Archive for the ‘சட்டத்தின் மேன்மை’ Category

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

மே 3, 2012

பாபா ராம்தேவ் “பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள்” என்று சொன்னதற்கு ஏன் பாராளுமன்ற எம்.பிக்கள் கோபமடைய வேண்டும்?

நல்லவர்களாக, தூயவர்களாக, புனிதர்களாக இருந்தால் எம்.பி.க்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஊடகக்காரர்கள் ஒரு மொழியிலிருந்து, மற்ற மொழிக்கு மாற்றம் செய்யும் போது, அம்மொழிக்கே உரித்தான சில சொல்லாற்றங்கள், வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றிலிருந்து பெறப்படும் அர்த்தங்கள், அம்மொழியின் தன்மையில் எடுத்துக் கொள்ளவில்லையென்றால், அல்லது சாதாரணமாக மொழிபெயர்த்தால், சரியான பொருள் கிடைக்காது. இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்க்கும்போது அவ்வாறுதான் ஏற்படுகிறது. वे इनसान की शक्ल में शैतान हैं। “மனித உருவில் உள்ள சாத்தான்களின் வடிவங்கள்” அல்லது சைத்தான் மனித உருவில் உள்ளன என்று மொழிபெயத்தால், உண்மையிலேயே எம்.பிக்கள் “சைத்தான்” என்று சொல்லப்படவில்லை. அம்மொழிப்பிரயோகத்தில் அவர்கள் அத்தகைய கெட்டவர்கள் என்றுதான் பொருள்வரும். இந்தியிலேயே, இரு நாளிதழ்கள் அச்செய்தியை இருவிதமாக வெளியிட்டிருப்பதை கீழே காணலாம்:

क्या बोले थे बाबा[1]छत्तीसगढ़ के दुर्ग से मंगलवार को अपनी यात्रा शुरू करते हुए रामदेव ने कहा था कि सांसदों में अच्छे लोग भी हैं और वह उनका सम्मान करते हैं। लेकिन वहां डकैत, हत्यारे और जाहिल भी हैं। वे वह लोग हैं, जिन्हें किसानों, मजदूरों और देश की लोगों की कोई चिंता नहीं है। वे सिर्फ पैसे के गुलाम हैं। वे इनसान की शक्ल में शैतान हैं। जिन्हें उस पद के लिए चुना गया है, जिसके कि वे काबिल ही नहीं हैं। हमें संसद को बचाना है। हमें भ्रष्ट लोगों को हटाना है। संसद में लुटेरे, हत्यारे व जाहिल बैठे हैं[2]। सत्ता की कुर्सी पर इंसान की शक्ल में हैवान हैं। हमने उन्हें कुर्सी पर बैठाया है। लेकिन वो सत्ता चलाने की पात्रता नहीं रखते। वे लोग किसानों और मजदूरों से हमदर्दी नहीं रखते। वे देश इसलिए चला रहे, क्योंकि हमने ऐसा ही सिस्टम बनाया है। हमने मान लिया है कि 543 रोगी हिंदुस्तान चलाएंगे[3]। हालांकि उनमें कुछ अच्छे भी हैं। हमें संसद को बचाना होगा।

பண அடிமைகள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று எம்.பி.க்களை பாபா ராம்தேவ் சரமாரி தாக்கி உள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்[4].எம்.பி.க்களை திருடர்கள், கொலைகாரர்கள் என்று யோக குரு ராம்தேவ் விமர்சித்துள்ளதற்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் புதன்கிழமை (02-05-2012) கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேவையற்று வெளிப்படும் ரோஷம்: ராம்தேவின் பேச்சுக்கு மக்களவைத் தலைவர் மீராகுமார், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அரசியல் சாசன சட்டமே மேலானது. அது நாடாளுமன்றத்துக்கு என்று தனி அந்தஸ்து வழங்கியுள்ளது. அதை நாம் முதலில் கட்டிக்காக்க வேண்டும்’ என்று மீரா குமார் தெரிவித்தார்.  “நாடாளுமன்றத்தையும், சட்டம் இயற்றுபவர்களையும் விமர்சிப்பது சாதாரணமாகிவிட்டது. யார் அதிகமாக அவமதிக்கிறார்களோ அவர் பெரிய ஹீரோ ஆகிறார். இது முற்றிலும் தவறு. ஜனநாயக நிறுவனங்களை விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரிதான்’ என்றார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இது போன்ற கருத்துகளை ராம்தேவிடமிருந்து தாம் எதிர்பார்க்கவில்லை. 144 சட்டம் அமூலில் இருக்கும் போது மின்சாரம் இல்லை என்று போரடினால் நானும் சட்டப்படி “கிரிமினல்” ஆகிவிடுவேன்[5], என்று பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் தெரிவித்தார்.

உரிமை மீறல் நோட்டீஸ்: “”எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாபா ராம்தேவ் மீது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்னையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். “பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவோரால் நாடாளுமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. அவர்கள் (ராம்தேவ் பெயரைக் குறிப்பிடவில்லை) மீது நாடாளுமன்ற உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நோட்டீûஸக் கொடுத்துள்ளேன்” என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர் சைலேந்திர குமார் தெரிவித்தார்[6]. இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெகதாம்பிகா பால், “ராம்தேவின் பேச்சால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமுதாயத்தில் கெடுகிறது. அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ, உறுப்பினர்களின் உரிமை மீறல் நோட்டீஸ் அனைத்தும் மக்களவைத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. அவர் முடிவு எடுக்கும்வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

எம்.பி.க்கள் மீது ராம்தேவ் தாக்கு: முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராம்தேவ், “எம்.பி.க்கள் எதிலும் அக்கறையில்லாதவர்கள். விவசாயிகளையும், தொழிலாளர்களையும், நாட்டு மக்களையும் நேசிக்காதவர்கள்‘ என்று கடுமையாக குற்றம்சாட்டினார்[7].

அவர்கள் பணத்துக்கு அடிமைகளாகவும், நண்பர்களாகவும் உள்ளனர். நாம் தேர்ந்தெடுத்த எம்.பி.க்கள் மனித உருவில் வாழும் பிசாசுகள். அவர்களுக்கு தகுதி கிடையாது.  நாடாளுமன்றத்தில் நல்லவர்களும் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். அவர்களில் கல்வியறிவற்றவர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும் உள்ளனர். எனவே நாம் நாடாளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல்வாதிகளை நீக்க வேண்டும்’ என்று கடுமையாக பேசினார் ராம்தேவ். Addressing the media while launching his month-long yatra in Chhattisgarh’s Durg on Tuesday, Baba Ramdev said there were good people among the parliamentarians and he respected them[8]. “But there are dacoits, murderers, illiterates among them[9]. We have to save Parliament. We have to remove corrupt people.” He accused the MPs of not caring for farmers and labourers. “They are friends and slaves of money. They are illiterate, dacoits and murderers. They are devils in the form of humans, who we have elected to those posts. They are not worth it,” he said.

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவும், அவரது குழுவினரும் எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில் ராம்தேவும் எம்.பி.க்களை கடுமையாக குறைகூறி பேசியுள்ளார்.

ராம்தேவ் ஒரு மென்டல் கேஸ்: லாலு தாக்கு[10]: யோகாகுரு பாபா ராம்தேவ் பைத்தியக்காரர் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்[11]. சத்திஸ்கரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யோகாகுரு பாபா ராம்தேவ், எம்.பி.,க்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் கேட்டபோது, ராம்தேவின் பேச்சு பயனற்றது. இது போன்று பேசுபவர்களும் பயனற்றவர்கள். ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர் என கூறினார்.

ராம்தேவ் கூறியது சரிதான்: அன்னா ஹசாரே[12]எம்.பி.க்கள் குறித்து ராம்தேவ் பேசியதில் தவறில்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.நேற்று முன்தினம், சத்தீஸ்கரில் ராம்தேவ் கூறுகையில், “தற்போதுள்ள எம்.பி.,க் களில் சில நல்ல மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன். அதே நேரத்தில், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், படிப்பறிவற்றவர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, பார்லிமென்டை காக்க வேண்டும் என்றார். இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: ராம்தேவ் கூறியதில் எந்தவிதத்திலும் தவறில்லை. அவர் கூறிவது தவறு என்றால், இன்று ஏராளமான எம்.பி.க்களுக்கு எதிராக ஆதாரம் உள்ளது.  இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் சீட் கொடுக்கும் போது , மக்கள் ஏன்? நெருக்கடி கொடுக்கக்கூடாது. கட்சிகளுக்கு தேவை ஓட்டு. ஆனால் வேட்பாளர்களாக கிரிமினல்களை ஏன நிறுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் தேர்தலில் நின்றால் ஜனநாயகத்தின் கோயில் என்னவாகும் என்றார்.

பாராளுமன்றத்தில் 150ற்கும் மேலான கிரிமினல் வழக்குள்ள எம்.பி.க்கள்[13]: 543 எம்.பி.க்களில் 150 பேர்களுக்கு மேல் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் என்று ஏற்கெனவே பல அறிக்கைகள், செய்திகள், விவரங்கள் வந்துள்ளன[14]. அவர்கள் ஒன்றும் வெட்கப்பட்டு தேர்தலில் நிற்காமல் இல்லை, தோல்வியும் அடையவில்லை, பாராளுமன்றத்தில் உட்காரவும் இல்லை ……………………என்றெல்லாம் இல்லை.

“Of these 150 MPs, 72 have serious charges against them. The maximum criminal charges are against Congress MP from Porbandar in Gujarat Vitthalbhai Hansrajbhai Radadiya. He has a total of 16 cases out of which five cases are of serious nature,” the analysis revealed.”Bharatiya Janata Party (BJP) has maximum number of MPs having criminal cases with 42 MPs, of which 17 have serious criminal cases against them. It is closely followed by Congress with 41 MPs having criminal cases against them. Twelve Congress MPs have serious charges against them,” the study said. அந்த 150ல், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அதிக அளவில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 72 மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் இதைப் பற்றி கவலைப் படவில்லை.பி.ஜே.பியில் 42 எம்.பி.க்கள், காங்கிரஸில் 41 என்று உள்ளனர். அதனால்தான், இரு கட்சிக்காரர்களுக்கும் கோபம் வருகிறது போலும். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், இவர்களை ஏன் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்க்கவைத்தன?

“டாப்-10” என்று கிரிமினல் எம்.பி.க்கள் பட்டியலே கொடுக்கப் பட்டது. அப்பொழுதும், யாருக்கும் பொத்துக் கொண்டு வரவில்லை. அதில் லல்லுவும் உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் தான் பாபா ராம்தேவை “மென்டல்” என்று “கமன்ட்” வேறு அடிக்கிறார்.

 Here is a list of top ten MPs with a criminal background, compiled by the National Election Watch[15].

Name: Kameshwar Baitha (56)
Constituency represented: Palamau, Jharkhand
Party: Jharkhand Mukti Morcha
Criminal background: Accused in 35 cases and has 50 serious charges against him under the IPC
Convicted: NeverName: Jagadish Sharma, (58)
Constituency represented: Jahanabad, Bihar
Party: Janata Dal-United
Criminal background: Accused in 6 cases and has 17 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Bal Kumar Patel (48)
Constituency represented: Mirzapur, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 13 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Prabhatsinh Pratapsinh Chauvan (67)
Constituency represented: Panchamahal, Gujarat
Party: Bharatiya Janata Party
Criminal background: Accused in 3 cases and has 10 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kapil Muni Karwariya (42)
Constituency represented: Phulpur, Uttar Pradesh
Party: Bahujan Samaj Party
Criminal background: Accused in 4 cases and has 8 serious charges against him under the IPC
Convicted: Never

Name: P Karunakaran (64)
Constituency represented: Kasargod, Kerala
Party: Communist Party of India-Marxist
Criminal background: Accused in 12 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Kunvarji Mohanbhai Bavaliya (54)
Constituency represented: Rajkot, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 2 cases and has 6 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Vittalbhai Hansrajbhai Radadiya (51)
Constituency represented: Porbandar, Gujarat
Party: Indian National Congress
Criminal background: Accused in 16 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Ramkishun (49)
Constituency represented: Chandauli, Uttar Pradesh
Party: Samajwadi Party
Criminal background: Accused in 10 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

Name: Lalu Prasad Yadav (60)
Constituency represented: Saran, Bihar
Party: Rashtriya Janata Dal
Criminal background: Accused in 7 cases and has 5 serious charges against him under the IPC
Convicted: Never

நாட்டை ஆள்பவர்களுக்கு தகுதி, யோக்கியதை, தார்மீக பொறுப்பு முதலியவை வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. அதனை அவ்வாறு கூறுவதே தவறாகும். இப்படி கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, ஊழல், லஞ்சம் என்று பல குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகி, பைளில் வெளிவந்து, பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு, அரசு செலவில் உலா வந்தால் அது மக்களுக்கு அசிங்கம் இல்லையா? ஒரு லட்சம் வாங்கிய பங்காரு லட்சுமணன் ஜெயிலில் என்றால், 1,73,000 கோடிகள் சுருட்டியவர்கள் எப்படி வெளியில் இருக்கிறார்கள்? பிணையில் வெளிவந்து பாராளுமன்ரத்திலும் உட்கார்ந்து கொள்கிறார்கள்?இதனை எடுத்துக் காட்டும் போது, அவர்கள் கோபம் அடைகிறார்கள், சட்டப்படி, உரிமை மீறல் என்று நடவடிக்கை எடுப்போம் என்றால், சட்டப்படி அந்த 150 எம்,பிக்களையும் வீடிற்கு அனுப்ப வேண்டியது தானே? எம்.பி பதவியை பறிக்கவேண்டியது தானே? மந்திரியாக உள்ளவர்களின் பதவியையும் பறிக்க வேண்டியதுதானே? ஆனால், காங்கிரஸ் அல்லது மேலிடம் சோனியா மெய்னோ அவ்வாறு செய்யவில்லையே? தாமஸ் கதையை அதற்குள் மறந்து விட்டார்கள் போல!

வழக்கு முடிந்து, தான் குற்றவாளி இல்லை என்ற பிறகு பதவிக்கு வருவது தானே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஜே.பி ஆட்சி மூன்று மாநிலங்களில் கலைக்கப் பட்டது. ஆனால், தவறில்லை என்று தீர்ப்பு வந்தபோது, அது மறுபடியும் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. அந்த இளைஞர் ராகுல் ஏன் இதைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்வதில்லை? ஒருவேளை தனது அப்பாவே ஊழல் பேர்வழி என்ற பிரச்சினை உள்ளது என்று அமைதியாக உள்ளாரா? இல்லை பிரியங்கா அல்லது வதேராவை வைத்து மோட்டார் பைக்கில் ஊர்வலம் வரச் சொல்லலாமே? பாபா ராம்தேவின் உருவ பொம்மையை எரிப்பவர்கள், அந்த 150 எம்.பிக்களின் உருவ பொம்மைகளை எரிப்பார்களா அல்லது பாலாபிஷேகம் செய்வார்களா?

ஹவாலா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட எ,.கே.அத்வானி ராஜினாமா செய்து, காத்திருந்து, வழக்கு முடிந்து, தான் நிரபராதி என்று முடிவானப் பிறகுதான் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதேபோல மற்றவர்கள் ஏன் பின்பற்றுவதில்லை?

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று பாரம்பரியம் இருக்கும் போது, மக்கள் இனிமேல் அத்தகைய ஆட்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. முதலில் அந்தந்த கட்சிகள் அவர்களை தேர்தலில் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் தேர்தல் கமிஷன் அவர்களை நிறுத்தவேண்டும். தேர்தலில் நிற்க விண்ணப்பிக்கும் போதே அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படவேண்டும். அப்பொழுது தான், இந்நிலை மாறும். இவ்வாறு சொல்வதே தவறு என்று பாராளுமன்றம் எப்படி சொல்ல முடியும்? அங்கிருக்கும் 150 பேர்கள் எப்படி தமக்கு எதிராக தாமே பேசுவார்கள் அல்லது தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள்? விவாதம் வரும் போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மற்றவர்கள் பேசுவதை கேட்பார்கள் அல்லது தாமே பேச முன்வருவார்கள்?

அது எப்படி சட்டப்படி செல்லுபடியாகும்? இதெல்லாம் அங்குள்ள மெத்தப் படித்த எம்.பிக்களுக்கு, ஐந்து / ஆறு முறை என்று எம்.பிக்களாக இருப்பவர்களுக்கு, சட்டம் படித்த மாமேதைகளுக்கு, லட்சங்களில் பீஸ் வாங்கும் வழக்கறிஞர்-எம்,பிக்களுக்கு தெரியாமலா இருக்கும்?

வேதபிரகாஷ்

02-05-2012


தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

மார்ச் 17, 2012

தன்னை “விஷில் புளோயர்” என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்த லெனின் கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?


லெனின் கருப்பன் சரண்டர் / கைது விவகாரத்தில் பல கேள்விகள் எழுகின்றன: நிச்சயமாக லெனின் கருப்பன் தானாகவே இத்தகைய செயலை செய்யவில்லை. அவனுக்கு பலவிதங்களில் பலர் உதவியுள்ளனர். இல்லையென்றால், ஏகப்பட்ட கிருத்துவ / முஸ்லீம் சாமியார்களில் செக்ஸ் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு, உலகளவில் “இன்டர்போல்” மூலம் எல்லாம் எச்சரிக்கை அறிவிப்பு வந்த பிறகு கைது செய்த போலீஸார், இந்த தர்மானந்தாவை பிடிக்காதது ஆச்சரியமே. நித்யானந்தாவை பிந்தொடர்ந்து சென்று பித்தவர்கள் தமிழகத்திலேயே மறைந்து வாழ்பவனை பிக்காமல் இருந்தது ஆச்சரியமே. தனது இணைதளத்தில், தன்னை “விஷில் புளோயர்” (சங்கு ஊதுபவர்கள் – அதாவது மக்கள் / பொது பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் சொல்லும் நியாயவான் / கனவான்[1]) என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொள்ளும்[2] லெனின்

Dharmananda (Lenin Karuppan)This is the voice of Truth, the truth about the Nithyananda cult from a long time insider and whistle-blower, Lenin Karuppan alias Dharmananda.

Latest Updates and Breaking News
10 CASES FILED BY NITHY’S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)
3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda) and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani) 

3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

RAMNAGARAM SESSIONS COURT ADJOURNED THE HEARING OF THE CASE AGAINST ACCUSED NITHYANANDA WHO IS FACING CHARGES OF SEXUAL EXPLOITATION AND CHEATING TO adjourned court again TO juli-21,th 

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

கருப்பன் ஏன் ஓடி ஒளிந்து மறைந்து வாழ வேண்டும்?

  • ஊதுகின்ற சங்கை ஊதுகிறேன் நடப்பது நடக்கட்டும் என்றிருக்கவில்லையே இந்த சாமியார்! இன்றும் தன்னை “தர்மானந்தா” என்று பெருமையாகப் போட்டுக் கொண்டு அடைக்குறிகளில் ஏன் “லெனின் கருப்பன்” என்று போட்டுக் கொள்ள வேண்டும்?
  • அப்படியென்றால், இந்த ஆளும் திருட்டு சாமியார் தான். இப்பொழுது திடீரென்று சரண்டர் ஆக வேண்டும்?
  • அப்படியென்றால், போலீஸார் பிடித்து கைது செய்து விடுவார்கள் என்று தெரியும் போல இருக்கிறது. பிறகு ஏன் மறைந்து வாழ வேண்டும்?
  • முன்னமே தைரியமாக வெளியே வந்து “சரண்டர்” ஆகியிருக்கலாமே?
  • கைது செய்யப் பட்டு, பிணையில் வெளியில் வந்த நித்யானந்தாவே தைரியமாக வெளியில் அறிவுரை கூறுகிறார்; ஆசி கொடுக்கிறார். அப்படியிருக்கும் போது “விஷில் புளோயர்” பயந்திருக்க வேண்டாமே?
  • ஆட்சி மாறியதால், நிலைமை மாறியதா?
  • இல்லை, இப்பொழுது நித்யானந்தா “வீடியோ புனையப்பட்டுள்ளது” என்று புதிய ஆவணங்களைக் காட்டுவதால், பயந்து விட்டாரா?

திராவிட பாரம்பரியத்தைப் பின்பற்றியுள்ள லெனின் கருப்பன்: திராவிடத் தலைவர்கள் நாங்கள் எந்த நீதிமன்றத்தையும் சந்திக்கத் தயார், நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களே இல்லை, நீதிமன்ற படிக்கட்டுகள் எமக்கு துச்சம், நாங்கள் ஏறாத படிகட்டுகளா, நாங்கள் பார்க்காத சட்டங்களா, என்றெலெல்லாம் பேசிவிட்டு, பிறகு வழக்கு என்று வந்ததும், நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததும் –

  1. நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயே இருந்து விடுவர் – உதாரணம் பெரியார்.
  2. முதல்வர் என்று விலக்குக் கேட்டு மனு கொடுப்பர் – கருணாநிதி
  3. தெரிந்த நீதிபதியாக இருந்தால், அரசால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியாக இருந்தால், அவர் அந்த வழக்கையே வரவிட மாட்டார் – கருணாநிதி – பல வழக்குகள்.
  4. உடல்நிலை / உடல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடத்தில் சான்றிதழ் பெற்று தள்ளி வைப்பர், பிறகு அவை வராது.
  5. அப்படி வந்தால் மாஜிஸ்டிடேட் / நீதிபதி கதி என்னாகும் என்று அவர்களுக்கேத் தெரியும்.

இதுபோல, இந்த மாபெரும் “விஷில் புளோயர்”, திடீரென்று விசிலை ஊதாமல் அமைதியாக இருந்தது வியப்பிலும் வியப்பே! முன்பிணை நிராகரிக்கப் பட்டதும் சரண்டர் ஆகியிருக்க வேண்டும், ஆனால், சட்டத்தை மதிக்காமல், ஓடி ஒளிந்து, திருட்டுத்தனமாக வாழ்ந்து, இப்பொழுது சரண்டர் ஆகியிருப்பது, குற்ற உணர்வு, குற்ற மனப்பாங்கு, இவற்றைக் காட்டுவதாக உள்ளது. போலிஸாரும்தேடாமல், கைது செய்யாமல் அல்லது “இருக்கும் இடம் தெரியவில்லை” என்று இத்தனை காலம் சும்மாயிருந்ததும் ஆச்சரியம் தான்!

வேதபிரகாஷ்

16-03-2012


 


[1] ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தையை, தனக்கு உபயோகப்படுத்தப் பட்டிருப்பது வேடிக்கைதான். அன்னா ஹஜாரே கூட அப்படித்தான் சொல்லப்படுகிறார்.

கொழுத்த திராவிட அரசியல் முதலாளிகள் தங்களது பணத்தை ஏன் மக்களுக்காக செலவிடக்கூடாது?

ஜூலை 10, 2011

கொழுத்த திராவிட அரசியல் முதலாளிகள் தங்களது பணத்தை ஏன் மக்களுக்காக செலவிடக்கூடாது?

 

பத்மநாபசாமி கோயில்-புட்டபர்த்தி ஆசிரம சொத்துகள்: மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்-வீரமணி[1]: இந்து விரோதியான திக-வீரமணி  இவ்வாறு சொல்லியுள்ளது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவில் உள்ள கோயில் சொத்துகள், புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்களின் சொத்துகளை மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும், மக்கள் அளித்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாட்டில் இந்தியாவில் உள்ள முதலாளித்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

 

  1. 1.   ஒன்று, கோயில்களில் உள்ள கடவுள் அவதாரங்களின் அள்ளக் குறையாத, முதல் போடா மூலதனப் பெருக்கம் கோடி கோடியாக கொட்டிக் கொண்டு இருப்பதும், அங்கே அதைக்கோயில் பெருச்சாளிகள் கொள்ளையடிப்பதும் ஒரு வகையான விசித்திர முதலாளிகள், கடவுள்கள்.
  2. 2.   இரண்டு, பிறவியினால் எவ்வித உழைப்பும் இன்றி, உயர்ஜாதி, ஆண்டவனின் முகத்தில் பிறந்த ஜாதி என்று முத்திரைக் குத்திக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தர்ப்பையும், பஞ்சாங்கத்தையுமே மூலப் பொருளாகக் கொண்டு, பெரும்பாலான அடிமைப்படுத்தப்பட்ட மக்களையே சுரண்டிக் கொழுக்கும் பிறவி முதலாளிகள்.
  3. 3.   மூன்று, மூலதனம் போட்டு தனது மூளை உழைப்பு, சுரண்டல் புத்தியைக் கூர்மையாக்கி தொழிலாளர்களின் உழைப்பை மூலதனமாகக் கருதாமல், அதற்கு ஏதோ ஒருவகைக் கூலி மட்டும் கொடுத்து, அதை விலை உயர்வு மூலம் ஒரு கையில் கொடுத்ததை, மறுகையில் பிடுங்கிக் கொள்ளையடிக்கும் முதலாளிகள் மனித முதலாளிகள்

 

இவர்களை ஒழிப்பது, மற்ற மேலே சுட்டப்பட்ட இருவகை முதலாளிகைளயும் ஒழிப்பதை விட எளிது ஆகும்! ஒரு அவசரச் சட்டம் போட்டுக்கூட, பணக்கார முதலாளிகளிடம் இருக்கும் பணம், சொத்துகளை அரசுகளால் எடுத்துக்கொள்ள முடியுமே அவை உண்மையான சமதர்ம அரசுகளாக இருந்தால். ஆனால், கோயில், மதம், உயர் ஜாதி இவைகளிடம் நெருங்குவதற்கு எக்கட்சி அரசானாலும் துணிவதில்லை”.

 

கருணாநிதியின் சிதம்பரக் கொள்ளை: வீரமணி சொல்கிறார், “சிதம்பரம் கோயிலில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் தீட்சதர் கூட்டத்தால் சுரண்டப்பட்ட மக்கள் தந்த, தருகின்ற வருமானம், மன்னர்கள் விட்டுச் சென்ற சொத்துகளைக் காப்பாற்ற பல அரசுகள் முயன்றும் கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. அரசால்தான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் ஆதிக்கத்தின்கீழ் அதன் வருமானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதத் திருமேனிகள் கூட்டம் வழக்குப் போட்டது; அது தள்ளுபடி செய்யப்பட்டு, அதன் மீது மேல்முறையீட்டினை (அப்பீல்) உச்சநீதிமன்றத்தில் செய்துள்ளனர்! வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. (புதிய அரசு அதில் விட்டுக் கொடுத்தால் அது மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது உறுதி!)

 

“ஆந்திராவில் புட்டபர்த்தி சாய்பாபாவின் மடத்தின் சொத்துகளை நிர்வகிப்பது முதல், பல பிரச்சனைகளில் சண்டைகள் பல மாதங்களாக சில ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளன. சாய்பாபாவின் மரணத்திற்குப்பின் அங்கே இருந்த தங்கம், வைரம், ரூபாய் நோட்டுகள் என்று பல லட்சம், பல கோடிக்கணக்கில் அவை கடத்தப்பட்டு, ஆந்திர அரசே அதுபற்றி புலன் விசாரணைகளை நடத்தும் நிலை உள்ளது! மடத்திலிருந்து லாரியில் கடத்திச் சென்றுள்ள பணம், தங்கம், வைர நகைகள் பிடிபட்டதாக செய்திகள் வந்தவைகளை மீடியாக்கள் பெரிதும் உயர் ஜாதி ஊடகங்கள் அமுக்கி வாசித்தன.

 

ஒரு வார இடைவெளிக்குப் பின்னர், அது சம்பந்தப்பட்ட தமிழ்நாட்டு உயர் ஜாதி தொழிலதிபர் ஒருவர், அந்த ரொக்கம் ஏதோ, பாபா சமாதி கட்ட, ஒப்பந்தக்காரருக்கு, யாரோ கொடுத்ததாக ஒரு பேட்டி கொடுத்தார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டார்கள்; ஏன் உடனே செய்யவில்லை? பிடிபட்ட நேரத்தில், பிடிபட்டவர்தானே அப்படி வாக்குமூலம் கொடுத்திருக்க வேண்டும்? பிறகு அதிலிருந்து மீள்வதற்கே இப்படி ஒருஅற்புத யோசனைஅறிவுரை நிபுணர்களால்அவாளுக்குசொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும்! தோண்டத் தோண்ட வெளிவரும் புதையல்போல, பாபா அறையிலிருந்து தங்கக் குவியல்கள் வந்தவண்ணம் உள்ளதாம்! செய்தி ஏடுகளால் மறைக்க முடியாது சிலவற்றை வெளியிடுகின்றன. பிரசாந்தி நிலையத்தில் இருந்து ஏராளமான ரொக்கப் பணமும், நகைகளும் கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற சில வாகனப் பரிசோதனைகளின்போது ரூபாய் 10 கோடி மற்றும் 35 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது கடத்திச் செல்லப்பட்டவை என்று ஆந்திர போலீசார் கருதுகிறார்கள். கடந்த முறை யஜுர் வேத மந்திர் அறையில் கண்டெடுக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் மதிப்பிடப்பட்டு, அவை வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டதாம்!

 

மீண்டும் அதே யஜுர்வேத மந்திரில் அனந்தப்பூர் மாவட்ட இணை ஆட்சியர் அனிதா ராமச்சந்திரன் தலைமையிலான அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள், ரூபாய் ஒரு கோடிக்கு மேல் உள்ளது. சாய்பாபா அறை, அவரது உதவியாளர் சத்யஜித்தின் அறை, சிறப்பு அலுவலக அறை, உணவு அருந்தும் அறை ஆகியவைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன! சாய்பாபா அறக்கட்டளையின் உண்மை சொத்துகளின் மதிப்பு பற்றி அதன் நிர்வாகிகள் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள சாய்பாபா பக்தர்களே கேட்கும் அளவுக்கு நிலைமை அங்கு மோசமாகியுள்ளது எனத் தெரிய வருகிறது!

 

பத்மநாபசாமி கோயிலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்துகள்திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயில் அறைகள் திறக்கப்பட்டு நகைகள் எண்ணப்பட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் போட்ட வழக்கில், இரண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அய்வர் ஆக எழுவர் கொண்ட குழுவினரின் முன்னிலையில் அது திறக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என்று இடைக்கால ஆணை வழங்கப்பட்டதையொட்டி, கடந்த சில நாள்களாக அங்கே ஆறு பாதாள அறைகள் திறக்கப்பட்டதில், இது வரை கண்டு எடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது!

 

திருப்பதிகோயிலையும் மிஞ்சும் சொத்து இதற்கு இருக்கும் போல் உள்ளது! “கேரள மாநில பட்ஜெட்டையும் தாண்டும் சொத்து இந்த ஒரு கோயிலிலேயே முடக்கப்பட்ட மூலதனமாக கிடக்கிறது! இவைகளில்கோயில் பெருச்சாளிகள்கொண்டு சென்றவை எவ்வளவோ? யாருக்குத் தெரியும்? குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வருமானம், சபரிமலை அய்யப்பன் கோயில் வருமானம் இப்படி பலவகை வருமானங்கள் மூலம் கிடைக்கும் தொகை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், எவ்வளவு அரசு கல்லூரிகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை எழுப்பலாம்! நமது மத்திய அரசு, லாபம் தரும் பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பதை நிறுத்திவிட்டு இந்த மூலதனங்களை எடுத்துப் பயன்படுத்தலாமே! கோயில் பூஜை, புனளிகாரம் என்பவைகளால் வழக்கம்போல் நடைபெறுவதற்குப் பதிலாக இம்மாதிரி அரசு எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவழிப்பது எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாதே! அரசியல் சட்டத்தின் 25,26 என்ற பிரிவுகளைக் காட்டி சிலர் சட்டப் பூச்சாண்டி காட்டலாம். அதுபற்றிக் கவலைப்படாமல் துணிந்து முடிவு எடுத்தால் அப்பிரிவுகளிலேயே அதற்கு தாராளமாக இடம் உள்ளது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! மக்கள் கொடுத்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறு ஏதும் இல்லையே! மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துமாக!”, இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

மார்க்சீயவாதி சரித்திர ஆசிரியர் கூறியுள்ள கருத்து: கண்டுபிடிக்கப் பட்டுள்ள விலையுயர்ந்த பொர்ருட்கள் எல்லாம் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று ராஜன் குருக்கள் என்ற மார்க்சீயவாதி சரித்திர ஆசிரியர் கூறியுள்ளார்[2]. அரசு சார்பில் மஹாத்மா காந்தி பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருக்கும் இவர், ஒரு அடிப்படை கம்யூனிசவாதி. அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் அரிய சிலைகள் முதலியவற்றிற்கு, இந்தியாவில் போதிய அளவில் பாதுகாப்பு இல்லை. மேலும் கருத்து சொன்ன சரித்திர ஆசிரியரைப் போன்றவர்களே பல சட்ட விரோதமான வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர். மிகவும் பழமையான விலைமதிக்கமுடியாத சிலைகள், நாணயங்கள் முதலியவை 100 ஆண்டுகளுக்கும் குறைவானக் காலத்தையுடையது என்று சான்றிதழ் கொடுத்து, கடத்தல் பேர்வழிகளுக்கு உதவியுள்ளார்கள். ஃபிளின் என்ற ஆஸ்திரேலியர் விஷயத்தில் பலர் சம்பந்தப்பட்டுள்ளதை முன்னரே என்னால் எடுத்துக் காட்டப்பட்டது[3]. ஆகவே அரசையும், இம்மாதிரியான நாத்திகவாதிகள், கம்யூனிஸ்டுகள், குறிப்பாக இந்து-விரோதவாதிகளை நம்ப முடியாது. இங்கு இப்பொழுதைய ராணி, அவை கோவிலுக்குள்ளேயே வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது[4]. ஆர். நாகசாமி ஏன் அவற்றை அருங்காட்சியகத்தில் வைக்கக் கூடாது என்று விளக்கியுள்ளார்[5]. தான் லண்டனில் பத்தூர் நடராஜர் விக்கிரம் சார்பாக, நீதிபதி முன்பு, கோவில் விக்கிரகம் கோவிலில் முறைப்படி வைக்கப்பட்டு, அதற்கான பூஜைகள் முதலியவை செய்யப்படவேண்டியுள்ளதால், அது அருங்காட்சியகத்தில் வைக்கக் கூடாது என்று எடுத்துக் காட்டியதை குறிப்பிட்டுள்ளார். அதாவது, அதுபோலவே, இந்ந்கைகள் முதலியவை, விஷ்ணுவிற்கு சாத்தப் பட்டு. அதற்கான பூஜைகள், கிரியைகள் முதலியவைச் செய்யப்படவேண்டும். இத்தனை ஆண்டுகள் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் அவை மறைத்து வைக்கப் பட்டிருந்தன.

 

நாகங்களினால் பாதுகாத்து வரப்படும் அறையா? “B” என்று அடையாளமிடப்பட்டுள்ள அறையைத் திறந்தால், அரேபியக் கடல் நீரே உள்ளேவரக்கூடும் என்று ஒரு கோவில் அதிகாரி எச்சரித்தார். 20ம் நூற்றாண்டில் ஒருமுறை, ராஜவம்சத்தனர் அவ்வாறு திறக்க முயற்சித்தபோது, கடல் அலைகளின் ஆரவார சத்தம் கேட்டது என்று அவர் கூறுகிறார். அதுமட்டுமல்லாது, வாசலில் இருக்கும் ஒரு நாகப்பாம்பின் கல்வெட்டைக் காண்பித்து, அது எச்சரிக்கைச் சின்னம் என்பதையும் எடுத்துக் காட்டி, அதனை திறப்பதால் ஏற்படும் அபாயத்தை எச்சரித்தார்[6]. நாகங்களினால் ஏற்படும் சப்தத்தைக் கருத்திற்க் கொண்டு பயந்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன[7]. எது எப்படியாகிலும், உச்சநீதி மன்றம் அதனைத் திறக்க வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. அகில-உலக ஊடகங்களுக்கும் இதன் கண்டுபிடிப்பில் தலை-கால் தெரியவில்லை, விமர்சித்துத் தள்ளுகின்றன[8].

 

சாய்பாபாவிடம் கருணாநிதி காலில் விழுந்து கெஞ்சியதை வீரமணி எப்படி மறந்தார்? கருணாநிதி போன்ற மக்கள் கொள்ளைக்காரர்களிடமிருந்து பணத்தை எடுத்து மக்களுக்கு பயன்படச் செய்யவேண்டும் என்று ஏன் வீரமணி போன்றோர் சொல்லவில்லை என்று தெரியவில்லை. கடந்த 10-20-30 ஆண்டுகளில் சாதாரணமாக இருந்த திமுகவினர், இன்று ஆயிரக் கணக்கான கோடிகளுக்கு அதிபர்களாக இருக்கிறார்கள் – வீடுகள், பங்களாக்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், தோட்டங்கள், பண்னை வீடுகள், தொழிற்சாலைகள் என்று பட்டியல்கள் நீளுகின்றன. இதை அவர்கள் மக்களுக்காக செலவிடுவார்களா? அத்தகைய சாய்பாபா கால்களில் விழுந்துதான், அதே கருணாநிதி, சென்னைக் குடிநீருக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டதை வீரமணி மறந்து விட்டார் போலும்! அப்பொழுது மட்டும், பணம் அங்கிருந்து வர வேண்டுமா? ஏன் கருணாநிதியே தன்து பணத்திலிருந்து கொடுத்து, அந்த நல்ல காரியத்தைச் செய்திருக்கலாமே? இலவசம் என்று வரும்போது, அரசு அதாவது மக்கள் வரிப்பணம் என்றாதால் தாராளமாக வாரி இரைக்கின்றனர். ஆனால், சொந்த பணம் என்று வரும்போது, அத்தகைய தாராளம், தானம், தர்மம் முதலியவை மனத்திற்கு வருவதில்லை!


[3] Mr. V.J.A. Flynn and Mr. Shyam … vs Union Of India (Uoi) And Ors. on 26 November, 2002

Equivalent citations: 2003 (66) DRJ 381, 2003 (86) ECC 129; http://www.indiankanoon.org/doc/924272/

2004-ITS-46-SC-(ELT-163/A59)-V.J.A. Flynn v. U.O.I., dated 14-4-2003

Dr. V.J.A. Flynn vs S.S. Chauhan And Another on 4 March, 1996; Equivalent citations: 1996 CriLJ 3080, 1996 (37) DRJ 195, ILR 1998 Delhi 426; http://208.79.211.6/doc/246782/

முத்துப் பேட்டை விநாயகர் சிலை ஊர்வலம்-தலையிட விரும்பாத சென்னை உயர் நீதிமன்றம்!

செப்ரெம்பர் 9, 2010

முத்துப் பேட்டை விநாயகர் சிலை ஊர்வலம்தலையிட விரும்பாத சென்னை உயர் நீதிமன்றம்!

முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம்: திருவாரூரில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த பிரச்சனை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் வருவது. எனவே, அந்த ஊர்வலம் குறித்து வருவாய்த் துறையினரும், போலீஸ் அதிகாரிகளும் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது[1].

விநாயகர் ஊர்வலம் நடத்துபர்களின் சார்பில் மனு தாக்குதல்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஜாம்பவான் ஓடையைச் சேர்ந்த பி.ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது….. “எங்கள் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாங்கள் பல ஆண்டுகளாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகிறோம். இந்த விநாயகர் சிலை ஊர்வலத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுச் செயலாளராக நான் செயல்படுகிறேன். விநாயகர் சிலை ஊர்வலப் பாதை ஜாம்பவான் ஓடையில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவிலில் தொடங்கி முத்துப்பேட்டை, ஓடைகரை, டி.டி.பி.சாலை, ஆசாத் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பி.கே.டி.சாலை ஆகியவற்றின் வழியாக இறுதியில் பேட்டை சிவன் கோவிலை அடைந்து அங்குள்ள கோரையாற்றி்ல் கரைக்கப்படுகின்றது. இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாக ஊர்வலம் சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 1993-ம் ஆண்டு ஊர்வலத்தின் போது சில சமூக விரோதிகள் கல்வீசித் தாக்கினர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடத்தி வருகின்றோம்.

முஸ்லீம்கள் தொடர்ந்த வழக்கின்படி புதிய ஊர்வலப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது: “கடந்த 2009-ம் ஆண்டு முகமது சிப்லி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை அடுத்து விநாயகர் ஊர்வலத்துக்கு புதிய ஊர்வல பாதையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய ஊர்வலப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊர்வலப் பாதையில் அங்காள அம்மாள் கோவில், வெள்ளை விநாயகர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், பேட்டை சிவன் கோவில் ஆகியவை இடம் பெறவில்லை. மேலும், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அதிகாரிகள் நிர்ப்பந்திக்கும் பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, நாங்கள் ஏற்கனவே ஊர்வலம் நடத்தி வந்த பழைய ஊர்வலப் பாதையில் செல்ல எங்களை அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்”,  என்று கூறியிருந்தார்.

கலெக்டர் கலந்து ஆலோசித்து ஊர்வலப் பாதையை பற்றி முடிவு செய்யலாம்[2]: இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளதாவது, “இந்த பிரச்சனை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் வரும். எனவே, இந்த விவகாரத்தில் வருவாய்த்துறையினரும், போலீஸ் அதிகாரிகளும் இறுதி முடிவு செய்வது தான் சரியாக இருக்கும். மாவட்ட நிர்வாக விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. விநாயகர் சிலை ஊர்வலப் பாதை தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அனைத்து தரப்பினரையும் அழைத்துக் கூட்டம் நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலப் பாதை பற்றி முடிவு செய்ய வேண்டும். மொத்தத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன், கலெக்டர் கலந்து ஆலோசித்து ஊர்வலப் பாதையை பற்றி முடிவு செய்யலாம்[3]. அந்த பகுதியில் மத நல்லிணக்கம் ஏற்படும் வகையில் கலெக்டரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்”, என்று உத்தரவிட்டனர்[4].

விநாயகர் சதுர்த்தி ஊர்வல விஷயத்தில் சென்ற வருட தீர்ப்பு: படிப்பினைகள்: சென்ற வருடம் முத்துப்பேட்டையில், விநாயகச் சதுர்த்தி ஊர்வலம் நடந்தபோது, முஸ்லீம்கள் பல சரத்துகளைப் போட்டதாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு, ஒருவழியாக, மாற்றுப் பாதையில் ஊர்வலம் நடந்துள்ளது. ஆனால், முஸ்லீம்கள் நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளது என்று ஒரு வழக்கைத் தொடுத்தனர். விவரங்களுக்கு, கீழே கட்டத்தில் உள்ளவற்றைப் பார்க்கவும்.

நீதிமன்ற அவமதிப்பு இல்லை[5]: விசாரித்து நீதிபதி, இந்த விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு என்று ஒன்றும் இல்லை. மேலும் நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதத்தை முழுவதுமாகவோ அல்லது சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் முறையிலோ உபயோகப்படுத்தக் கூடாது. நீதிமன்றத்தின் மரியாதை மற்றும் சட்டத்தின் மேன்மை இவற்றைக் காப்பதற்க்காகத்தான், நீதிமன்ற அவமதிப்பு என்பதைத் தண்டிக்க உபயோகப்படுத்தவேண்டும், மேலும் பாதிக்கப்பட்டவருக்கு அவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தியவர் மற்றும் நீதிமன்றத்திற்கு இடையே, நீதிமன்றத்தை தனது அதிகாரத்தை உபயோகப்படுத்துன்படி பிடிவாதம் பிடிக்க உரிமை இல்லை.

B.Mohamad Shibli vs Mr.Sripathy on 25 November, 2009

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

Dated : 25.11.2009

Coram :

THE HONOURABLE MR.JUSTICE K.RAVIRAJA PANDIAN

and

THE HONOURABLE MR.JUSTICE M.M.SUNDRESH

Contempt Petition No.1116 of 2009

B.Mohamad Shibli Petitioner

v.

1. Mr.Sripathy,

The Chief Secretary,

Government of Tamilnadu,

Secretariat, Fort St. George,

Chennai 9.

2. Mr.Chandrasekaran,

The District Collector,

Thiruvarur, Thiruvarur District.

3. Mr.Praveen Kumar Abinav,

The Superintendent of Police,

Thiruvarur, Thiruvarur District. Respondents

Contempt Petition filed under sections 10 and 12 of the Contempt of Courts Act (Act No.70 of 71), praying to punish the respondents for their wilful disobedience of the order dated 26.08.2009 made in Writ Petition No.17277 of 2009.

For petitioner : Mr.V.Kasinatha Bharathi

For respondents : Mr.R.Thirugnanam, Special Government Pleader

JUDGMENT  (Judgment of the Court was delivered by K.RAVIRAJA PANDIAN, J.

6………………………………….The petitioner cannot impose or dictate terms on the district administration, which is well advised than anyone-else. The action of the respondents, in our view, cannot at any stretch of imagination, be regarded as one deliberately and contumaciously flouting the order of the Court in order to haul them up for contempt.

9. The weapon of contempt is not to be used in abundance or misused. Power to punish for contempt of Court is to be exercised for maintenance of the court’s dignity and majesty of law. Further, an aggrieved party has no right to insist that the court should exercise such jurisdiction as contempt is between a contemner and the court. (vide R.N. Dey v. Bhagyabati Pramanik , (2000) 4 SCC 400).

10. For the reasons stated above and in the light of the judgments cited supra, the contempt petition is closed.


[1] http://thatstamil.oneindia.in/news/2010/09/09/vinayakar-idol-procession-affair-hc.html

வியாழக்கிழமை, செப்டம்பர் 9, 2010.

[2] http://www.thehindu.com/news/states/tamil-nadu/article621524.ece

[3] http://www.hindu.com/2010/09/09/stories/2010090953230400.htm

[4] http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=14985&id1=4

[5] http://indiankanoon.org/doc/688785/