Archive for the ‘அப்துல் ரஹீம்ர்’ Category

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

ஏப்ரல் 24, 2013

அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா?

பெங்களூரு வெடிகுண்டு விசாரணையில் சந்தேகிக்கும்படியாக கைது செய்யப் பட்டுள்ளவர்கள் எல்லோரும் முந்தைய “அல்-உம்மா” என்ற தீவிரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார்  எடுத்துக் காட்டுகின்றனர்[1]. ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் ஏன் மற்படியும் பழைய தொடர்புகளை வைத்திருக்கிறர்கள் என்றும் தெரியவில்லை. முன்பு போல திருநெல்வேலி-கோயம்புத்தூர்-பெங்களூரு இணைப்பும் தெரிகிறது[2]. இதனால், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலையெடுக்கின்றவா – வேறு உருவத்தில் செயல்படுகின்றனவா என்ற சந்தேகமும் தலைதூக்கியுள்ளது[3]. தடை செய்யப்பட்ட சிமி, வஹதத்-இ-இஸ்லாமி ஹிந்த் (Wahadat-e-Islami Hind) என்ற பெயரில் செயல்படுவதாகச் சொல்லப் படுகிறது[4]. சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது[5]. இது வெறும் சார்புடைய நிகழ்சியா உண்மையா என்பது விசாரணை முடிந்த பின்னர் தான் தெரியும்.

Eight fugitive Terrorists arrested - 2011
“குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்” என்ற தலைப்பில் எப்படி சட்டங்கள் புரட்டப்படுகின்றன என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன்[6]. முன்னுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

நாத்திகம்என்ற போர்வையில்ஆண்டவனே இல்லையென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்துகாஃபிர்களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதிஎஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

இப்பொழுது, மறுபடியும் அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவது போலிருக்கிறது. முன்பு அவர்களின் புகைப்படங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுதில்லை. தமிழக போலீஸ் இணைதளத்திலிருந்தும் அவை நீக்கப்பட்டுள்ளன[7]. கீழ்கண்ட வாசகங்கள் தாம் வருகின்றன[8].

404 – File or directory not found.

The resource you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable

அமெரிக்காவில், சந்தேகிக்கப் படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளிப்படையாக பிரசுரிக்கிறார்கள். அதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆனால், இங்கு அவர்களை மறைப்பது ஏன் என்று தெரியவில்லை. வெளிப்படையான விசாரணை இல்லை என்று முஸ்லீம்கள் போலீசாரையே குற்றஞ்சாட்டப்படும் போது, பழைய குற்றவாளிகள் என்று அவர்களின் புகைப்படங்கள் இருந்துவிட்டு போகலாமே?

இதுவரை கைது செய்யப் பட்டுள்ளவர்கள்: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பந்தமாக, கீழ்கண்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையெல்லாம் செய்திகளில் வெளிவந்தவை, ஆனால், தனித்தனியாக புகைப்படங்கள் இல்லாமல், யார்-யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி உள்ளன. அவற்றிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன:

Kichan Buhari and Mohammed Sali arrested BB

கிச்சான் புகாரி (38)[9] – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான் – நெல்லை மேலப்பாளையம் – மேலப்பாளையத்தில், மாட்டுச் சந்தை நடத்தி வந்தவன், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவன் எட்டு கொலை மற்றும் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவன். புழல் ஜெயிலில் தண்டனை அனுபவித்த கிச்சான் புகாரி 6 மாதத்துக்கு முன்புதான் விடுதலையானான். அல் உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் சிறுபான்மையின நல அறக் கட்டளை என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தான்.  இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று கோவை குண்டு வெடிப்பு கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவி வந்தான்.

Kichan Buhari arrested Bangalore blast 2013

சதாம் உசேன்: கிச்சான் புகாரியின் உறவினர் சதாம் உசேன், கடந்த மாதம், போத்தனூர் திருமண மண்டபத்தில் நடந்த, ரகளை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய பைக்கை, இவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

பீர் முகைதீன் (39) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்,

பஷீர் அகமது (30) – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – கட்டட தளவாட பொருட்கள் புரோக்கர், சென்னை பூக்கடை பகுதியில் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்தவன்

பீர் முகமது – நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவன் – இவர்கள் அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – பெங்களூரில் டீ தூள் விற்பவன்-

முகமது ஷாலி – மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தான். இவர், “சாரிட்டபிள் டிரஸ்ட் பார் மைனாரிட்டீஸ்’ என்ற அமைப்பை சேர்ந்தவர். நாகர்கோவில் பகுதியில் சிலருடன் சேர்ந்து, பா.ஜ., நிர்வாகி எம்.ஆர்.காந்தி, 62, தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.

Mohammed Sali arrested BJP attack Nagerkoil

பஷீர் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவன் – திருநெல்வேலியில் ஒரு ரியல் எஸ்டேடில் ஆபீஸ் பையனாக வேலை செய்பவன்.

ரசூல்மைதீன் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

சலீம் – அல் உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவன் – சென்னையில் பிடிபட்டவன்

முன்பே குறிப்பிட்டபடி, இவர்களின் பெயர்கள் கூட வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் உள்ளன. ஆங்கில நாளிதழ்களில் கொடுக்கப்படும் விவரங்கள் தமிழ் நாளிதழ்களில் கொடுக்கப்படுவதில்லை. அல்லது குறைத்துப் போடுகிறார்கள்.

Bangalore blast - suspect arrested

© வேதபிரகாஷ்

24-04-2013


[4] Further, Tamil Nadu has also banned the All India Jihad Committee and Students Islamic Movement of India (SIMI). But SIMI, is regrouping under the banner of Wahadat-e-Islami Hind, Jayalalitha said.

[6] வேதபிரகாஷ், குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும், 1-6, மே.2010,

https://lawisanass.wordpress.com/2010/05/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-2/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-3/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-4/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-5/

https://lawisanass.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%A9-6/

[9] Kic­han Buhari, a prominent member of the All India Jehad Committee (AIJC) and a close associate of its founder – Ahmad Ali alias Palani Baba, People’s Democratic Party Chairman, Abdul Nasser Madani, and Kun­nangudi Hanifa of Tamil Muslim Munnetra Kazhagam (TMMK)

குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்!

மே 22, 2010

குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும்!

 

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.

சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.

அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;

அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,

குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்-பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

“நாத்திகம்” என்ற போர்வையில் “ஆண்டவனே இல்லை”யென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்து “காஃபிர்”களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதி-எஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள், சமீபத்தில் நீதிமன்றங்களில் வழங்கப் பட்டுள்ள மற்றும் வழங்கப்படும் தீர்ப்புகள் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளன, ஏனெனில், குண்டு வெடிப்புகள், பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது, வழக்கின் முக்கியத்துவம், அதன் சட்ட நுணுக்கங்கள், சட்டரீதியாக செல்லுமா இல்லையா என்ற விவரங்களை நீர்த்துவிட்டு, ஏதோ ஒன்றை ஏடுத்துக் கொண்டு, சாட்சிகள் சரியில்லை, ஆதாரங்கள் சரியாக நிரூபிக்கப் படவில்லை,….என்றெல்லாம் தீர்ப்புகள் கொடுக்கப் படுகின்றன. கோர்ட் நடவடிக்கைகள், காலந்தாழ்த்தும் போக்கு, சாட்சிகளை மிரட்டும் போக்கு, மாற்றும் நிலை,…………………………………….., அரசியல் சார்பான நீதிபதிகள் வரும்வரை இழுத்தடிப்பது………………..முதலியன அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணத்திற்கு பல வழக்குகளைச் சொல்லலாம், இருப்பினும் சில குறிப்பிடப்படுகின்றன.

வில் ஹியூம், சென்னை நீதிமன்றக்கள், நீதிபதிகள்: வில் ஹியூம் ஒரு அனைத்துலக குற்றவாளி, ஆனால், சென்ன்னையில் ஜாலியாக பல அரசியல், திரைப்பட ஆதிக்கக்காரர்கள், போலீஸார் முதலியோர் ஆதரவுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து, இரு தடவை கைது செய்யப்பட்டாலும், விடுவிக்கப் பட்டுள்ளான். சைதாப்பேட்டை மேஜிஸ்ட்ரேட் அப்படித்தான் விடுவித்து, பிறகு, சென்னை உயர்நீதி மன்றம், அவர் தவறுதலாக விடிவித்துவிட்டார் என்று தீர்ப்பளித்தது.

ஆர்ச்பிஷப், போலி ஆரய்ச்சி, முந்தைய வழக்கு, மறுபடியும் அதே குற்றங்களைச் செய்வது: ஆர்ச் பிஷப் அருளப்பா ஆச்சார்ய பால் என்ற கிருத்துவருக்கு பல கோடிகள் கொடுத்து பல போலியான ஆவணங்களைத் தயாரித்து, திருவள்ளுவர் தாமஸை சந்தித்தார், அந்த இல்லாத ஆளிடம் கற்றுதான் திருக்குறள் எழுதினார், மீனாட்சி கோவிலே ஒரு சர்ச்…………….என பல பேத்த்கல்களான மோசடி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கிருத்துவர்களுக்கே பொறுக்காமல், அழுத்தம்-தர, பணம் கொடுத்த அருளாப்பாவே, வழக்குப் போட்டு, பிறகு ஆச்சார்யா பால் “எல்லாவற்றையும் உலகத்திற்கு சொல்லிவிடுவேன்” என்று மிரட்டியதும், பயந்து கொண்டு 1987களில் சமாதானமாகி, “கோர்ட்டிற்கு வெளியே” என்ற முறையில் எல்லா விஷயங்களையும் அமுக்கி விட்டனர். ஆனால், இப்பொழுது, மறுபடியும், அதே பிஷப், அதாவது அந்த ஸ்தானத்திலுள்ள சின்னப்பா, அதே மாதிரி அந்த மோசடி ஆரய்ய்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து வேலைகளை ஆரம்பித்துள்ளார். அதாவது செய்த குற்றங்களையே மறுபடியும் செய்தால், நடவடிக்கை எடுப்பதில்லை போலும் தமிழ்நாட்டில்!

சீமான் மீதான வழக்குகள்: எல்.டி.டி.ஈ தடை செய்யப் பட்டுள்ள இயக்கம். இப்பொழுதுகூட அதன் மீதான தடை நீட்டிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த சீமான் தொடர்ந்து அத்தகைய சட்டமீறல் காரியங்களைச் செய்து வந்தாலும், கைது செய்யப் பட்டாலும், வெளிவந்து கொண்டேயிருப்பதும், அதே குற்றங்களை மறுபடி-மறுபடி செய்வதும், காங்கிரஸ்காரர்கள் “புகார் கொடுப்பதும்”. கருணாநிதி அமைதியாக இருப்பதும், வெட்கம், மானம், சூடு, சொரணை…………………… இல்லாமல் கூட்டணிக் கொள்ளை தொடர்வதும் சகஜமாகத்தான் உள்ளது.

கருணாநிதியின் மீதுள்ள வழக்குகள்: சென்ற தேர்தல்லின்போது, தன்னுடைய சுய-ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில் கருணாநிதி தன்மீது 9 கிரிமினல் குற்றா வழக்குகள் பதிவு செய்யப் பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக, கையெழுத்திட்டு தேர்தலில் நின்று முதல்வராகி, அதே குற்றங்களை மறுபடி-மறுபடி செய்திருந்தாலும், நீதிமன்றங்கள், நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள்………………….நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். யாரும் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. “வழக்கு போட்டால் சந்திக்கத் தயார்”, இன்று அப்பொழுதுகூட ஜெயலலிதாவிற்கு சவால் விட்டபோது, பாவம், அப்பொழுது கூட யார்க்கும் நினைவிற்கு வரவில்லை போலும்!

இனி இந்த குணங்குடி மஸ்தான், மன்னிக்கவும், குணங்குடி ஹனீபா வழக்கைப் பார்ப்போம்!

Last Updated :

ரயில்குண்டுவெடிப்புவழக்கில்குணங்குடிஹனீபாஉள்பட 8 பேர்விடுதலை[1]:

சென்னை, ​​ மே 21, 2010:​ ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.​ ​ இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதாகக் கூறி இவர்கள் விடுவிக்கப்படுவதாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மூன்று ரயில்களில் குண்டுகள் வெடித்து பத்துக்கும்மேற்பட்டோர்உயிரிழந்தனர்.​ 72 பேர்காயமடைந்தனர்: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1997 டிசம்பர் 6-ல் ​ திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்,​​ ஈரோடு அருகே சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்,​​ கேரள மாநிலம் திருச்சூரில் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ரயில் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.​ 72 பேர் காயமடைந்தனர்.​ இந்த சம்பவம் தொடர்பாக ஜிகாத் கமிட்டி தலைவர் குணங்குடி ஹனீபா,​​ ஏர்வாடி காசிம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஏர்வாடி காசிம்,​​ அலி அப்துல்லா,​​ அப்துல் ரஹீம்,​​ முபாரக் அலி,​​ முகமது அலிகான்,​​ சம்ஜித் அகமது,​​ ரியாதுர் ரஹ்மான்,​​ குணங்குடி ஆர்.எம்.ஹனீபா,​​ முகமது தஸ்தகீர் ஆகியோர் அடுத்த சில மாதங்களில் கைது செய்யப்பட்டனர்.​ இதில்,​​ முகமது தஸ்தகீர் 12-3-2000-ல் இறந்தார்.​ ​மற்றொரு முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அஷ்ரப் அலி தலைமறைவாக உள்ளார்.​ அவர் மீது திருச்சி நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது.​ கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேர் சிறையிலேயே 13 ஆண்டுகளாக இருந்து வந்தனர்.

420ல் 269 சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை, 151ல் 10 பேர்பிறழ்சாட்சியம், தீர்ப்புத் தள்ளிவைப்பு, 139 ஆதாரங்கள் போதுமானதாக இல்லை: இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.​ அரசு தரப்பில் வழக்கறிஞர் துரைராஜும்,​​ குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் புகழேந்தி,​​ சிவபெருமாள் ஆகியோரும் ஆஜராயினர். 10 பேர் பிறழ் சாட்சியம்:​ கூட்டுச் சதி,​​ கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அரசு தரப்பில் 420 சாட்சிகள் குறிப்பிடப்பட்டன.​ இதில் 151 சாட்சிகளை விசாரித்தாலே போதுமானது என அரசு தரப்பு பின்னர் முடிவெடுத்தது.​ இதில் முக்கிய சாட்சிகள் 10 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.​ பின்பு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறியதன் அடிப்படையில்,​​ குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி​ ஆர்.பிரேம்குமார் வெள்ளிக்கிழமை வழங்கிய​ தீர்ப்பில் தெரிவித்தார். இதையடுத்து, ​​ குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 6 பேர் சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனர்.​ ஏர்வாடி காசிம்,​​ அலி அப்துல்லா ஆகியோர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.

1997லிருந்து 2010 வரை தூங்கும் நீதிமன்றங்கள்: 1997ல் குண்டுவெடிப்பு, கொலை, சாவு, ரத்தம்…………………….2001ல் குற்றாப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப் பட்டது, 2004ல்தான் கோர்ட் – விசாரணையே ஆரம்பித்தது. இப்பொழுது விடிவிக்கப் படுகிறார்கள் என்றால், செத்தவர்கள் நிலை என்ன? அநியாயமாக செத்தவர்களின் உரிமைகள் என்ன?

வேதபிரகாஷ்

24-05-2010


[1] தினமணி, ரயில்குண்டுவெடிப்புவழக்கில்குணங்குடிஹனீபாஉள்பட 8 பேர்விடுதலை, First Published : 22 May 2010 12:00:00 AM IST

http://dinamani.com/edition/story.aspx?