Posts Tagged ‘சமஸ்கிருதம்’

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

அகழாய்வு பற்றி நிறைய வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்திய தொல்துறை கட்டிடங்கள், சிற்பங்கள், கோவில்கள் போன்றவை, தூரமான இடங்களில் தனியாக, பாதுகாப்பு இன்றி இருப்பது தெரிந்த விசயமே.
இவர் சென்று பார்க்கும் போது கூட அந்நிலையை அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட அதிகாரிகள், ஆய்வாளர்கள் தான், எப்பொழுதும் குழிகள் அருகிலேயே இருக்கின்றனர்.

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நடக்கின்ற வழக்குகள்தீர்ப்புகள், தொடரும் முறைகள்: தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பற்றி எழுத்தாளர் எஸ்.காமராஜ்[1], மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்[2]. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்தது[3]. இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் முன்பு 10-08-2021 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் அவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான திராவிடன் கிளை அலுவலகம் சென்னையில் அமைக்கப்பட்டது: மத்திய அரசுத்தரப்பில், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டது[4]. 4 தமிழ் கல்வெட்டியலாளர்களும் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது[5]. “சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில் 1 சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகளின், இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்த கேள்விக்கு, மொத்தமாக –

  • 86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டிருப்பதாகவும்,
  • அவற்றில் 27,000 தமிழ் கல்வெட்டுக்கள்,
  • 25,756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை
  • 12,000 கல்வெட்டுக்கள் பெர்ஷியன் மற்றும் அராபிக் மொழிக்கானவை,
  • 9,400 கல்வெட்டுக்கள் கன்னட மொழிக்கானவை,
  • 7300 கல்வெட்டுக்கள் தெலுங்கு மொழிக்கானவை,
  • 225 கல்வெட்டுக்கள் மலையாள மொழிக்கானவை என பதிலளிக்கப்பட்டது.

இதிலிருந்தே, தமிழில் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்பது பொய்யாகிறது. 27,000 தமிழ் எனும் போது, 57,000 தமிழ் அல்லாதது என்றாகிறது. எனவே, இத்தகைய வாதம், வழக்கு, செய்திகள் எல்லாமே பொய் என்றாகிறது.

அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை?: அதற்கு நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. அப்படியாயினும் அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்[6]. தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[7]. அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[8]. அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? என கேள்வி எழுப்பினர்[9]. நீதிபதிகள் இவ்வாறு கேட்டனரா அல்லது செய்திகள் அவ்வாறு வந்துள்ளனவா என்று தெரியவில்லை. இருப்பினும், இத்தகைய கேள்விகள் கேட்டுள்ளதும், விசித்திரமாக உள்ளது. ஏனெனில், நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்கும் முன்பே, அவற்றைப் பற்றி நன்றாகப் படித்து கொண்டு வந்து, வாதாடும், வக்கீல்களை குறுக்கு விசாரணை செய்யும் அளவுக்கு இருபார்கள், இருக்கிறாற்கள். மாறாக, இவ்வாறு, கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது, திகைப்பாக இருக்கிறது.

மைசூருவில் வைத்தது ஏன்?: அதற்கு நீதிபதிகள், “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது. நாடு முழுவதும் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. அந்த கல்வெட்டுகளை மைசூருவில் ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுக்களை வைக்க நடவடிக்கை எடுக்கலாமே? 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கு என கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? அதை திராவிட மொழி கல்வெட்டுகள் என கூறுவது ஏன்?,” எனவும் கேள்வி எழுப்பினர்[10]. அதற்கு மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “இது அரசின் கொள்கை முடிவு’’ என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இருப்பினும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும்” என்றனர்[11].

விளக்கம் அளிக்க உத்தரவுவிரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்: மேலும், தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எதற்கானவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்[12]. இதுகுறித்து தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை இன்றை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்[13].  “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது,” என்று நீதிபதிகள் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே அரசின் ஆவணங்கள் எல்லாம் வெளிப்படையாக உள்ளன. அவற்றையெல்லாம் கனம் நீதிபதிகள் படித்திருப்பார்கள். அந்நிலையில், இத்தகைய கேள்விகள் எழுப்பப் படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அரசியல் ஆதரவு நியமன நீதிபதிகள் அவ்வாறு சித்தாந்த ரீதியில் சார்புடையவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] WP(MD) 1174/2021; KAMARAJ MUTHALAKURICHI KAMARAJ.S VS THE UNION OF INDIA AND 4 OTHERS; M/S.ALAGUMANI.RRAMESHKUMAR. S 8486484817; M/S. VICTORIA GOWRI.L. ASGIMEMO OF APP FILED FOR R1 andAMP; R2 COUNTER AFFIDAVIT-USR-9534/21 FOR R 1 2 4 and AMP; 5 AGP TAKES NOTICE FOR R3, in the COURT NO. 1 before The Honourable Mr Justice N. KIRUBAKARAN and The Honourable Mr Justice M.DURAISWAMY

[2] தினத்தந்தி, 60 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு என கூறுவது ஏன்? மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி, பதிவு: ஆகஸ்ட் 10,  2021 04:35 AM.

[3] https://www.dailythanthi.com/News/State/2021/08/10043535/Why-is-it-said-that-60000-Tamil-inscriptions-are-Dravidian.vpf

[4] புதியதலைமுறை, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? – நீதிபதிகள், தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 04:04 PM.

[5] https://www.puthiyathalaimurai.com/newsview/112414/What-is-the-need-to-appoint-an-inscription-scholor-for-Sanskrit-language-in-Tamil-Nadu—-Judges

[6] புதியதலைமுறை, அதிக கல்வெட்டுகள் உள்ள தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :10,Aug 2021 05:41 PM

[7] https://www.puthiyathalaimurai.com/newsview/112628/actor-Vijay-Antony-Next-is-Mazhai-Pidikatha-Manidhan-Directed-by-Vijay-Milton.html

[8] புதியதலைமுறை, தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழிக்கானவை என அடையாளப்படுத்துவது ஏன்? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 03:55 PM

[9] https://www.puthiyathalaimurai.com/newsview/112412/Why-identify-60-000-Tamil-inscriptions-as-Dravidian—-Judges

[10] பாலிமர்.செய்தி, தமிழ்க் கல்வெட்டுகளை ஏன் மைசூரில் வைத்திருக்க வேண்டும்? – நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி, August 09, 2021 06:02:59 PM.

[11] https://www.polimernews.com/dnews/152481

[12] தமிழ்.ஒன்.இந்தியா, அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் இல்லை?.மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி!, By Rayar A Updated: Wednesday, August 11, 2021, 7:30 [IST]

[13] https://tamil.oneindia.com/news/chennai/why-is-the-tamil-language-with-so-many-inscriptions-not-important-tn-hc-to-centre-429576.html

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற வழக்காடுகளும், ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகளும், அரசியலாகப் படும் வழக்குகள்: நீதிபதி எப்படி வழக்குகள் பற்றிய கருத்தை பொது இடத்தில் தெரிவிக்க முடியும்? (1)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற வழக்காடுகளும், ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகளும், அரசியலாகப் படும் வழக்குகள்: நீதிபதி எப்படி வழக்குகள் பற்றிய கருத்தை பொது இடத்தில் தெரிவிக்க முடியும்? (1)

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நீதிமன்றங்களில் தீர்மானிக்கும் விவகாரங்கள் அல்ல: மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப் படுகின்ற, விசாரணைக்கு ஏற்று நடத்தப் படுகின்ற, அவற்றைப் பற்றி செய்திகளாக வரும் விவரங்கள் முதலியவற்றை வைத்துப் பார்த்து, படித்து, உன்னிப்பாக கவனிக்கும் போது, அகழாய்வு மற்றும் கல்வெட்டுகள் பற்றிய வழக்குகள் எல்லாம், தமிழ்-சமஸ்கிருதம், திராவிடன்-ஆரியன், தெற்கு-வடக்கு, தமிழ்-தமிழ் அல்லாதது என்று பிரிவினைவாதங்கள் அடிப்படையில் உள்ளதை கவனிக்க நேரிடுகிறது. ஏற்கெனவே கீழடி வழக்குகளில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட தன்னுடை வேலை விவகாரம், இடமாற்றம், அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தது, தாமதம் செய்தது, போன்ற விவகாரங்களில் அரசியலை நுழைத்து, மற்றவர்கள் விளம்பரம் பெற்றது தெரிகிறது. ஏனெனில், ஒரு மத்திய அரசு அதிகாரி / ஊழியர் என்ற நிலையில், அவர் இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு கட்டுப் பட்டவராக இருந்தார் / இருக்கிறார். இப்பொழுது, அவர் விவகாரம் அமைதியாகி விட்டது. வெங்கடேசன், கம்யூனிஸ்ட் எம்.பி அவரை வைத்து, நன்றாகவே அரசியல் செய்திருப்பது தெரிந்தது. இப்பொழுது, தேவையே இல்லாமல், அடிப்படை விவரங்களைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், கல்வெட்டுகள் பற்றி வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு நடப்பது, வேடிக்கையாக உள்ளது.

ஜூலை 21 மற்றும் 22, 2018 (சனி, ஞாயிறு) திருவண்ணாமலையில் நடந்த கருத்தரங்கு:  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், தொல்லியல் கழகமும் இணைந்து நேற்று திருவண்ணாமலையில் கருத்தரங்கு மற்றும் ‘ஆவணம்-29’ இதழ் வெளியிட்டு விழாவை நடத்தின. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன், அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற முன்னாள் செயலர் த.பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது: “தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோருக்கும் நமது மாநிலத்தின் பெருமைகள் தெரியாது. தமிழ் மிகவும் பழமையான மொழி என்று கூறும்போது முதலில் யாரும் நம்பவில்லை. ஈரோடு மாவட்டம், கொடுமணல் பகுதியில் கிடைத்த கல்வெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள், எந்த காலத்தை சேர்ந்தது என்று அமெரிக்காவிற்கு ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்டது”. பீடா அனேலிடிகல் சோதனையைக் குறிப்பிடுகின்றார் என்றூ தெரிகிறது, ஆனால், மற்ற மாதிரிகளின் தேதிகள் என்னவாயிற்று என்று கேட்காதது வியப்பாக இருக்கிறது.

நீதிபதி கிருபாகரன்கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன (10-10-2020)[1]: நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் தொடர்ந்து பேசியதாவது: “அந்த ஆய்வில் இந்த எழுத்துகள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சுமார் 350 முதல் 375 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என்று கண்டறியப்பட்டது[2]. அதன்பிறகு தான் தமிழ் மிகவும் தொன்மையான மொழி, செம்மொழி என்று கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பழமையான விஷயங்கள் புதைந்துகிடக்கின்றன. மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன[3]. அதில் தமிழர்களின் பண்பாடுகள் மறைந்துள்ளது[4]. மாவட்டத்தில் பழமையான கோவில்கள், கல்வெட்டுகள், சிலைகள் உள்ளன. அதனை பார்த்து அதன் வரலாற்றை தங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். சிலர் நமது மாநிலத்தை விட்டு,விட்டு வெளிமாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் சென்று பழமையான வரலாற்று சின்னங்களை பார்வையிட்டு வருகின்றனர். தஞ்சை பெரிய கோவில் போன்று பல்வேறு வரலாற்று சின்னங்கள் ஏராளமானவை உள்ளன. இவற்றினால் முந்தைய காலத்தில் கட்டிட கலை வியக்கவைக்கும் வகையில் உள்ளது”. இங்கு, இவர், “மதுரை கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன. அதில் தமிழர்களின் பண்பாடுகள் மறைந்துள்ளது,” என்று குறிப்பிடுவது, இவர் ஏற்கெனவே அத்தகைய எண்ணத்தை மனத்தில் உருவாக்கி வைத்து விட்டார் என்று தெரிகிறது. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி, இவ்வாறு கருத்தைத் தெரிவிக்கலாமா என்பது கேள்விக்குறியாகிறது.

அரசியல் ரீதியில் நடக்கும் அகழாய்வு பணிகள், ஆராய்ச்சிகள், ஆதாரங்கள் நிலைமாறும் நிலைகள்: இவ்வாறு அரசியல் செய்து வரும் நிலையில், கொரோனா காரணத்தால் ஊரடங்கு அமூலில் இருக்கும் போது, காமராஜ், ஆனந்தராஜ் என்று சிலர், மதுரை நீதிமன்றத்தில், வழக்குகள் தொடுப்பது[5], அவற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது, நடத்துவது, அவற்றைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் போடுவது வாடிக்கையாகி விட்டது ஏதோ இவர்கள் சொல்லித் தான், அகழாய்வு மற்றும் வினினிஆன ரீதியில் ஆராய்ச்சி எல்லாம் நடக்கின்றன என்பது போன்ற தோற்றத்தையும் உருவாக்கி வருகின்றனர். உண்மையில், அரசியல்வாதிகள் தான் அங்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் சிலர் பொழுது போக்கவும் வந்து செல்கிறார்கள். இதனால், அங்கிருக்கும் அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் என்று எல்லாமே நிலைமாறிப் போகின்றன. வருபவர்கள், தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துச் செல்கின்றனர். அமைச்சர் முதல் எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் வருபவர்களும், ஏதோ நினைவுப் பொருளாக கொடுக்கப் படுகின்றன, அவர்களும் எடுத்துச் செல்கின்றன. பலமுறை மழை பெய்திருக்கிறது. இதனால், அகழாய்வு குழிகள், மண்ணடுக்குகள், பொருட்கள் எல்லாம் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

அக்டோபர் 10, 2020 – நீதிபதி கிருபாகரன் கீழடிக்கு வந்து பார்த்தார்[6]: அக்டோபர் 2020ல் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி கிருபாகரனே, கீழடிக்கு வந்து பார்த்தார், மற்றும் அங்குள்ள அகழாய்வு பணிகளை பார்வையிட்டார், களபணியாளரளுடன் உரையாடினார் என்று செய்திகள் உள்ளன. சிவகங்கையின் கலெக்டர் ஜே.ஜெயகாந்தன் உடனிருந்து, ஏழாம்கட்ட பணிகள் நடந்து வருவதைப் பற்றி விளக்கினார்[7]. அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் காண்பித்து, அங்கு கண்டுபிடித்த பொருட்கள் குறித்து நீதிபதி கிருபாகரனுக்கு விளக்கம் அளித்தார். இதைதொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய ஊர்களுக்கும் சென்று அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டதுடன், அங்கு கிடைத்த பொருட்களையும் பார்த்து, அதுகுறித்து கேட்டறிந்தார்[8]. ஒவ்வொரு அகழாய்வு எந்த மாதத்தில் தொடங்கி, எந்த மாதத்தில் நிறைவு பெறும், தொடர்ச்சியாக அகழாய்வு நடத்தாதது ஏன், அதற்கான அனுமதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார்[9]. அப்படி என்றால், நிச்சயமாக, நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய விசாரணையை அங்கு செய்துள்ளார் என்றாகியது. தேவை என்றால், அந்த அதிகாரிகளை நேரிடையாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணை செய்திருக்கலாம்.

10-10-2010 – நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் அங்கு வந்து பார்த்தார்: கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறைகிணறையும், பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணியையும் நீதிபதி கிருபாகரன் பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு காட்சிப் படுத்தப் பட்டுள்ள அகழாய்வுப் பொருட்களைக் கண்டு, நீதிபதி மிக்க ஆர்வத்துடன்-ஆசையுடன் பார்த்து மகிழ்ந்தார். மதியம் நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் அங்கு வந்து பார்த்தார். அதற்கு அடுத்து சற்று நேரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதனும் கீழடி, கொந்தகைக்கு வந்து அகழாய்வு நடந்த இடங்களை பார்வையிட்டார். அவருக்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவரை கலெக்டர் ஜெயகாந்தன் வரவேற்றார். குறிப்பிட்ட வழக்குகள் அம்பந்தப் பட்ட இடங்களுக்கு நீதிபதிகள் சென்று பார்ப்பது என்பது சாதாரண விசயமாகத் தெரியவில்லை. ஆனானப் பட்ட ராமஜென்பபூமி வழக்குகளில் கூட எந்த நீதிபதியும் சென்று பார்த்தார், விசாரித்தார், அங்கிருப்பவர்களிடம் பேசினார் என்றெல்லாம் செய்திகள் வரவில்லை. ஆனால், தமிழக அகழாய்வு விவகாரங்களில் அத்தகைய செய்திகள் வந்துள்ளன. இவையெல்லாம் ஆச்சரியமாகத் தான் உள்ளன.  மேலும் ஜூலை 21, 2018ல் பேசியுள்ளது கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] தினத்தந்தி, கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றனசென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு, பதிவு: ஜூலை 22,  2018 03:15 AM.

[2] https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/22025753/Keezhadi-excavator-details-are-hiddenMadras-High-Court.vpf

[3] தினகரன், கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்களை மறைக்க முற்படுகிறார்கள்: நீதிபதி கிருபாகரன் பேச்சு, 2018-07-21@ 13:09:57.

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421871

[5] Madras High Court – S.Kamaraj @ Muthalankurichi … vs Union Of India on 21 December, 2020;                           BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT- DATED : 21.12.2020; CORAM;  THE HONOURABLE MR.JUSTICE N.KIRUBAKARAN; AND THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI; W.P.(MD)No.21577 of 2019; S.Kamaraj @ Muthalankurichi Kamarj  … Petitioner  Vs. 1.Union of India and others.

The Writ Petition has been filed to direct the respondent No.3  to grant permission to the Respondent No.5 for carrying out further Archaeological Excavations and Scientific Research in Athichanallur, Keeladi, and Kodumanal Archaeological Sites and to direct the  respondent No.3 to grant permission to the Respondent No.5 for carrying out the Archaeological Excavations and Scientific Research in the Archaeological Sites along with the Tamiraparani River, and Sivakalai and Konthagai in accordance with law.

[6] The Hindu, High Court Judges visit Keeladi, STAFF REPORTERMADURAI, OCTOBER 10, 2020

21:19 IST; UPDATED: OCTOBER 11, 2020 04:39 IST.

[7] Madras High Court Judge Justice N. Kirubakaran on Saturday visited the archaeological site in Keeladi, near Madurai.

In his personal visit, the judge interacted with the officials of the Tamil Nadu State Department of Archaeology and Sivaganga Collector J. Jayakanthan on the progress made in the sixth phase of the archaeological excavations.

The judge was enamoured by the findings that were on display at the site. Spending close to an hour at the site, the judge also enquired the officials of the State Archaeological Department on the progress made on the excavations in other sites.

A Division Bench headed by Justice N. Kirubakaran is hearing a batch of public interest litigation petitions with regard to archaeological excavations being carried out across Tamil Nadu. The judge has sought a response on the excavations.

In the afternoon, Justice S. Vaidyanathan of the Madras High Court, in a personal visit, also interacted with the officials at the site.

https://www.thehindu.com/news/cities/Madurai/high-court-judges-visit-keeladi/article32822715.ece

[8] தினத்தந்தி, கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் பார்வையிட்டனர், பதிவு: அக்டோபர் 11,  2020 03:45 AM மாற்றம்: அக்டோபர் 11,  2020 07:47 AM.

[9] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/11074713/Below-is-the-location-of-the-excavation-Judges-of.vpf