது ஏதோ இவர்கள் சொல்லித் தான், அகழாய்வு மற்றும் வினினிஆன ரீதியில் ஆராய்ச்சி எல்லாம் நடக்கின்றன என்பது போன்ற தோற்றத்தையும் உருவாக்கி வருகின்றனர். உண்மையில், அரசியல்வாதிகள் தான் அங்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் சிலர் பொழுது போக்கவும் வந்து செல்கிறார்கள். இதனால், அங்கிருக்கும் அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் என்று எல்லாமே நிலைமாறிப் போகின்றன. வருபவர்கள், தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துச் செல்கின்றனர். அமைச்சர் முதல் எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் வருபவர்களும், ஏதோ நினைவுப் பொருளாக கொடுக்கப் படுகின்றன, அவர்களும் எடுத்துச் செல்கின்றன. பலமுறை மழை பெய்திருக்கிறது. இதனால், அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் எல்லாம் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

அக்டோபர் 10, 2020 – நீதிபதி கிருபாகரன் கீழடிக்கு வந்து பார்த்தார்[6]: அக்டோபர் 2020ல் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி கிருபாகரனே, கீழடிக்கு வந்து பார்த்தார், மற்றும் அங்குள்ள அகழாய்வு பணிகளை பார்வையிட்டார், களபணியாளரளுடன் உரையாடினார் என்று செய்திகள் உள்ளன. சிவகங்கையின் கலெக்டர் ஜே.ஜெயகாந்தன் உடனிருந்து, ஏழாம்கட்ட பணிகள் நடந்து வருவதைப் பற்றி விளக்கினார்[7]. அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் காண்பித்து, அங்கு கண்டுபிடித்த பொருட்கள் குறித்து நீதிபதி கிருபாகரனுக்கு விளக்கம் அளித்தார். இதைதொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய ஊர்களுக்கும் சென்று அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டதுடன், அங்கு கிடைத்த பொருட்களையும் பார்த்து, அதுகுறித்து கேட்டறிந்தார்[8]. ஒவ்வொரு அகழாய்வு எந்த மாதத்தில் தொடங்கி, எந்த மாதத்தில் நிறைவு பெறும், தொடர்ச்சியாக அகழாய்வு நடத்தாதது ஏன், அதற்கான அனுமதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார்[9]. அப்படி என்றால், நிச்சயமாக, நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய விசாரணையை அங்கு செய்துள்ளார் என்றாகியது. தேவை என்றால், அந்த அதிகாரிகளை நேரிடையாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணை செய்திருக்கலாம்.

10-10-2010 – நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் அங்கு வந்து பார்த்தார்: கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறைகிணறையும், பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணியையும் நீதிபதி கிருபாகரன் பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு காட்சிப் படுத்தப் பட்டுள்ள அகழாய்வுப் பொருட்களைக் கண்டு, நீதிபதி மிக்க ஆர்வத்துடன்-ஆசையுடன் பார்த்து மகிழ்ந்தார். மதியம் நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் அங்கு வந்து பார்த்தார். அதற்கு அடுத்து சற்று நேரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதனும் கீழடி, கொந்தகைக்கு வந்து அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டார். அவருக்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவரை கலெக்டர் ஜெயகாந்தன் வரவேற்றார். குறிப்பிட்ட வழக்குகள் அம்பந்தப் பட்ட இடங்களுக்கு நீதிபதிகள் சென்று பார்ப்பது என்பது சாதாரண விசயமாகத் தெரியவில்லை. ஆனானப் பட்ட ராமஜென்பபூமி வழக்குகளில் கூட எந்த நீதிபதியும் சென்று பார்த்தார், விசாரித்தார், அங்கிருப்பவர்களிடம் பேசினார் என்றெல்லாம் செய்திகள் வரவில்லை. ஆனால், தமிழக அகழாய்வு விவகாரங்களில் அத்தகைய செய்திகள் வந்துள்ளன. இவையெல்லாம் ஆச்சரியமாகத் தான் உள்ளன.  மேலும் ஜூலை 21, 2018ல் பேசியுள்ளது கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] தினத்தந்தி, கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றனசென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு, பதிவு: ஜூலை 22,  2018 03:15 AM.

[2] https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/22025753/Keezhadi-excavator-details-are-hiddenMadras-High-Court.vpf

[3] தினகரன், கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்களை மறைக்க முற்படுகிறார்கள்: நீதிபதி கிருபாகரன் பேச்சு, 2018-07-21@ 13:09:57.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421871

[5] Madras High Court – S.Kamaraj @ Muthalankurichi … vs Union Of India on 21 December, 2020;                           BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT- DATED : 21.12.2020; CORAM;  THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN; AND THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI; W.P.(MD)No.21577 of 2019; S.Kamaraj @ Muthalankurichi Kamarj  … Petitioner  Vs. 1.Union of India and others.

The Writ Petition has been filed to direct the respondent No.3  to grant permission to the Respondent No.5 for carrying out further Archaeological Excavations and Scientific Research in Athichanallur, Keeladi, and Kodumanal Archaeological Sites and to direct the  respondent No.3 to grant permission to the Respondent No.5 for carrying out the Archaeological Excavations and Scientific Research in the Archaeological Sites along with the Tamiraparani River, and Sivakalai and Konthagai in accordance with law.

[6] The Hindu, High Court Judges visit Keeladi, STAFF REPORTERMADURAI, OCTOBER 10, 2020

21:19 IST; UPDATED: OCTOBER 11, 2020 04:39 IST.

[7] Madras High Court Judge Justice N. Kirubakaran on Saturday visited the archaeological site in Keeladi, near Madurai.

In his personal visit, the judge interacted with the officials of the Tamil Nadu State Department of Archaeology and Sivaganga Collector J. Jayakanthan on the progress made in the sixth phase of the archaeological excavations.

The judge was enamoured by the findings that were on display at the site. Spending close to an hour at the site, the judge also enquired the officials of the State Archaeological Department on the progress made on the excavations in other sites.

A Division Bench headed by Justice N. Kirubakaran is hearing a batch of public interest litigation petitions with regard to archaeological excavations being carried out across Tamil Nadu. The judge has sought a response on the excavations.

In the afternoon, Justice S. Vaidyanathan of the Madras High Court, in a personal visit, also interacted with the officials at the site.

https://www.thehindu.com/news/cities/Madurai/high-court-judges-visit-keeladi/article32822715.ece

[8] தினத்தந்தி, கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் பார்வையிட்டனர், பதிவு: அக்டோபர் 11,  2020 03:45 AM மாற்றம்: அக்டோபர் 11,  2020 07:47 AM.

[9] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/11074713/Below-is-the-location-of-the-excavation-Judges-of.vpf

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வக்கில்கள் ஆர்பாட்டம், கலாட்டா, போராட்டம் முதலியவற்றை ஏன் செய்யவேண்டும்?

செப்ரெம்பர் 23, 2015

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வக்கில்கள் ஆர்பாட்டம், கலாட்டா, போராட்டம் முதலியவற்றை ஏன் செய்யவேண்டும்?

Law-graduates bar council enrollment

Law-graduates bar council enrollment

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது (22-09-2015): தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தால், 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று உத்தர விடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் 22-09-2015 அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது[1]: 2010-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால், வழக்கறிஞருக்கான பதிவு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன[2]. 2010ல் முதலில் நுழைவு தேர்வு அறிமுகப்பப்படுத்தியபோதே சிலர் எதிர்த்தனர், ஆனல், அது கட்டாயமாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டுவ்முதல் இது வரை அகில இந்திய பார் கவுன்சில் 8 தகுதித் தேர்வுகளை நடத்தியுள்ளது. பதிவு செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞராக தொழில் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது[3].

Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday

Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday

20-03-2015 அன்று பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கிய வழக்கறிஞர்கள்[4] சஸ்பென்ட்: 20-3-2015 அன்று சில வழக்கறிஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கினார்கள். அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[5]. மேலும், நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் வி. மணிகண்டன் வதன் செட்டியார் [Manikandan Vathan Chettiar], ஆர். மதன்குமார் [R Madhan Kumar ] ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன[6]. அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[7]. சென்ற வருடம் பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்துபோது, நீதிபதிகள் பேசியது, இப்பொழுது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest

Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest

வழக்கறிஞர்கள், தொழில் தர்மத்தை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது,” என, கூறினார்[8]: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று, பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பேசியதாவது: வழக்கறிஞர்கள் பணி, நீதிபதிகள் பணியை விட முக்கியமானது. சமூகத்தில், இவர்களது பணி மிகவும் பொறுப்பு வாய்ந்தது.வழக்காடிகளுடன், வழக்கறிஞர்களின் உறவு பெரும் நம்பிக்கைக்கு உரியது. எனவே, வழக்கறிஞர்கள், நேர்மையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.சமூகத்திலும், நீதித் துறையிலும், முக்கிய பங்காற்றும் வழக்கறிஞர்கள் கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும். சமூக நீதிக்காகப் பணியாற்றும் வழக்கறிஞர்கள் பணி, சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்நிலையில், தொழில் தர்மத்தை மீறி, வழக்கறிஞர்கள் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது; அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நம்பிக்கை குறைவான எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது.சமூக சேவையின் ஒரு பகுதியாக, வழக்கறிஞர் பணியை கருத வேண்டும். வழக்கறிஞர்களுக்கு, பார் கவுன்சில் வகுத்துள்ள விதிகளுக்கு தலை வணங்கி, பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings

Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings

சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை[9]:  விழாவில் வாழ்த்துரை வழங்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பேசியதாவது: நீதிபதி நாகப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றிய போது, சென்னை சட்டக் கல்லூரியில், பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றினேன். தற்போதுள்ள சட்டக் கல்வியுடன், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பார் கவுன்சில் உறுப்பினர்கள் முன்வர வேண்டும். வழக்காடிகளை எப்படி அணுகுவது, நீதிமன்றத்தில் எப்படி பேசுவது போன்ற, அடிப்படை பயிற்சிகளை, சட்டம் பயிலும்போதே, மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். இப்பணியை, சமூக சேவையாகக் கருதி, பார் கவுன்சிலின் மூத்த உறுப்பினர்கள், திறமையான இளம் வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர் தொழில் என்பது, பணம் சம்பாதிக்கும் வியாபாரம் அல்ல. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், பணம் தேவை என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை.

In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen

In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen

வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்: நீதிபதி பானுமதி: இளம் வழக்கறிஞர்களுக்காக, பார் கவுன்சில், தொடர் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இதற்காக, சட்ட கமிஷன் நிதி அளிக்கிறது. இதைப் பயன்படுத்தி, இளம் வழக்கறிஞர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், கருத்தரங்குகளை பார் கவுன்சில் நடத்த வேண்டும். சென்னை பார் கவுன்சில் மூலம், வழக்கறிஞர்களுக்கு அளிக்கப்படும், குடும்ப நல நிதி, விபத்து காப்பீடு போன்றவை, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.

Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015

Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015

நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்: கடந்த, 1928ல் துவங்கப்பட்ட சென்னை பார் கவுன்சில், பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது. நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள். மென்பொருள், சிறப்பாக இருந்தால் தான், நீதிமன்றம் என்ற கணினியும் நன்றாகச் செயல்படும்.சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அவர்களால், பெருந்தொகையை கட்டணமாகக் கொடுத்து, வழக்காட முடியாது. எனவே, சாதாரண மக்களை மனதில் கொண்டு, வழக்கறிஞர்கள் பணியாற்ற வேண்டும். நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.

A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter

A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter

நீதிபதிகளுக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷம் [செப்டம்பர்.17, 2015][10]: வக்கீல்கள் இப்பொழுதெல்லாம் போலீஸாருடன் சண்டை போடுவது, பொது இடங்களில் கலாட்டா செய்வது, போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கருப்புக் கோட்டு போடாலே, ஏதோ அவர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்து விடுகின்றன, யாரும் அவர்களை ஒன்றும் கேட்க முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு அந்து விடுகிறது. செப்டம்பர்.13, 2015 அன்று சென்னை உயர் நீதிமன்ற அரங்குக்குள், வழக்கறிஞர்களை அனுமதிக்காததால், நீதித்துறை மற்றும் போலீசாருக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். இதனால், உயர் நீதிமன்றத்தில், பரபரப்பு ஏற்பட்டது. கட்டாய, ‘ஹெல்மெட்’ உத்தரவைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள், ஊர்வலம் சென்று, நீதிபதிகளுக்கு எதிராக, கோஷம் எழுப்பினர். அதுமட்டுமல்லாது, கோர்ட்டு அறையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையின் பாதுகாப்பு பணியை மத்திய போலீசாரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது[11].  மதுரையிலும் வக்கில்கள் கலாட்டா செய்து வருகிறார்கள்[12]. வக்கீல்கள் ஏற்கெனவே கட்சி, ஜாதி என்ற முறைகளில் பிரிந்து கிடக்கிறார்கள். இதனால், பரபட்சமற்ற முறையில் வழக்காடுவது, வழக்குகளை நடத்துவது, தம்மை வந்தவர்களுக்கு உதவுவது போன்ற குணங்கள் எல்லாம் மறைந்து விட்டன. அதாவது, சட்டத்தைக் காக்க வேண்டிய வக்கில்களே, இவ்வாறு சட்டங்களை மீறி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

23-09-2015

[1]  தினமணி, 2,495 வழக்குரைஞர்களாக செயல்படத் தடை: தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை, By சென்னை, First Published : 23 September 2015 02:35 AM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/2495-law-graduates-lose-permission-to-practise-in-Tamil-Nadu/articleshow/49059294.cms

[3]  தி.இந்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் 2,495 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தற்காலிக தடை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்,Published: September 23, 2015 08:24 ISTUpdated: September 23, 2015 08:25 IST.

[4] The tussle between between two groups of Madras High Court lawyers over the recognition accorded to the Tamil Nadu Advocates Association (TNAA) reached the doorsteps of the Bar Council. Advocates affiliated to the Madras High Court Association (MHAA) barged into the council building protesting the grant of recognition and vandalised a portion of it on Friday (20-03-2015).

http://www.newindianexpress.com/cities/chennai/Bar-Council-Bldg-Vandalised-During-Protest-by-Lawyers/2015/03/21/article2723454.ece

[5] http://www.dinamani.com/tamilnadu/2015/09/23/2495-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/article3042677.ece

[6] http://tamil.chennaionline.com/news/chennai/newsitem.aspx?NEWSID=ce2a7e8f-571c-44af-8374-ca8fd40f82a9&CATEGORYNAME=TCHN

[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2495-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article7680134.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1110457

[9]  தினமலர், வழக்கறிஞர்கள் தொழில் தர்மத்தை மீறுவதை ஏற்க முடியாது! சுப்ரீம் கோர்ட் நீதிபதி காட்டம், நவம்பர்.9, 2014,02.00.

[10]  தினமலர், நீதிபதிகள், போலீசாருக்கு எதிராக கோஷம் : உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் முற்றுகை, செப்டம்பர்.17, 2015.00.49.

[11] http://www.dailythanthi.com/News/State/2015/09/15010329/In-the-court-room-the-lawyers-movement.vpf

[12] http://www.deccanchronicle.com/150917/nation-current-affairs/article/lawyers-create-ruckus-madras-high-court

சான்டியாகோ மார்டின் கைது: மதுரை கோவில் நிலத்தை அழகிரி மனைவிக்கு விற்றதாக குற்றச்சாட்டு!

ஓகஸ்ட் 13, 2011

சான்டியாகோ மார்டின் கைது: மதுரை கோவில் நிலத்தை அழகிரி மனைவிக்கு விற்றதாக குற்றச்சாட்டு!

லாட்டரி மன்னன் மார்டின்: திருவல்லிக்கேணியில் லாட்டரி டிக்கெட் விற்றுவந்த சான்டியாகோ மார்டின் இன்றும் லாட்டரி தொழிலில் படு பிசிதான்[1]. வடகிழக்கு மாநிலங்களில் மார்டின் சென்றால் அமோக வரவேற்பு தான். ஒரு கவர்னருக்குக் கூட அந்த அளவிற்கு மரியாதை, மதிப்பு இருக்காது என்று மக்கள் சொல்கிறார்கள். “எஸ்.எஸ்” பெயரில் டிவி செனல், ஆன்-லைன் லாட்டரி முதலியவற்றில் கோடிகளை அள்ளி அவற்றை, நிலத்தில் போட்டு, செல்வத்தை வளர்க்கும் வித்தைக்காரர். இப்பொழுது மதுரை கோவில் நிலத்தை அபகரித்து, அழகரியின் மனைவிக்கு விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன[2]. முன்பே சென்னை உயர்நீதி மன்றம் ஆணையிட்டபோதிருந்தும், கருணாநிதி அரசாங்கம், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டது[3]. மார்டின் மீது 50ற்கும் மேலான குற்றச்சாட்டுகள் உள்ளன. ரூ. 20 கோடி நிலத்தை காந்தி அழகிரிக்கு ரூ.80 லட்சங்களுக்கு விற்றதாக தெரிகிறது[4]. இதனால், கோவில் நிலத்தை அபகரித்தக் குற்றத்திற்கு, இவரும் கைதாவாரா என்ற கேல்வி எழுந்துள்ளது[5]. ஸ்டாலின் சிறையில் இருக்கும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சிலரை நேரில் சென்று பார்த்துள்ளதையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[6].

 

மார்டின், அழகிரி, காந்தி தொடர்பு:  மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல அமைப்பாளருமான முக அழகிரிக்கு பினாமி பெயர்களில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெகல்கா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  புலனாய்வு இதழான தெகல்கா மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. மதுரையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் அழகிரி தனது நெருங்கிய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ளார். அவரது மனைவி காந்திக்கும் நில மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது. நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெகல்கா அழகிரியின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

டெஹெல்கா அழகிரி சொத்துக்களைப் பற்றி கூறியிருப்பது[7]: அழகிரி கடந்த 2009-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார். அப்போது தன்னிடம் ரூ. 133.65 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பினாமி பெயரில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருக்கிறது. நிலம், சினிமா தயாரிப்பு மற்றும் வினியோகம், ரியல் எஸ்டேட், சுகாதாரம், சுரங்கம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர் தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளார்.

அழகிரி குடும்பத்தினரின் சொத்து: அழகிரியின் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள்கள் கயல்விழி, அஞ்சுக செல்வி, மருமகள் அனுஷ்கா, மருமகன்கள் ஒய்.கே. வெங்கடேஷ், விவேக் ரத்தினவேல் ஆகியோர் பெயர்களில் ஏராளமான சொத்துக்களும், வியாபாரங்களும் உள்ளன. இது தவிர அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மொரீஷியஸ், வெர்ஜின் தீவுகள், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொழில் நடத்தி வருகின்றனர் என்று உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அழகிரி வெளியிட்ட சொத்து விவரத்தின்படி அவரிடம் 18 ஏக்கர், 63 சென்ட் விவசாய நிலம்,
  • 1 ஏக்கர், 82 சென்ட், 23 ஆயிரத்து 278 சதுர அடி நிலம்,
  • 20 சென்ட் பிளாட், சென்னை, மதுரையில் வீடுகள்,
  • ரூ. 4 கோடி வைப்பு நிதி மற்றும்
  • வங்கி சேமிப்பு கணக்கில் ரூ. 1.39 கோடி,
  • 85 கிராம் தங்கம்,
  • ரூ. 1. 40 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி,
  • ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர் எஸ்யூவி, தயா டயாக்னோஸ்டிக்ஸில் ரூ. 96 லட்சம் முதலீடு உள்ளது.

சிவரக்கோட்டையில் உள்ள தயா பொறியியல் கல்லூரியை நடத்தி வரும் முக அழகிரி அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்து விவரத்தை அவர் வெளியிடவில்லை.  விதிமுறைகளை மீறி 4 ஏக்கர் விவசாய நிலத்தில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் தனது சொத்துக்களின் மதி்ப்பை குறைத்தே வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.  உதாரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆயிரத்து 100 சதுர அடி வீட்டின் மதிப்பு ரூ. 22 லட்சம் என்று வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு ரூ. 2. 5 கோடி.  அழகிரியின் மனைவி காந்திக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ளன. அவர் தான் தயா சைபர் பார்க்கின் தலைவர். மேலும், முக அழகிரி கல்வி அறக்கட்டளை உறுப்பினராகவும் இருக்கிறார்.

அழகிரி வெளியிட்ட காந்தியின் சொத்துக்கள் விவரம். மனைவியின் சொத்து விவரங்கள்:

  • 48. 42 ஏக்கர் விவசாய நிலம்,
  • கொடைக்கானலில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள 82.3 சென்ட் பிளாட்,
  • சென்னையில் ரூ. 4.30 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 376 சதுர அடி பிளாட்,
  • சேமியர்ஸ் ரோட்டில் ரூ. 4. 39 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 488 சதுர அடி பிளாட்,
  • மதுரை பாப்பாக்குடியில் 3 ஆயித்து 60 சதுர அடி பிளாட்,
  • மதுரையில் 4 ஆயிரத்து 378 சதுர அடியில் தயா கல்யாண மண்டபம்,
  • கொட்டிவாக்கத்தில் ஆயிரத்து 845 சதுர அடி வியாபார நிலம்,
  • மாதவரம் மேடாஸ் கிரீன் பார்க்கில் ஆயிரத்து 320 சதுர அடி வீடு.

அழகிரி தனது மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்களை வெளியிட்டபோது தயா சைபர் பார்க்கில் காந்தி செய்திருக்கும் முதலீடு குறித்து தெரிவிக்க மறந்துவிட்டார்.

மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை வாங்கிய திருமதி அழகிரி: கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி நடந்த நிறுவனக் கூட்டத்தில் தயா சைபர் பார்க் பங்கு மூலதனம் ரூ. 10 லட்சத்தில் ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் எம்டியாக இருக்கும் காந்தி தனக்கு வெறும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பங்குகள் தான் இருப்பதாக தெரிவித்தார். அவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை பற்றி தெரிவிக்க மறந்துவிட்டார். அந்த நிலம் தான் தற்போது அவருக்கு தலைவலியாக மாறியுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாக காந்தி மற்றும் லாட்டரி மாபியா மன்னன் சான்டியாகோ மார்டின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிடைத்துள்ள ஆவணங்களின்படி மார்டின் கோவில் நிலத்தை காந்திக்கு ரூ. 85 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 24 கோடி.

கருப்புப் பணத்தை மாற்ற ரியல் எஸ்டேட் முதலியவையா?அழகிரி தனது மகன் தயாநிதி பெயரில் இருக்கும் சில சொத்துக்கள் பற்றியும் தெரிவிக்க மறந்துவிட்டார். தயாநிதி அழகிரி தான் தயா பொறியியல் கல்லூரி, தயா பல்மருத்துவக் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர், ஜேஏகே கம்யூனிகேஷன்ஸ், கிளவுட் நைன் மூவிஸ் எம்டி, ராயல் கேபிள் விஷன் மற்றும் மகேஷ் எலாஸ்டோமர்ஸின் தலைவர். ஆனால் இத்தனை சொத்துக்களையும் தெரிவிக்க மறந்துவிட்டார் அழகிரி. சென்னை, திருவள்ளூரில் செயல்பட்டு வரும் கேபிள் ஆபரேட்டரான ஜேஏகே கம்யூனிகேஷன்ஸில் தாயநிதிக்கு தற்போது 50 சதவீத பங்குகள் உள்ளது.  கருணாநிதி குடும்பத்தினர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றவே சினிமாத்துறையில் நுழைந்ததாக சினிமாத் துறையில் உள்ள சிலர் தெரிவித்தனர். அழகிரியின் பணம் மற்றும் பதவி மோகத்தால் தான் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக ஸ்டாலினை தோற்கடிக்கவே அழகிரி இத்தனை விரிந்த சாம்பிராஜ்ஜியத்தை நிறுவியுள்ளார். கருணாநிதிக்கு அடுத்து திமுகவின் தலைவராக அழகிரி விரும்புகிறார். அதற்கு பண பலமும், ஆள் பலமும் சேர்த்து வைத்துள்ளார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு தெகல்கா செய்தி வெளியிட்டுள்ளது.


[3] Tamil Nadu lottery kingpin — Santiago Martin and his brother-in-law Benjamin were on Saturday (August 13) arrested by the Salem city police on charges of land grabbing.  Earlier, the Madras High Court had ordered action against Martin in the case but the previous DMK government sat on the order. Martin is known to be close to Karunanidhi. Santiago Martin had allegedly claimed ownership of the Madurai temple land. He also had allegedly transferred the ownership of the temple land worth Rs 20 crore for just Rs 85 lakhs to Union Minister MK Alagiri’s wife. Land worth over rs 20 crore was sold to Kanthi Alagiri for Rs 85 lakh in 2010. The deal took place after Alagiri became union minister. Martin has over 50 criminal cases against him and several cases of land grabbing against him.

[6]  DMK Treasurer MK Stlain visited his party functionaries, including Union Minister M K Alagiri’s closest aide ‘Attack’ Pandi, who has been detained under the Goondas Act, in the Central prison here on Tuesday (09-08-2011). Stalin was accompanied by ex-ministers KN Nehru, N Selvaraj and MRK Panneer Selvam. Sources said that Stalin spent more time with ‘Attack’ Pandi than other functionaries.http://ibnlive.in.com/news/stalin-meets-alagiris-man-in-prison/174497-60-118.html