Archive for the ‘ஆயுள் தண்டனை கைதிகள்’ Category

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

ஏப்ரல் 24, 2013

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

பெங்களூரு வெடிகுண்டு விசாரணையில் சந்தேகிக்கும்படியாக கைது செய்யப் பட்டுள்ளவர்கள் எல்லோரும் முந்தைய “அல்-உம்மா” என்ற தீவிரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார்  எடுத்துக் காட்டுகின்றனர்[1]. ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் ஏன் மற்படியும் பழைய தொடர்புகளை வைத்திருக்கிறர்கள் என்றும் தெரியவில்லை. முன்பு போல திருநெல்வேலி-கோயம்புத்தூர்-பெங்களூரு இணைப்பும் தெரிகிறது[2]. இதனால், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலையெடுக்கின்றவா – வேறு உருவத்தில் செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் தலைதூக்கியுள்ளது[3]. தடை செய்யப்பட்ட சிமி, வஹதத்-இ-இஸ்லாமி ஹிந்த் (Wahadat-e-Islami Hind) என்ற பெயரில் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது[4]. சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது[5]. இது வெறும் சார்புடைய நிகழ்சியா உண்மையா என்பது விசாரணை முடிந்த பின்னர் தான் தெரியும்.

Eight fugitive Terrorists arrested - 2011
“குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்” என்ற தலைப்பில் எப்படி சட்டங்கள் புரட்டப்படுகின்றன என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன்[6]. முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

நாத்திகம்என்ற போர்வையில்ஆண்டவனே இல்லையென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்துகாஃபிர்களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதிஎஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

இப்பொழுது, மறுபடியும் அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவது போலிருக்கிறது. முன்பு அவர்களின் புகைப்படங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுதில்லை. தமிழக போலீஸ் இணைதளத்திலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன[7]. கீழ்கண்ட வாசகங்கள் தாம் வருகின்றன[8].

404 – File or directory not found.

The resource you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable

அமெரிக்காவில், சந்தேகிக்கப் படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளிப்படையாக பிரசுரிக்கிறார்கள். அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆனால், இங்கு அவர்களை மறைப்பது ஏன் என்று தெரியவில்லை. வெளிப்படையான விசாரணை இல்லை என்று முஸ்லீம்கள் போலீசாரையே குற்றஞ்சாட்டப்படும் போது, பழைய குற்றவாளிகள் என்று அவர்களின் புகைப்படங்கள் இருந்துவிட்டு போகலாமே?

இதுவரை கைது செய்யப் பட்டுள்ளவர்கள்: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பந்தமாக, கீழ்கண்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் செய்திகளில் வெளிவந்தவை, ஆனால், தனித்தனியாக புகைப்படங்கள் இல்லாமல், யார்-யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி உள்ளன. அவற்றிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன:

Kichan Buhari and Mohammed Sali arrested BB

கிச்சான் புகாரி (38)[9] – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான் – நெல்லை மேலப்பாளையம் – மேலப்பாளையத்தில், மாட்டுச் சந்தை நடத்தி வந்தவன், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவன் எட்டு கொலை மற்றும் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன். புழல் ஜெயிலில் தண்டனை அனுபவித்த கிச்சான் புகாரி 6 மாதத்துக்கு முன்புதான் விடுதலையானான். அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் சிறுபான்மையின நல அறக் கட்டளை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தான்.  இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று கோவை குண்டு வெடிப்பு கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவி வந்தான்.

Kichan Buhari arrested Bangalore blast 2013

சதாம் உசேன்: கிச்சான் புகாரியின் உறவினர் சதாம் உசேன், கடந்த மாதம், போத்தனூர் திருமண மண்டபத்தில் நடந்த, ரகளை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய பைக்கை, இவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

பீர் முகைதீன் (39) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்,

பஷீர் அகமது (30) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – கட்டட தளவாட பொருட்கள் புரோக்கர், சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்

பீர் முகமது – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – இவர்கள் அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – பெங்களூரில் டீ தூள் விற்பவன்-

முகமது ஷாலி – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான். இவர், “சாரிட்டபிள் டிரஸ்ட் பார் மைனாரிட்டீஸ்’ என்ற அமைப்பை சேர்ந்தவர். நாகர்கோவில் பகுதியில் சிலருடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகி எம்.ஆர்.காந்தி, 62, தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.

Mohammed Sali arrested BJP attack Nagerkoil

பஷீர் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன் – திருநெல்வேலியில் ஒரு ரியல் எஸ்டேடில் ஆபீஸ் பையனாக வேலை செய்பவன்.

ரசூல்மைதீன் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

சலீம் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

முன்பே குறிப்பிட்டபடி, இவர்களின் பெயர்கள் கூட வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் உள்ளன. ஆங்கில நாளிதழ்களில் கொடுக்கப்படும் விவரங்கள் தமிழ் நாளிதழ்களில் கொடுக்கப்படுவதில்லை. அல்லது குறைத்துப் போடுகிறார்கள்.

Bangalore blast - suspect arrested

© வேதபிரகாஷ்

24-04-2013


[4] Further, Tamil Nadu has also banned the All India Jihad Committee and Students Islamic Movement of India (SIMI). But SIMI, is regrouping under the banner of Wahadat-e-Islami Hind, Jayalalitha said.

[6] வேதபிரகாஷ், குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும், 1-6, மே.2010,

https://lawisanass.wordpress.com/2010/05/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-2/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-3/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-4/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-5/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-6/

[9] Kic­han Buhari, a prominent member of the All India Jehad Committee (AIJC) and a close associate of its founder – Ahmad Ali alias Palani Baba, People’s Democratic Party Chairman, Abdul Nasser Madani, and Kun­nangudi Hanifa of Tamil Muslim Munnetra Kazhagam (TMMK)

குஷ்பு, சுகாசினி வழக்கை காட்டி ஐகோர்ட்டில் நித்யானந்தா மனு!

ஜூலை 15, 2010

குஷ்பு, சுகாசினி வழக்கை காட்டி ஐகோர்ட்டில் நித்யானந்தா மனு!

கடந்த ஆண்டுகளில் தெரிந்தோ, தெரியாமலோ நீதிபதிகள் பிச்சினைகள் பலவாக இருந்தாலும், தனிநபர் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக, ஒன்று சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது இல்லை, அந்த தனிநபரின் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாகச் சேர்ப்பது என்றநிலயில் செய்பட்டுவருகிறார்கள். இது எல்லாநிலைகளிலும் சரிவருமா என்று தெரியவில்லை. இந்நிலையில், நித்யானந்தாவே அத்தகைய நிலையை சாதகமாக குறிப்பிட்டு, தனக்கு சட்டத்தீர்வு தீரவேண்டும் என்று கோரியிருப்பது, ப்றுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகிறது.

சென்னை : நடிகைகள் குஷ்பு, சுகாசினி தொடர்பான வழக்குகளை சுட்டிக்காட்டி, சென் னை ஐகோர்ட்டில் சுவாமி நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விவரம்: “கடந்த மார்ச் 2ம் தேதி தனியார், “டிவி’ ஒன்றில் என்னையும் என் பக்தையையும் (நடிகை ரஞ்சிதா) இணைத்து, வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதைத் தொ டர்ந்து மலிவான விளம்பர நோக்கில் பல்வேறு தரப்பினரும், என் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர். “ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தக் கூடாது’ என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகை குஷ்பு மீது ஒரே பிரச்னைக்காக பல்வேறு வழக்குகள் தொடர்ந்த போது, இது சுட்டிக்காட்டப்பட்டது. நடிகை சுகாசினி மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது, சுப்ரீம் கோர்ட் உத்தரவைக் காட்டி, சென்னை ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்தது. அதேபோல், என் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது: கடந்த மார்ச் மாதம் கார்த்திகேயன் என்பவர், என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் மீது சி.பி.ஐ., உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மனு, நடைமுறைக்கு சரியானது அல்ல. குஷ்பு, சுகாசினி வழக்கில் கூறியது போல், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. எந்த முடிவை எடுத்தாலும், என்னையும் சேர்த்துக் கொண்டு, என் கருத்தை கேட்க வேண்டும்”, இவ்வாறு நித்யானந்தா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்: இம்மனு மீதான விசாரணை, ஐகோர்ட் நீதிபதி வாசுகி முன்னிலையில் வந்தது. நித்யானந்தாவின் மனுவை அவர் ஏற்றுக் கொண்டு, “இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது அவர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்‘ என, உத்தரவிட்டார். நித்யானந்தா தொடர்பான அனைத்து வழக்குகளும் கர்நாடக அரசுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு தவிர, புதுச்சேரி உருளையன்பேட்டையில் ஒரு வழக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும் – 3!

மே 24, 2010

குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும் – 3!

WANTED
Abubacker Siddique @ Kakka
DESCRIPTION

Abubacker Siddique @ Kakka, 37/2002 S/o. Ahmed Mohammed Hussein,
No.23, Post Office Road, Nagore

Ø He is a hardcore militant of Al Umma – aged 38/2003 – native of Nagore in Nagapattinam.
Ø Identification: 5’ 4” tall – dark complexion – medium build – hair – black.
Ø He studied upto IX th standard.
Ø He is a religious bigot known for his deep-rooted hatred towards Hindu zealots.
Ø In 1995, Abubacker Siddique, with the assistance of his associates Haroon Ismail of Nagore, Rifayee of Karaikal, Raja Hussein of Madurai, Zahir Hussein and Zubeir of Coimbatore, in a bid to murder one Muthukrishnan, District Organiser of Hindu Front in Nagore and Jeyaveerapandian, District Organiser of Bharatiya Janata Party (BJP) for Mayiladuthurai, mailed two parcel bombs to the address of Muthukrishnan and Jeyaveerapandian. As Muthukrishnan was away, his wife Thangam, who received the parcel became the victim of the parcel bomb explosion while the parcel bomb mailed to Jeyaveerapandian was detected before it could be delivered at his house.
Ø He has been absconding since 1997.
Ø The State Government has announced a reward of Rs.2/- lakhs for furnishing information leading to his arrest.
Ø He got married to one Tajunnisha Begum. a native of Thopputhurai near Nagore secretly even as he has been absconding and their marriage took place in a mosque run by JAQH at Muthupettai in Thanjavur District.
Ø During 1999, Abubacker Siddique met Zahir Hussein of Coimbatore at his hideout in Ilaiyankudi. Zahir Hussein disclosed to Abubacker Siddique his proposal to detonate bombs in various places in Tiruchirappalli, Coimbatore and Chennai to avenge the alleged harassment of the Muslim detenus in Coimbatore and Chennai Central Prisons. Abubacker Siddique and other members of the conspiracy Ahmed Amane went to Virudhunagar and procured raw materials for manufacturing bombs. After the preparation of bombs, Zahir Hussein directed Abubacker Siddique to plant bombs in Cochin – Kerala Express train. When Abubacker Siddique was travelling in the train with the explosives, they produced fumes and hence, he got down without detonating them and left for Mumbai.


Cases in which Abubacker Siddique is involved

1. Nagore P.S. Cr. No.637/95 u/s.302 IPC, 107, 216 IPC and sec.3, 4, 5 of Explosive Substances Act.
2. Mayiladuthurai P.S. Cr. No.1297/95 u/s. 4 of Indian Explosive Act.
3. Coimbatore B1 Bazaar P.S. Cr. No.1163/99 u/s.4(b) of Explosive Substances Act.
4. Tiruchirappalli Contonment P.S. Cr. NO.616/99 u/s.4(b) of Explosive Substances Act r/w. sec.307 IPC.
5. Chennai – F2 Egmore P.S. Cr. No. 1018/99 u/s.286, 307 IPC r/w. sec.4(b) of Explosive Substances Act.
6. Chennai – F1 Chinthathiripet P.S. Cr. No.1253/99 u/s.286, 307 IPC r/w. sec.4(b) of Explosive Substances Act.
7. Chennai – D1 Trplicane P.S. Cr. NO.695/99 u/s.3 of Explosive Substances Act and 436 IPC.

Associates of Abubacker Siddique.

1. Zahir Hussein, Coimbatore
2. Ahmed Amane, Nagore
3. Mohideen Abdul Khader @ Umar Farooq, Nagore
4. Mohammed Moossa Mohideen @ ‘TADA’ Moosa, Melapalayam
5. Sadaqatullah, Kazimar Street, Madurai
6. Sultan @ Siddique Ali, Melapalayam
7. Raja Hussein, Madurai
8. Haroon Ismail, Nagore
9. Rifayee, Karaikal
10. Zubeir, Al Umma, Coimbatore
11. Mohammed Ali @ Yunus @ Mansoor, Melapalayam
12. Zahir Hussein @ ‘Scientist’ Zahir, Kazimar Street, Madurai
13. Sadiq @ Rahmatullah Khan, Melapalayam.

அண்ணாத்துரை பிறந்த நாளில் விடுவிக்கப்பட்ட கைதிகள் பட்டியலை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

திசெம்பர் 18, 2009
அண்ணாத்துரை பிறந்த நாளில் விடுவிக்கப்பட்ட கைதிகள் பட்டியலை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
டிசம்பர் 18,2009,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4737

ஐந்து மாதங்கள் ஆகி விட்டன.

அண்ணாதுரை பிறந்த நாள் போய் கருணாநிதி பிறந்த நாளே வந்து விட்டது.

ஆனால், நீதிமன்றம் உத்தரவு இட்டது என்னவாயிற்று?

Court news detail

மதுரை:அண்ணாத்துரை பிறந்த நாளில் விடுவிக்கப்பட்டகைதிகள் பட்டியலை தாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் கிளைக்கு உட்பட்ட 13 மாவட்ட ஆயுள் தண்டனை கைதிகள், தண்டனையை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் அப்பீல் மனு செய்துள்ளனர்.

பல வழக்குகளில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தர விட்டுள்ளது. இதன் காரணமாக சிறையில் உள்ள கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட னர். அதன் பின்பு இறுதி விசாரணைக்கு வழக்குகளை பட்டியலிடும் போது, பல வழக்கு களில் சம்பந்தப்பட்ட மனுதாரரின் வக்கீல்கள் ஆஜராவதில்லை. ஏராளமான அப்பீல் மனுக்கள் விசாரணை நடத்தப்படாமலேயே நிலுவையில் உள்ளன. இதை கருத்தில் கொண்ட ஐகோர்ட் கிளை இறுதி விசாரணையை முடிவுக்கு கொண்டு வர அப்பீல் செய்த கைதிகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது.

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ஆயுள் தண்டனை கைதிகளை அண்ணா பிறந்த நாளில் விடுவித்ததாகவும், அதனால், அப்பீல் மனு மீது இறுதி விசாரணை நடத்தவில்லை,” என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.ரகுபதி, ஆர்.சுப்பையா கொண்ட பெஞ்ச், அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் நீதிபதிகள், கோர்ட்டில் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தவர்களில் பலர் அண்ணாதுரை பிறந்த நாளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பீல் மனு மீது இறுதி விசாரணை நடத்தப்படவில்லை. கைதிகள் விடுவிக்கப்பட்டது குறித்து அரசு தரப்பிலும் தெரிவிக்கவில்லை.

நிலுவையிலுள்ள அப்பீல் மனுக்களை முடிவுக்கு கொண்டு வர அண்ணாத்துரை பிறந்த நாளில் விடுவிக்கப்பட்ட கைதிகள் பட்டியலை தமிழக அரசு டிச., 19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். நிலுவையிலுள்ள அப்பீல் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர குற்ற வியல் இயக்குனர், சிறை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்,” என உத்தரவிட்டனர். அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை டிச., 21க்கு தள்ளிவைக்கப்பட்டது.