Archive for the ‘வக்கீல்’ Category

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

ஓகஸ்ட் 13, 2021

தமிழக அகழாய்வுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் அரசியலாகப் படுகின்றனவா? நீதிபதிகள் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் பற்றிய கேள்விகள் கேட்பது தகவல்களை அறியவா, பிறகு, தெரியாமல் ஏன் கேள்விகள் கேட்கப்படுகின்றன? (2)

அகழாய்வு பற்றி நிறைய வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்திய தொல்துறை கட்டிடங்கள், சிற்பங்கள், கோவில்கள் போன்றவை, தூரமான இடங்களில் தனியாக, பாதுகாப்பு இன்றி இருப்பது தெரிந்த விசயமே.
இவர் சென்று பார்க்கும் போது கூட அந்நிலையை அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட அதிகாரிகள், ஆய்வாளர்கள் தான், எப்பொழுதும் குழிகள் அருகிலேயே இருக்கின்றனர்.

அகழாய்வு, கல்வெட்டுகள் முதலியவை நடக்கின்ற வழக்குகள்தீர்ப்புகள், தொடரும் முறைகள்: தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பற்றி எழுத்தாளர் எஸ்.காமராஜ்[1], மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்[2]. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவுகளை மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்து இருந்தது[3]. இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் முன்பு 10-08-2021 அன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தொல்லியல்துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகினர். தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் அவர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான திராவிடன் கிளை அலுவலகம் சென்னையில் அமைக்கப்பட்டது: மத்திய அரசுத்தரப்பில், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டது[4]. 4 தமிழ் கல்வெட்டியலாளர்களும் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது[5]. “சென்னையில் சமஸ்கிருதத்திற்கென கல்வெட்டியலாளர்கள் உள்ளனரா? எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசுத்தரப்பில் 1 சமஸ்கிருத கல்வெட்டியலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகளின், இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்த கேள்விக்கு, மொத்தமாக –

  • 86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டிருப்பதாகவும்,
  • அவற்றில் 27,000 தமிழ் கல்வெட்டுக்கள்,
  • 25,756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை
  • 12,000 கல்வெட்டுக்கள் பெர்ஷியன் மற்றும் அராபிக் மொழிக்கானவை,
  • 9,400 கல்வெட்டுக்கள் கன்னட மொழிக்கானவை,
  • 7300 கல்வெட்டுக்கள் தெலுங்கு மொழிக்கானவை,
  • 225 கல்வெட்டுக்கள் மலையாள மொழிக்கானவை என பதிலளிக்கப்பட்டது.

இதிலிருந்தே, தமிழில் 60,000 கல்வெட்டுகள் உள்ளன என்பது பொய்யாகிறது. 27,000 தமிழ் எனும் போது, 57,000 தமிழ் அல்லாதது என்றாகிறது. எனவே, இத்தகைய வாதம், வழக்கு, செய்திகள் எல்லாமே பொய் என்றாகிறது.

அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை?: அதற்கு நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. அப்படியாயினும் அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்[6]. தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[7]. அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது[8]. அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? என கேள்வி எழுப்பினர்[9]. நீதிபதிகள் இவ்வாறு கேட்டனரா அல்லது செய்திகள் அவ்வாறு வந்துள்ளனவா என்று தெரியவில்லை. இருப்பினும், இத்தகைய கேள்விகள் கேட்டுள்ளதும், விசித்திரமாக உள்ளது. ஏனெனில், நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்கும் முன்பே, அவற்றைப் பற்றி நன்றாகப் படித்து கொண்டு வந்து, வாதாடும், வக்கீல்களை குறுக்கு விசாரணை செய்யும் அளவுக்கு இருபார்கள், இருக்கிறாற்கள். மாறாக, இவ்வாறு, கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது, திகைப்பாக இருக்கிறது.

மைசூருவில் வைத்தது ஏன்?: அதற்கு நீதிபதிகள், “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது. நாடு முழுவதும் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. அந்த கல்வெட்டுகளை மைசூருவில் ஏன் வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுக்களை வைக்க நடவடிக்கை எடுக்கலாமே? 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கு என கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? அதை திராவிட மொழி கல்வெட்டுகள் என கூறுவது ஏன்?,” எனவும் கேள்வி எழுப்பினர்[10]. அதற்கு மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “இது அரசின் கொள்கை முடிவு’’ என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இருப்பினும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக்கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு மிக முக்கியமான பணியாக இது அமையும்” என்றனர்[11].

விளக்கம் அளிக்க உத்தரவுவிரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்: மேலும், தொல்லியல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட 758 பணியிடங்கள் எதற்கானவை என்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்[12]. இதுகுறித்து தொல்லியல்துறையின் கல்வெட்டியல் பிரிவு அதிகாரி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை இன்றை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்[13].  “கல்வெட்டியல் துறையை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது போல் தெரிகிறது,” என்று நீதிபதிகள் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே அரசின் ஆவணங்கள் எல்லாம் வெளிப்படையாக உள்ளன. அவற்றையெல்லாம் கனம் நீதிபதிகள் படித்திருப்பார்கள். அந்நிலையில், இத்தகைய கேள்விகள் எழுப்பப் படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அரசியல் ஆதரவு நியமன நீதிபதிகள் அவ்வாறு சித்தாந்த ரீதியில் சார்புடையவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-08-2021


[1] WP(MD) 1174/2021; KAMARAJ MUTHALAKURICHI KAMARAJ.S VS THE UNION OF INDIA AND 4 OTHERS; M/S.ALAGUMANI.RRAMESHKUMAR. S 8486484817; M/S. VICTORIA GOWRI.L. ASGIMEMO OF APP FILED FOR R1 andAMP; R2 COUNTER AFFIDAVIT-USR-9534/21 FOR R 1 2 4 and AMP; 5 AGP TAKES NOTICE FOR R3, in the COURT NO. 1 before The Honourable Mr Justice N. KIRUBAKARAN and The Honourable Mr Justice M.DURAISWAMY

[2] தினத்தந்தி, 60 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழி கல்வெட்டு என கூறுவது ஏன்? மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி, பதிவு: ஆகஸ்ட் 10,  2021 04:35 AM.

[3] https://www.dailythanthi.com/News/State/2021/08/10043535/Why-is-it-said-that-60000-Tamil-inscriptions-are-Dravidian.vpf

[4] புதியதலைமுறை, தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? – நீதிபதிகள், தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 04:04 PM.

[5] https://www.puthiyathalaimurai.com/newsview/112414/What-is-the-need-to-appoint-an-inscription-scholor-for-Sanskrit-language-in-Tamil-Nadu—-Judges

[6] புதியதலைமுறை, அதிக கல்வெட்டுகள் உள்ள தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :10,Aug 2021 05:41 PM

[7] https://www.puthiyathalaimurai.com/newsview/112628/actor-Vijay-Antony-Next-is-Mazhai-Pidikatha-Manidhan-Directed-by-Vijay-Milton.html

[8] புதியதலைமுறை, தமிழ் கல்வெட்டுகளை திராவிட மொழிக்கானவை என அடையாளப்படுத்துவது ஏன்? – நீதிபதிகள் கேள்வி, தமிழ்நாடு,    Web Team Published :09,Aug 2021 03:55 PM

[9] https://www.puthiyathalaimurai.com/newsview/112412/Why-identify-60-000-Tamil-inscriptions-as-Dravidian—-Judges

[10] பாலிமர்.செய்தி, தமிழ்க் கல்வெட்டுகளை ஏன் மைசூரில் வைத்திருக்க வேண்டும்? – நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி, August 09, 2021 06:02:59 PM.

[11] https://www.polimernews.com/dnews/152481

[12] தமிழ்.ஒன்.இந்தியா, அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் இல்லை?.மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி!, By Rayar A Updated: Wednesday, August 11, 2021, 7:30 [IST]

[13] https://tamil.oneindia.com/news/chennai/why-is-the-tamil-language-with-so-many-inscriptions-not-important-tn-hc-to-centre-429576.html

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

ஜூன் 2, 2016

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961 திருத்தம், வழக்கறிஞர்களின் நிலை, நிதர்சனம் மற்றும் நிகழ்வுகள்!

indian advocates Act and professional ethics 1961

திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகள் நீதித்துறை சீரழிந்துள்ள நிலையைக் காட்டுகிறது: நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது[1]. அதாவது அத்தகைய பழக்க-வழக்கங்களை வக்கீல்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதற்கு முன்பாக, இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துவந்தது[2]. ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, சென்னை உயர்நீதிமன்றமோ, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமோ வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்[3]. சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது[4]:

The Adocates Act, 1961 - S-341961ம் ஆண்டு வழக்கறிஞர் சட்டத்திருத்தம்: வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34(1) [Section 34(1) of the Advocates Act, 1961], அந்த சட்டத்தின் திருத்தம் கொண்டுவர ஐகோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அமைதியாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக வழக்கறிஞர் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கொண்டுவந்துள்ளது[5]. இதற்கேற்றபடி புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன[6]. வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-ஏ-வின் கீழ் [of the Advocates Act] குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட சில காலத்துக்கோ வக்கீல் செய்வதில் இருந்து நீக்கப்படுவார்கள்[7]. அதாவது கீழ்கண்ட குற்றங்களை செய்யும் வக்கீல்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்[8].

The Adocates Act, 1961 - S-14குற்றச்செயல் என்ன?[9]: இனி வக்கீல்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் காரியங்களில் எவையெல்லாம் குற்றம் என்று அடையாளம் காணப்படும் என்று விளக்கப்பட்டுள்ளது.

* நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிப்பவர். நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது என்று பொய் சொல்பவர்.

* நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்துபவர்கள். சேதப்படுத்தி அழிப்பவர்கள்.

* நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர்.

* நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர்.

* நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[10]. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள்.

* குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.

Judge injured during a clash with policemen, inside Madras High Court in Chennai. PTI Photo by R Senthil Kumarஇத்தகைய திருத்தப் பட்ட சட்டப் பிரிவுகளிலிருந்து அறியப்படுபவை: சட்டங்களை மீறிய வக்கீல்கள் இருந்துள்ளார்கள் இருக்கிறார்கள் என்பது, இந்த திருத்தப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

  1. நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து வக்கீல்கள் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  2. நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது, சாதகமாக தீர்ப்பு வாங்கிக் கொடுக்கிறேன் என்று வக்கீல்கள் பொய் சொல்லியிருக்கின்றனர்.
  3. நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்தப்பட்டுள்ளன, சேதப்படுத்தப்பட்டு அழித்தவர்கள் உள்ளனர். அதாவது, போர்ஜரி / கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  4. நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர் இருந்திருக்கின்றனர். நீதிபதிகளில் கால்களை ஒடிப்பேன் என்றெல்லாம் பேசியிருந்தது……..முதலியவற்றை கவனத்தில் கொள்ளலாம்.
  5. நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர் இருக்கிறார்கள்.
  6. நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்[11]. தமிழக நீதிமன்றங்களில், இவை சாதாரணமாக ஏற்பட்டுள்ளன.
  7. நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள். இவையும் சகஜமாக இருக்கின்றன
  8. குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.
  9. நீதிமன்ற வளாகங்களில் கொலைகள் நடந்திருக்கின்றன.

 © வேதபிரகாஷ்

 02-06-2016

[1] நியூஸ்.7.டிவி, வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றமே தடைவிதிக்கும் புதிய சட்டதிருத்தம், May 27, 2016; http://ns7.tv/ta/court-bans-advocates-who-diobeys-court.html

[2] பிபிசி, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம், மே.27, 2016.

[3] http://www.bbc.com/tamil/india/2016/05/160527_actiononlawyers

[4] தினத்தந்தி, வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம் ஐகோர்ட்டு அறிவிப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, மே 28,2016, 4:45 AM IST, பதிவு செய்த நாள்: சனி, மே 28,2016, 12:46 AM IST.

http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வழக்கறிஞர்களுக்கு கடுமையான புதிய ஒழுங்கு விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு, By: Mathi, Published: Saturday, May 28, 2016, 10:33 [IST].

http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[6] According to the new rules, the court has power under 14-A of Advocates Act to debar advocates who indulge in activities such as trying to influence a judge or participates in a procession inside court campus or holds placards inside the court hall, among others. The notification further said the court shall have the power to initiate action against misconduct under Rule 14-A .

http://www.deccanherald.com/content/549028/rules-advocates-act-amended.html

[7] “In exercise of powers conferred by Section 34(1) of Advocates Act, the court makes the following amendments to the existing rules. The amendments shall come into force with effect from the date of publication,” the notification released by the Registrar General of the High Court, said.

[8] http://www.dailythanthi.com/News/State/2016/05/28004620/High-Court-notice-to-ban-amendment.vpf

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-high-court-lays-new-disciplinary-rules-advocates-

[10] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

[11] இதற்கு தமிழகத்தில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. ஜூன் 2010ல் தமிழ் நீதிமன்ற வழாக்காடு மொழியாக்க வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டம் நடத்தி கைதான விவகாரம்.

http://www.ndtv.com/india-news/tamil-nadu-politics-over-court-language-12-lawyers-arrested-421255

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வக்கில்கள் ஆர்பாட்டம், கலாட்டா, போராட்டம் முதலியவற்றை ஏன் செய்யவேண்டும்?

செப்ரெம்பர் 23, 2015

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வக்கில்கள் ஆர்பாட்டம், கலாட்டா, போராட்டம் முதலியவற்றை ஏன் செய்யவேண்டும்?

Law-graduates bar council enrollment

Law-graduates bar council enrollment

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது (22-09-2015): தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தால், 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று உத்தர விடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் 22-09-2015 அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது[1]: 2010-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பிறகு அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வழக்கறிஞராக தொடர்ந்து பணிபுரிய முடியும். தேர்ச்சி பெறாவிட்டால், வழக்கறிஞருக்கான பதிவு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன[2]. 2010ல் முதலில் நுழைவு தேர்வு அறிமுகப்பப்படுத்தியபோதே சிலர் எதிர்த்தனர், ஆனல், அது கட்டாயமாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டுவ்முதல் இது வரை அகில இந்திய பார் கவுன்சில் 8 தகுதித் தேர்வுகளை நடத்தியுள்ளது. பதிவு செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 2,495 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக வழக்கறிஞராக தொழில் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது[3].

Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday

Police personnel blocking members of MHAA from entering the Bar Council building during the protest, in the city on Friday

20-03-2015 அன்று பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கிய வழக்கறிஞர்கள்[4] சஸ்பென்ட்: 20-3-2015 அன்று சில வழக்கறிஞர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தைத் தாக்கினார்கள். அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[5]. மேலும், நீதிமன்ற அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் வி. மணிகண்டன் வதன் செட்டியார் [Manikandan Vathan Chettiar], ஆர். மதன்குமார் [R Madhan Kumar ] ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன[6]. அவர்கள் மீது வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது[7]. சென்ற வருடம் பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்துபோது, நீதிபதிகள் பேசியது, இப்பொழுது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest

Madras High Court lawyers form a human chain during an anti-Sri Lanka protest

வழக்கறிஞர்கள், தொழில் தர்மத்தை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது,” என, கூறினார்[8]: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று, பார் கவுன்சில் கட்டடத்தை திறந்து வைத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பேசியதாவது: வழக்கறிஞர்கள் பணி, நீதிபதிகள் பணியை விட முக்கியமானது. சமூகத்தில், இவர்களது பணி மிகவும் பொறுப்பு வாய்ந்தது.வழக்காடிகளுடன், வழக்கறிஞர்களின் உறவு பெரும் நம்பிக்கைக்கு உரியது. எனவே, வழக்கறிஞர்கள், நேர்மையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.சமூகத்திலும், நீதித் துறையிலும், முக்கிய பங்காற்றும் வழக்கறிஞர்கள் கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும். சமூக நீதிக்காகப் பணியாற்றும் வழக்கறிஞர்கள் பணி, சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்நிலையில், தொழில் தர்மத்தை மீறி, வழக்கறிஞர்கள் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது; அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நம்பிக்கை குறைவான எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது.சமூக சேவையின் ஒரு பகுதியாக, வழக்கறிஞர் பணியை கருத வேண்டும். வழக்கறிஞர்களுக்கு, பார் கவுன்சில் வகுத்துள்ள விதிகளுக்கு தலை வணங்கி, பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings

Lawyers in Coimbatore burn posters of Andhra chief minister Chandrababu Naidu on Thursday in protest against the killings

சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை[9]:  விழாவில் வாழ்த்துரை வழங்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பேசியதாவது: நீதிபதி நாகப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றிய போது, சென்னை சட்டக் கல்லூரியில், பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றினேன். தற்போதுள்ள சட்டக் கல்வியுடன், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, பார் கவுன்சில் உறுப்பினர்கள் முன்வர வேண்டும். வழக்காடிகளை எப்படி அணுகுவது, நீதிமன்றத்தில் எப்படி பேசுவது போன்ற, அடிப்படை பயிற்சிகளை, சட்டம் பயிலும்போதே, மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். இப்பணியை, சமூக சேவையாகக் கருதி, பார் கவுன்சிலின் மூத்த உறுப்பினர்கள், திறமையான இளம் வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர் தொழில் என்பது, பணம் சம்பாதிக்கும் வியாபாரம் அல்ல. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், பணம் தேவை என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், சட்டம் பயிலும் மாணவர்களை உரிய தகுதிகளுடன் உருவாக்குவதும், மூத்த வழக்கறிஞர்களின் கடமை.

In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen

In this February 19, 2009 file photo, lawyers hurl stones at policemen

வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்: நீதிபதி பானுமதி: இளம் வழக்கறிஞர்களுக்காக, பார் கவுன்சில், தொடர் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இதற்காக, சட்ட கமிஷன் நிதி அளிக்கிறது. இதைப் பயன்படுத்தி, இளம் வழக்கறிஞர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், கருத்தரங்குகளை பார் கவுன்சில் நடத்த வேண்டும். சென்னை பார் கவுன்சில் மூலம், வழக்கறிஞர்களுக்கு அளிக்கப்படும், குடும்ப நல நிதி, விபத்து காப்பீடு போன்றவை, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடுவதோடு, சமூக மேம்பாட்டுக்கும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்.

Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015

Advocates in Chennai protest contempt proceedings against two lawyers from Madurai on Wednesday 16-09-2015

நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்: கடந்த, 1928ல் துவங்கப்பட்ட சென்னை பார் கவுன்சில், பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது. நீதிமன்றம் கணினி போன்றது என்றால், அதன் மென்பொருள் போன்றவர்கள் வழக்கறிஞர்கள். மென்பொருள், சிறப்பாக இருந்தால் தான், நீதிமன்றம் என்ற கணினியும் நன்றாகச் செயல்படும்.சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அவர்களால், பெருந்தொகையை கட்டணமாகக் கொடுத்து, வழக்காட முடியாது. எனவே, சாதாரண மக்களை மனதில் கொண்டு, வழக்கறிஞர்கள் பணியாற்ற வேண்டும். நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.

A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter

A section of lawyers during a protest against Maharashtra governments ban on cow slaughter

நீதிபதிகளுக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷம் [செப்டம்பர்.17, 2015][10]: வக்கீல்கள் இப்பொழுதெல்லாம் போலீஸாருடன் சண்டை போடுவது, பொது இடங்களில் கலாட்டா செய்வது, போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கருப்புக் கோட்டு போடாலே, ஏதோ அவர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்து விடுகின்றன, யாரும் அவர்களை ஒன்றும் கேட்க முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு அந்து விடுகிறது. செப்டம்பர்.13, 2015 அன்று சென்னை உயர் நீதிமன்ற அரங்குக்குள், வழக்கறிஞர்களை அனுமதிக்காததால், நீதித்துறை மற்றும் போலீசாருக்கு எதிராக, வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். இதனால், உயர் நீதிமன்றத்தில், பரபரப்பு ஏற்பட்டது. கட்டாய, ‘ஹெல்மெட்’ உத்தரவைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள், ஊர்வலம் சென்று, நீதிபதிகளுக்கு எதிராக, கோஷம் எழுப்பினர். அதுமட்டுமல்லாது, கோர்ட்டு அறையில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையின் பாதுகாப்பு பணியை மத்திய போலீசாரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது[11].  மதுரையிலும் வக்கில்கள் கலாட்டா செய்து வருகிறார்கள்[12]. வக்கீல்கள் ஏற்கெனவே கட்சி, ஜாதி என்ற முறைகளில் பிரிந்து கிடக்கிறார்கள். இதனால், பரபட்சமற்ற முறையில் வழக்காடுவது, வழக்குகளை நடத்துவது, தம்மை வந்தவர்களுக்கு உதவுவது போன்ற குணங்கள் எல்லாம் மறைந்து விட்டன. அதாவது, சட்டத்தைக் காக்க வேண்டிய வக்கில்களே, இவ்வாறு சட்டங்களை மீறி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

23-09-2015

[1]  தினமணி, 2,495 வழக்குரைஞர்களாக செயல்படத் தடை: தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை, By சென்னை, First Published : 23 September 2015 02:35 AM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/2495-law-graduates-lose-permission-to-practise-in-Tamil-Nadu/articleshow/49059294.cms

[3]  தி.இந்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் 2,495 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தற்காலிக தடை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் தகவல்,Published: September 23, 2015 08:24 ISTUpdated: September 23, 2015 08:25 IST.

[4] The tussle between between two groups of Madras High Court lawyers over the recognition accorded to the Tamil Nadu Advocates Association (TNAA) reached the doorsteps of the Bar Council. Advocates affiliated to the Madras High Court Association (MHAA) barged into the council building protesting the grant of recognition and vandalised a portion of it on Friday (20-03-2015).

http://www.newindianexpress.com/cities/chennai/Bar-Council-Bldg-Vandalised-During-Protest-by-Lawyers/2015/03/21/article2723454.ece

[5] http://www.dinamani.com/tamilnadu/2015/09/23/2495-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/article3042677.ece

[6] http://tamil.chennaionline.com/news/chennai/newsitem.aspx?NEWSID=ce2a7e8f-571c-44af-8374-ca8fd40f82a9&CATEGORYNAME=TCHN

[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2495-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article7680134.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1110457

[9]  தினமலர், வழக்கறிஞர்கள் தொழில் தர்மத்தை மீறுவதை ஏற்க முடியாது! சுப்ரீம் கோர்ட் நீதிபதி காட்டம், நவம்பர்.9, 2014,02.00.

[10]  தினமலர், நீதிபதிகள், போலீசாருக்கு எதிராக கோஷம் : உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் முற்றுகை, செப்டம்பர்.17, 2015.00.49.

[11] http://www.dailythanthi.com/News/State/2015/09/15010329/In-the-court-room-the-lawyers-movement.vpf

[12] http://www.deccanchronicle.com/150917/nation-current-affairs/article/lawyers-create-ruckus-madras-high-court

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

ஜனவரி 26, 2014

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

வக்கீல் ஆக வேண்டும் என்ற வெறியோடு பட்டம் வாங்கியவர்கள்: அரசியல், பணக்காரர்கள், வியாபாரிகள், அதிகமாக சொத்துகள் வைத்துள்ளவர்கள் முதலியோருக்கு வக்கீல் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது. இதைத்தவிர மற்றவர்களுக்கும் எப்படியாவது பி.எல் பட்டம் வாங்கிவிட வேண்டும் என்ற வெறியும் உள்ளது. அந்நிலையில் “கரஸ்பான்டென்ஸ்” மற்றும் எல்எல்பி (LLB) செய்து பட்டங்களை வாங்கி பார் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள ஆசைக் கொண்டனர். ஒருநிலையில் எல்எல்பி (LLB) செல்லும் என்றிருந்தது. இதனால், வேகவேகமாக டிகிடரி பெற்றுக் கொண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் வரை நுழைவு தேர்வு இல்லாமலேயே பார் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ளலாம் என்றிருந்தபோது, பலர் அப்படி நுழைந்தனர். பிறகு நுழைவு தேர்வு வைக்கப் பட்டது. எப்படியாவது குறிப்பிட்ட காலத்தை ஓட்டிவிட்டால், சீனியர் அட்வகேட் ஆகிவிடலாம், அரசுதரப்பு கவுன்சில் என்று கட்சி ஆதரவுடன் காலத்தை ஓட்டினால், ஒருவேளை நீதிபதி ஆகும் வாய்ப்புள்ளது என்று கனவோடு உள்ளே நுழைந்தவர்களும் உண்டு.

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

நீதிக்காக வாதாடும் வக்கீல்களின் மீதே கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்!

பிரபலங்கள் பி.எல் படித்து பட்டம் வாங்கிய விசித்திரமான முறை: சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் படிக்கும் போது, குறிப்பிட்ட காலகட்டத்தில், உதாரணத்திற்கு 1987-90 வருடங்களில் மாலை வகுப்புகளில் குறிப்பிட்ட பிரபலங்கள் காணப்படாமலேயே இருந்திருப்பர். ஆனால், பிறகு பி.எல் பட்டதோடு “1987-90 வருடங்களில் படித்ததாக” எங்கேயாவது பார்க்க நேர்ந்தால், என்ன இது அப்பொழுது நானும் தானே படித்தேன், இவரை ஒரு முறைக் கூட வகுப்பில், கல்லூரியில், ஏன் பரீட்சை எழுதும்போது கூட பார்த்ததில்லையே, பிறகு எப்படி பட்டம் வாங்கினார் என்று மனதிற்குள் நினைக்கத்தான் செய்வர். ஆனால், வெளியில் சொல்ல முடியாது அல்லது அவரிடத்தில் போய் கேட்கமுடியாது. இது உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது.

Advocates police clashes

Advocates police clashes

எல்எல்பிபடித்தவர்கள்தமிழகபார்கவுன்சிலில்பதிவுசெய்யதடைவிதிக்கவேண்டும்: எல்எல்பி (LLB) பதிவு செய்யத் தடை கோரும் மனுவுக்கு 8 பல்கலைக்கழகங்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.   வழக்குரைஞர் வி. ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் இவ்வாறு உத்தரவிட்டார்[1]. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநில கல்லூரிகளில் எல்எல்பி பட்டம் பெற்ற பலரும் தமிழக பார்கவுன்சிலில் (Bar Council) பதிவுசெய்து வழக்குரைஞர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் நேரடியாக வகுப்புகளுக்குச் செல்லாமல் பட்டங்களை பெறுகின்றனர். அதாவது “கரஸ்பான்டென்ஸ்” மற்றும் எல்எல்பி (LLB) செய்து பட்டங்களை வாங்கி பார் கவுன்சிலில் பதிவு செய்து  கொண்டு வக்கீல் ஆகியுள்ளனர். இதைத் தவிர இவர்களில் பலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன[2].  தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் வக்கீல்கள் மீது 1424 வழக்குகள் பதிவாகி இருப்பதாக போலீஸ் டி.ஜி.பி மதுரை ஐகோர்ட்டில்   அறிக்கை தாக்கல் செய்துள்ளார்[3]. இதே போன்று மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், சட்டப்படிப்பை மேற்கொள்ள கடந்த 2008–ம் ஆண்டு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதை கடைபிடிக்காமல் வெளிமாநில சட்டக்கல்லூரிகள் செயல்படுவதாகவும், எனவே, வயது வரம்பு நிர்ணய அடிப்படையில் சட்டப்படிப்புக்கு மாணவர்களை சேர்க்க வெளிமாநில கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தார்[4]. எனவே எல்எல்பி படித்தவர்கள் தமிழக பார்கவுன்சிலில் பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வக்கீல்கள் மீது 1424 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன[5]: 189 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில், தமிழகத்தில் வக்கீல்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற அனைத்து வழக்குகளின் விவரங்களளதில் அடங்கியிருந்தன.

  • சென்னையில் 276 வழக்குகளும்,
  • மதுரை மாவட்டத்தில் 100 வழக்குகளும்,
  • நெல்லை மாவட்டத்தில் 121 வழக்குகளும்,
  • கோவையில் 134 வழக்குகளும்,
  • தேனியில் 34 வழக்குகளும்,
  • திண்டுக்கல்லில் 18 வழக்குகளும்,
  • ராமநாதபுரத்தில் 29 வழக்குகளும்,
  • சிவகங்கையில் 6 வழக்குகளும்

வக்கீல்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மொத்தம் 1,424 வழக்குகள் வக்கீல்கள் மீது பதிவாகி உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

வழக்குநிலுவையில்உள்ளபோது, ஒருநபர்குழுஅமைத்துவிசாரிக்கபார்கவுன்சிலுக்குயார்அதிகாரம்வழங்கியது: இந்நிலையில், வியாழக்கிழமை 23-01-2014 இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்குரைஞர்கள் மீதான குற்றவழக்குகள் பட்டியலை தாக்கல் செயய டிஜிபிக்கு ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது.மேலும் இந்திய பார்கவுன்சில், எல்எல்பி கல்லூரிகள் இடம்பெற்றுள்ள கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில தலைமைச்செயலர்கள், அம்மாநிலங்களின் பார்கவுன்சில் தலைவர்கள் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதுஅப்போது, இந்திய பார்கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த விவகாரம் குறித்து, விசாரிக்க ஒருநபர் குழுவை பார்கவுன்சில் அமைத்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.   எல்எல்பி பதிவு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் குழு விசாரித்து வருகிறது. இங்கும் வழக்கு விசாரிக்கப்படுகிறது. இவ்வாறு வழக்கு நிலுவையில் உள்ள போது, ஒருநபர் குழு அமைத்து விசாரிக்க பார்கவுன்சிலுக்கு யார் அதிகாரம் வழங்கியது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

முறையாகநடத்தப்படாதகல்விநிறுவனங்களுக்குஅங்கீகாரம்வழங்கியதால்இந்தபிரச்னைஎழுந்துள்ளது: முறையாக நடத்தப்படாத கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியதால் இந்த பிரச்னை எழுந்துள்ளது என குறிப்பிட்ட நீதிபதி, ஒருநபர் குழு அமைத்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய பார்கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.   பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆந்திரம், கர்நாடகம், சத்தீஷ்கர், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் எல்எல்பி பாட வகுப்புகளை நடத்தும் 8 பல்கலைக்கழகங்களையும் வழக்கில் பிரதிவாதிகளாக சேர்த்து பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகள் 7ம், தனியார் சட்டக்கல்லூரி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன[6].

சட்டத்தை வளைத்து வக்கீல் ஆகும் முறை: எல்எல்பி நடத்தும் பட்டப் படிப்புகள் பார் கவுன்சிலில் பதிவு செய்யக் கொள்ளமுடியாது, நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தும் தகுதி பெறமுடியாது என்றேல்லாம் அப்பட்டப் படிப்பு படிக்கும்போதே, இவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ளதை பார்த்திருப்பர். இருப்பினும், விடாப்பிடியாக பட்டத்தை வாங்கிக் கொண்டு, பதிவு செய்ய விண்ணப்பிப்பர். விண்ணப்பம் மறுக்கும் போது, அதனை எதிர்த்து வழக்குப் போட்டுவர். பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதி என்றிருக்கும் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்து விடுவர். இதனால், பின்னால் வருகிறவர்கள், மற்றவர்கள் விடாமல் அதே முறையை பின்பற்றுவர். ஆட்சி மாறும் போது சொல்லவே வேண்டாம், இக்கூத்துகள் அதிகமாகவே நடக்கும். அந்நிலையில் தான் இப்படி கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், மோசடி, வரதட்சணை புகார், பெண் கொடுமை புகார், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது போன்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள், மற்றவர்கள் எல்லோரும் நுழைய பார்ப்பர்.

வேதபிரகாஷ்

© 25-01-2014


[2] தினமணி, எல்எல்பிபதிவுவுக்குதடைகோரும்வழக்கு: 8 பல்கலைக்கழகங்கங்களுக்குஉயர்நீதிமன்றம்நோட்டீஸ், ஜனவரி 25, 2014.

[5] தினத்தந்தி, தமிழகம்முழுவதும்போலீஸ்நிலையங்களில்வக்கீல்கள்மீது 1,424 வழக்குகள்பதிவாகியுள்ளனபோலீஸ்டி.ஜி.பி. ஐகோர்ட்டில்அறிக்கைதாக்கல், ஜனவரி 25, 2014.